தஸ்லிம்
New member
- Joined
- May 1, 2024
- Messages
- 9
சிவா மனசுல சக்தி - 2
சக்தி கல்லூரிக்கு வந்து சேரவும் அவள் தோழிகள் மூவரும் ஒரே நேரத்தில் எப்போவும் போல இன்னைகும் லேட்டா?? உங்க அம்மா நல்லா அர்ச்சனை பண்ணிருப்பாங்களே?" என கேக்க..
சக்தி, "ஆமா ஆமா அதெல்லாம் பலமா விழுந்துச்சு.. சரி விடுங்கடி.. எப்போவும் நடக்குறதுதான.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்று கூறி சிரித்து கொண்டே அவர்களுடன் இணைந்து வகுப்பின் உள்ளே வந்து அமர்ந்தாள்.
சக்தி இரண்டாம் ஆண்டு பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள்.. இவளுடைய தோழிகள் மது, ஹேமா, நிலா .. நால்வரும் ஒன்றாகவே ஆறாம் வகுப்பில் இருந்து படித்து இப்பொழுது கல்லூரி வரைக்குமே ஒன்றாகவே வந்திருக்கிறார்கள்..
முதல் நாள் காலை வகுப்பு அமர்க்களமாக நடந்து முடிய அனைவரும் மதியம் கேன்டீனில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தனர் ..
சக்தி, "ஏண்டி நிலா.. லீவெல்லாம் நல்லா என்ஜாய் பண்ண போல வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எல்லாம் வரிசையா ட்ரெயின் விட்டு வச்சிருந்த..அந்தளவு கவனிப்பு பலமா இருந்தது போல" என சிரிக்க..
நிலா, "அதை ஏண்டி கேக்குற??!.. தெரியாம லீவுக்கு ஊருக்கு போயிட்டேன்டி.. என்னை பாடா படுத்தி எடுத்துட்டாங்க எங்க அம்மா.. அதை சமைக்க பழகு.. ரூம்ம ஏன் குப்ப மேடு மாதிரி வச்சிருக்க.. காலைல நேரமே எழுந்து இருக்கியா.. மதிய சாப்பாட்டுக்கு தான் எழுந்துக்குர.. அப்போவாச்சும் அம்மாக்கு கொஞ்சம் உதவி பன்றியா.. அதுவும் கிடையாது .. மறுபடியும் தூக்கம்.. என்ன புள்ளையோ நீ"ன்னு ஒரே இந்த லீவு ஃபுல்லா எங்க அம்மா கிட்ட திட்டு வாங்குறதிலயே போயிருச்சு என்று புலம்பியவள்.. பின் தோழிகளை பார்த்து, "நீங்களே ஒரு நியாயத்த சொல்லுங்க டி.. எதுக்கு லீவுக்கு வீட்டுக்கு போறோம். இந்த ஹாஸ்டல்ல சாப்பிட முடியாத சாப்பாட சாப்பிடவும் இங்க தூங்க முடியாத தூக்கத்தை தூங்கவும் தான.. அங்கயும் ஹாஸ்டல் மாதிரி பண்ணிட்டு இருக்காங்க.. புள்ள கொஞ்சம் நாள் தான் வீட்ல இருக்கும்னு ஒரு அக்கறைலாம் இருக்கா" என்று இல்லாத கண்ணீரை துடைப்பது போல சுண்டி விட்டு கொண்டு அழுவது போல கேக்க.. "வொய் பிளட்.. சேம் பிளட்" என சக்தி, மது, ஹேமா மூவரும் ஒரே நேரத்தில் காதில் விரல் வைத்து எடுத்து காட்ட மொத்தமாக ஹைஃபை அடித்து கொண்டு கொல்லென்று சிரித்தார்கள்..
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ஜோதி வந்து அங்கு ஐக்கியமானாள்.. ஜோதி இவர்களுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள்.. இப்போ வேறு ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதே கல்லூரியில் படிக்கிறாள்..
ஜோதி, "ஹாய் கைஸ்.. எப்படி இருக்கீங்க எல்லோரும்" என கேக்க..
சக்தி, "நல்லா இருக்கோம்.. நீ எப்படி இருக்க?"..
ஜோதி, "நல்லா இருக்கேன் என்று சில பல பேச்சுக்கள் முடிந்ததும்.. "எல்லாரும் செப்டம்பர் ஒன்னாம் தேதி உங்களை ஃப்ரீ பண்ணிக்கோங்கப்பா" என சொல்ல..
நிலா, "ஏன் அன்னைக்கு என்ன விசேஷம்"..
ஜோதி, "விசேஷம் தான்.. எங்க அக்காக்கு மேரேஜ்.. நீங்க எல்லோரும் கண்டிப்பா வரணும்" என சொல்ல..
ஹேமா, "லீவ் இருக்குமான்னு தெரியலையே?!"..
ஜோதி, "அதெல்லாம் இருக்கு.. நமக்கு லீவ் விட போற அடுத்த நாள் தான்.. ஆகஸ்ட் 31 அப்படியே இங்க இருந்து வந்துட்டு அங்க கல்யாணத்தை முடிச்சுட்டு எங்க ஊர்ல இருந்து அவங்க அவங்க ஊருக்கு போயிடலாம்.. சரியா??"..
சக்தி, "எல்லாம் பக்கா பிளானோட தான் இருப்ப போலயே நீ" எனக் கூற..
ஜோதி, "ஆமா.. கண்டிப்பா வந்துருங்க" என்று சொல்லி அனைவருக்கும் அழைப்பிதழை கொடுத்தாள்"..
சக்தி, "கண்டிப்பா வர்றோம் ஜமாய்க்கிரோம்" என்று சொல்லி விட்டு பொறுப்புள்ள பிள்ளைகளாக அனைவரும் அடுத்த வகுப்புக்கு எழுந்து சென்றார்கள்..
செப்டம்பர்-1 சக்தியின் வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக அமைய போகுது என்று தெரியாமலேயே அங்கு போவதற்கு உற்சாகமாக இருந்தாள் ..
🌹🌹🌹🌹🌹
சிவா இனி பிரியா விஷயங்களில் முடிந்தளவு பங்கேற்று கொள்கிறேன்.. "ஆனால் அதற்கு நீ ஒரு உதவி பண்ண வேண்டும்" என கேக்க மணியும் என்ன உதவி என்று கேட்டதில் திகைத்து போயிருந்த மணி மறுபடியும் அவன் சொன்னதை நினைத்து பார்த்தான். ..
சிவா, "சரி இனி நான் அவ விசயங்களில் தள்ளி நிக்கல.. ஆனா அதுக்கு நீ ஒரு உதவி பண்ணனும்"..
மணி,"என்ன உதவி?"...
மணி, "மனதிலோ பிரியா கிட்ட சொல்லாதன்னு சொல்ல போறானோ?" என்று நினைத்து கொண்டு இருக்க ஆனால் அவனோ..
சிவா, "நான் பிரியா மேரேஜ் சம்மதப்பட்ட சில விசேஷங்கள்ள கலந்துக்குறேன்.. கொஞ்சம் கொஞ்சம் வேலை இருக்குன்னு சொல்லிட்டு ஓடி போயிரேன்.. அப்போலாம் நீ தான் சமாளிக்கணும்.. ஆனா எதுல கலந்துகிட்டாலும் என்னால கல்யாணம் அன்னைக்கு கண்டிப்பா இருக்க முடியாதுடா.. அதுக்கு நீ தான் பொறுப்பேத்துக்கனும் சரியா" என கேட்டான்.
அவன் சொன்னதை நினைத்து பார்த்து கொண்டிருந்த மணியை, "டேய் சொல்லுடா" என சிவா உலுக்கி கொண்டிருந்தான்.. அதில் நினைவுக்கு வந்தவன்..
மணி, "ஏண்டா லூசு மாதிரி உளறிட்டு இருக்க.. நீ இல்லைனா எல்லாருமே எங்கேன்னு கேப்பாங்க.. பார்த்தில இப்போவே உன்ன காணோம்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க.. இதுல கல்யாணத்தன்னைக்கு இல்லைனா என்னால எப்படி சமாளிக்க முடியும்... அதுவும் பிரியாவ சமாளிக்கவே முடியாதுடா.. அந்த பிசாசு என் தலையில உள்ள முடியலாம் கையினால பிச்சே மொட்டை அடிச்சு விட்டுறுவா.. என்னால முடியாதுப்பா.. உங்க ஆட்டத்துக்கு நான் பலியாடா.. நான் மாட்டேன்" என சொல்ல..
சிவா, "அதெல்லாம் எனக்கு தெரியாது மச்சி.. ஆகஸ்ட் 31 நான் ஊர்ல இருந்து கிளம்பி இருக்கணும்.. அதுக்கு நீ தான் பொறுப்பு.. செப்டம்பர் ஒன்னு நான் ஊர்ல இருக்க கூடாது.. அவ்ளோதான் டாட்.. இல்லைனு வச்சுக்கோ இப்போ பிரியா பண்ணுவான்னு சொன்னத நான் பண்ணுவேன்" என்க..
மணி, "ஏண்டா உங்களுக்கு நண்பனா இருந்தது தப்பா??.. என்னை போட்டு பாடா படுத்துற" என அவன் புலம்பிக் கொண்டிருக்க..
அதை கேக்கத்தான் சிவா அங்கு இருக்கவில்லை... எப்போதோ கிளம்பி சென்று விட்டான்..
பாவம் யார் பெத்த புள்ளயோ தனியா கிடந்து புலம்பிகிட்டு கிடக்குது ...
செப்டம்பர் - 1 இவன் எங்க போக போறான்???

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.