தஸ்லிம்
New member
- Joined
- May 1, 2024
- Messages
- 9
சிவா மனசுல சக்தி - 7
சக்தி மலரிடம், " நிஜமாவே சொல்றியாமா?!.. அப்பா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டார்?!.. முன்னாடி ஒரு தடவை அக்கா வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கே எவ்வளவு பிரச்சனை?!.. அழுது சாப்பிடாம இருந்து தான் போனேன். இப்போ எப்படி இவ்வளவு சீக்கிரம் அனுப்ப சம்மதம் சொன்னார்?!.. எனக்கு ஒண்ணுமே புரியலயேமா?. அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீ எப்படி என்னை தனியா அனுப்ப ஒத்துக்கிட்ட?" என்று மூச்சுக் கூட விடாமல் பேசி முடித்தாள்..
மலர், "கொஞ்சம் மூச்சு வாங்குடி.. ஹப்பா எவ்வளவு கேள்வி!.. எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்".
சக்தி, "சீக்கிரம் சொல்லுமா என்னால ஆர்வத்தை அடக்கவே முடியல"..
மலர், "என்ன பேச விட்டாதானே சொல்ல முடியும்" என முறைக்க..
சக்தி, "சரி, சரி பேசல சொல்லு".. என வாயை மூடி பேசு என செய்கை செய்தாள்..
மலர், "ராகவிக்கு குழந்தை பிறந்து இருக்குல்ல.. அவள போய் நேர்ல இருந்து தான் பாத்துக்க முடியல.. ரெண்டு வீட்டு ஆளுங்களுமே அவங்கள ஒதுக்கிட்டாங்க.. எனக்கு தான் மனசு கிடந்து அடுச்சுக்கிட்டே இருந்துச்சு. அதான் ரெம்ப கெஞ்சி உங்க அப்பாவ சம்மதிக்க வச்சு இந்த நகைகளை வாங்கிட்டு வர சொன்னேன்"..
சக்தி, "அது இருக்கட்டும் நீங்க எப்படி என்ன தனியா அனுப்ப சம்மதிச்சிங்க?".
மலர், "நீ ஒன்னும் சின்ன புள்ள இல்லன்னு உங்க அப்பா தான் சொன்னாருல அவளுக்கு பொறுப்பு இருக்கு.. இப்படியே பொத்தி பொத்தி வச்சுருந்தா.. எப்படி எல்லாத்தையும் கத்துப்பா.. அது இதுன்னு சொன்னாருல.. அதையே அப்படியே அவர் கிட்ட சொன்னேன்".. அவரும் வேற வழி இல்லாம தலையாட்டிட்டார்"..
எப்படி? என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டே கேட்டார்..
சக்தி, "பலே கில்லாடி மா நீ" என்று அவரைக் கட்டி அணைத்து கொண்டாள் சக்தி..
மலர், "அவளை விலக்கி விட்டு.. நான் உங்க அப்பா கிட்ட அப்படி பேசிட்டாலும் உன்ன தனியா அனுப்புறது எனக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்கு சக்தி.. பொறுப்பா இருக்கணும் சரியா.. கஷ்டப்பட்டு இந்த அனுமதியை வாங்கிருக்கேன்.. உங்க பெரியப்பா வீட்டுக்கு இது எதுவுமே தெரியாது.. தெரிய வந்துச்சுனா பெரிய சங்கடம் வந்து சேரும். அதனால யாருக்கும் தெரியாம போயிட்டு வரணும்னு தான் இப்படி கல்யாணத்துக்கு போற மாதிரி உன்னை நம்பி அனுப்பி விடுறேன் சரியா??" என கேக்க..
சக்தி, "சரிமா நீங்க கவலையே படாதீங்க "என்று சொல்லி விட்டு, "சோ ஸ்வீட் மம்மி" என்று அவரை கட்டி கொண்டாள்.
ராகவி சக்தியின் பெரியப்பாவின் மகள்.. காதல் திருமணம்.. வீட்டை எதிர்த்து திருமணம் முடித்ததில் இருவரின் வீட்டிலுமே அவர்களை ஏற்றுக்கொள்ளாது ஒதுக்கி வைத்து விட்டனர்..
ஆனால் மலருக்கும் சக்திக்கும் மற்றும் அவளை இழக்க மனமில்லை.. அவர்களிடம் அதிக அன்பு வைத்திருப்பவள்.. ஆனால் அவர்களாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை..
அதனால் யாருக்கும் தெரியாமல் அவளுடன் அடிக்கடி அலைபேசி மூலம் தொடர்பு இருந்து கொண்டு தான் இருந்தது.. அவள் கர்ப்பமுற்ற செய்தியே கேட்டு அவளை பார்த்தே தீர வேண்டும் என்று கதிரவனிடம் சண்டையிட்டு போராடி இவள் மட்டும் டூர் போவதாக சொல்லி விட்டு அங்கு போய் பார்த்து விட்டு வந்தாள்.. அப்புறம் வேலை விஷயமாக செல்வதாக கூறி விட்டு கதிரவனே சென்று அழைத்து கொண்டு வந்தார்...
இப்பொழுது மலரே அதற்கொரு வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுத்தார்... பேருந்துக்கு பயணச் சீட்டு முதற்கொண்டு எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார்..
அதை எல்லாம் நினைத்து அழுதவள் தன் அலட்சிய போக்கினால் இப்பொழுது தான் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதையும் நினைத்து தன் தவறை உணர்ந்தாள். முதல் முதலில் ஒரு அந்நிய ஆணுடன் தனியாக பேருந்தில் பயணம்.. நினைக்கும் போதே அழுகை வரும் போல் இருந்தது.. இது அம்மா அப்பாவிற்கு தெரிந்தால் என்னவாகும் என்று பயத்திலேயே உள்ளுக்குள் நடுங்கி கொண்டிருந்தாள்.. கதிரவனின் கோபம் ஒரு எல்லை வரைக்குமே அடங்கும்.. மீறினால் வெளுத்து எடுத்து விடுவார்.. அதை நினைத்து அஞ்சி கொண்டிருந்தவளின் கை திடீரென்று பாரமான உணர்வு.. அதில் சுயம் வந்தவள் என்னவென்று திரும்பி பார்க்க.. சிவா தான் அவளின் தோளில் தூங்கி கொண்டு இருந்தான்... அதை பார்த்தவளுக்கு படபடப்பாகி போனது...
மெதுவாக அவனின் தலையை அந்த பக்கமாக தள்ளி விட்டாள்.. அதில் உறக்கம் கலைந்தவன் நடந்தது புரிய அவளிடம், " சாரி, சாரிங்க.. ஏதோ தூக்க கண்ணுல அப்படி நடந்துருச்சு. வெரி சாரி" என்று மன்னிப்பு வேண்டினான்..
அவளும், " இட்ஸ் ஓகே " என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கமாக திரும்பி வெளியேப் பார்க்க ஆரம்பித்தாள்..
சிவாவுக்கு தான் ஒரு மாதிரி ஆகி போனது.. "என்ன காரியமடா பண்ணிட்ட சிவா" என்று மனதிற்குள்ளேயே தன் தலையிலேயே மானசீகமாக தட்டி கொண்டான்..
அதற்கு பிறகு சிறிது நேரத்தில் சிவா, " ஏங்க " என்று சக்தியை அழைக்க.. அவள் என்னவென்று கேள்வியாக திரும்பி பார்க்க, "சாப்பிடுறீங்களா" என கேட்டான்..
"நான் சாப்பிட போறேன்.. உங்களுக்கும் தான் வாங்கி இருக்கேன் இந்தாங்க" என கொடுக்க, " இல்ல வேண்டாம் பசிக்கல" என சொல்ல..
"ஏங்க நம்ம சென்னை போறதுக்கு லேட் ஆகும்.. பசிக்கும்ல சாப்பிடுங்க.. நீங்க வேற முன்னாடியும் ஒரு டீ தான் குடிச்சீங்க" என்று சொல்லி முடிப்பதற்குள், "இப்போ உங்களுக்கு என்ன சார் பிரச்சனை? என் பசிய பற்றி நீங்க அக்கறை பட வேண்டாம்.. உங்களுக்கு பசிச்சா நீங்க சாப்பிடுங்க பிளீஸ்" என்று கோபமாக சொல்லிவிட்டு ஜன்னல் பக்கமாக திரும்பி கொண்டாள்..
அவள் திட்டியதில் அதிர்ந்தவன் பின் தெளிந்து "நல்லதுக்கே காலமில்ல... பசியோட இருப்பாங்களேனு வாங்குனேன்ல என் தப்பு தான்" என்று புலம்பியவன் சாப்பிட ஆரம்பித்தான்..
அவன் புலம்பியது அனைத்தும் அவளுக்கும் கேட்டாலும் அவள் எதுவும் பேசவில்லை.. அவளுக்கும் பசித்தது தான் ஆனால் சாப்பிட தான் மனம் வரவில்லை..
திடீரென்று விக்கல் சத்தம் கேட்க.. என்னவென்று அவள் திரும்பி பார்க்க அவன் தான் விக்கிக் கொண்டே தண்ணீர் பாட்டிலை திறக்க முயன்று கொண்டிருந்தான்..
ஆனால் அவனால் திறக்க முடியாது போக.. சக்தியும் திரும்பி பார்க்க, "ஏங்க ஒருத்தன் கஷ்டபடுறானே.. வாங்கி திறந்து கொடுப்போம்னு உங்களுக்கு தோனுதா?" என திக்கி கொண்டே கேட்க.. அவள் பாட்டிலை வாங்க கை நீட்ட.. அவனும் கொடுக்க அவளும் திறந்து கொடுத்தாள்..
பின்னர் தண்ணீர் குடித்து விக்கல் நின்றதும், " சாப்பிட ஆரம்பிக்கும் போதே திட்டுனா இப்படி தான் விக்கல் வரும்.. வேற என்ன செய்யும்" என்று அவன் புலம்ப.. அதை கேட்டு அவள் அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
இருவரின் அலப்பரைகளும் தொடரும்..

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 7
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.