Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 1, 2024
Messages
9
சிவா மனசுல சக்தி - 5

தோழிகள் நால்வரும் ஒரு ஆட்டோப் பிடித்துப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார்கள்..

அவர்கள் இறங்கும் போதே ஹேமாவும் மதுவும் செல்ல வேண்டியப் பேருந்துத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்க இருவரும் அவசரமாக பேருந்தை நோக்கி ஓடி கொண்டே போயிட்டு வர்றோம் நிலா, சக்தி" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்று பேருந்தில் ஏறினார்கள்..

சக்தி அவர்கள் இருவருக்கும் கையை காட்டி விட்டு திரும்ப.. நிலா ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து விட்டு அவள் பொருட்களை எடுக்கும் போது திரும்பி பார்க்க.. அப்போது அவள் போக வேண்டிய பேருந்தும் அங்கு நின்று கொண்டிருக்க.. அவளும் சக்தியிடம் சொல்லி விட்டு பேருந்தில் ஏறி கொண்டாள்..

அவளுக்கும் கை அசைத்து விட்டு சக்தி திரும்பி பார்க்க அங்கு அவர்கள் வந்த ஆட்டோவை காணவில்லை.. அவளுக்கு திக்கென்று இருந்தது.

அவளுடைய பேக் ஆட்டோவில் வைத்து விட்டு ஹேமாவும் மதியும் இறங்கும் போது அவளும் இறங்கியதில் அவளுடைய பையை தவற விட்டு விட்டாள்.

அதில் தான் அவளுடைய அலைபேசி, பணம் இருந்தது.. தன் கழுத்தில் இருந்த ஆரத்தை தொட்டு பார்த்து கொண்டாள்.. நல்லவேளை இதை கழட்டி வைக்காம இருந்தோம் ( தான் நகையை தொலைத்திருந்தால் மலரின் முகத்தை நினைத்து பார்த்தாள் உள்ளுக்குள் அள்ளு விட்டது) என்று எண்ணி கொண்டாள்.

அதை நினைத்து அவளால் மகிழவும் முடியவில்லை. அவளுடைய அலைபேசி எண்ணை தவிர வேறு யாரின் எண்ணும் தெரியவில்லை.. அந்த மண்டபத்திற்காவது போகலாம் என்றால் அந்த மண்டபத்தின் பெயர் கூட நியாபகம் இல்லை. மலர் அடிக்கடி தன்னை பொறுப்பு இல்லை என்று சொல்லுவது முற்றிலும் உண்மை தான் என்று தன்னையே நொந்து கொண்டாள்.


இப்பொழுது என்ன செய்வது என்றுப் புரியாமல் அழுகையை அடக்கி கொண்டு கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள்.. அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு உணர்வு வேறு..

ஏதாவது யோசிக்க தான் வேண்டும்.. தடுமாறி நிற்கும் நேரம் இதுவல்ல என்று புரிந்து தெளிந்தவள் அவசரமாக அங்கிருந்த ஆட்டோவை நோக்கி ஓடினாள்.

அப்போதுதான் கண்ணனை சிவா அழைத்திருக்க அவனும் ஆட்டோவை இயக்க ஆயத்தமானான்..

சக்தி, "அண்ணா.. அண்ணா.." என்று அழைத்துக் கொண்டே கண்ணனின் ஆட்டோவை நெருங்கினாள்..

கண்ணன், "என்னம்மா" எனக் கேக்க..

சக்தி, "அண்ணா இப்போ ஒரு ஆட்டோ போச்சுல.. அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ணுங்க அண்ணா" என சொல்ல..

கண்ணன், "எந்த ஆட்டோ மா இந்த ஸ்டான்ட்ல இருந்தா??"..

சக்தி, "இல்லன்னா நாங்க ஒரு ஆட்டோல வந்தோம்... அதுல என் பேக் எல்லாம் மிஸ் பண்ணிட்டேன்.. அதுல தான் என் ஃபோன் எல்லாமே இருக்கு" என்றுக் கிட்டத்தட்ட அழுவது போல கூறினாள்..

கண்ணனுக்கு அவளைப் பார்த்து பாவமாகி போனது...

கண்ணன், "ஆட்டோ நம்பர்??... வேற அடையாளம் ஏதாச்சும் தெரியுமாமா??"..

சக்தி, " இல்ல அண்ணா எதுவும் எனக்கு தெரியலயே!!"...

கண்ணன், "அப்போ எப்படிமா கண்டு பிடிக்கிறது??" என கூற அதில் சக்தி கண்கள் கலங்க, "நான் இந்த ஊருக்கு புதுசுண்ணா.. ஒரு கல்யாணத்துக்கு வந்தேன் இப்போ இப்படி ஆகிருச்சு".. என கூறி விட்டு, " பிளீஸ் அண்ணா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.. கொஞ்சம் ஆட்டோ ஸ்டான்ட்ல தேடிப் பார்த்தா தெரியும்ல".. என ஒரு ஆவலுடன் வினவ..

கண்ணன், "ஏம்மா இப்போவே கொஞ்சம் இருட்டத் தொடங்கிருச்சு.. இதுக்கு மேலத் தேடி எப்படி போவ?? அதுவும் நான் இன்னொருத்தர் கிட்டயும் வர்றேன்னு சொல்லிட்டு இப்போ அங்க தான் கிளம்பிட்டு இருந்தேன்" என இழுக்க..

சக்தி, "அண்ணா.. பிளீஸ் அண்ணா.. அதுல கொஞ்சம் நகை வேற இருந்துச்சு"..

கண்ணன், "சரி வாமா போய் கொஞ்சம் தேடி முயற்சி செய்துப் பார்க்கலாம்.. போற வழில என் தோஸ்த்தயும் ஏற்றி கொள்ளலாம்.. உனக்கு ஓகே தான.. ஒன்னும் பிரச்சனை இல்லைல" என கேக்க ஏனோ அவளுக்கு அவனை நம்ப தோனியது.. சரி என்று ஒத்துக் கொள்ள அங்கிருந்து சென்று இரண்டு ஆட்டோ ஸ்டாண்டில் தேடி விட்டு அங்கு எங்கும் அந்த ஆட்டோ இல்லாமல் போக... போகும் வழியில் சிவாவையும் ஏற்றி கொள்ள அந்த தங்கும் விடுதியின் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு சிவாவிற்கு அழைக்க.. அவனும் வெளியே வந்து, " ஏன் கண்ணா லேட்?" என கேட்டுக் கொண்டே வண்டியில் ஏறிக் கொள்ள முயல உள்ளே சக்தி குனிந்த தலை நிமிராமல் ஓரமாய் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்..

அவள் யார் என்ற கேள்வியோடு கண்ணனை பார்க்க..

கண்ணன், "நான் அப்புறம் சொல்றேன் நீங்க ஃபர்ஸ்ட் ஏறுங்க சிவா" என சொல்ல சரி என்று தலையசைத்து விட்டு உள்ளே ஏறி கொண்டான்...

சக்தியோ இதை எதுவும் பொருட்படுத்தாது கண்ணீர் வழியும் கண்களோடு அமர்ந்து கொண்டிருந்தாள்..

இன்னும் இரண்டு இடங்களில் தேடிப் பார்த்தனர்.. எங்கும் கிடைக்கவில்லை..

இதற்கு இடையில் சிவாவிடமும் அவளின் தற்போதய நிலைமையை விவரித்தான்..

இவர்கள் அங்கேயும் இங்கேயும் விசாரித்துக் கொண்டிருக்க.. அவர்களை சந்தேகித்த சிலர் என்ன விஷயம்?? எதுக்கு ஒரு பொண்ணயும் கூட்டிட்டு இப்படி இந்த நேரத்துல சுத்துறிங்க?" என கேக்க அவனும் விஷயத்தை சொன்னான்..

அவர்களை கவனித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவன், "வேணும்னா நானும் உதவி பண்ணவா??" என்று கரடுமுரடான உருவத்துடன் அவன் வந்து கேக்க... அதில் பயந்த சக்தி உடல் தூக்கி வாரி போட.. நடுக்கம் கொண்டு, "வேண்டாம்" என்று சொல்லி விட்டு கண்ணனின் ஆட்டோவில் சட்டென்று ஏறி அமர்ந்து கொண்டாள்..

கண்ணனை நம்ப முடிந்த அவளால் ஏனோ மற்றவர்களை நம்ப முடியவில்லை இதில் சிவாவையும் சேர்த்து தான்..

அதில் தன் மேல் அவள் கொண்டிருந்த நம்பிக்கையை நினைத்து சிலிர்த்து கொண்டான் கண்ணன்..

பின்னர் அவர்களும் ஆட்டோவில் ஏறி செல்லும் போதே பாதி வழியில் நிறுத்தியவன் முதல் முறையாக தங்கச்சி என்று அழைத்து இருந்தான்..

கண்ணன், "ஏம்மா தங்கச்சி இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க.. இதுக்கு மேலயும் ஒரு வயசு பொண்ண ஆட்டோலயே வச்சுட்டு சுத்துறது ரிஸ்க் மா.. நீ வந்த கல்யாண மண்டபம் பெயர் சொன்னாலாவது அங்கயாவது உன்னை கூட்டிட்டு போய் விடுவேன்.. அதுவும் தெரியலன்னு சொல்லுற.. உன் ஃபோன் நம்பர் மட்டும் தான் உனக்கு நியாபகத்துல இருக்குன்னு வேற சொல்லுற.. சரின்னு அதுக்கு முயற்சி பண்ணி பாத்தாச்சு.. அதுவும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு..

இப்போ என்ன செய்யலாம்னு இருக்க?.. போலீஸ் கிட்ட வேண்டா போய் ஒரு புகார் கொடுத்துட்டு வரலாமா??

சக்தி, "அய்யயோ வேண்டாம் அண்ணா.. போலீஸ் ஸ்டேஷன் லாம் வர எனக்கு பயமா இருக்கு அண்ணா.. அம்மா அப்பா கிட்ட கேட்காம பண்ண முடியாது வேற.. அப்புறம் என் அம்மா இதை எல்லாம் தவற விட்டுட்டேன்னு தெருஞ்சாலே சாமி வந்து ஆடுவாங்க இப்போ அவங்க கிட்ட கேக்காம இந்த நேரத்துல போனேன்னு தெரிஞ்சா அவ்ளோ தான் என்ன கொண்டே போற்றுவாங்க.. என சொல்ல..

கண்ணன், "அப்போ நீ என்ன தான்மா பண்ணலாம்னு இருக்க".. லேடீஸ் ஹாஸ்டல் கூட இப்போ சேர்த்துபாங்களான்னு தெரியல.. உன்னை கொண்டு போய் இந்த நேரத்துக்கு லாட்ஜுக்கும் கூட்டிட்டு போக முடியாது".. என கூறி கொண்டிருக்க..

சிறிது நேரம் கழித்து சிவா இதற்கொரு தீர்வை சொன்னான். அதுவே கண்ணனுக்கும் சரி என தோன்றியது. சக்திக்கு அதில் பெரிய இஷ்டம் இல்லை
என்றாலும் வேறு வழி இன்றி அவளும் ஒத்துக் கொண்டாள்..
 

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 5
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top