Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 11

ரஷியாவில் திகழ் மருத்துவ படிப்பு படிக்கையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த பவேஷ் எனும் மாணவன் ஒருவனும் அவனுடன் சேர்ந்து அங்கே மருத்துவக்கல்வி கற்றான்.

படிப்பு முடிந்து ஆளாளுக்கு வெவ்வேறு ஊர்களில் இரண்டு வருட இன்டெர்ன் கிடைக்க இடைப்பட்ட விடுமுறையில் பவேஷ் அவனின் தாய்நாட்டிற்கு திரும்பினான். மலேசியா சென்றிடாத திகழோ நண்பன் பவேஷோடு அவன் ஊருக்கு சென்றான் சுற்றுலா.

அங்குதான் முதல் முறை கண்டான் திகழ் இப்போதைய அவன் மனைவி தென்றலை. அப்போதிலிருந்து திகழ் அவளை விண்ட் என்றுதான் அழைப்பான்.

உசந்த ஜாதிக்காரர்கள் எனலாம் பவேஷின் குடும்பத்தை. வெட்டு குத்தெல்லாம் மிக சாதரணமாய் நிகழும் ஊர் அது. நிகழ்த்தும் ஆட்கள் அவன் குடும்பத்தை சார்ந்தவர்கள்.

அப்படியான குடும்பத்தில் தப்பி பிறந்த ஜீவன்கள் இருவர் அது பவேஷ் மற்றும் அவனின் அம்மா மட்டுமே. டாக்டர் படிக்க ஆசைப்பட்ட பவேஷின் தாயின் ஆசை நிராசையாக போக மகனை படித்திட வைத்தார் தாயவர்.

அவர் மூத்த அண்ணனின் மகள்தான் திறலினி தென்றல். படிப்பே ஏறிடாத அவளுக்கு மாமன் பவேஷ்தான் உயிர். எட்டு பத்து வயதிலேயே மாமனுக்கு சேவகம் செய்யும் பொண்டாட்டி ஆகிப் போனாள்.

அவனின் பள்ளி ஆடைகளை இஸ்திரி போட்டு காலணிகளுக்கு வெள்ளையடித்து எல்லாவற்றையும் பக்கவாய் ரெடி செய்து அவன் பள்ளி போக இவள் டாட்டா காட்டி நின்றிடுவாள் வீட்டு வாசலில் ஏதோ மாமனை கட்டிக்கொண்ட பெரிய மனுஷியாட்டம்.

பின், செமத்தையாக வாங்கிடுவாள் அவளின் அம்மாவிடம் இவள் பள்ளி போகாது அவனுக்கு விளக்கு பிடித்ததற்காய்.

அரசாங்கத்தின் கட்டாய விதிப்படி எல்லோரும் பள்ளி சென்றாக வேண்டிய
சூழ்நிலையில் வேறு வழியின்றி பொட்ட புள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தது அக்குடும்பம்.

ஆனால், தென்றலோ அவள் அம்மாவை போல் அரசாங்கத்தையும் ஏமாற்றினாள். மாமனை நினைத்து கனவு கண்டே களிமண் மக்கானாள்.

மூச்சுக்கு முந்நூறு முறை யுவதியவள் வாய் மொழிந்ததெல்லாம் பவேஷ் மாமா என்ற வார்த்தை மட்டுமே.

அவளின் அடாவடிகளுக்கு ஏற்றாற் போல, சிறுவயதிலிருந்தே பவேஷுக்குத்தான் தென்றல் என வீட்டின் பெருசுகளும் பேசி முடிவெடுத்திருக்க வாழ்வில் இனி என்ன வேண்டும் மாமனை தவிர என்று சந்தோஷ பறவையாய் சுற்றி திரிந்தவள்தான் தென்றல்.

விடுமுறைக்கு தோழனின் வீடு வந்த திகழ் அவர்களுள் ஒருவனானான். பணம்தான் அவனை அவர்களுக்கு சமமாக்கியதே தவிர வேறென்றும் இல்லை.

எந்நேரமும் புத்தகமும் கையுமாய் இருக்கும் மாமனை எப்படி டெக்கல் செய்வதென்று தெரியாத தென்றலோ வந்து நின்றாள் உதவிக்கு திகழிடத்தில்.

''அண்ணா பிளீஸ்ணா.. சொல்லுங்கண்ணா.. என் மாமாக்கு இந்த மாதிரி பாவாடை தாவணி போட்டா பிடிக்குமா இல்லே இந்த டவுன் பொண்ணுங்க மாதிரி குட்ட பாவாடே போட்டா பிடிக்குமா..''

சைக்கிளை மிதித்தவாறே தென்றல் வினவ,

''ஏய்!! என்னா அண்ணா நொண்ணாணுக்கிட்டு! அப்படியே வாயிலே ஒன்னு வெச்சேன்னா பாரு! அவன் மட்டும் மாமா நான் மட்டும் அண்ணனா! ஒழுங்கா என்னையும் மாமான்னு கூப்பிடு! இல்லே வெழுத்து விட்ருவேன்!''

என்றவனோ நடந்து வந்த வாக்கில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

''ஆஹான்!! அஸ்கு புஸ்க்கு!! ஆசையே பாரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு!! சும்மா போற வர ஆளையெல்லாம் மாமான்னு கூப்பிட முடியாது திகழ் அண்ணா!! நான் கட்டிக்கப்போறே என் மாமாவே மட்டும்தான் மாமான்னு கூப்பிடுவேன்!!''

என்றவளோ வேகமாய் சைக்கிளை மிதித்து சொல்ல,

''அடிங்!! இப்போதானே சொன்னேன் அப்படி கூப்பிடாதின்னு!! நீ பாறேன் கடுப்பாயி நானே உன்னே கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்க போறேன் நீ கடைசியா என்னதான் மாமான்னு கூப்பிட போறே!! பாரு நடக்குதா இல்லையான்னு!!''

என்றவனோ கையிலிருந்த நெற்கதிரை தூக்கி வீசினான் தென்றலின் மீது.

''அதெல்லாம் கனவுலே கூட நடக்காது திகழ் அண்ணா!!''

என்றவளோ சிரிப்பாய் சிரிக்க,

''ஐயோ விண்ட்!! பிளீஸ் கெஞ்சி கேட்கறேன்!! அண்ணா இல்லாத திகழ் கூட நல்லாதான் இருக்கு.. நீ அதையே மெயிண்டன் பண்ணேன்..''

என்றவனோ கும்பிட்டு வேண்டினான் நிஜமாகவே அண்ணா என்கிற வார்த்தை அவனை கடுப்பாக்க.

''ஐயையோ!! பேரெல்லாம் சொல்லி கூப்பிட்டா சாமி கண்ணே குத்திடும் நான் மாட்டேண்ணா!!''

என்ற தென்றலோ வேண்டுமென்றே ஆணவனை நக்கலடிக்க,

''போடி கறுப்பி!!''

என்றவனோ அவன் பங்கிற்கு அவளை கடுப்பாக்கினான்.

''எதெய் கறுப்பியா!! ஆமா இவரு பெரிய சூரிய குஞ்சி கலரு!! பெருசா என்னே சொல்றாராக்கும்! கறுப்பியாம் கறுப்பி!!''

என்றவளோ தூரம் போன சைக்கிளை நிறுத்தி கோபம் கொள்ள,

''சரித்தான் போடி பட்டிக்காடு!!''

என்றவனோ கிண்டலடித்தான் எல்லா பற்கள் தெரிய.

''சரிங்க டவுன்கார திகழ் அண்ணா!!''

என்றவளோ அவனின் எரிச்சல் பாயிண்டில் கை வைத்து மிதிவண்டியை மிதித்து அங்கிருந்து ஓடினாள்.

''ஆர்ஹ்ஹ்ஹ!! விண்ட்!!''

என்றவனோ துரத்தி ஓடினான் செல்ல குறும்பு கொண்ட பூமகளவளை.

யாரும் நினைத்து பார்த்திடவில்லை அவர்களின் அன்றைய விளையாட்டான விவாதம் பின்னாளில் விவாகத்தில் முடியுமென்று.

இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்...


முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://neerathi.com/forum/forums/இருள்-திருடும்-திகழா.142/
 

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 11
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top