தஸ்லிம்
New member
- Joined
- May 1, 2024
- Messages
- 9
சிவா மனசுல சக்தி -4
சக்தி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள்.. அங்கு அவள் தோழிகள் மூவரும் முன்கூட்டியே வந்து இவளுக்காக காத்திருந்தனர்..
அன்றைக்குமே அவள் அரை மணி நேரம் தாமதமாக தான் வந்து சேர்ந்தாள்.. அவள் வந்ததும்..
நிலா, "ஏண்டி எப்போவுமே இப்படி தான் பண்ணுவியா.. உங்க அம்மா உன்னை திட்டுறதுல தப்பே கிடையாது.. இன்னும் 5 நிமிஷம் லேட் ஆனாலும் பஸ் கிளம்பி் இருக்கும்" என்று சொல்ல..
சக்தி, "அது இரத்தத்துலயே ஊறி போயிருச்சு மச்சி ஒன்னும் பண்ண முடியாது.. ஃப்ரீயா விடு.. அதான் பஸ்ஸ மிஸ் பண்ணலைல.. அப்புறம் என்னடி" என்க..
ஹேமா, "சரி சரி வாங்க இப்படியே பேசிட்டு இருந்தா நிஜமாவே இப்போ பஸ்ஸ மிஸ் பண்ணிருவோம்" என்று சொல்ல அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்..
தேனியில் இருந்து மதுரையை நோக்கி பேருந்து செல்லத் துவங்கியது.. பேருந்திலும் அவர்கள் அரட்டை தொடர்ந்தது..
மதுரைக்கு வந்து சேர்ந்ததும் ஒரு ஆட்டோ பிடித்தனர்..
சக்தி, "இன்விட்டேஷன் எடுத்துட்டு வந்தீங்களா?? நான் மறந்து வீட்லயே வச்சுட்டேன் மண்டபம் பெயர் கூட பார்க்கல"..
நாங்களும் எடுத்துட்டு வரலயே என்று மது, ஹேமா சொல்ல என்கிட்ட இருக்கு என்று நிலா சொன்னாள்.
சக்தி, "அதை டிரைவர் கிட்ட கொடு அவர் அட்ரஸ் பார்த்துக்கட்டும் என சொல்ல நிலாவும் கொடுத்தாள்"..
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மண்டபம் வந்து சேர்ந்தவர்களை ஜோதி வாசலிலேயே வந்து கட்டி கொண்டாள்...
ஜோதி, "வாங்கடி" என்று வரவேற்று உள்ளே அழைத்து கொண்டு செல்ல அவளின் குடும்பமும் அவர்களை இன்முகமாக வரவேற்று உபசரித்தது..
ஜோதி, "ஹே இந்த ரூம்ம தான் உங்களுக்கு ஒதுக்கிருக்கு ஓகே தான " என கேட்க..
நிலா, "டபிள் ஓகே" என்று மெத்தயிலயே சரிந்தாள்..
ஜோதி, "ஹே ரெஃப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிட போலாம் இப்போ படுக்காத" என சொல்ல..
சக்தி, "சரி நீ கீழ போய் பாரு நாங்க வர்றோம்" என்க..
ஜோதியும் சரி சீக்கிரம் வந்துருங்க என்று சொல்லி விட்டு கீழே சென்றாள்..
சொன்னபடி சாப்பிட கீழே இறங்கி சென்றவர்கள் சாப்பிட்டு விட்டு வரும் போது காலையில சீக்கிரமே எழுந்து வந்துருங்க. முக்கியமா சக்தி நீ சீக்கிரமே தயவுசெய்து எழுந்துரு"..
சக்தி, "கண்டிப்பா மச்சி முதல் ஆளா நான் தான் எழுவேன் பாரேன்"..
ஜோதி, "பார்க்கதான போறேன்" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். ..
மறுநாள் காலையில் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்க வழக்கம் போல தாமதமாக எழுந்த சக்தி அரக்கப்பறக்க கிளம்பி கொண்டிருந்தாள்..
பேக் உள்ளே இருந்து சேலையை எடுக்கும் போது ஒரு தங்க ஆரமும் இருக்க அதை வைத்த அவள் தாய் மலரை எண்ணி புன்னகைத்து கொண்டாள்.. அதோடு சின்ன வளையல் , மோதிரமும் இருந்தது. அதை பார்த்தவள் சிரித்து கொண்டாள்..
பட்டு புடவை கட்டி அழகான தேவதைகளாக தோழிகள் நால்வரும் தயாராகினர்.. அந்த ஆரம் சக்திக்கு மேலும் அழகூட்டியது..
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அத்திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது..
இடை இடையே மலரும் கதிரவனும் அழைத்து பேசி கொண்டார்கள்..
சாப்பிட்டுவிட்டு தோழிகள் நால்வரும் கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள்..
ஜோதி, "நைட் தங்கிட்டு போகலாம்ல.. ஏன்டி இப்போவே போறேன்னு குதிக்கிறிங்க"..
மது, "இதுவே லேட் வீட்ல கேப்பாங்கப்பா" என சொல்ல..
ஜோதி, "சக்தி நீயாவது இருக்கலாம்ல.. இவங்களுக்காவது பக்கத்துல தான் அவங்க ஊர் இருக்கு.. உனக்கு தூரம்.. நீ இப்போ போனாலும் நேரம் ஆகிரும்.. பேசாம இங்க என் கூடவே இரு.. நாளைக்கு நானே கூட்டிட்டு போய் பஸ் ஏத்தி விடறேன்"..
ஹேமா, "அவ சொல்றதும் சரி தான.. நீ இங்கேயே தங்கு சக்தி"..
சக்தி, "அய்யய்யோ வேண்டாம்ப்பா.. எங்க அம்மா இப்போவே ஏகப்பட்ட ஃபோன் போட்டுட்டே இருக்காங்க.. இன்னும் லேட் ஆனா பேசுவாங்கடா".. என்று சொன்னவள்.. உங்ககிட்ட தான் சொன்னேன்ல.. அக்கா வீட்டுக்கு சென்னை போகனும் இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்"
இந்த முடிவை எடுக்காமல் ஜோதியின் பேச்சயே கேட்டு இருக்கலாமோ என்று எண்ணும் நேரமும் வந்தது..
♥️♥️♥️♥️♥️
சிவா மணியிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பி இருந்தாலும் மதுரையில் போய் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.. முதலில் லாட்ஜ்ஜில் தங்கலாம் என முடிவு செய்தான்..
மதுரைக்கு வந்து சேர்ந்தவன் முதலில் ஒரு ஆட்டோ பிடித்து ஒரு நல்ல தங்கும் விடுதிக்கு போகுமாறு பணித்தான்..
ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போதே சிவா கவலையாக வருவதை கவனித்த டிரைவர், " என்ன சார் எதுவும் பிரச்சனையா?" எனக் கேக்க..
சிவா திறுத்திறுவென முழித்து விட்டு, " என்னையா கேட்டிங்க?" எனக் கேக்க..
டிரைவர், "வேற யாரும் இங்க இல்லயே சார்" என்க..
அதில் புன்னகைத்த சிவா, "ஆமா ஒரு சின்ன பிரச்சனை தான்.. அது இருக்கட்டும் என் பேர் சிவா உங்க பேர் என்ன?" என்று கேட்டான்..
சிவாவிற்கு ஏனோ அவனை பிடித்து விட்டது.. இப்போ அவன் கூட மணி வேற இல்லாதது அவனுக்கு கஷ்டமாக இருந்தது.. இவனை பார்க்கும் போது மணியை பார்ப்பது போல ஒரு எண்ணம்..
டிரைவர், "என் பெயர் கண்ணன்".. என்று ஆரம்பித்து அவர்களை பற்றி பேசிக்கொண்டும் இப்பொழுது எதுக்கு மதுரைக்கு வந்தான் என்பது முதற்கொண்டு பேசி கொண்டிருந்தார்கள்..
அதில் அவர்கள் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு இந்த சின்ன பயணத்தில் நெருங்கி இருந்தனர்.
கண்ணன் ஒரு தங்கும் விடுதியின் முன்பு நிறுத்தி இங்க தங்கிக்கோங்க சிவா என்று கூறினான்..
உங்க ஃபோன் நம்பர் கொடுங்க என்று இருவரும் அவர்களின் எண்களை பகிர்ந்து கொண்டார்கள்.. நாளைக்கு பார்க்கலாம் என்று கண்ணன் விடை பெற்று சென்றான்.
சிவா அங்கேயே தங்கி விட்டு அடுத்த நாளும் அந்த ஊரிலேயே படம் பார்த்து கொண்டு சுற்றி கொண்டிருந்தான்...
இதற்கிடையில் பிரியாவும் பவித்ராவும் சீக்கிரம் வரும் படியும் அழைத்து கொண்டிருந்தனர்.. அதற்கு, " அது வந்து கொஞ்சம் பெரிய ஆபரேஷனா இருக்குன்னு சொல்லி இருக்காங்கம்மா.. நான் இங்க கண்டிப்பா இருந்தே ஆகனும்னு சொன்னாங்கம்மா" என்று ஏதேதோ சொல்லி சமாளித்து கொண்டிருந்தான்..
திருமணம் முடிந்து விட்டது இப்போவாது வாடா என்று அழைத்த மணியிடமும், " இல்ல ஒரு வாரம் கழிச்சு வர்றேன்.." என்று சொல்லி விட்டான் சிவா..
இரவு 7 மணி இருக்கும் போது கண்ணனை பற்றி எண்ணம் வர அவனுக்கு அழைத்தான்.
சிவா, "கண்ணா எங்க இருக்கீங்க.. ஸ்டான்ட்லயா"..
கண்ணன், "ஆமா"..
சிவா, "அப்போ அப்படியே என்னை வந்து பிக்கப் பண்ணிகிரீங்களா"..
கண்ணா, "சரி இதோ வரேன்"..
சிவா, "எனக்கு கொஞ்சம் உன்கிட்ட பேசிட்டு இருந்தா மைண்ட் ஃப்ரீ ஆகும்னு தோணுது "...
கண்ணன், "சரி நான் வர்றேன்.. நான் வந்ததும் கால் பண்றேன்"..
அவன் வருவதற்காக சிவாவும் காத்திருக்க தொடங்கினான்...

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.