இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 29
என்ன மேடம் ரொம்ப யோசிக்கிறீங்க போல?" என ருத்ரன் கேட்க; அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே இறங்க போனவளின் தாடை நெறுக்கி தன்னைப் பார்க்க வைத்தான் ருத்ரன்... "மரியாதையா அத என் கிட்ட ஒப்படைச்சிட்டு ,நீயும் கூட வா .."என அவன் கூற இத்தனை நாள் அடக்கி வைத்த ஆவேசம் வெளியே வர அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள் வெயினி...
"இவ்வளவு தான் உனக்கு மரியாதை.. உன்னால முடிஞ்சத பாத்துக்க "என கூறி விட்டு வெயினி படகிலிருந்து இறங்கி சென்று விட்டாள் ..."நல்ல வேளை காதல் என்ற ஒன்று முழுதாக அவன் மீது வந்து, அவனிடம் தான் சரணாகதி அடையும் முன்னரே அவன் குணம் உணர்ந்து விட்டேன் "என தனக்குள் ஆறுதல் கூறிக் கொண்டாள் வெயினி...
அவளது கூடாரத்தை அடையும் முன்னரே அவள் கேட்டிருந்த டெலிபதி ஆட்கள் வந்து இருந்தனர் ..அசோக் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்... வெயினியைக் கண்டதும்" மேடம் நாம கேட்ட ஆட்கள் வந்து இருக்காங்க" என அவன் கூற ;"நீங்க உள்ளே கூட்டிட்டு வாங்க அசோக் டீடைல்ஸ் சொல்லனும்" என்றவளுக்கு "ருத்ரன் தானே இதற்கு யோசனை சொன்னான்" என்ற எண்ணமே முதன்மையாய் ஓடியது...
இவள் ஆட்களுடன் கூடாரத்தினுள் நுழைவதை தூரத்தில் இருந்து ரவி பார்த்த்துக் கொண்டிருந்தான் ...அதே நேரத்தில் வெயினி தன்னை அவமானப்படுத்தியதை எண்ணி அவளைப் பழி வாங்க நேரம் பார்த்திருந்தான் ருத்ரன்..
வெயினி அவர்களிடம் அனைத்தையும் கூறி ,செய்து முடிக்க வேண்டிய வேலை பற்றியும் எடுத்துக் கூறினாள் ...அவர்களும் அவளுக்கு அவர்களால் முடிந்த உதவிகளை செய்வதாக மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டனர் ...
வெயினியின் போன் ரிங்கானது திரையில் முகேஷ் என பெயர் மிளிர்ந்தது...காலை அட்டண்ட் பண்ணி காதில் வைத்தாள்... அந்த பக்கம் முகேஷ் "மிஸ் வெயினி நான் ஹோட்டல் நயாகராக்கு வந்து இருக்கேன்.. உங்க ப்ரொஜெக்ட் ,அப்பறம் அதுக்கு ஸ்பான்சர் பண்ற ருத்ரன் ரெண்டு பேர் கிட்டவும் பேசணும் ...இப்போ டைம் ரெண்டு ஆகுது... நான் அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பனும் ...நீங்க இங்க வர முடியுமா? என முகேஷ் கேட்க ;மேல் அதிகாரியிடம் "இல்லை நீ வா 'என்றா கூற முடியும்... "ஓகே சார் வரேன் "எனச் சொன்னவள் ருத்ரனை எவ்வாறு அழைத்துச் செல்வது என தயங்கி நின்றாள்....
என்ன ஆனாலும் பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் ருத்ரனுக்கு கால் பண்ணினாள் வெயினி...விஷயத்தை கூற அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்..." ஈஸ்வர் நானும் உங்க கூட வரேன்" என வெயினி கூற ;அந்த பக்கம் கால் துண்டிக்கப்பட்டது..." இவன் வர மாட்டான்" என வெயினி நினைத்த அதே வேளை ,வேட்டைக்கு செல்லும் வேங்கை என ருத்ரன் தன் ஜீப்பில் அவள் முன் சீறிக் கொண்டு நின்றான் ...வெயினி சற்று மிரண்டாலும் வெளியே காட்டாமல் அசோக்கிடம் சொல்லி விட்டு அவனுடன் சென்றாள்...
ருத்ரனுடன் வெயினி எந்த வித சேதாரமும் இல்லாமல் ஹோட்டலை அடைந்ததே கடவுள் செய்த அனுக்கிரகம் எனலாம் ...அவன் வண்டி ஓட்டியதில் இவள் உயிருடன் வந்ததே அதிசயம் தான்...
✨✨இரண்டு மாதங்களுக்கு பின்✨✨
மணமேடையில் மணப் பெண் தோற்றத்தில் இருந்தாலும், புதுப் பெண்ணிற்குரிய எவ்வித பொலிவும் முகத்தில் இன்றி அமர்ந்திருந்த வெயினியின் கழுத்தில்; மாப்பிள்ளைக்கான எவ்வித தோரணையும் இல்லாமல் கறுப்பு நிற சட்டை மற்றும் கறுப்பு நிற பேன்டில் உக்கார்ந்திருந்த ருத்ரன் எனப்படும் ருத்ரேஷ்வரனின் கைகளால் மங்கள நாண் சூட்டப்பட்டது....செல்வி இளவெயினி "திருமதி இளவெயினி ருத்ரேஷ்வரன் "ஆனாள்...
தனக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அவளால் ஊகிக்க முடியவில்லை... இந்த இரண்டு மாதங்களில் தன் வாழ்க்கை தலை கீழாக மாற்றப்பட்டதை அவளால் எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை...
தாய் ,தந்தை இருவரும் உலகில் இல்லை... மீனா படுத்த படுக்கை.. எசக்கி அவளுடனே தங்கி விட்டான்.. சுமி சுட்டித் தனத்தை தொலைத்து விட்டாள்... அசோக் ஆபத்தில் நண்பனை அறியலாம் என்பது போல் உடன் இருக்கும் ஜீவன்.. கவி யாரையும் எதிர்க்க முடியாமல் திணறும் இளைஞன் ...தன் விதியை நொந்து வெயினி குனிந்த தலை நிமிராமல் இருக்க அவள் காதின் ஓரம் அவன் தான் அவனே தான் ருத்ரேஷ்வரன் குரல் கம்பீரமாக ஒலித்தது..
"எழுந்து நிக்கிறியா? இல்லை கைபிடிச்சு எழுப்பி விடனுமா?" என அவன் கேட்க; அவன் முகத்தை கூட பாராமல் எழுந்து நின்றாள் வெயினி... அவனும் அவளுடன் எழுந்து நின்று "வா" என்ற ஒற்றை வார்த்தையோடு முன்னால் நடக்க, எதுவும் பேசாமல் அவன் பின்னால் நடந்தாள் வெயினி...கவியும் ,சுமியும், அசோக்கும் தாளா துயருடன் அவளை பார்த்து நின்றனர்...
ருத்ரனை எதிர்க்க கவிக்கோ இல்லை அசோக்கிற்கோ அவன் அளவுக்கு ஆட்பலம், பண பலம் இல்லை...
வெயினி அவனுடன் வண்டியில் ஏறினாள் ....ட்ரைவர் சீட்டில் ருத்ரன் தான் இருந்தான் ... அங்கு அமைதியின் ஆட்சி அதிகமாக இருந்தது ....இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை ....ருத்ரனின் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் கார்கள் ஊர்வலம் போனது அத்தனையும் அவனின் அடியாட்கள் தான்... வெயினிக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது எனினும் சுதாகரித்து கொண்டாள்...
ஊரைத் தாண்டி , இருமருங்கிலும் சவுக்கு மரம் நிற்கும் தார் சாலை வழியாக இவர்களின் கார் போனது .... கடற்கரை ஓரமாக ,ஆடம்பரமான மாளிகை ஒன்று அகோரமாக தோன்றியது வெயினிக்கு... இவன் யார்? இத்தனை நாள் சாதரணமாக இருந்தவன் அவன் ..... ருத்ரனின் செல்வாக்கு கூறாமலேயே உணர்ந்தாள் வெயினி....தைரியமே உருவாய் சுற்றியவள் ...இடைப்பட்ட இரண்டு மாத காலத்தில் இன்னலே வாழ்வென வாழ்ந்ததால் எதையும் எதிர்த்து போராட திராணி அற்று இருந்தாள்.... அவளின் வெளிறிய முகம் ருத்ரனுக்கு இன்பத்தை கொடுத்தது..
கார் அவனின் மாளிகையின் முன் நின்றது... கார் கதவை திறந்து கொண்டு இறங்கியவன், சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து கொண்டு ,அவளை ஒரு பார்வை பார்த்தான் ...அதன் அர்த்தம் உணர்ந்தவள் அமைதியாக காரை விட்டு கீழே இறங்கி அவன் அருகில் வந்தாள்... என்ன ஆரத்தி எடுத்தா தான் உள்ள வருவியா ?என அவன் கேட்க; வீட்டையும் அவனையும் நிமிர்ந்து பார்த்த வெயினி கண்கள் கலங்க தாயையும், தந்தையையும் மனதில் எண்ணிக் கொண்டு வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றாள்....
ஓர் மனிதனின் வாழ்க்கை எந்த அளவுக்கு இறைவனால் மாற்றப்படுகிறது என்பதை வெயினி தன் வாழ்வின் மூலம் உணர்ந்து கொண்டாள்.... வீட்டினுள் நோட்டம் இட்டாள்... இருவரையும் தவிர யாரும் இல்லை... ஆடம்பரம் என்பதற்கு அர்த்தமாய் இருந்தது அவ்வீடு...இதற்கு முன் தான் பழகிய ஈஸ்வர் அல்ல இவன்.... தன் பெயரிற்கேற்றாற் போல் ருத்ரேஷ்வரனாக நிற்கிறான் என புரிந்து கொண்டாள் வெயினி....
ஈஸ்வர் அவளை நெருங்கி வந்தான்.... அவன் பார்வைக்கு பாவைக்கு அர்த்தம் தெரியவில்லை.. "உன் பேர் என்ன ஹான் வெயினி... இது தான் உன் ரூம்.. இதுக்குள்ள நீ உன் இஷ்டப்படி இரு.. ஆனா! இந்த ரூம் விட்டு வெளியே வந்தா என் இஷ்டப்படி தான் இருக்கனும்" என அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மேற்கத்தைய ஆடை நாகரீகத்தில் ஒரு பெண் வீட்டினுள் நுழைந்தாள்....
வெயினி அவளை விழி விரித்து பார்க்க, அந்த பெண் வந்ததும் வராததுமாக ருத்ரனை ஓடி வந்து அணைத்தாள்... "விட்டால் வீட்டின் நடுக்கூடம் என்று கூட பார்க்காமல் அவனோடு கட்டில் காட்சியில் ஈடுபடுவாள் "என்ற எண்ணம் தான் வெயினிக்கு தோன்றியது... வெயினி இவ்வாறு பார்ப்பதைக் கண்ட ருத்ரனுக்கு உடலே பற்றி எரிந்தது...
"ருத்ரன் இவ யாரு புதுசா ?புடவை, பூனு பட்டிக்காடு மாதிரி நிக்கிறா ?"என அந்த பெண் வெயினியைக் கை காட்டி கேட்க; "இல்லை பழசு தான் வா நாம ஜாலியா இருக்கலாம்" என ருத்ரன் அந்த பெண்ணை தன்னுடன் அழைக்க;" இரு பேபி வரேன் "என ருத்ரனை பார்த்து கண் சிமிட்டி உதடு குவித்து முத்தமிட்டு விட்டு அப் பெண் வெயினியின் அருகில் நெருங்கி வந்தாள்..."ஹேய் பட்டிக்காடு எத்தனை பொண்ணுங்க கூட ,எத்தனை ரவுண்ட் போனாலும், என் பேபிக்கு நான் தான் ஸ்பெஷல்" என வெயினியின் தாடையில் ஒரு விரலால் தட்டி விட்டு ருத்ரனோடு பிணைந்து கொண்டு அவன் அறை நோக்கி சென்றாள் அப் புதியவள்...
வெயினிக்கு எல்லாமே புதிதாக இருந்தது... அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையினுள் நுழைந்தாள்... அது ஏசி பூட்டப்பட்ட அறை... கட்டில், மெத்தை அலமாரி, சிறிய மேசை, கதிரை, அறையோடு ஒட்டிய குளியலறை என சகல வசதிகளும் இருந்தன ..வெயினிக்கு இதெல்லாம் புதிதல்ல என்றாலும் இந்த அளவுக்கு விலையுயர்ந்த ஆடம்பர பொருட்கள் சற்று அதிகப்படி தான் என தோன்றியது...
அங்குள்ள கதிரையில் அமர்ந்து மேசையில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் வெயினி ....சர சரவென அவள் கண்களில் இருந்து நீர் வடிந்தது... அவளது எண்ண அலைகள் ஆழிப் பேரலையை விட வேகமாக ஆர்ப்பரித்து இரண்டு மாதங்களுக்கு முன் ஹோட்டல் நயாகராகராவில் நின்றது....
அன்று ஹோட்டல் நயாகராக்கு ருத்ரனோடு சென்று இறங்கினாள் வெயினி... "நல்லவன் மாதிரி வேஷம் போட்டு இத அபகரிக்க தானே ஆசை படுர நீ ! உழைச்சு சாப்பிடாம ஊர் சொத்தை அடிச்சு சாப்பிடுரியே வெக்கமா இல்லையா?" என அவனிடம் கேட்டு விட்டு முகேஷைப் பார்க்க சென்றாள் வெயினி ... ருத்ரன் பல்லைக் கடித்துக் கொண்டு முகேஷ் இருக்கும் அறையினுள் நுழைந்தான்...மூவரும் ஒரு மணி நேரமாக ப்ரொஜெக்ட் பத்தி பேசி விட்டு எழுந்தனர்.....
"சரி மிஸ்.வெயினி எனக்கு பிளைட்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்... நீங்க எல்லாம் சரியா பண்ணிடுங்க"என கூறி முகேஷ் விடை பெற்று சென்று விட்டார்... கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்த வெயினிக்கு தெரியவில்லை தான் சிங்கத்திடம் தனியே சிக்கியுள்ளோம் என்று... அறையின் கதவை மூடி விட்டு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கதவில் ஒரு காலை மடக்கி வைத்து ஸ்டைலாக சாய்ந்து நின்றான் ருத்ரன்....
"இங்க என்ன ஃபேஷன் ஷோ நடக்குதா? மரியாதையா கதவை தொற! "என வெயினி கூற சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு அவளது கழுத்தை பிடித்தான் ருத்ரன்..."நானும் பாத்துட்டே இருக்கேன் மூஞ்சில துப்புற! வெக்கம் இல்லயானு கேக்ற! உன் திமிர குறைச்சா தான்டி நீ என் வழிக்கு வருவா " என அவன் கூற; வெயினி அசராமல் அதே திமிர் பார்வை பார்த்தாள் அவனை...
தொடரும்.....