தஸ்லிம்
New member
- Joined
- May 1, 2024
- Messages
- 9
சிவா மனசுல சக்தி - 3
காலம் யாருக்கும் காத்திராது ஒரு மாதமும் வேகமாக ஓடி இருந்தது..
சக்தி அவள் அம்மாவிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்..
சக்தி, "அம்மா பிளீஸ் மா எல்லாரும் போறாங்க நாங்க ஒண்ணா தானமா போறோம் அப்புறம் உனக்கு என்ன பயம்??.. உன் பெரிய பொண்ண மட்டும் டூருக்கெல்லாம் விட்டிங்க..என்னை மட்டும் எங்கேயும் விட மாற்றிங்க அதுவும் இது ஒரே ஒரு நாள் தான்"..
மலர், "என் பெரிய பொண்ணு ஆர்த்தி பொறுப்பானவடி.. உன்ன மாதிரி ஒன்னும் கவனம் இல்லாதவ இல்ல..உன்னை நம்பி எப்டி தனியா விட சொல்ற?"..
சக்தி, "அம்மா நாங்க நாலு பேரும் சேர்ந்து ஒண்ணா தான போறோம்"..
மலர், "ஆனா ஒண்ணா வரலயே?!"..
சக்தி, "ப்ச்.. ஏன்மா ஃபர்ஸ்ட் ல இருந்து ஆரம்பிக்கிரீங்க?" என்று அலுத்து கொள்ள.. அந்த நேரம் கதிரவன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தவர், " என்ன ஆச்சு அம்மு ?" எனக் கேக்க..
அதை எதிர்பார்த்து இருந்தவளாக சக்தி, "அப்பா நான் உங்ககிட்ட முன்னாடியே சொன்னேன் தான ஜோதி அக்காவோட கல்யாணத்துக்கு போகனும்னு"..
கதிரவன், "அதுதான் போக சொல்லி சரின்னு சொன்னேனே"..
அதில் மலர் கதிரவனை முறைக்க..
சக்தி, "ஆனா பாருங்கப்பா.. இந்த சாமி வரம் கொடுத்தாலும் என்று கதிரவனை காட்டியவள் அந்த பூசாரி வரம் கொடுக்காம சாமி ஆடுது என மலரை காட்ட" குபீரென்று சிரித்து விட்டார் கதிரவன்..
அதில் மலருக்கு புன்னகை அறும்பாக மலர்ந்தாலும் அதை முகத்தில் காட்டாது கதிரவனை பொய்யாக முறைத்து கொண்டிருந்தார்..
மலர் முறைப்பதை பார்த்த கதிரவனும் சிரிப்பை அடக்கிக் கொண்டு மலரிடம், "ஏன் மலர் அவ தான் போய்ட்டு வரட்டுமே எல்லாரும் ஒண்ணா தான போறாங்க"..
மலர், "நீங்களும் ஏங்க புரிஞ்சுக்க மாட்டேங்குறிங்க.. திரும்பி வரும் போது சேர்ந்து வர மாட்டாங்களாம்"..
கதிரவன், "இப்போ சக்தி சொன்னதால தான நமக்கு அவ தனியா வர்றது தெரியும்.. இப்போ அவ சொல்லலைனா என்ன பண்ணிருப்ப?? அனுப்பி வைச்சு இருப்பில??".. இப்போதும் அனுப்பி வை.. என் மகள் அதெல்லாம் பொறுப்பா வந்துருவா..என்ன அம்மு பொறுப்பா இருப்பில??" எனக் கேட்டு மலரை சமாதானம் பண்ணுமாரு கண்ணை காட்ட..
சக்தி, "ஹான்.. ஆமாமா நான் கண்டிப்பா பொறுப்பா இருப்பேன்.. பிளீஸ் மா" என கெஞ்ச..
மலர், " உன் பொறுப்பு லாம் எனக்கு தெரியாதா.. நீ பஸ்ல கூட தூங்கிட்டு இறங்குறதுக்கு மறந்துறுவடி"..
சக்தி, "தூங்காம கூட வர்றேன்மா. இந்தா இருக்குற மதுரைக்கு தானமா. .. பிளீஸ் பிளீஸ் பிளீஸ்" என கேட்டு கொண்டே இருக்க..
கதிரவனை மலர் திரும்பி பார்க்க அவரும் கண்ணசைவால் கெஞ்ச.. "சரி சரி போயிட்டு வா".. ஆனா பத்திரமா போயிட்டு வரணும் என்ன?"..
சக்தி, "சரிமா.. கண்டிப்பா.. லவ் யூ சோ மச்" என்று புன்னகைத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தாள்..
கதிரவன், "அப்புறம் என்ன அம்மு.. போய் உன் டிரசெல்லாம் இப்போவே போய் பேக் பண்ணி வை" என சொல்ல..
சக்தி, "சரிப்பா" என்று கூறி மான் போல துள்ளிக் குதித்து கொண்டு மாடி ஏறி அவள் அறைக்கு சென்றிருந்தாள்...
அன்று மாலையே கிளம்ப ஆயத்தம் ஆகி கொண்டிருந்தவளுக்கு ஆயிரெட்டு பத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார் மலர்.
மலர், "சேலை ஒன்னு எடுத்து வச்சுகோடி"..
சக்தி, "வச்சுடேன்மா.. போன வருஷம் ஃபைனல் டேக்கு நாங்க எல்லாம் செட்டா எடுத்தோம்ல அந்த சேரி தான்"..
மலர், "போட்டுக்க நகை எல்லாம் எடுத்து வச்சியா?"
சக்தி, "அதெல்லாம் செட்டா வாங்கினது இருக்குமா" என சொல்லி கொண்டிருக்கும் போதே..
"அம்மா உனக்கு அவ மட்டும் பொண்ணு இல்ல கொஞ்சம் எங்களையும் வந்து கவனி" என கீழே இருந்து கவியும் அவள் தம்பி பரத்தும் கத்தி கொண்டிருந்தனர்..
மலர், "வர்றேன் இருங்க" என்று கீழே பார்த்து சொல்லிவிட்டு.. சக்தியிடம், " பணமெல்லாம் சரியா எடுத்து வச்சிருக்கில?" என கேக்க..
சக்தி, "அதெல்லாம் சரியா இருக்கு" என்று சொல்லி கொண்டே கீழே இறங்கி வந்தனர்..
மலர், "அங்க போய் உன் வால சுருட்டி வச்சிருக்கனும்" என சொல்ல.. கவியும் பரத்தும் கொல்லென சிரிக்க சக்தி அவர்களை முறைத்தாள்.
சக்தி, "என்ன சிரிப்பு?" என்று அவர்களை அதட்ட..
பரத், "உனக்கு வால் இருந்தா எப்டி இருக்கும்னு யோசிச்சேன் சிரிச்சேன்" என சொல்ல..
சக்தி, "நான் குரங்குனா என் உடன்பிறப்புகளும் குரங்கே என்னை பெற்றவரும் அதே " என சொல்ல..
மலருக்கு அவள் தன்னையும் தான் சொல்கிறாள் என்று புரிந்து அவளை திட்ட தொடங்குவதற்கு முன்பே சக்தி பறவையாக பறந்திருந்தாள்..
🌹🌹🌹🌹🌹
சிவாக்கும் மணிக்கும் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு முடிந்தளவு இயல்பாக இருக்க முயன்றான் சிவா.
பிரியாக்கு இது எதுவும் தெரியாததால் அவள் கல்யாண கனவில் மிதந்து கொண்டிருந்தாள்.. சில முறை சிவா இயல்பாக இல்லாது போலத் தோன்ற அவனிடமே கேட்டாள்.. அதற்கும் அவன் வொர்க் டென்ஷன் என்று சொல்லி மழுப்பி விட்டான்...
மணியை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு நியாபகமும் படுத்தி கொண்டிருந்தான்... அவனும் சரி சரி என தலையசைத்து கொண்டிருந்தான். .
நாட்களும் வேக வேகமாக வந்து சேர்ந்தது..
அன்று இரவு வீடே கோலாகலமாக கொண்டாடி கொண்டிருக்க சிவா மட்டும் மன அமைதியின்றி திரிந்தான்..
இதற்கு மேலும் முடியாது என முடிவெடுத்து மணியிடம் சென்று, "டேய் நான் கிளம்புறேன்டா... இதுக்கு மேல என்னால முடியாது நீயே ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ" என சொல்ல..
மணி, " இரு நானே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுறேன்" என்று சொல்லி கொண்டே அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு சிவாவின் அம்மா பவித்ராவை நோக்கி போனான்..
சிவா, "டேய் என்னடா பண்ற?? இப்போ ஏன் அம்மா கிட்ட கூட்டிட்டு போற?" என்று சொல்லி கொண்டே அவன் கையை மணியின் பிடியில் இருந்து விடுவிக்க முயற்சித்து கொண்டிருக்க அதற்குள் பவித்ராவின் அருகில் வந்து சேர்ந்து விட்டனர்..
மணி, "அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. நீங்க கோபப்படக்கூடாது".. என பவித்ராவி்டம் சொல்ல...
சிவா, "அய்யயோ இவன் வேற என்னத்த சொல்லி வைக்க போறானோ தெரியலையே" என்று நினைத்துக் கொண்டு மணியை முறைத்துக் கொண்டிருந்தான்.
பவித்ரா, "என்னப்பா மணி என்ன விஷயம்"..
சிவா மணியை பார்த்து சொல்ல வேண்டாம் என்று கண்ணசைவால் மிரட்டி கொண்டிருந்தான்..
ஆனால் அதை எல்லாம் கவனியாது.. மணி, "இல்லம்மா இதை எப்படி சொல்றதுன்னு தெரியல பிரியாவும் எப்படி எடுத்துப்பாலோ புரியல " என சொல்ல..
சிவா, "டேய் நீ எதுவும் சொல்ல வேணாம் வா நம்ம போகலாம் என்று கையை பிடித்து இழுக்க..
மணி, "கொஞ்சம் பொறுமையா இருடா.. நான் சொல்லிக்கிறேன்" என்று சிவாவின் கையயும் பிரித்து விட்டான்..
அப்போது பார்த்து பிரியா அங்கு வந்து சேர பவித்ரா குழம்பி போய் நிற்பதை பார்த்தவள்..
பிரியா, "என்ன பவிம்மா, என்ன விஷயம் எல்லாரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க?"..
பவித்ரா, "இந்த மணி தான் ஏதோ சொல்லனும்னு சொல்றான்மா.. என்னனு கேட்டுட்டு இருக்கேன்.. பிரியா எப்படி எடுதுப்பாலோனு வேற தெரியலங்குறான்"..
பிரியா, "டேய் என்னடா விஷயம்.. நான் என்ன ஏன் நினைக்கனும்" என மணியை பார்த்து கேட்டு விட்டு சிவாவை ஒரு பார்வை பார்த்தாள்..
பிரியா அங்கு வந்ததிலயே மேலும் படபடப்பாக இருந்தான் சிவா..
மணி, "அது என்னன்னா இவனோட வேலை பார்க்கிற ஒருத்தரோட அம்மாக்கு ஏதோ ஹார்ட் சர்ஜரி பன்றாங்களாம்.. திடீர்னு ஏற்கனவே பிளட் குடுக்குறேனு சொன்ன ஒரு ஆளு இப்போ திடீர்னு வர முடியாத சூழ்நிலைியில மாட்டிக்கிட்டாராம்.. அது கொஞ்சம் ரேர் பிளட் குரூப் O-நெகடிவ்.. நம்ம சிவாக்கும் அதே குரூப் தான.. அதான் அவன் போனா பிரியா எதுவும் சொல்லுவாலோனு பயப்புடுறான்" என சொல்லி முடிக்க..
அப்போதுதான் சிவாவிற்கு உயிரே வந்தது...
பிரியாவிர்க்கு தான் என்ன பதில் சொல்ல என்றே தெரியவில்லை..
சிவாவை ஒரு பார்வை பார்த்தவள் "சரி" என்று ஒத்துக் கொண்டாள்.. ஆனா ஒன்னு முடுஞ்சளவுக்கு சீக்கிரமே வந்துரணும்.. "நான் கண்டிப்பா உன்ன மிஸ் பண்ணுவேன்"..
சிவா, "கண்டிப்பா பிரியா ".. என்று சொன்னான்..
சிவா,மணி, பிரியா மூவரும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள்.. நெருங்கிய நண்பர்கள்..
சிவா, "அப்போ நான் கிளம்புறேன்" என பொதுவாக சொன்னவன் மணியை நன்றி கலந்த ஒரு பார்வை பார்த்து விட்டு இறுக்கி அணைத்து விலகினான்.. பின்பு வாயிலை நோக்கி நடக்க..
மணி, "டேய் இருடா நானே பஸ் ஸ்டான்ட்ல விட்டுறேன்" என்று அவனுடனே இணைந்து நடந்தான்..
இருவரும் அங்கு வந்தவுடன்.. மணி, "டேய் எந்த ஊருக்கு போக போற?" என கேக்க..
சிவா, "மதுரைக்கு போகலாம்னு நினைக்கிறேன்".. என்று சொல்லி விட்டு.. "சரி அதெல்லாம் இருக்கட்டும்.. ஏண்டா என்ன இப்படி இதுதான் பிளான்னு ஒன்னும் சொல்லாம கொண்டுட்டு போய் நிறுத்தின.. எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?? உண்மைய எதுவும் சொல்லிருவியோன்னு.. அதுவும் பிரியா வந்ததும் அவ்ளோதான் உயிரே போயிருச்சு.." என்று சொல்ல மணி கலகலவென்று சிரித்தான்..
சிவா, "ஏண்டா சிரிக்கிற?"..
மணி, "என்னை எவ்ளோ சாகடிச்ச இந்த ஒரு மாசமா அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சேன் உனக்கு" என்று சொல்லி மறுபடியும் சிரிக்க..
சிவா,"அடப்பாவி" என்று சொல்லி அவன் முதுகிலயே ஒரு அடியை போட்டு விட்டு, "எனிவே தேங்க்ஸ் டா மச்சான்" என்று சொல்லி விட்டு பேருந்தில் ஏறிவிட்டான்..
மணியும் அங்கிருந்து கிளம்ப.. பேருந்தும் மதுரையை நோக்கி செல்ல தொடங்கியது..

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 3
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.