Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
29
ரெண்டு மாசத்துல திருப்பி தர முடியலனா நீங்க தாரளமா வீட்டை எடுத்துக்கோங்க" இவ்வளவு தான் வெயினி பேசிய வார்த்தைகள் ...பேசிவிட்டு அவர் நீட்டிய காகிதத்தில் கையெழுத்து இட்டுக் கொடுத்தாள்.... அந்த பழுத்த ஆடவன் அதை வாங்கிக் கொண்டு வீட்டையும், வெயினியையும் பார்த்து விட்டு சென்றார்...

அவர் சென்ற பின்னால் சுமியும் பெற்றோரும் வந்தனர்.. நடந்தவை பற்றி வெயினி அவர்களிடம் கூறினாள்.."நாம போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் வெயினி" என்று சுமியின் தந்தை கூற; "வயசு பொண்ணு இன்னும் இன்னும் போலீஸ்னு போனா நல்லாவா இருக்கும்? மாப்ளை கிடைக்கிறது கூட கஷ்டமாகிடும்.." என்று சுமியின் தாய் கூற, வெயினி உடைந்து விட்டாள்... "பரவால நான் பாத்துக்கிறேன் ..எனக்கு எங்க அப்பா ,அம்மா மானம் தான் முக்கியம்... இறந்தவர்களுக்கு இழுக்கு வர கூடாது" என கூறினாள் வெயினி...

"ஏன் மா இப்டி பேசுற "என சுமி கேட்க; "போடி உண்மைய சொன்னேன்" என்றார் சுமியின் தாய்.."ஏதோ பண்ணு" என கூறி விட்டு ,சுமியின் தாய் சுமியை இழுத்துக் கொண்டு சென்றார் ...பின்னாடியே அவரது கணவரும் எழுந்து சென்றார்...
ஆதரவாய் பற்றிக் கொள்ள யாரும் அற்ற நிலையில் தாய், தந்தையரின் நிழற்படங்களை அணைத்துக் கொண்டு தரையில் சுருண்டு உறங்கி விட்டாள் வெயினி...

யாருமற்ற வீட்டில் தனியாக கேட்பாரின்றி வீட்டின் கதவை கூட தாழிடாமல் வெயினி உறங்கிப் போனாள்... அரவமின்றி ஓர் உருவம் தூங்கும் அவளையே இமை கொட்டாது பார்த்து விட்டு, அவள் உறக்கம் விழிக்கப் போகிறாள் என உணர்ந்து வந்த வழியே எழுந்து சென்றது....

வெயினியும் தூக்கம் விட்டு எழுந்து பார்த்தாள் மாலையாகியிருந்தது... இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா? என எண்ணியவள் தாய் தந்தையரின் நிழற்படங்களை இருந்த இடத்தில் மாட்டி விட்டு தனது வேலையைப் பார்க்க சென்றாள்...

"மேடம் "என அழைத்துக் கொண்டு அசோக் உள்ளே வந்தான் .."வாங்க அசோக் எனக் கூறி அவனுக்கு ஒரு டீ கப் கொடுத்தாள் வெயினி ...அமைதியாக அதைப் பெற்றுக் கொண்ட அசோக் "மேடம் நாளைக்கு நீதிமன்றத்திற்கு போகணும்" என்று கூற "ஆமா அசோக்! உங்களுக்கும் கடிதம் வந்துச்சா ? "எனக் கேட்டாள் வெயினி..."ஆமா மேடம்" என அவன் கூற "அசோக் நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா ?"என வெயினி கேட்டாள்...

"சொல்லுங்க மேடம்" என அசோக் கூற..."எனக்கு வாழ்க்கைல எந்த பிடிப்பும் இல்லை அசோக் ...தனி கட்டை எதுக்கும் பயமில்லை... ஆனா உங்களுக்கு அப்படி இல்லை ...வயசான அம்மா ..மாசமா இருக்ற தச்கச்சி அவளுக்கு அண்ணனா முறை செய்ய வேண்டிய கடமை... உங்களயே நேசிக்கிற ஒருத்தி .."என வெயினி கூற இடையில் குறுக்கிட்ட அசோக் "மேடம் எல்லாம் சரி கடைசியா சொன்னீங்க பொண்ணு அது இதுனு" என அவன் கூற வெயினி சிரித்து விட்டாள்...

"அசோக் சுமி உங்களை லவ் பண்றானு எனக்கு தெரியும் ...அதே நீங்களும் அவளை லவ் பண்றீங்க... ஆனா அவ இன்னும் காலேஜ் முடிக்கல ,சின்ன பொண்ணுனு எதுவும் சொல்லிக்காம இருக்கீங்க சரியா ?"எனக் கேட்க அசோக் திகைத்து விட்டான்...

"அசோக் அஞ்சு வருஷமா என் கூட வேலை பாக்குறீங்க... உங்க வீட்ல இருந்ததை விட என் கூட இருந்தது தான் அதிகம் ...சுமி நான் தூக்கின முதல் குழந்தை... இது போதாதா நான் சொன்ன தகவல் சரியானதா இருக்க" என்று வெயினி கேட்க "சாரி மேடம் "என்றான் அசோக்....

"எதுக்கு சாரி? நீங்க ரொம்ப நல்ல திறமையான பையன் ...சுமியும் ரொம்ப நல்ல பொண்ணு ..என்ன எங்க சித்திய தான் சமாளிக்கனும் "என்றாள் வெயினி..

அசோக் குனிந்த தலை நிமிரவில்லை... "அசோக் இதுல தப்பு எதுவும் இல்லை.. கமான் அசோக்" என்றாள் வெயினி..

"சரி சரி விஷயத்துக்கு வருவோம்... நாளைக்கு என்ன ஆனாலும் எல்லாமே என் தப்பு தான்னு நான் ஒத்துக்கிறேன்.... நீங்க விலகி அமைதியா நின்று வேடிக்கை பாத்தா போதும் "என்றாள் அவள் ... அசோக் எவ்வளவு மறுத்து கூறியும் அவள் காது கொடுத்து கேட்கவில்லை....

" நீங்க போகலாம் அசோக் "என அவள் எழுந்து நிற்க ,இதற்கு மேல் பேசி வெல்ல முடியாது என உணர்ந்த அசோக் ,அவளை இயலா பார்வை ஒன்று பார்த்து விட்டு சென்று விட்டான்....

அசோக் சென்ற பிறகு வெயினி சோஃபாவில் தொப்பென விழுந்தாள்.. தன்னுடைய நாட்குறிப்பை கையில் எடுத்து "நாளையோடு என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி "என எழுதி ஒரு புள்ளி இட்டு அதை மூடி வைத்தாள் ...அமைதியாக சென்று அம்மா அப்பாவின் அறையில் உறங்கி விட்டாள்....

புதிதாய் விரிந்த மொட்டுக்களிடம் காதல் சங்கதி கூற தேன்சிட்டு படையெடுக்க, செந்தழல் கோளாய் ஆதவன் உதித்தான்...

வெயினி எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து வந்தவள் தன் அம்மாவின் சேலை ஒன்றை கையில் எடுத்தாள் ...வெள்ளை நிற காட்டன் சேலை ஆங்காங்கே நீல வண்ணத்தில் பூக்கள் மலர்ந்திருக்கும்... இரு பக்கமும் பார்டர் நீல நிறத்தில் இருக்கும் ..."தனது அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான சேலை" என எண்ணி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் ...மிகவும் நேர்த்தியாக அதனை உடுத்தி கொண்டு தாய் தந்தையர் புகைப்படங்கள் முன்பு நின்றவள் "எத்தனையோ முறை சேலை கட்ட சொல்லியும் அத நான் செய்யல.. இப்போ கட்டிருக்கேன் வந்து வாழ்த்துங்க" என கூறி அழுதாள்..

பின்னர் தன்னை தானே தேற்றியவள் "வரேன்" என்று பெற்றோரிடம் கூறி நீதிமன்றத்திற்கு புறப்பட்டாள்....

நீதிமன்ற வளாகத்தில் பல புகைப்பட கருவிகள் அவள் உருவத்தை தன்னுள் நிரப்பி, அவளிடம் சில கேள்விகளையும் ஒலிவாங்கி பதிவாக்கிக் கொண்டது தன்னுள்..பத்திரிகையாளர்களை கடந்து நீதிமன்றத்தினுள் நுழைந்தாள் வெயினி.. அவளது வழக்கு அழைக்கப்பட்டது...

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட வெயினியை அரசு தரப்பு சட்டத்தரணி "குற்றவாளியே" என ஆணித்தரமாக பேசி நஷ்ட ஈட்டு தொகை ,அபராதம், சிறைவாசம் என பல தண்டனைகளை வெயினிக்கு எதிராக நீதிபதி முன் வைத்தார்....

இது சம்மந்தமாக "வெயினி தரப்பில் மறுப்பு ஏதும் உண்டா?" என நீதிபதி கேட்க;" இல்லை "என்றும் தான் "குற்றவாளி "தான் என்றும் வெயினி ஒப்புக் கொண்டாள்...

கவியும் ,அவனது பெற்றோரும், அசோக்கும் மிகவும் வருந்தினர் ...எவ்வாறு தொழிலில் நேர்மையாகவும் ,பெற்றோருக்கு ஒரே பெண்ணாய் செல்லமாகவும் வளர்ந்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா? என எண்ணினர்...

உணவு இடைவேளையின் பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறி சென்றார் ...எல்லோரும் எழுந்து செல்ல வெயினி அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்...
அசோக் மற்றும் கவி வந்து அவளிடம் பேசியும் எந்த பயனுமின்றி போனது... மீண்டும் நீதிச்சபை உணவு இடைவேளைக்கு பின்னர் கூடியது...

வெயினியின் வழக்கு அழைக்கப்பட்டது.. அவள் "குற்றவாளி "என அறிவிக்க இருந்த சந்தர்பத்தில் யாரோ நால்வர் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தனர்... வெயினிக்கு விதிக்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை ,மற்றும் அபராத பணம் முழுவதுமாக செலுத்தப்பட்டது... நீதிபதியிடம் நீட்டப்பட்ட காகிதத்தில் அவளுக்கு "முன் ஜாமீன்" எடுக்கப்பட்டிருந்தது ..எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு நீதிபதி அனைத்தையும் ரத்து செய்தார் ...அத்தோடு நீதிமன்றமும் கலைந்தது...

வெயினிக்கு அதிர்ச்சி .."யார் அவர்கள்? வந்தவர்கள் எங்கே சென்றார்கள்? தனக்காக இத்தனையும் செய்வது யார்?" என அவள் சிந்திக்கையில், ரவியும் அவனது பெற்றோரும் அவளிடம் வந்தனர்... அவர்களைக் கண்டதும் "ரவியும் அவனது குடும்பமும் தான் தனக்கு உதவியது" என அவள் எண்ணிக் கொண்டாள் ...கவியும் ,அசோக்கும் கூட அவ்வாறு தான் எண்ணினர்..

வந்தவர்களிடம் அவள் சகஜமாக பேசி நன்றி சொல்லவும், அங்கு நடந்ததை ஒரு ஓரமாக நின்று அவதானித்த இவர்களுக்கு "தனக்கு உதவியது யார்" என்று அடையாளம் தெரியாமல் தான் இவள் நம்மிடம் பேசுகிறாள் "என்பது ரவிக்கு புரிந்து விட்டது... எனினும் வந்த வரை இலாபம் என்பது போல் பேசாமல் இருந்தனர்...

வெயினியை அழைத்துக் கொண்டு அவளது வீட்டிற்கு சென்றனர்.. முதலில் வண்டியில் இருந்து இறங்கியது ரவி தான்... வீட்டின் வாசற் கதவருகே ஏதோ பத்திரம் போல் கிடக்க கையில் எடுத்தான் அவன்... அவனின் பின்னால் வந்த வெயினி அவனது கைகளில் இருந்த பத்திரத்தை பார்த்து பிரித்து படித்தவள் மகிழ்ந்து போனாள் ..."ரவி நீங்களா இதெல்லாம் செய்தீங்க ?;என் வீட்டுப் பத்திரத்தை கூட மீட்டு கொடுத்துட்டீங்க... இதுக்கெல்லாம் நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கேன் "என கை கூப்பினாள ..ரவிக்கோ கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல் இருந்தது.... "யாரோ ஒரு கிறுக்கன் இதெல்லாம் பண்றான் எவனா இருக்கும்?...அட எவனா இருந்தா நமக்கென்ன.. இதுவும் நல்லா தான் இருக்கு " என மனதில் குத்தாட்டம் போட்டான் ரவி‌...

" பரவால ஏதோ அன்னைக்கு கோவத்துல மாம் ,டாட் பேசிட்டாங்க... அப்பறம் தான் யோசிச்சு பாத்தோம் அவசர பட்டுட்டோம்னு தோனிச்சு... அதுக்கு அப்பறம் வந்து பேச நேரம் சரில்லாம போச்சு "என ரவி சுந்தரி சீரியலை விட சிறப்பாக நடிக்க வெயினி நம்பி விட்டாள்....

"வாங்க உள்ளே போவோம்" என்று வெயினி அழைக்க," நீ போ இளா முதல்ல" என அவன் கூற, மிகுந்த மகிழ்வுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்றாள் வெயினி....

வெயினி உள்ளே சென்றதும், பின்னாடி வந்த தன் பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் விளக்கினான் ரவி... அவன் கூறியதைக் கேட்டவர்கள் "மரங்கொத்தி மரம் கொத்த கிளிப்பிள்ளை பேரெடுத்த மாதிரி ....யாரோ ஒரு புண்ணியவான் இதெல்லாம் பண்ண நமக்கு அந்த பெயர் வந்துட்டு.. இதுவும் நல்லது தான் "என ரவியின் தாய் வன்மமாக கூறினாள்..

"நான் தொட்டாலே அருவருப்பா இருக்குனு சொன்னா...அவளை கல்யாணம் பண்ணிட்டு கட்டிலுக்கு மட்டுமே பயன் படுத்த போறேன் "என்று வெக்கமே இல்லாமல் தாய் தந்தையரிமே கூறினான் அசோக்.. தானும் ஒரு பெண் என்பதை மறந்த ரவியின் தாய் "அப்டியா சொன்னா அவ...அவளை விட்ராத" என தன் மகனின் கொடூர எண்ணத்திற்கு தூபம் போட்டாள்...

இவற்றை எல்லாம் தூரத்தில் இருந்து வெயினியின் வீட்டில் யாருமே அறியாமல் பொருத்தப்பட்ட கேமராவின் மூலம் இரு கண்கள் அவதானித்து... மெலிதான புன்னகை புரிந்தது...

தொடரும்....
 
Last edited:
Back
Top