Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

thiththikukum vaanam

  1. Neerathi Admin

    வா

    சரியென்றும் தவறென்றும் பகுத்தறியாமல் உண்மையோ பொய்யொவென சந்தேகிக்காமல் நிதர்சனங்களை ஆராய மனமில்லாமல் நெஞ்சோரம் நிறுத்திக் கொள்கிறேனடா அழகனே நீ அழைக்கும் வாவென்ற சொல்லை…❤️
  2. Neerathi Admin

    மௌனம்

    ஆயிரமாயிரம் கேள்விகளையும் அடுக்கடுக்கான வலிகளையும் கொந்தளித்து கொட்டும் வார்த்தைகளையும் இதயம் கனத்து இமையோரம் கசியும் கண்ணீரையும் இதழ் கடித்து இறுக்கமாக காத்து வைத்திருக்கிறது எனது மௌனம்... நீ வேண்டும் என்பதற்காக மட்டுமே…♥
  3. Neerathi Admin

    ஆழம்

    உன் மீதான என் நேசம் எத்தனை ஆழமென்பதை நீ என்னை அழ வைக்கும் ஒவ்வொரு முறையும் உணர்ந்து கொள்கிறேன்…
  4. Neerathi Admin

    தவிப்பு

    பார்க்க பார்க்க பார்வை பரிதவிக்கிறது.. படிக்க படிக்க மனம் மரித்துப் போகிறது.. உணர உணர உள்ளம் உடைந்து போகிறது… நினைக்க நினைக்க நெஞ்சில் வலியெடுக்கிறது… நானில்லாத உன் எழுத்தை எண்ணியல்ல.. உன்னகம் தொட்ட முதல் பெண்ணென்ற என் அகந்தையை.. கற்பனையில் என் காதலை கட்டி. வைத்த கர்வத்தை.. உன...
  5. Neerathi Admin

    உன்மீதான என் காதல்

    உயிருக்குள் உறைந்து போன உன்னை நினைத்து ... உதிரம் கலந்து நானெழுதும் எழுத்துக்கள் அனைத்தையும் உனதாக்கியே கொள்கின்றது உன்மீதான என் காதல்...❤️
  6. Neerathi Admin

    சலனமின்றி நிற்கிறேனடா!

    ஆளை உள்ளிழுக்கும் ஆழிப்பேரலைகளையும் யாரும் காணமுடியாத அடியாழங்களையும் பொங்கிப் பெருகும் பெருவெள்ளத்தினையும் தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அமைதி காக்கும் இக்கடல் போல்.. நானும்... அணுவணுவாய் உயிர் குடிக்கும் உன் ஞாபகங்களையும் வெடித்துச் சிதறி சீறிவரும் உன்மீதான என் நேசத்தையும் உயிரின்...
  7. Neerathi Admin

    நான் பெற்ற உன்னை

    அஞ்சி நடுங்காதே அன்புச் செல்வமே உதிரத்தை உணவாக மாற்றும் வல்லமையை என்னுடலுக்குத் தந்த இறைவன் ... வாடும் உயிர்களின் வற்றிப் போன வயிற்றுக்கு வஞ்சனை செய்யாத மனித மனங்களைப் படைத்திருக்கலாம்... நீ முட்டி மோதினாலும் அமுதூறாத முளைகளை வெட்டியெறியவே தோன்றுகிறதடா.. அன்னமிடவில்லை என்றாலும்...
  8. Neerathi Admin

    சுயம் தொலைக்கிறேனடா

    நீ... உன் நினைவடுக்குகளில் எனைத் தேடும்போதெல்லாம்... நான்... என் நிகழ்காலத்தின் சுயம் தொலைக்கிறேனடா..❤️
  9. Neerathi Admin

    விடியாத ஓரிரவு போதுமடா

    சுகமான போர்வைக்குள் ஆழிப்பேரலையென சுருட்டிக் கொண்ட உன் அணைப்புக்குள்... அன்பெனும் மஞ்சத்தில் உன் நெஞ்சம் சாய்ந்து... என் மூச்சுக் காற்றில் உன் சுவாசம் கலந்து.. இதமாய்த் தலைகோதும் இறுக்கமான காதலுடன்... இமைபிரியாத கனவுடன்... விடியாத ஓரிரவு போதுமடா...♥
  10. Neerathi Admin

    கிழித்தெறிந்தபக்கங்களில்

    பதிவிட முடியாமல் நான் கிழித்தெறிந்த பக்கங்களில் எல்லாம்... பன்மடங்கு வன்மையாக கொட்டித் தீர்த்திருக்கிறேன் என்னுள் ஆழமாய்ப் பதியமிட்ட இக்காதலை.....♥
  11. Neerathi Admin

    இருதுளி கண்ணீர்

    இதயம் நுழைந்த காதலை... இணையில்லா காதலை.. இன்னதென்று வரையறுக்க திணறும் நேரங்களில்... இமையோரம் வழியும் இருதுளி கண்ணீர்த் துளிகள் மிக அழகாய் உணர்த்தி விடுகிறது....♥
  12. Neerathi Admin

    உன் அருகாமையால்

    இதமாய்ப் பொழிகின்ற மழையின் தூறல்களில் சுகமான சாரலின் வாசமாய் வீசும் உன் அருகாமையால்... உடல் குளிர்ந்து உள்ளம் சிலிர்த்து இமைகள் படபடத்து இதயத்தின் ஆணிவேர் வரை அழகாய் நனைந்து ஈரமாய்ச் சில்லிடுகிறது.....♥
  13. Neerathi Admin

    ஊண் உருகி

    ஊண் உருகி உயிர் உருகி உருக்குலைந்து காற்றில் கரைந்து நீ உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றாய் மாறி உன்னில் கலந்திடவே ஆசையடா......♥
Back
Top