Gnana Selvam L
New member
- Joined
- Apr 29, 2024
- Messages
- 1
அது நகரமும் இல்லாமல் கிராமம் என்றும் சொல்ல முடியாமல் இரண்டும் கலந்த ஒரு அற்புத கலவையாக இருந்தது அந்த ஊர். ஒரு பக்கம் இயற்கையின் அத்தனை வளங்களும் கொட்டி கிடக்கிறது என்றால் மறுபக்கம் வானுயர கோபுரங்களும் முக்கிய வீதிகளில் தொழிற்சாலைகளுமாக செல்வம் கொழிக்கும் பூமியாக இருந்தது அந்த ஊர்.
அந்த ஊரில் வாழ கூடிய பெரும் புள்ளிகளில் தணிகாசலமும் ஒருவர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவு நிலபுலன்களும் வாய்ப்பு வசதியும் கொண்ட ஊரின் முக்கிய புள்ளி அவர்.
தூரமாய் ஒரு ஏக்கர் நிலத்தில் நடுநாயகமாய் நிற்கிறதே அந்த மூன்று மாடி வீடு. அதுதான் அவரோட வீடு. அந்த வீட்டை சுற்றி இருக்கிற நிலங்களும், சாலைக்கு மறுபுறம் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் காம்பிளக்சும் அவரோடது தான். அதை அடுத்து பின்புறம் கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியும் தென்னந்தோப்பும் அவரோடது தான்.
இது மட்டுமன்றி பழைய பண்ணை வீடு ஆறு ஏக்கர் நிலத்தோடு ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருந்தாலும், தான் இப்போது செய்து வரும் பைனான்ஸ் தொழிலுக்கு தோதாக நாலு மனிதர்கள் வந்து போக வசதியாக அமைய வேண்டும் என்பதற்காக தணிக்காசலம் இந்த பெரிய வீட்டை ஊரின் மத்திய பகுதியான இந்த இடத்தில் கட்டினார்.
பரம்பரை பரம்பரையாக அவர்கள் குடும்பத்திற்கு என்று செல்வாக்கு இருந்தாலும் தணிக்காசலம் ஊரின் மையப் பகுதியில் இந்த பிரமாண்ட வீட்டை கட்டிய பிறகு தான் அவரின் செல்வாக்கு உயர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
அவர் அப்பா தாத்தா, முப்பாட்டன் காலத்தில் எல்லாம் அவர்கள் தொழில் விவசாயம் தான். மூணு போக விளைச்சலும் அந்த விளைச்சலால் உற்பத்தியாகும் நெல்மணிகளும் தானியமுமாக எந்த நேரமும் அவர்கள் வீட்டை பண்ணையாளர்கள் நிரப்பி கொண்டே தான் இருப்பார்கள். பால் தொழில் கூட இருந்ததால் பண்ணை வீட்டின் பின் பகுதியில் பெரிய மாட்டு தொழுவமும் இருந்தது. கூடவே அதனை பராமரிக்க என்றே பலரும் வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் அனைவருக்குமான செலவை தணிகாசலத்தின் தாத்தாவே ஏற்று நடத்தி அவர்களை வாழ வைத்ததாக பாட்டி அடிக்கடி தணிகாசலத்திடம் கதை கதையாக சொல்லி உள்ளார்கள்.
முன்பு எல்லாம் அந்த ஊரில் உள்ள பாதிக்கு மேலானவர்கள் இவர்களுக்கு கடன்பட்டவர்களாகவே தான் இருப்பார்கள். தணிக்காசலத்தின் தாத்தா வட்டிக்கு என்று யாருக்கும் பணம் கொடுப்பது இல்லை. உதவி கேட்டு வந்தவர்களுக்கு முகம் கோணாமல் உதவி செய்தாலும் அவர்களிடம் இருந்து அதற்காக வட்டி வசூலிப்பது இல்லை.
வாங்கி போகிறவர்களுக்கு எப்போது திருப்பி கொடுக்க முடிகிறதோ அப்போது திருப்பி கொண்டு கொடுத்தால் போதும். அதற்கு அடமானமாக ஏதாவது ஒரு பொருளை வாங்கி வைத்து கொண்டு பணத்தை கொடுத்தவுடன் அடமான பொருளை திரும்ப கொடுத்து விடுவார்.
இதையே சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த தணிகாசலத்திற்கு அவன் கவனம் விவசாயம் பக்கம் செல்லாமல் இந்த பக்கம் திரும்ப ஆரம்பித்தது. விவசாயத்தில் வியர்வையில் குளிக்க தமையனும் தம்பியும் வேலை செய்த போது வெள்ளை வேஷ்டி சட்டை கசங்காமல் தணிக்காசலம் கடன் வசூலிக்கும் வேலையை வாங்கி கொண்டான். கூடவே அவர்கள் இருவரை விட இவன் கணக்கில் புலியாக இருந்தது தணிகாசலத்தின் அப்பாவை இவன் ஆசைக்கு சம்மதம் சொல்ல வைத்தது.
கடைசியில் அவர் தந்தையின் இறப்புக்கு பின் தனக்கு வந்த சொத்தில் பலவற்றை அண்ணன் தண்டபாணியிடம் கொடுத்து விட்டு அதற்காக கணிசமான ஒரு தொகையை அவரிடமிருந்து வாங்கி அந்த பணத்தை தந்தையை போல் ஏழைகளுக்கு கொடுத்து உதவாமல் வட்டிக்கு காசு என மாற்றி அமைக்க…
கிராமமே மிரண்டு போனது. ஆரம்பத்தில் வீம்போடு பணம் வாங்குவதை சுத்தமாக நிறுத்தி கொண்ட கிராம மக்கள் நாளாக ஆக குடும்ப சூழல், பஞ்சம், பசி என இவர்கள் முன் நிற்க… தணிகாசலத்தின் தொழில் அசுர வளர்ச்சியை கண்டது. கொஞ்ச நாளிலே அவரிடம் கடன் வாங்காதவர்களே அந்த ஊரில் இல்லை என சொல்லும் அளவு ஏழைகளின் வாழ்க்கை சூழல் தணிக்காசலத்தின் வலையில் பலரையும் விழ வைத்தது.
“கடன்காரர்கள் அதிகரிக்க அதிகரிக்க… அவரின் வசதி வாய்ப்புகள் பெருகின. ஊரில் உள்ள சொத்தில் பாதிக்கு மேல் இவரின் பெயரில் மாற்றம் பெற்றது. அவரின் தொழில் ஊரை தாண்டி வெளியிலும் விரிவு பெற்றது.
இப்போது இருக்கும் வீடு கூட தணிகாசலம் ஒரு ஏழை விவசாயிடம் இருந்து புடுங்கிய பூமிதான். அந்த விவசாய பூமியில் விளைச்சலுக்காக கடன்பட்ட விவசாயி கடைசியில் விவசாய பூமியையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தணிகாசலமோ எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த பூமியை தனதாக்கி கொண்டதும் மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளுக்கு காசு கொடுத்து விவசாய பூமியை வாழிடமாகவும் மாற்றி கொண்டான். ஆரம்பத்தில் முணுமுணுத்த அந்த ஊரும் அந்த பூமியில் சுட்டிடம் எழுந்த அழகை ‘பார்த்ததும் மலைத்து போய் அவனின் வளர்ச்சியை புகழ ஆரம்பித்து விட்டது.
அப்படி வாழ்வில் உயர… உயர… பறந்த அந்த கொடி தான் அதோ அந்த வீட்டின் முன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண் மூடியிருக்கும் கம்பீர புருஷர் தணிக்காசலம். அவர் ஆளுமையும் கம்பீரமுமே அவரை பார்த்து நடுங்க வைத்து விடும். அவர் இந்த வீட்டில் இப்படி கண்மூடி அடர்ந்திருக்கும் சில நொடிகளே சாந்தமானவர். அதை விட்டு எழுந்து விட்டால் அவரோடு சேர்ந்து மூர்க்கதனமும் எழுந்து நின்று ஆட தொடங்கிவிடும். அவரது இடது பக்கம் கையை மார்புக்கு குறுக்கே கட்டி கொண்டு பவ்யமாக நிற்கிறானே அவன் தான் அவரோட எடுபிடி மணியன். தணிகாசலம் செய்யும் அத்தனை தில்லாலங்கடி” வேலையும் தெரிந்த ஒரே ஆள்.
அதிகம் பேச மாட்டான். ஆனால் தணிகாசலத்தின் எந்த வேலையையும் மறக்க மாட்டான். அவர் எள் என்பதற்குள் எண்ணெய் ஆகி நின்று விடும் அளவு அவரின் விசுவாசி. அவர்கள் இருவரின் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை இடித்து கொண்டிருக்கிறதே. அதுதான் தணிகாசலத்தின் மனைவி கலையரசியின் தாய். அதாவது தண்டபாணியின் மாமியார். அவங்க கொஞ்ச வருஷமாவே இவங்க கூட தான் இருக்காங்க.
சொல்ல மறந்துட்டேன். தணிகாசலத்துட்ட. இருக்கிற பாதி சொத்து இந்த அம்மா வழியா வந்தது தான். இவரோட மனைவி கலையரசி இந்த அம்மாவோட ஒரே பொண்ணு. கணவர் பாதியில நெஞ்சுவலியால இறந்து போய் விட தன்னுடைய அத்தனை சொத்தையும் மருமகன் பெயருக்கு எழுதுனதும் இல்லாம இப்போ மகளோடவே வந்து தங்கிட்டாங்க.
சொத்தோட வந்த மாமியார் மேல எப்போதுமே தணிகாசலத்துக்கு மரியாதையும் மதிப்பும் அதிகம் தான். அப்படி இல்லாம போனாதான் கிழவி ஊர் பஞ்சாயத்து முன்னால போய் நின்றிடுமே. அப்புறம் இருக்கிற சொத்துல பாதி இல்லாம போயிடுமே. அதுக்காகவே அவரிடம் மட்டும் என்றுமே தணிகாசலம் தன் திமிர்தனத்தை காட்டியதில்லை.
ஆனால் அவனை பெற்ற தாயை ஏதேதோ காரணம் சொல்லி தமையன் வீட்டிலே தங்கி கொள்ள வைத்து விட்டான். மகனின் புத்தி தெரிந்தே அவன் தாய் பூரணி இந்த பக்கம் வருவதே இல்லை.
அந்த அளவு கஞ்சதனமாய் சேர்க்கும் அவனின் சொத்துக்கு மூன்று வாரிசு. திண்ணையை தாண்டி ஹாலில் தெரியும் தூணுக்கு பின் சாய்ந்து அமர்ந்திருக்கிறானே ஒரு பறட்டை தலையும் மெல்லிய தாடியுமாய் ஒருவன். அவன் தான் இவரோட மூணாவது மகன். பெயர் துருவன். பி.காம் பஸ்ட் இயர் படிக்கிறான். ஆனால் அவன் கையில் புத்தகம் இருக்கிற நேரத்தை விட செல்லை நோண்டுகிற நேரம் தான் அதிகம்.
செல்லை அதிகமா யூஸ் பண்ணுறவங்களுக்கு யாராவது பரிசு கொடுக்கிறதா அறிவிச்சா. நிச்சயம் இவனுக்கு தான் அந்த பரிசு கிடைக்கும். காலையில எழுந்து பல் துலக்குறதுல இருந்து நைட் கட்டில்ல படுத்து தூக்கம் அவனை தழுவுவது வரை செல்லையே தான் நோண்டிட்டிருப்பான். காலேஜ்ல்ல பல முறை இவனோட செல்லை புடுங்கிட்டு அனுப்பியாச்சு. ஆனாலும் மறுநாளே வேற போண் வாங்கிடுவான். அவன் எப்படி வாங்குவான் என்கிறது தான் இன்னும் யாரும் கண்டுபிடிக்காத ரகசியம்.
அவனை தாண்டி ஊஞ்சல் பக்கம் இரண்டு குழந்தைங்க விளையாடிட்டிருக்காங்களே. அவங்க இரண்டு பேரும் அவர் மூத்த மகனோட குழந்தைகள. பொண்ணு அஞ்சனா இப்பதான் ஒரு வயசு முடிஞ்சிருக்கு பையன் சஞ்சய் LKG படிக்கிறான். படிப்பு தான் LKG. பேச்சுல தணிகாசலத்தோட வாரிசுணு அடிக்கடி நிரூபிப்பான். அவன் கேட்கிற கேள்வியில பெரியவங்களே அசந்து போயிடுவாங்க.
அவனோட எல்லா கேள்விக்கும் மலர்ந்த முகத்தோட பதில் சொல்லியவாறு சோற்றை வாரி ஊட்டிட்டு இருக்காங்களே அவங்க தாங்க தணிகாசலத்தோட சம்சாரம் கலையரசி. அவங்க முகத்தோட சாந்தமே அவங்க எப்படி பட்டவங்கணு உங்களுக்கு சொல்லிடும். அதுலயும் அந்த வெள்ளந்தியான சிரிப்பு. அவங்களோட வெண்மையான மனசை காட்டி கொடுத்திடும். அவங்க கலையில மட்டும் அரசி இல்லங்க. குணத்துலயும் அரசி தான். அவங்களால தான் இன்னும் இந்த குடும்பம் பிரியாம இருக்குணு சொல்லலாம். தணிகாசலத்தோட குணம் உறவுகளுட்ட இருந்து ஒதுங்குறதுனா நம்ம கலையரசியோட குணம் எல்லாரோடும் ஒட்டி உறவாடுறது. அதுனால தான் உறவுணு சொல்லிட்டு ஒன்றிரண்டு பேராவது இந்த வீட்டுக்குள்ள வந்துட்டு போறாங்க.
அப்படி அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போறதுல மிக மிக முக்கியமான ஒருத்தர் அவங்களோட சம்மந்தி தான். அதாங்க அவங்களோட மூத்தமகன் சந்துருவோட மாமியார். அவங்களுக்கும் நம்ம கலையரசிக்கும் அப்படி ஒரு பொருத்தம்.
வெளியில எங்க கிளம்புறதா இருந்தாலும் சரி வீட்டிற்கு தேவையான பொருள் செலக்ட் செய்வது என்றாலும் சரி கலையரசி அவர்களை தான் அழைத்து செல்வாள். அவர்களும் உடனே கிளம்பி வந்து விடுவார்கள். அப்படி ஏதாவது வாரம் கலையரசி கூப்பிடவே இல்லை என்றால் அவராகவே ஒரு வேலையை தூக்கி கொண்டு ஓடி வந்து விடுவார். இது எல்லாம் நம்ம தணிகாசலத்திற்கு சுத்தமாக பிடிக்காவிட்டாலும் வீட்டிலே தங்கியிருக்கும் மாமியாருக்காக பல்லை கடித்து கொண்டு பொறுத்திருந்தான்.
சில வேளை அவரின் வரவு அதிகமாகும் போது பொறுமை போய் சீறவும் செய்வான். அப்படி சீறினாலும் கலையரசி அதை பெரிதுபடுத்துவதே இல்லை. அவளுக்கு இருக்கும் ஒரே நெருக்கமான உறவு அந்த வசுந்திரா தான். காலையில் கிளம்பி போனால் தணிகாசலம் வீடு வந்து சேர இரவு பத்து மணி ஆகி விடும் என்பதால் கலையரசி பெரிதாக இதுவரை மாட்டிகொண்டது இல்லை. இதுவரை இப்படியான நேரங்களில் அவருக்கு தெரியாமல் பல காரியம் செய்திருக்கிறாள். ஆனால் அவருக்கு முன் துணிந்து செய்யும் தைரியம் இதுவரை வந்ததில்லை
அவளுக்கு மட்டுமா? அந்த வீட்டில் உள்ள ஒருவருக்கும் அப்படியான தைரியம் இதுவரை வந்ததில்லை. வீடு மட்டுமன்றி ஊரில் பல பேரும் இப்படி தான இருந்தனர். அவர் செல்வாக்குக்கு பயந்தே ஒருவரும் அவர் முன் வாய் திறப்பதே இல்லை. ஆனால் அவர் முன்னால் நின்று தைரியமாக பேசும் ஒருவரும் அந்த குடும்பத்தில் இருந்தது தான் ஆச்சரியம். அதுதான் அவர் மகள் பவித்ரா. இப்போது அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து கொண்டிருக்கும் அவள் இங்கிருந்து கிளம்புவதற்கு முன் தண்டபாணிக்கே ஆட்டம் காட்டி விட்டு தான் சென்றிருந்தாள். ஆரம்பத்தில் இருவரும் முட்டிக் கொள்ளும் போது யாருக்கும் எதுவுமே புரியவில்லை.
கடைசியில் விசயம் ஒருவாறு விளங்கிய போது கலையரசியே நடுங்கி விட்டாள். கோடியில் புரளும் தணிக்காசலத்திற்கு மகளாகப் பிறந்து விட்டு தெருகோடியில் கிடக்கும் விவசாயி மகனோடு காதல் என அறிந்ததும் விக்கித்து போனாள். பள்ளி படிப்பை கூட முடிக்காத நிலையில் மகள் காதல் வலையில் வீழ்ந்து விட விசயம் அவரின் எடுபிடி மணியன் வழி தணிகாசலத்தின் செவியை அடைய கொதித்து விட்டார்.
வீட்டில் நான்கு ஐந்து மாதமாக போர்களம் தான். அப்போது தான் தணிகாசலத்திற்கு கொஞ்சமும் குறைந்தவள் இல்லை என்பதை அவரே உணர்ந்து கொண்டார். கடைசியில் மகளை தன் பக்கம் இழுத்து தன் பேச்சை கேட்க வைக்க அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் அவரிடம் பேசாமலே பவித்ராவை இருக்க வைத்திருக்கிறது. அவரின் பிடிவாத குணத்தில் சற்றும் தான் குறைந்தவள் இல்லை என்பதை இன்று வரை நிருபித்து கொண்டிருக்கிறாள் பவித்ரா.
அமெரிக்கா போய் ஒரு வருடம் அவள் வீட்டில் யாரோடும் பேசவில்லை. இந்த விசயத்தில் ஒருவர் கூட தந்தையிடம் வாதிடவில்லையே என்ற கோபம். அவள் விவாதத்தையே வாய் பிளந்து அதிசயமாய் கேட்ட கும்பலால் எதிர்த்து பேசும் தைரியம் இருந்தால் இந்த வீடும் இந்த ஊரும் இன்னும் தணிகாசலத்தின் கோட்டையாக இருந்திருக்குமா? அப்படி ஊமையாகி போன உறவுகளிடம் அவளுக்கு கோபம்.
அப்படி கோபத்தின் உச்சத்தில் இருந்தவளை படிபடியாக இறக்கி வீட்டில் உள்ளோரிடம் பேச வைத்ததே கலையரசியின் தம்பி வடிவேலு தான். வடிவேலுக்கு பவித்ராவை விட இரண்டு வயது அதிகம். வடிவேலு கலையரசியின் சித்தப்பா மகன். பவித்ராவுக்கு மாமா முறை. ஆரம்பத்தில் இருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்ததால் உறவுமுறையை தாண்டி இருவரிடமும் ஒருவித அன்பும் அக்கறையும் அதிகம் இருக்கும். பவித்ராவுக்கு வடிவேலுவை ரொம்ப பிடிக்கும். பெயர் மட்டும் வடிவேலு அல்ல. அவன் வழக்காடலும் வடிவேலு பாணியிலே தான் இருக்கும்.
அதனால் தான் பவித்ரா இவனின் காமெடிக்கு அடிமையாகி இவனை சுற்றி சுற்றியே திரிவாள். எங்கு போனாலும் சரி அவன் வாலை புடித்து கொண்டே சுற்றுவாள். அதனாலோ என்னவோ பவித்ராவின் பிரிவு அவனை ரொம்பவே பாதித்தது. அந்த பாதிப்பு தான் அவனை வேறு செல் வழியாக பவித்ராவை கஷ்டப்பட்டு பிடித்து பேசி மசிய வைத்து வீட்டினரோடு பேச வைக்க உதவியிருந்தது. கூடவே அவளுக்காக காத்திருக்கவும் வைத்தது.
அவளுக்காகவே அந்த வீட்டில் பழியாக கிடந்தான் வடிவேலு, அவன் வீடும் இவர்கள் அளவு இல்லா விட்டாலும் வசதிக்கும் கெளரவத்துக்கும் குறைந்தவர்கள் இல்லை தான். ஆனாலும் வடிவேலுவின் உலகம் பவித்ராவின் வீடாகவே இருந்தது. அக்காவின் மகளை படிக்கும் காலத்திலே ரசித்தவன். அவளின் கடைகண் பார்வைக்காகவே காவல் இருந்தான். திடீர் என விட்டு பவித்ரா சென்றாலும் இன்றுவரை தினமும் அவளிடம் பேசும் ஒரே ஜீவன் வடிவேலு தான்.
தணிகாசலம் கூட மகளின் விசயத்தை இவன் மூலம் தான் தெரிந்து வருகிறார். மகளின் விசயத்தை பேசி பேசியே தணிகாசலத்தை நெருங்கிய வடிவேலு... கலையரசி பக்கம் வந்தால் மட்டும் குழந்தையாக மாறி குழைந்து கொண்டு நின்று விடுவான். கூடவே அக்காகாரியை தன் பக்கம் இழுத்து வைக்க அவன் செய்யும் மாயாஜாலம் அதிகம்தான்.
பவித்ராவை பிரிந்த இந்த நாலு வருடத்தில் தணிகாசலத்திற்கும், கலையரசிக்கும் ரொம்ப நெருக்கமாகி போனான். கலையரசிக்கு சின்ன சின்ன உதவி செய்வதிலிருந்து... தணிகாசலத்திற்கு குண்டர் வேலை பார்ப்பது வரை எல்லாவற்றையும் செய்வான்.
அன்றும் அப்படி தான். கலையரசியோடு மார்கெட்டில் காய்கறி வாங்கி கொண்டு நின்ற போது அந்த இனிமையான செய்தியை தாங்கி கொண்டு அவன் செல்போன் குரல் கொடுக்க…
ஒரு கையில் வாழை தாரை பிடித்து கொண்டு மறுகையால் பாக்கெட்டில் இருந்து செல்லை எடுத்தவன் திரையில் தெரிந்த நம்பரை பார்த்ததும் கையில் இருந்த வாழை தாரை அப்படியே போட்டுவிட்டு முகம் எல்லாம் பூரிப்போடு எடுத்து காதுக்கு கொடுக்க… எதிர்முனை சொன்ன செய்தியை கேட்டு குதூகலத்தில் துள்ளிவிட்டான்.
அவனின் அதிகபடியான சந்தோஷமும் வயதுக்கு மீறிய துள்ளலையும் கண்ட கலையரசி..
“என்னடா முகம் இப்படி பூவா விரிகிற அளவு அந்த செல்லு அப்படி என்ன செய்தி சொல்லுச்சி!.”.
“அக்கா!.. நாளைக்கு நம்ம பவி ஊருக்கு வராக்கா…பூரிப்பு மாறாமல் சொன்னவனை வியப்போடு பார்த்த கலையரசி...”
என்னடா சொல்லுறா நாளைக்கா?என கேட்க
“ஆமாக்கா நாளைக்கு காலை 11 மணிக்கு வண்டி கொண்டு என்னை ஏர்போர்ட்டுக்கு வர சொல்லி இருக்கா…”
வடிவேலு போல துள்ளி குதிக்க வேண்டிய கலையரசியின் உள்ளம் பயத்தில் உறைய ‘முகம் வெளிறிப்போனது. அவள் உள்ளமோ பவித்ரா பழைய படி அப்படியே வருகிறாளா? இல்லை அமெரிக்கா இந்த ஐந்து வருஷத்துல மாற்றி அனுப்புதா? என்ற கேள்வியை அவள் உள்ளம் அவளிடம் திரும்ப திரும்ப கேட்க தொடங்க…
ஐந்து வருடத்திற்கு முன் வீட்டில் நடந்த நிகழ்வு ஒவ்வொன்றும் அவள் முன்படமாக விரிந்தது.
அத்தியாயம் தொடரும்…

Author: Gnana Selvam L
Article Title: அத்தியாயம் - 1
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.