- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் 11
ஜில்லென்ற பால்கனி காற்று முகத்தில் படர, ஆட்டிறைச்சியைச் சின்ன கத்தியால் துண்டுப்போட்டுக் கொண்டிருந்தான் அருள்.
வாசம் கமகமவென்று தூக்க, மேக்னாவோ புது வித சமையல் குறிப்பைக் கொண்டு இன்றைய டின்னரை ரெடி செய்திருந்தாள் அவர்கள் இருவருக்குமாய்.
''அருள், சாப்பிட்டுட்டு நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.''
என்றவளோ பச்சைப் பட்டாணியை கரண்டியால் அள்ளியெடுத்து தட்டில் போட்டப்படியே சொல்ல, மட்டனை குத்தியவனின் முள்கரண்டி அப்படிய நின்றது அசைவின்றி.
மாஜி கணவனின் கரண்டி செங்குத்தாய் நிற்பதைக் கண்ட பெதும்பையோ ஏறெடுத்தாள் ஆணவன் முகத்தை.
அருளின் பார்வைகளோ வேறெங்கோ வெறித்திருக்க, மேஜை மீதிருந்த அவன் புறங்கையை மென்மையாய் பற்றினாள் மோக்னா.
''பிளீஸ்!''
என்றவளின் மென்மையில் அவனுள்ளம் கரையாமல் இல்லை. இருந்தும், திடமாகவே இருக்க விரும்பினான் அருள் அவனின் நிலைப்பாட்டில்.
ஆழமான மூச்சொன்றைக் கொண்டவனோ, மெதுவாய் அவன் கையை பனிமொழியிடமிருந்து பிரித்துக்கொண்டான்.
''நான் ஒன்னும் சின்ன பையன் இல்லே மேக்னா! என்ன பண்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும்!''
என்று முன்னாள் மனைவிக்கு தெளிவுப்படுத்தி, மீண்டும் உணவில் லயித்திட ஆரம்பித்தான்,
''அவுங்களாம் மனசாலே யோசிக்கறவங்க அருள். கண்டிப்பா சங்கடப்பட்டுக்கிட்டு இருப்பாங்க! நீங்க வேறே, என்கூடத்தான் இருக்கேன்னு சொல்லிட்டுங்க! அவுங்க மனசு எவ்ளோ பாடுப்படும்!''
என்ற மங்கையோ, ஆணவனின் தாயான சித்ராவின் உள்ளம் கொள்ளும் ரோதனையை வார்த்தைகளில் வடித்து, அதே சமயம் அருளின் மனதையும் காயப்படுத்திடாது வாக்கியத்திற்கு முற்று புள்ளி வைத்தாள்.
ஒண்ணுதல் அவளை ஏறெடுத்த அருளோ, உண்பதை நிறுத்தி எழுந்தான் இருக்கையிலிருந்து.
''அருள்!''
என்றவளின் அழைப்பை கேட்டும் கேளாதவனாய், உணவு மேஜையிலிருந்து விலகி வெட்ட வெளியை வெறித்திட ஆரம்பித்தான்.
நெற்றியை பற்றிக் கொண்ட முற்றிழையோ, இதற்கு மேல் என்ன சொன்னாலும் அவன் சாப்பாட்டில் கை வைத்திட மாட்டானென்று உணர்ந்து, தன்னைத்தானே கடிந்துக் கொண்டாள் இந்நேரத்திலா குதர்க்கமான பேச்சை ஆரம்பித்திட வேண்டுமென்று.
''சோரி அருள்! உங்களே வேதனைப்படுத்த நான் அப்படி சொல்லலே! ஆனா, எந்த வீட்டு பெரியவங்களா இருந்தாலும் இதை சாதாரணமா கடந்து போக முடியாதுல்லே அதான் அப்படி சொன்னேன்!''
என்றவளோ அவன் தோள் மீது கரம் பதிக்க,
''அப்படியெல்லாம் எதுவுமில்லே மேக்னா! எல்லாம் நல்லாத்தான் இருக்காங்கே! இப்போக்கூட பாரு ஆகுவுக்கு அடுத்த மாசம் நிச்சயம்! எப்படியும் ஒரு ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க! அடுத்து சக்தி, அவனுக்கும் அப்படி இப்படின்னு ஏதாவதொரு பொண்ணே பார்த்து முடிச்சிடுவாங்க! எல்லார் லைஃபும் செட்டில் ஆகிடும்! ஆனா, நான் மட்டும் ஒண்டிக்கட்டையா கிடந்து காலம் பூரா கஷ்டப்படணும்!''
என்ற அருளோ ஒரே மூச்சில் மனசிலிருந்த அத்தனையையும் கொட்டிட, அவள் காதல் மன்னனின் இதயம் கொண்டிருக்கும் காயத்தின் வீரியத்தை மொய்குழல் அவளால் நன்றாகவே உணர முடிந்தது.
இடையில் கரங்கள் இறுக்கி பரந்த வானை வெறுமனே வெறித்தவனின் பக்கத்தில் போய் நின்றப்படி பால்கனி கம்பிகளை இறுக்கிய மேக்னாவோ,
''என்ன இன்னமும் லவ் பண்றிங்களா அருள்?''
என்றுக் கேட்டாள் அவன் முகத்தை இமைக்காது பார்த்த வண்ணம்.
''நீ இந்தக் கேள்வியே கேட்க நான் இங்க இருந்திருக்கவே மாட்டேன் மேக்னா!''
என்றவனோ அழுத்தமாய் சொல்லி அப்போதும் கரிய வானையே நோக்க, அவன் கையை பற்றி இழுத்தாள் ஒளியிழையவள்.
தலைத் திருப்பிய அருளின் விழிகளை காதலோடு எதிர்கொண்டாள் நாயகியவள்.
இருவரின் கண்களும் அன்பை பரிமாறிக்கொள்ள, இறுகிய உள்ளங்கைகள் கொண்ட கதகதப்போ போதவில்லை கனலென்றது.
தேகங்களோ கூடச்சொல்லிக் கோரியது, இருவரின் இடைவெளியையும் நேசத்தைக் கொண்டு நிரப்பிட.
பொற்றொடி அவள் இழுக்க, கோதையின் இழுப்பிற்கு அசைந்தவனாய் பின்னோக்கினான் அருள்.
தனியாய் எரிந்துக் கொண்டிருந்த அருளின் மனக்குமுறல்களை முழுமதியாய் வாரியணைக்க தயாராகினாள் மேக்னா.
ஜோடியற்ற இருவரும் அறைக்குள் நுழைய, படுக்கையறை கதவோ தன்னால் மூடிக்கொண்டது.
மேக்னா மற்றும் அருள் இருவரும் காதலித்து திருமணம் புரிந்தவர்கள் ஆவர்.
இளம்பிடியாளோ மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் ஆவாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவளுக்கு உடன் பிறப்புகள் என்று யாருமில்லை பெற்றவளை தவிர்த்து.
பதின்ம வயது கன்னியின் தாயும் சில வருடங்களிலேயே சீக்கு படுக்க, வேறு வழியில்லாது பணம் சாம்பாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள் யுவதியவள்.
ஆனால், அதற்காக படிப்பையெல்லாம் விட கூடாது என்பதிலும் ரொம்பவே உறுதியாக இருந்தாள் வதனி அவள்.
ஆகவே, பகுதி நேரமாய் பலகாரங்கள் செய்வது தொடங்கி, மருதாணி வரைவது, தையல் என்று வருமானத்தை ஓரளவு பெருக்கிக் கொண்டாள்.
இடைநிலைப்பள்ளியின் இறுதியாண்டு தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்றவள் மருத்துவம் படித்திட ஆசைக்கொண்டாள். ஆனால், விதி யாரை விட்டது. ஏழ்மையின் காரணமாய் அவளால் அப்பெரிய படிப்பை நினைத்து மட்டுமே பார்த்திட முடிந்தது.
அரசாங்க பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியைத் தொடர்ந்திட விண்ணப்பித்தவளுக்கு சரஸ்வதி புத்திக்கொடுத்த அளவுக்கு சர்க்கார் கைகொடுத்திடவில்லை.
முதல் முறையீடும் தோல்வி, ரெண்டாவது முயற்சியும் பலன் கிட்டாதே போனது. சில ஆசிரியர்களின் மூலம் பல பெரிய தலைகளை சந்தித்திடும் வாய்ப்புகளைப் பெற்றாள் வஞ்சியவள்.
ஆனால், அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் உதவிக் கேட்டு போனவளை உல்லாசமாய் இருகச் சொல்லியே அழைத்தனர்.
ஆண் பெண் என்று பேதமில்லாமல் பிரதிபலனை எதிர்பார்த்தே புண்ணியத்தை தொலைத்தனர்.
சில ஆண்கள் நாகரீகம் என்ற பெயரில் சின்ன வீடாய் வைத்துக்கொள்ள கூட விருப்பம் தெரிவித்தனர், வதனியின் பதினெட்டு வயது தந்த கிறக்கத்தில்.
மாநிறமாகினும் சரியான எடையோடு அளவான அழகோடு எடுப்பாகவே இருப்பாள் மேக்னா. ஒருமுறை பார்த்தாலே போதும், பட்டென ஒட்டிக்கொள்ளும் அவளின் முகம் நெஞ்சுக்குள்.
ஸ்டெதாஸ்கோப்பை கழுத்தில் மாட்டி அழகு பார்த்திட நினைத்த மகளை பலரும் அலங்கோலமாக்க நினைத்த சங்கதி தெரிய வர, உடம்பு முடியா தாயோ இதையெல்லாம் தாங்கிட திராணியற்று ஒரேடியாய் போய் சேர்ந்தார்.
அனாதை பிணம் கணக்காய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு காரியத்தை ஒருவழியாய் முடித்த ஒண்டொடியை, அன்றைய இரவே வீடு புகுந்து கற்பழிக்க முயற்சித்தனர் சில கயவர்கள்.
அரங்கேறிய கலவரத்தில் ஓட்டை ஒடிசலான மேக்னாவின் இல்லமோ பற்றி எரிந்து தும்சமாகியது.
சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை அயலார்களோ, ஆயந்தி அவளை மட்டும் காப்பாற்றினர் உடமைகளை அப்படியே விட்டுவிட்டு.
கத்தி கதறினாள் கோமகளவள் படித்த படிப்புகளின் சான்றிதழ்கள் அத்தனையும் தீக்கரையாய் ஆகிப்போக.
இதுவரைக்கும் சேர்ந்திருந்த பணமும் அம்மாவின் காரியத்திற்கு செலவாகியிருக்க, இனி வாழ்க்கையை புதிய பரிமாணத்தில் தொடங்கிட வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதைப் புரிந்துக் கொண்டாள் மலரவள்.
இனி தனியொருத்தி என்ற காரணத்தால் முதலில் தங்கிட பாதுகாப்பான இடமொன்று வேண்டுமென முடிவெடுத்தாள் விறலியவள். யாரிடமும் போய் கெஞ்சிட அவளுக்கு விருப்பம் இல்லை.
ஆகவே, முதியோர் இல்லமொன்றில் கேர் டேக்கராக பணியில் சேர்ந்தாள் மேக்னா. மூன்று வேளை சாப்பாட்டுக்கும் தங்குவதற்கும் பிரச்சனை இல்லை என்றான போதும் இப்படியே வாழ்க்கையை ஓட்டிட பெண்ணவள் தயாராய் இல்லை.
ஆகவே, முதலில் தொலைந்த சான்றிதழ்களை மீண்டும் அரசாங்க இலாகாவிலிருந்து திரும்ப பெற்றாள் முதல் மாத சம்பளத்தைக் கொண்டு.
பின், குருவி சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் சோர்ட் டேர்ம் கோர்ஸுகள் சிலவற்றை படித்திட ஆரம்பித்தாள். அதன் மூலம், இன்னும் கூடுதல் சம்பளத்திலான வெவ்வேறான இடங்களில் பணிக்கு சென்றாள்.
படிப்படியாய் முன்னேறி ஒரு வழியாய் தனியார் மருத்துவமனை ஒன்றில் அட்மின் பொறுப்பில் குத்த வைத்தாள் மதங்கியவள். படிப்பு ஒன்று மட்டுமே அவளின் குறிக்கோளாய் இருந்தது.
எப்படியாவது படித்து மருத்துவர் ஆகிட வேண்டுமென்று வேட்கை கொண்டாள் நறுதுதல் அவள். ஆகவே, அதற்கான அஸ்திவாரத்தை உருவாக்கிடும் பொருட்டு கடுமையாக உழைத்து பணத்தை சேர்த்திட ஆரம்பித்தாள்.
மருத்துவர் படிப்பென்பது முழுநேரம் என்பதால் அதற்கு பிறகான செலவுகளை அவளால் தனியாய் சமாளிக்க முடியாதென்று எண்ணி முதலில் தேவையான பணத்தை சேமித்திட தொடங்கினாள்.
இப்படியானதொரு நாளில்தான், மருத்துவமனை வளாகத்தில் தடுக்கி விழுப்போன அருளை தடுத்து உதவிக்கரம் நீட்டினாள் கோற்றொடி . அப்போது ஆரம்பித்த அவர்களின் நட்பு, பின்னாளில் ஒருதலை காதலாகி போனது அருளுக்கு ஆயிழை அவளின் மேல்.
ஆனால், படிப்பு மட்டுமே மூச்சென்று இருந்த நறுதுதலோ காதலுக்கு நோ சொன்னாள். மனமுடைந்த அருளோ பலமுறை வல்வியவளுக்கு அவனின் காதலை உணர்ந்திட முயற்சித்தான்.
ஆனால், எதற்கும் மசியாத துடியிடையோ இன்முகத்தை கைவிட்டு காரி உமிழா கறுவல் கொண்டாள். மீசை கொண்டவனுக்கோ அசிங்கமாய் போக டாட்டா கூட காட்டிடாது வேறு மருத்துவமனை மாறிப்போனான்.
அருளில்லா மருத்துவமனையில் அவன் நினைவுகளே சுற்றி வந்தது பூவையையே. அவன் முகம் காண முடியா நாட்களை நரகமாய் கழித்தாள் பாவையவள்.
அருளின் இருப்பில்லா அருகாமையை வெறுமையாய் உணர்ந்தாள் பகினி. இனம் புரியா உணர்ச்சியில் சிக்கி தவித்தாள் தளிரியல் அவள்.
மாதங்கள் கடக்க, காதல் அவளுக்குள்ளும் பூத்து விட்டதை உணர்ந்தாள் பைந்தொடியவள், இரவெல்லாம் தலையணை கண்ணீர் குளியல் கொள்ள.
இதழ் மிடறும் முத்தம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://neerathi.com/forum/forums/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.143/

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 11
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.