உறைந்த உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்துவிட்டு
மீண்டும் உயிரைப் பறிக்கும்
உன் வசீகரச் சிரிப்பைச் சற்று
மறைத்து வைத்துக் கொள்.....
வெட்கத்தை விலைபேசி
வினாடிக்குள் ஏலம்விட்டு
ஏகாந்தமாய் எனைப் பார்த்து
கண்சிமிட்டும் விழிகளின் வீச்சை
சற்று மட்டுப்படுத்திக் கொள்....
உருக்கி உருக்குலைத்து
உருவமில்லா...
அழகனே
உலகத்தின்
பாஷைகளை எல்லாம்
உள்வாங்கி ஒலிவடிவமிட்டாலும்
உருகும் உள்ளத்தின்
உணர்வுகளை கலங்கும்
கண்ணீரில் சேர்த்து
உயிரைத் தாங்கி நிற்கும்
என் கண்களின் மொழிகள்
புரியவில்லையா உனக்கு...
உன் இறுகிய அணைப்பிற்குள்
துடிக்கும் இதயத்தின் ஓசைறியும்
ஆசையைக் கூறிட..
உடற்கூறுகளை ஒட்டுமொத்தமாய்...
கட்டித் தங்கமே..
கண்மணியே...
முக்கனியே...
முத்துச்சரமே...
அம்மா என்ற ஒற்றைச்
சொல்லில் என்னை
மறுபிறவி எடுக்க வைத்த
மாணிக்கமே....
என் கண்ணீர் துளிகளை
தளிர் கரம் கொண்டு
துடைத்து எறியும் செல்வக்
களஞ்சியமே....
என்னை ஆட்டிப்படைக்கும்
உன் அன்பிற்கு என்றும்
அடிமையாகத் தோணுதடி
அஞ்சுகமே...
ஆண்டாண்டு காலமாய்
அடிமைப்படுத்தி
வைக்கத்தான்
அச்சம் கொண்டு
அடக்கி இருக்கச்
செய்தாயோ அவளை......
யுகங்கள் பல
கடந்த பின்னும்
மூடத்தனங்களுக்குத்
துணை போகத்தான்
மடம் கொண்டு
மாடத்தில் இருக்கச்
செய்தாயோ அவளை...
கவிதை கற்பனைகளில்
வர்ணித்து ...
வடிவழகை வரிகளில்
ஏற்றத்தான்....
நாணம் கொண்டு
நடைபயிலச்...
என்
தயக்கத்தை மட்டுமல்ல
தன்மானத்தை உடைக்கும்
சக்தியும் உனக்கு மட்டுமே உண்டு..
சுயத்தை இழந்து சுவாசிக்க
கற்றுத்தரும் வித்தை எல்லாம்
இக்காதலின் உச்சகட்ட பயிற்சி போலும்💔
விதியின் பாதையில்
விருப்பமின்றியே
பயணிக்கிறேன்.....
பெண்ணாய்ப் பிறந்த
ஒரே காரணத்தால்.....
கட்டிய மாங்கல்யம்
கைவிலங்காய் மாறிய
பின்பும் வாழ்கிறேன்
பெண்ணாய்ப் பிறந்த
ஒரே காரணத்தால்....
சுற்றம்சூழ இருந்தும்
தனிமைச் சுழலில்
சிக்கித் தவிக்கின்றேன்
பெண்ணாய்ப் பிறந்த
ஒரே காரணத்தால்...
உன் பார்வையில்
சிவந்து
உன் அருகாமையில்
வெட்கி
உன் உரசலில்
உருகி
உன் வருடலில்
வதங்கி
உன் தீண்டலில்
தேய்ந்து
உன் அணைப்பில்
அரற்றி
உன் மூச்சுக் காற்றில்
சிலிர்த்து
உன் ஈர முத்தத்தில்
தகித்து
உன் எச்சிலூறும் நாவால்
காய்ந்து
உன் வியர்வையில்
நான் குளித்து
உன் இடைப் பற்றுதலில்
உலர்ந்து போக...
என் உலகத்தின்
ஒரே அழகியவள்...
அவளைக்கடந்து
எந்த துன்பமும்
எனை அண்டியதில்லை...
எட்டடுக்கிற்கு எனை ஏற்றவில்லை
என்றாலும் அவளுக்கு எட்டிய வரை
இட்டு நிரப்பி மடிதாங்கியவள்...
அவள் அவஸ்தைப்பட்டாலும்
என் அத்யாவசியத்தை
தீர்த்து வைத்த
ஆதிலட்சுமி அவள்..
தந்தையவனின்
இல்லாதிருப்பை
எனை உணராமல்
செய்த...