மிடில் பென்ச்
New member
- Joined
- Apr 27, 2024
- Messages
- 25
கிரமத்தின் பெரிய ஆலமரத்தடியில் அன்று மதிய வெயில் கொளுத்தும் வேளையில் ஒருவர் பழைய பாடல்களை தன் மொபைலில் பழைய பாடல்களை பாடவிட்டுக் கொண்டிருக்க...
அப்போது அதே கிரமத்தைச் சேர்ந்த இன்னொருவர் தள்ளாடிக் கொண்டே வந்து அமர..
" என்ன ண்ணே ஒய்யாரமா படுத்திருக்க... பாட்டுலாம் கேட்டுகிட்டு... " எனக்கேட்டவனின் காதில் அடுத்த பாடல் " ராஜா கைய வச்சா...ராங்கா போனதில்ல... " என ஒலிக்க...
ஆகா..ஆகா...என்ன பாட்டு... ஒரு காலத்துல நா கைய வச்சது எல்லாம் பொன்னா மின்னுச்சி...காசா கொட்டுச்சி...ம் இப்போ... என அந்த பாடலில் தன் நினைவுகளில் மூழ்கியவனுக்கு...
அடுத்த பாடல் இன்னும் இதத்தை தந்தது அவனுக்கு " காற்று வாங்க போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்.." என...
அதற்கும் ஆமா ஆமா..வேலை பார்த்துட்டு ஜாலியா நடந்து போனேன்...அப்பதான் கவிதாவ பார்த்தேன் ... கண்ணடிச்சேன்....கவிதையோட வந்தேன் ... கடைசில கவிதாவோடவே வந்துட்டேன்... என்றான்...
அதற்கு அவரோ டேய் போதும் டா... முடியல... எனச்சொல்ல...
அப்போது " வாடி பொட்ட புள்ள வெளிய என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே... " என்ற பாட்டு வர....
அவனோ எனக்குன்னே வர்ர பாட்டு மாதிரி இருக்கு ண்ணே.. இருக்குற கோவத்துல .... என் வாலிபத்தையே ஒன்னுமில்லாம ஆக்கிட்டா.... என நொந்து கொண்டவன்..
அவரோ ," டேய்... ஏன் டா...இப்டி.. " என முனுங்க... சும்மா இர்ரா.... எனச்சொல்ல...
அப்போது "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... " என அடுத்த பாடல் ஒலிக்க...
அவனோ ," எங்க ண்ணே..டெய்லி நெஞ்சுக்குள்ள கோட்டர் மழைதான் ஓடுது.. இவள கட்னதுல இருந்து... " என பீல் பண்ண...
அவரோ ," போதும் நிறுத்து டா வெண்ண... குடிச்சிட்டு வந்து ஏன்டா அட்டூழியம் பண்ற... என புலம்ப...
அவனோ அவரது மொபைலுக்கு அருகிலேயே படுத்தே விட...அப்போது சட்டி சுட்டதடா கை விட்ட தடா .. என்ற பாடல் அடுத்ததாக ஒலிக்க...
அவனோ ," ணீணே அவள அடிச்சிட்டேன்... கோவத்துல... அதே கோவத்துல என்னையும் விட்டு கோவிச்சிகிட்டு போய்ட்டா.. இதுக்காக விட்டுட்டா போறது... " என லேசாக கண்கள் கலங்க..
அவருக்கோ நிம்மதியே பறிபோயி "அடேய் போதும் நிறுத்து டா... ஏன்டா படுத்துற" என புலம்ப....
அவனே மீண்டும் கேட்டான் ," அடுத்த பாட்டு என்ன ண்ணே வரும்.. சூப்பர் ண்ணே... " எனச்சொல்ல...
" காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி... " என்ற பாடல் ஒலிக்க....
அவரோ " ஐயய்யோ சாகடிக்க போறானே... போச்சே... நிறுத்தவே மாட்டானே.. " என பீல் பண்ண...
அவனோ ஆமண்ணே... அவளுக்காக காத்துகிட்டே இருக்கேன்...காலந்தான் போகுது... என நொந்து போய் சொல்ல...
இறுதியாக அவள் வருவாளா... அவள் வருவாளா... உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க... என்ற பாடல் வர....
அவனோ ," வருவா...ண்ணே...வருவா... அவ கை கால்ல விழுந்தாவது கூட்டிகிட்டு வர்ரேன்.. " என்றவன் எழுந்து தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலை எடுத்து அப்படியே வாய்க்குள் ஊற்ற..
டேய்...போதும் நிறுத்த போரியா இல்லையா... என கத்த..
அவனோ சரிண்ணே சரிண்ணே என்றவாறு ," சொர்க்கம் மதுவிலே.. சொக்கும் அழகிலே... " என்ற பாடல் வரிகளை அவனும் பாடியவாறே அங்கிருந்து நகர்ந்தான்....

Author: மிடில் பென்ச்
Article Title: குடிகாரனின் காதல் ..
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.