சாய்பிரதாப் நரேனை அப்பார்மெண்ட் வாசலில் இறக்கிவிட்ட சில நிமிடங்களுக்கு பிறகு, சார்ல்ஸும் முப்பது பிரயாயத்தை தாண்டியிருந்த அந்த போலீஸ் அதிகாரியும் அடுத்தடுத்து நைட் பியூட்டி பாரை விட்டு வெளியே வந்தனர்... அந்த நள்ளிரவு நேரத்தில் அவர்களை தவிர வேறு எவருமே அங்கே கண்ணில்படவில்லை...
பாருக்கு கொஞ்சம் தூரம் தள்ளி இருள் சூழ்ந்த இடத்தின் நடுவே வட்டம் போட்டிருந்த ஒரு லாம்ப் போஸ்ட் வெளிச்சத்தில் போலீஸ் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது...
"ஜேக்கப்! இந்த வண்டியிலயா எடுத்துட்டு வந்தீங்க!?"
"ம்ம்.. இதை தான் யாரும் செக் பண்ண மாட்டாங்க.. அதுவுமில்லாம எல்லாமே கிரிமினல் கேஸ்ல கைப்பத்துனது... ஆனா ரெக்கார்ட்ஸ் கிடையாது... " போலீஸ் அதிகாரி ஜேக்கப் காரை நோக்கி நகர, சார்ல்ஸ் அவரை பின்தொடர்ந்து சென்றான்....
காரின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சீட்டில் உட்கார்ந்திருந்த நீளமான கருப்பு பேக்கை வெளியே எடுத்து பக்கத்தில் நின்றவனிடம் நீட்டினார்...
பேக்கை வாங்கிய சார்ல்ஸ் உடனடியாக அதை கார் டிக்கி மீது வைத்து ஜிப்பை இழுக்க, "என்ன பண்ற நீ?" போலீஸ்காரர் சட்டென பேக்கை பொத்தி அக்கம் பக்கம் பார்வையை அலசினார்...
சார்ல்ஸ் நிதானமாக அவர் கையை அதிலிருந்து விலக்கி, "பயப்பட தேவையில்லை ஜேக்கப்... இந்த சரவுண்டிங்ல எந்த சி.சி.டி கேமராவும் கிடையாது..." என்றான்....
"ஆளுங்க யாராவது பார்த்துட்டா?"
"என் பாருக்கு வரவங்க எல்லாம், அவங்களுக்கு பிரச்சனை வராத வரைக்கும் கொலையே நடந்தாலும் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பாங்க..." சொல்லிக்கொண்டே பேக்கின் நீட்டமான வாயிற்குள் விரலை நுழைத்து அகலமாக விரித்தான்...
அதனுள்ளே இருந்த இரண்டு செக்யூரிட்டி யூனிஃபார்ம்களுக்கு அடியில் சின்னது பெரியது என சில துப்பாக்கிகளும் அதற்கான சைலன்சர்களும் பாதுகாப்பாய் ஒளிந்திருந்தன...
அதிலிருந்து ஒரு பெரிய துப்பாக்கியை வெளியே எடுத்தவன், கடகடவென மேகசினை கழட்டி மாட்டி, சேப்டி லாக்கை அன்லாக் செய்து அங்கும் மிங்குமாய் சுடாமல் குறிவைத்து சோதிக்க, அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து கச்சிதமாய் வேலை செய்தது அது...
"பக்காவா இருக்கு..."
"வேலையும் பக்காவா இருக்கணும் சார்ல்ஸ்... சின்ன பிசுறு கூட இருக்கக் கூடாது... இந்த வேலையை நீ முடிச்சு குடுத்தா! நெக்ஸ்ட் வீக் ஹார்பருக்கு வரப்போற உன்னோட ஹெராயின் எந்த பிரச்சனையும் இல்லாம சிட்டிக்குள்ள வரதுக்கு நான் பொறுப்பு.."
சம்மதித்ததற்கு அடையாளமாக தலையசைத்து, "டைமண்ட்ஸ் என்னைக்கு வருது?" துப்பாக்கியை உள்ளே வைத்து பேக்கை மூடினான் சார்ல்ஸ்...
"இன்னும் ரெண்டு நாள்ல... ஹென்ஷயர் ஜூவல்லரி ஷாப்... ரொம்ப பெரிய பில்டிங்.."
"ஹ்ம்ம்... நானும் பார்த்துருக்கேன்... ஆனா அன்னைக்கு ஹாலோவின் ஃபெஸ்டிவல் ஆச்சே! ஊரே அந்த பில்டிங் இருக்க ரோட்டுல தான் இருக்கும்... ஊர்வலத்துக்கு நடுவுல உள்ள நடந்து போறது கூட கஷ்டம்... உங்க டிபார்மெண்ட் ஆளுங்க வேற அங்க அங்க நிப்பாங்க.. இதுக்கு நடுவுல எப்படி?
"நான் எல்லாத்தையும் பக்காவா செக்ட்ச் பண்ணிட்டேன்... ஹாரர் காஸ்டியூம் போட்டு நீயும் உன் ஆளுங்க அஞ்சு பேரும் கூட்டத்தோட கூட்டமா கலந்து அந்த பில்டிங் இருக்க பிளாக்குள்ள நைட் ஒன்பது மணிக்குள்ள போயிடு... ரொம்ப முக்கியமானது பில்டிங்குள்ள நுழையும் போது தான் நீங்க ஒண்ணு சேரனும்..."
"அப்போ இதை யாரு கொண்டு வருவா?" சார்ல்ஸ் பேக்கை கைகாட்டினான்...
"நாளைக்கு உன் பாருக்கு ஒருத்தன் வருவான்... அவன்கிட்ட இதை குடுத்துடு... ஊர்வலத்துல கலந்துக்குற வண்டியில மறைச்சு வச்சு அவன் பத்திரமா துப்பாக்கிய நீ இருக்க இடத்துக்கு கொண்டு வந்துடுவான்..."
"அதுக்கு அப்புறம்?"
"துப்பாக்கி கைக்கு வந்ததும் சரியா மூணு நிமிஷம் கழிச்சு நீ உன் ஆளுங்களோட பில்டிங் உள்ள நுழையனும்... முதல்ல லாபியோட ஒரு கிளாஸ் டோர் வரும்... அங்க யாரும் நிக்க மாட்டாங்க... அதுக்கு அடுத்தது தான் மெயின் டோர்... அங்க தான் எப்போதுமே ரெண்டு பாடி கார்ட்ஸ் நின்னுட்டே இருப்பாங்க... முதல்ல நீங்க அவங்கள தான் போடணும்... சத்தமே இல்லாம பாடிய ரிமூவ் பண்ணிட்டு உன் ஆளுங்கள்ள ரெண்டு பேரை அவங்கள மாதிரியே அங்க நிக்க வைக்கணும்... அவங்க யூஸ் பண்ற அதே மாதிரி யூனிஃபார்ம் இந்த பேக்லயே இருக்கு..."
"என்ன விளையாடுறீங்களா? மாஸ்க்க கழட்டிட்டா என் ஆளுங்க முகம் சி.சி.டிவில ரெகார்ட் ஆகிடும்.." இப்போது சார்ல்ஸ் அவசரப்பட,
ஜேக்கப் நிதானமாய், "உங்களுக்கு கன்னை கொண்டு வந்து கொடுத்ததும் என் ஆளு அதை கவனிச்சுக்குவான்... நீ உன் டீமோட உள்ள போயிட்டு வெளியில வர வரைக்கும் அங்க எதுவுமே ரெக்கார்ட் ஆகாது. அதுக்கு அப்புறமும் ஆகாது..." என்றார்...
சார்ல்ஸ் சில நொடிகளுக்கு அமைதியாய் யோசித்துவிட்டு, "உள்ள எத்தன பேர் இருப்பாங்கன்னு தெரியுமா?" என்றான் அடுத்தக்கட்டமாய்...
"சரியா தெரியல... ஆனா கண்டிப்பா கடைய க்ளோஸ்ல தான் வச்சிருப்பாங்க.. அதனால பப்ளிக் யாரும் உள்ள இருக்க வாய்ப்பில்ல... டைமண்டுக்கு சம்மந்தப்பட்ட ஆளுங்க மட்டும் தான் இருப்பாங்க... இன்ஃபாமர் எட்டு பேர் இருக்கலாம்னு சொன்னான்... அதுல ஒருத்தனா அவனும் இருப்பான்..."
"அந்த கலவரத்துக்கு நடுவுல அவன எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது?" சார்ல்ஸ் அலுப்பாய் காரில் சாய, ஜேக்கப் பதிலளிக்காமல் முதலில் இரவுகுளிருக்கு இதமாய் சிகரெட் ஒன்றை பற்ற வைத்து ஊதினார்...
திரண்டு வந்த வெண்புகை சீரற்று வெளியேறி காற்றை சீரழிக்க, "தேவையில்ல... உள்ள எத்தனை பேர் இருந்தாலும் சரி... எல்லாரையும் கொண்ணுடு.." அலட்டிக் கொள்ளாமல் சொன்னவரை கொஞ்சம் பயம் கலந்த பார்வையில் கவனித்தான் சார்ல்ஸ்....
ஜேக்கப் அவன் பார்வையை பற்றி கவலைப்படாமல், "அடுத்த நாள் காலையில கிளீனிங் ஸ்டாஃப் வந்து பார்க்கும் போது உள்ள இருந்தவன் பாடி எல்லாம் இரத்த வெள்ளத்துல கிடக்கணும்..." தன் யூனிஃபார்மின் பாக்கெடுக்குள் கையை நுழைத்து ஒரு சின்ன பிளாஸ்டிக் கவரை எடுத்து நீட்டினார்...
"என்ன இது?" சார்ல்ஸ் கவரை கையில் பிடிக்க,
"இதுல இருக்க இந்த சின்னச் சின்ன ஐட்டம், ஹேர் சாம்பிள்ஸ் எல்லாமே 'பிளாக்மேன்' குரூப்புக்கு சொந்தமானது..."
"அவங்களுக்கும் ஜூவல்லரி ஷாப் ஓனருக்கும் ஏற்கனவே முன்பகை இருக்குல!?"
"சரியா சொன்ன! வேலை முடிஞ்சதும் வந்துட்டு போனது அவங்க தான்னு நம்ப வைக்க, இதை எல்லாம் அங்க போட்டுடு... அடுத்த நாள் கேஸ் என்கிட்ட தான் வரும்.. நான் இதை வச்சே அவங்க மேல பழி போட்டுடுவேன்..."
"இதையெல்லாம் உங்க ஹயர் ஆபீசர்ஸ் நம்புவாங்களா? 'கொலை பண்ணவன் தப்பிக்கிறதுக்காக பண்ண செட்டப்பா இருக்கும்'னு யோசிச்சிட்டா!?"
"ஹ்ம்ம்.. கண்டிப்பா யோசிக்க வாய்ப்பிருக்கு... ஆனா நீங்க டைமண்ட்ஸ் இருக்க சூட்கேஸை தவிர அங்கிருக்க வேற எந்த நகையிலும் கைவைக்க கூடாது... டைமண்ட்ஸ்கும் புரூஃப் கிடையாது.. அதனால போலீஸ் பார்வையில பார்க்கும் போது வந்தவங்க மோட்டிவ் கொலை பண்றது தான்.. அந்த வட்டத்துக்குள்ள வரது பிளாக்மேன் குரூப் மட்டும் தான்..."
"நீங்க ஈஸியா சொல்லிடலாம்.. ஆனா அதை அவனுங்க ஒத்துக்கணுமே?! அவனுங்க மட்டும் கொலை நடந்த அன்னைக்கு வேற இடத்துல இருந்ததை கோர்ட்ல புரூஃப் பண்ணிட்டா! அப்புறம் மொத்த கண்ணும் உங்க பக்கம் தான் திரும்பும் ஜேக்கப்.."
"அதுக்கு முதல்ல அவனுங்க கோர்ட்க்கு போகனுமே சார்ல்ஸ்! 'பிடிக்க போகும் போது அவங்க என்ன சுட ட்ரை பண்ணாங்க.. நான் அவங்கள சுட்டேன்.' அவ்ளோ தான் கேஸ் ஓவர்..." திட்டத்தை மொத்தமாய் சொல்லி முடித்துவிட்டு பொறுமையாய் நகர்ந்து சென்றவர், காரின் கதவை திறந்து டிரைவர் சீட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டார்...
சார்ல்ஸ் பேக்கை எடுத்துக் கொண்டு இறக்கிவிடப்பட்ட கண்ணாடியின் இடைவெளியை நோக்கி உடலை குனிந்து, "டைமண்ட்ஸை உங்கக்கிட்ட எப்ப ஒப்படைக்கணும்?" என்றான்...
"எடுத்த உடனேயே... என் ஆளு அவன் வேலையை முடிச்சுட்டு பில்டிங் பேக் சைடுல பைக்கோட வெயிட் பண்ணிட்டு இருப்பான்.." சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த போலீஸ் கார் மெதுவாக நகர ஆரம்பித்து பின்னர் வேகமெடுத்தது...
கார் நகர்ந்து சென்றதுமே சார்ல்ஸின் முகம் திடீரென வெறுப்பில் வெந்து போக, அவனது ரகசிய கட்டளையின் பெயரில் பாரின் பின்பக்கத்திலிருந்து வெளியே வந்து இருட்டுக்குள் ஒளிந்து நின்று அனைத்தையும் கேட்டிருந்த ஒருவன் பின்னால் வந்து நின்றான்...
அவன் கையில் போடப்பட்டிருந்த டாட்டூவில் ஒரு கொடிய நாகம், மேலேயிருந்து ஊர்ந்து வந்து புறங்கையில் வாயை விரித்து நஞ்சை கக்கிக் கொண்டிருந்தது....
"இதைவிட அட்வான்ஸ் கன்ஸ் நம்ம கிட்டையே இருக்கே!"
"ஆனா அது அந்த போலீஸ்காரனுக்கு தெரியாது ராபர்ட்.. தெரியாம இருக்கது தான் நமக்கு நல்லது..!" சார்ல்ஸ் அவனை நோக்கித் திரும்ப,
"அப்புறம் எதுக்கு இந்த போலீஸ்க்கு நீ ஹெல்ப் பண்ணனும்?" என்றான் ராபர்ட் விருப்பம் காட்டாமல்...
"ஏன்னா அவன் ஒன்னும் என்கிட்ட ஹெல்ப் கேக்கல... செய்யலன்னா ஹெராயினை உள்ள கொண்டுவர விடமாட்டேன்னு சைலண்ட்டா மிரட்டிட்டு போறான்..." சார்ல்ஸ் கடுகடுத்த முகத்தோடு அங்கிருந்து நகர,
ராபர்ட்டும் , "இப்போ என்ன பண்ண போற?" என அவன் பின்னாலேயே ஓடினான்...
"எனக்கு இப்போ வேற வழியில்ல... போலீஸ்காரனையும் பகைச்சிக்க முடியாது... இல்லன்னா அவன் பவுடரையும் உள்ள வரவிட மாட்டான், பிளாக் மார்கெட்ல கன்ஸ் சப்ளை பண்றதையும் மோப்பம் புடிச்சிடுவான்.. பேசாம அவன் சொன்ன வேலையை செஞ்சி குடுத்துடலாம்... நீ எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணிட்டீல ராபர்ட்?"
"அவன் பேச ஆரம்பிச்சதுல இருந்து கிளம்பி போன வரைக்கும் எல்லாத்தையும் வீடியோ ரெகார்ட் பண்ணிட்டேன்..."
"உன்கிட்டையே பத்திரமா இருக்கட்டும்.. என்னைக்காவது தேவைப்படும்..."
பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டு இருவரும் பாரின் கதவை திறந்து உள்ளே போய்விட, அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருள் சூழ்ந்த ஒரு மறைவில் ஒளிந்திருந்த அந்த பைக் உயிர்பெற்று ஓட ஆரம்பித்தது...
********************
நைட் பியூட்டி பார் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தது போல தற்போது இல்லை... அங்கொன்றும் இங்கொன்றுமாய் மினிக்கிகொண்டிருந்த விளக்குகளின் அரைகுறை வெளிச்சத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாய் சாவை எதிர்நோக்கி கிடக்கும் நோயாளியைப் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது...
வாசலில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்ற காலம்போய் இப்போது ஒரேயொரு கார் மட்டும் தன் உரிமையாளனை எதிர்பார்த்து தன்னந்தனியாக காத்துக் கொண்டிருந்தது... காற்றில் கூட மதுவின் வாடையும் நிக்கோடின் புகையும் அவ்வளவாக கலக்காத காரணத்தினால் புத்துணர்ச்சியோடு நகர்ந்து கொண்டிருந்தது நள்ளிரவு நேரத்தில்...
பாரின் கதவை திறந்து முதுகில் தொங்கிய பேக்கோடு ராபர்ட் முதலில் வெளியே வர, அவனை பின்தொடர்ந்து உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகத்தோடு வெளியே வந்தான் சார்ல்ஸ்....
வெளியே நின்றிருந்த காரில் கொண்டு வந்த பேக்கை வைத்ததும் சார்ல்ஸை நோக்கி திரும்பினான் ராபர்ட்.... "பேசாம நீயும் என்கூட வந்துடேன்... இங்கேயே இருந்தா கண்டிப்பா அந்த ஜேக்கப் நம்மளயும் சும்மா விடமாட்டான்..." அவன் குரலில் பயம் நன்றாக அப்பியிருந்தது...
ஆனால் சார்ல்ஸ் மறுப்பாய் தலையசைத்து, "இல்ல ராபர்ட்... டைமண்ட்ஸை கண்டுபிடிக்கிற வரைக்கும் இந்த சிட்டிய விட்டு நான் எங்கேயும் போகபோறது இல்ல.." என்றான் உறுதியாய்...
ராபர்ட் அவனை விரக்தியாக பார்வையிட்டு, "ஆறு மாசம் ஆச்சு சார்ல்ஸ்! இப்போ வரைக்கும் நம்மள ஏமாத்திட்டு டைமண்ட்ஸை எடுத்துட்டு போனது யாருன்னு கூட நமக்கு தெரியல... சந்தேகப்பட்ட எல்லாரையும் தேடிக் கண்டுபிடிச்சு அடிச்சு விசாரிச்சிட்டோம்.. ஆனா அவனுங்க யாருமே இந்த வேலையை செய்யல! எனக்கு என்னவோ இதுவும் ஜேக்கப்போட பிளானா இருக்குமோன்னு தோணுது!" என்றான் சந்தேகமாய்...
"நானும் கொஞ்ச நாளா அப்படித் தான் நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா அப்புறம் தான் தெரிஞ்சிது... ஜேக்கப் பிளான் போட்டது டைமண்ட்ஸ்காக இல்ல... அந்த ஜூவல்லரி ஷாப் ஒனரை கொலை பண்றதுக்காக..."
"என்ன சொல்ற நீ?" கூட்டாளியின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிய,
"ஆமா ராபர்ட்.. அவன் பிளான் போட்டதெல்லாம் அதுக்காக தான். ஆனா ஏன்னு தெரியல... 'டைமண்ட் ராபரி' நம்மள ஏமாத்துறதுக்காக சொன்னது... அதுமட்டுமில்ல, நம்மகிட்ட வரதுக்கு முன்னாடியே அவன் இன்னொரு ஆளுங்க கிட்ட முதல்ல போயிருக்கான்..."
"பிளாக்மேன் குரூப்பா?" கூட்டாளி நம்பிக்கை இல்லாமல் கேட்க, சார்ல்ஸ் ஆமாம் என்பதாய் தலையசைத்து குழப்பமடைய வைத்தான் அவனை...
"அப்புறம் எதுக்காக அவன் நம்மகிட்ட வந்தான்?"
"சரியா தெரியல... ஒருவேளை போலீஸ் அவங்கள தான் முதல்ல சந்தேகப்படுவாங்கன்னு தெரிஞ்சி முடியாதுன்னு சொல்லிருக்கனும்... அதனால தான் அடுத்ததா நம்மகிட்ட வரும்போது செஞ்சே ஆகனும்னு செக்மேட் வச்சிருக்கான்... வேலை முடிஞ்சதும் விஷயம் தெரிஞ்ச பிளாக்மேன் குரூப் மேலேயே பழிய போட்டு, சொன்னபடியே கேஸை க்ளோஸ் பண்ணிட்டான்..."
"நீ சொல்றபடி அவனுக்கு டைமண்ட்ஸ் முக்கியம் இல்லன்னா! எதுக்காக இப்பிடி ஆறு மாசத்துல நம்ம கூட வந்த மத்த நாலு பேரையும் தேடித் தேடி பழைய கேஸ்ல அரெஸ்ட் பண்ணனும் சார்ல்ஸ்? திரும்பி உன் பாரை கொஞ்சம் பாரு.. ஹெராயின் இல்லாம இங்க வரதையே பல பேர் நிருத்திட்டாங்க... இதெல்லாம் எதுக்கு?"
"ஒரு பில்லியன் டாலர் ராபர்ட்.. அந்த டைமண்ட்ஸோட மதிப்பு ஒரு பில்லியன் டாலர்.. நீயா இருந்தா சும்மா விடுவியா?" சார்ல்ஸ் கடைசி வார்த்தைகளில் அழுத்தம் கூட்ட, ராபர்ட்டின் முகம் நொடியில் மாறியது...
"மத்தவங்க மேல இருந்த சந்தேகம் போயிடுச்சு.. ஆனா என் மேல இன்னும் போகலல?" ராபர்ட் தன் நட்பை நினைத்து வருந்த,
"முயற்சி பண்ணிட்டே இருக்கேன்..." என்றான் சார்ல்ஸ்... "ஆனா ஒரு விஷயத்துக்கு மட்டும் எனக்கு இன்னும் பதில் கிடைக்கல ராபர்ட்.. வந்தவன் எதுக்காக உன்னை அடிச்சு போட்டு உன்னோட மொபைலை எடுத்துட்டு போகனும்?"
"எனக்கும் அதுதான் குழப்பமா இருக்கு சார்ல்ஸ்.. ஆனா அன்னைக்கு நீயா தான் வந்து என்கிட்ட டைமண்ட்ஸை குடுத்த... நானும் பிளான் படி பில்டிங் பின்னாடி பைக்கோட நின்னுட்டு இருந்தவன் கிட்ட கொண்டு போய் குடுத்தேன்.... அப்போ தான் அவன் என்னை அடிச்சு மயக்கமாக்கிட்டு மொபைலை எடுத்துட்டு போயிட்டான்... ஆனா அதுக்கு அப்புறம் நீங்க சொல்லி தான் தெரிஞ்சிது, ஜேக்கப் அனுப்பின ஆளும் என்ன மாதிரியே வேற இடத்துல மயங்கிக் கிடந்துருக்கான்னு..."
"டைமண்ட்ஸ் கைக்கு வந்ததுக்கு அப்புறமும் உன்னை அடிச்சுருக்கான்னா! கண்டிப்பா அவனுக்கு மொபைல்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சிருக்கு..."
"ஆனா எப்புடி சார்ல்ஸ்.. அன்னைக்கு நீயும் நானும் மட்டும் தான் அங்க இருந்தோம்.. வேற யாருக்குமே நாம சொல்லலையே!?"
"நாம சொல்லல! ஆனா அவன் கேட்டுருந்தா?" சூசமாக கேள்வியில் பதில் தந்தான் சார்ல்ஸ்...
ராபர்ட் உடனே எதுவும் பதில் சொல்லவில்லை... கொஞ்சம் நேரம் அமைதி காத்துவிட்டு, "ஆறு மாசம் ஆச்சு சார்ல்ஸ்.. ஆளு யாருன்னு தெரியல.. விடியோவும் வெளியில வரல.. இதுக்கு மேலயுமா டைமெண்ட்ஸ் கிடைக்கும்னு நினைக்கிற?" என்றான் வெறுத்துப் போய்...
சார்ல்ஸ் கொஞ்சம் கூட நம்பிக்கையை இழக்காமல், "கண்டிப்பா..." என்றான் உறுதியாய்... "நான் ஆறு மாசமா ப்ளாக் மார்க்கெட்டை கவனிச்சுகிட்டே தான் வரேன்... அந்த டைமெண்ட்ஸ் இன்னும் வெளியில எங்கேயும் கைமாறால... எடுத்தவன் கிட்ட தான் இன்னமும் இருக்கு..."
"இதுக்கு மேல மட்டும் வெளியில விடுவானா?"
"தெரியல... ஆனா கண்டுபிடிக்காம நான் விடமாட்டேன்..."
எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதவனுக்கு என்ன பதில் அளிப்பது என்றே புரியவில்லை ராபர்ட்டுக்கு... காரின் கதவை திறந்து உள்ளே அமர்ந்து கொண்டான்...
"எனக்கு அவன் கிடைப்பான்ற நம்பிக்கையே போயிடுச்சு சார்ல்ஸ்.. நாம தான் அதை திருடிட்டதா ஜேக்கப் நினைச்சுட்டு இருக்கான்.. அந்த டைமெண்ட்ஸ் கைக்கு வர வரைக்கும் அவன் நம்மள நிம்மதியா வாழவும் விடமாட்டான் சாகடிக்கவும் மாட்டான்.." பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டு,
"என்னால இதுக்கு மேல முடியாது சார்ல்ஸ்.. நான் கிளம்புறேன்... உனக்கு எதாவது உதவி தேவைப்பட்ட சொல்லி அனுப்பு... கண்டிப்பா உனக்காக வருவேன்..." உயிர் பெற்ற கார் ஊர்ந்து சென்று சில நொடிகளிலேயே கண் பார்வையில் இருந்து மறைந்து போனது...
சார்ல்ஸும் தன் பாரின் தலைகீழ் நிலைமையை நினைத்து வருந்திவிட்டு, உள்ளே சென்று ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்க, ஒரு ஸ்விட்சை தொடப்போகும் போது திடீரென சிலையாய் மாறி நின்றான்...
அவனது செவிகளில் யாருமே இல்லாத பாருக்குள் இருந்து இரண்டு பேர் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தெளிவில்லாமல் மெல்லமாய் வந்து நுழைந்தது... ஸ்விட்ச் போர்டில் இருந்து பொறுமையாய் கையை நகர்த்தியவன் முகுது பக்கம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை மெல்ல வெளியே எடுக்க, அவன் கால்கள் சத்தம் கேட்கும் திசையை நோக்கி நகர ஆரம்பித்தது....
பொதுப் பாதையிலிருந்து பாருக்குள் நுழைய வேண்டிய அந்த கதவை நெருங்கி வந்ததும் ஒருநொடி தான் தயங்கி நின்றான் சார்ல்ஸ்... அடுத்த வினாடியே சடாரென கதவை எட்டி உதைத்து, இறுக்கிப் பற்றிய துப்பாக்கியை நீட்டிக் கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்தான்...
"அவனுங்க மட்டும் கொலை நடந்த அன்னைக்கு வேற இடத்துல இருந்ததை கோர்ட்ல புரூஃப் பண்ணிட்டா! அப்புறம் மொத்த கண்ணும் உங்க பக்கம் தான் திரும்பும் ஜேக்கப்.."
"அதுக்கு முதல்ல அவனுங்க கோர்ட்க்கு போகனுமே சார்ல்ஸ்! 'பிடிக்க போகும் போது அவங்க என்ன சுட ட்ரை பண்ணாங்க.. நான் அவங்கள சுட்டேன்.' அவ்ளோ தான் கேஸ் ஓவர்.."
சரக்கு பாட்டில்களின் முன்னால் இருந்த டேபிளின் மீ
து வைக்கப்பட்டிருந்த மொபைலில் வீடியோ ஒன்று ஓடிக் கொண்டிருக்க, அதற்கு பக்கத்தில் முதுகை காட்டியபடி அமர்ந்து மதுவை பொறுமையாய் அருந்திக் கொண்டிருந்தான் சாய்பிரதாப்...

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 10
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.