தஸ்லிம்
New member
- Joined
- May 1, 2024
- Messages
- 9
சிவா மனசுல சக்தி- 6
கண்ணன் என்ன செய்ய என்று ஒன்றும் புரியாது குழம்பி கொண்டிருக்க.. சிவா தான் முதலில் தெளிந்தான்..
சிவா, "சரி அப்புறம் அதை பேசிக்கலாம் கண்ணா.. அவங்க சாப்டாங்களா என்னனுக் கேளு... "சாப்பிட்டு எவ்ளோ நேரம் ஆச்சோ" என சொல்ல அப்பொழுது தான் கண்ணனுக்கும் அது நினைவு வந்தது..
ஆனால் சக்தி, "இப்போ இவருக்கு சாப்பாடு தான் முக்கியமா?.. நானே என்ன நிலைமைல இருக்கேன்" என்று தன் நிலையை நினைத்து சிவாவை மனதிலேயே வறுத்து எடுத்தாள்"..
கண்ணன், "கொஞ்சம் ஆட்டோல இருமா நான் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வந்துறேன்" என்று சொல்ல.
சக்தி சிவாவிடம் இருந்த பார்வையை திருப்பி, "அய்யோ அதெல்லாம் வேண்டாம்.. எனக்கு பசிக்கலண்ணா".. என சொன்னாள்..
கண்ணன், "சரி டீயாவது வாங்கிட்டு வர்றேன் நீ இரு என்று சொல்லி விட்டு.. வாங்க சிவா!" என்று அழைத்துக் கொண்டு சென்றான்..
சிவாவும் கண்ணனும் டீ குடித்து விட்டு அவளுக்கும் வாங்கிட்டு வந்து கொடுத்தார்கள்..
பின்பு கண்ணன் சக்தியிடம், "இப்போ நீ எங்க போகலாம்னு இருக்கம்மா??" என கேக்க.. "சென்னைக்கு" என சக்தியும் பதிலளித்தாள்..
என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போதே சிவாவுக்கு அந்த எண்ணம் தோன்றியது.. அதை உடனே வெளிப்படுத்த கண்ணனிடம், "நானும் சென்னைக்கு தான் போகப் போறேன்.. நாளைக்கு போகலாம்னு இருந்தேன்.. இவங்களுக்காக வேணும்னா இன்றைக்கு அவங்களோட துணையாக போறேன்" என்று சொல்ல... அந்த யோசனை கண்ணனுக்கும் சரியாக பட்டது.. ஆனால் அது சக்திக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை..
சக்தியின் சம்மதத்தை பெற வேண்டி கண்ணன் சக்தியிடம் பார்வையை திருப்ப , "அவள் தன் பிடித்தமின்மையை தெரிவிக்க, வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்"...
அவளின் நிலைமையை புரிந்து கொண்ட கண்ணனும் அவளிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சிவாவிடம் கூற.. சிவாவும் மணியுடன் பேசப் போவதாக சொல்லி விட்டு அங்கிருந்து சற்று தள்ளிச் சென்று நின்று கொண்டான்..
கண்ணன் சக்தியிடம், " அவர் கூட போமா.. நான் பழகுன வரைக்கும் நல்ல பையனா தான் தெரியுது. நீ என் ஃபோன் நம்பரயும் கையில வச்சுக்கோ.. ஏதாச்சும் உனக்கு தப்பா பட்டதுனா எனக்கு உடனே கூப்பிடு.. உனக்கு பயமெல்லாம் வேண்டாம்.. நீ எனக்கு தெரிஞ்சு தான போக போற.. அவர் நம்பரும் என்கிட்ட இருக்கு.. ஏதாச்சும் பிரச்சினை பண்ணனும்னு அவரும் நினைக்க மாட்டாரு . இப்போ உனக்கு இவ்வளவும் சொல்றது உனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு வர்ரணும்னு தான். மத்தபடி அவர் நல்லவரு தான் சரியா. நீ எப்படினாளும் இப்போ தனியா போக போரன்னே நினச்சுக்கோ.. அவர் உன் கூட வரக் கூடிய ஒரு பயணி அவ்ளோதான்னு நினச்சுக்கோ சரியா?? நான் உன்னை வெறும் வார்த்தையால தங்கச்சின்னு சொல்லல என் மனசுல இருந்து தான் சொல்றேன் என்றுக் கூறி சம்மதிக்க வைத்தான். அவளும் வேறு வழியும் இல்லாது அரைமனதாக "சரி" என்றுத் தலையசைத்தாள்..
சிவா மணியிடம் நடந்த அனைத்தயும் கூறியவன், " நான் ஒரு வாரம் சென்னைல தான் இருக்க போறேன்" என்று சொல்ல..
மணி, "டேய் அம்மா ஏற்கனவே புலம்பிட்டு இருகாங்கடா.. " என அவனை இப்பொழுதே ஊருக்கு வரும் படி கூறினான்..
சிவா, " வேலை விஷயமா போயிருக்கேனு சொல்லி சமாளிச்சுகோடா.. நானும் அவங்க கிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசிக்கிறேன்"..
மணி, "எப்படியோ போ.. என்னையே எல்லாத்துலயும் மாட்டி விடுவ.. நான் பதில் சொல்லி சொல்லியே சோர்ந்து போயிட்டேன்டா"..
சிவா, "டேய் என்னடா எனக்காக பண்ண மாட்டியா?". .
மணி, "வேற வழி. உனக்கு ஃப்ரெண்ட்டா வந்து வாய்ச்சுறுகேன்ல.. பண்ணி தொலயுறேன் விடு"..
சிவா, "தேங்க்ஸ் டா மச்சான்"..
மணி, "ஃபோன வச்சு தொலட எரும" என்று அழைப்பை துண்டித்து விட்டான்..
கண்ணனும் சக்தியும் பேசிவிட்டு திரும்பி சிவாவை அழைக்க அவனும் அவர்களிடம் வந்தான்.
சிவா, "என்ன கண்ணா.. எல்லாம் ஓகேவா?? இவங்க இப்போ வர்ராங்களா?? இல்ல நாளைக்கு நான் போயிக்கவா?" என கேக்க..
கண்ணன், "இல்ல இப்போவே வர்ராங்கலாம் என்று சொல்ல.. அப்போ சரி வாங்க.. என் திங்ஸ் எல்லாம் ஹோட்டல்ல இருக்கு அங்க போய் எடுத்துட்டு வந்துடலாம்" என்று சொல்லி விட்டு அதன் படியே போய் அங்கேயும் அறையை காலி செய்து விட்டு வந்தவர்கள் சென்னை செல்லும் பேருந்தில் தனி தனியாக அமர்ந்தனர்.
கண்ணனும் அதில் திருப்தி அடைந்தவனாக இருவரிடமும் விடைப் பெற்று சென்றான்..
போகும் போதும் சக்தியிடம் கவலை கொள்ளாதே என்று ஆறுதல் வார்த்தைகளையும் சில சொல்லி விட்டு.. உனக்கு கொஞ்சமாவது பணம் தந்து விடனும்னு தான் எனக்கும் விருப்பமா இருக்கு... ஆனா கைல இருந்த காச எல்லாத்தையும் இன்னைக்கு தான் ட்யூ கட்டிட்டு வந்தேன்.. அவர் கிட்ட கேக்கவும் ஒரு மாதிரி இருக்கு" என்று தர்மசங்கடத்துடன் சொல்ல...
சக்தி, "பரவா இல்லைனா.. இவ்வளவு தூரம் எனக்கு உதவுறதே பெரிய விஷயம்... நீங்க ஒன்னும் மனசுல ஏத்திக்காதிங்க" என்று கூறினாள்.
பேருந்தும் சென்னையை நோக்கி நகரத் தொடங்கியது.. அடுத்த நிறுத்தத்தில் ஒரு குடும்பம் ஒரு கைக் குழந்தையுடன் ஏறியது.. இவர்கள் இருவர் மட்டுமே தனி தனியாக அமர்ந்திருக்க.. என்ன செய்வது என்று யோசிக்க.. அவர்கள் பக்கத்தில் இருந்தவரோ, சிவாவை, " ஏன் தம்பி .. நீ அந்த பொண்ணோட தான வந்த.. அங்க போய் உட்காரேன். இவங்க குடும்பமா வந்துறுக்காங்களா.. சின்ன புள்ள வேற வச்சுருக்காங்க.. கொஞ்சம் இடத்தை கொடுப்பா" என்று சரியான சமயத்தில் அந்த குடும்பத்திற்கு உதவினார்.
அவனும் சரி என்று எழுந்து வந்து சக்தியின் அருகில் அமர அவளை பார்க்க.. அப்போதுதான் அவள் அவனை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.. சிவா பார்த்ததும் ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பி கொண்டாள்.. அவனும் தர்மசங்கடமாக அவள் அருகில் அமர்ந்தான்.
அவள் நினைவுகள் மதுரைக்கு கிளம்புவதற்கு முன்பு நடந்ததை நினைவு கூற ஆரம்பித்தது..
கிளம்பும் போது கடைசியாக ஒரு சின்ன வளையலயும் சின்ன மோதிரத்தையும் கொடுத்தார்.. "என்னம்மா இது??.. நான் இது எப்படி போட முடியும்??" என கேக்க அவள் தலையில் கொட்டிய மலர்.. லூசாடி நீ.. இது ராகவி குழந்தைக்கு..
சக்தி, "அதை ஏன்மா என்கிட்ட தர்ற?"..
மலர், "ம்ம் நீ தான் கொண்டுட்டு போய் குடுக்க போற"..
சக்தி, "என்னம்மா சொல்ற உண்மயாவா?? அப்பா எப்படி சம்மதிச்சாரு? என்று சந்தோஷ கூச்சலுடன் கேக்க..
மலர், "நீ எப்படி இந்த கல்யாணத்துக்குப் போகப் போராட்டம் போட்டியோ.. அதே மாதிரி நானும் கேட்டு சம்மதம் வாங்கிட்டேன்" என்று சந்தோஷத்துடன் சொன்னார்..
சக்தி, "மூன்று நாட்கள்"..
ஹையா என்று மகிழ்ச்சியில் மலரை தூக்கி சுற்றியே இருந்தாள்..
மலரின் சிரிப்பு சத்தம் அந்த அறையை நிறைத்தன..
யார் இந்த ராகவி? இந்த சென்னை பயணம் சக்தியின் வாழ்கையின் திருப்புமுனை என்று அறியாது மகிழ்ச்சியாக அவரே அதுக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார்..

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 6
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.