தஸ்லிம்
New member
- Joined
- May 1, 2024
- Messages
- 9
சிவா மனசுல சக்தி - 8
சிவா மனதிற்குள் பேசுவதாக எண்ணி வெளியிலேயே அவளைப் பற்றிப் பேச.. அதை கேட்ட சக்தி, அவனை முறைக்க.. அதை கண்டும் காணாதவனாக கண்களை மூடிக் கொண்டான்..
சக்தியும் ஜன்னல் பக்கமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்த சிவா, "ஹாப்பாடா அவள் பார்க்கல" என்று பெரு மூச்சு விட்டுக் கொண்டு மறுபடியும் கண் அயர்ந்தான்..
சிறிது நேரத்திற்குப் பிறகு மறுபடியும் தன் தோள்பட்டை மேல் பாரமாக உணர்ந்தவள்... அது எதனால் என்பதை உணர்ந்துக் கோபத்துடன் திரும்பியவள், ஒரு வேகத்தில் அவன் தலையை பட்டென்று தள்ளி விட அது நங்கென்று கம்பியில் சென்று மோதியது..
" ஸ்ஸ்ஸ்.. ஆஆ.. என்று வலியைத் தாங்க முடியாமல் கத்திவிட்டுத் தலையைத் தேய்த்துக் கொள்ள.. அப்போதுதான் அவள் செய்ததை உணர்ந்தவள் கொஞ்சம் தடுமாற்றாத்துடன் அவனை பார்த்தாள்..
சிவா சக்தியைப் பார்த்து ஏங்க கொஞ்சம் என்னை எழுப்பி சொல்லிருகலாம்ல என்று சொன்னதும் இவ்வளவு நேரம் இருந்த குற்ற உணர்வும் பறந்து போகக் கோபத்துடன், "ஏங்க என்னங்க சொல்றீங்க ?? இது ரெண்டாவது முறை நீங்க இந்த பக்கம் சாய்றது.. என்னங்க நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க?? சும்மா சும்மா மேல சாஞ்சுகிட்டு. நான் கூட வேகமா தள்ளி விட்டுடனேன்னு கொஞ்சம் கில்ட்டியா ஃபீல் பண்ணேன்.. நீங்க இப்போ பேசுனதுல அதுவும் போச்சு.. மெதுவா இவங்கள எழுப்பி சொல்லனுமாம்ல என்று முறைக்க அவனுக்கும் அதில் கோபம் துளிர்த்தது.
அவன் முழுதாக தூங்கி 2 மாதங்கள் ஆகிறது என்றுப் பாவம் அவளுக்கு தெரியுமா என்ன?? ..
அத்தோடு அவனும் எதுவும் பேசாது முன்னிருந்தக் கம்பியில் தலையை சாய்த்துக் கொண்டான்.. அவளும் மறுபடியும் ஜன்னல் புறமாக திரும்பிக் கொண்டாள்.. அவளும் சிறிது நேரத்தில் உறங்கி போனாள்..
அவன் கொஞ்சம் நிதானம் ஆனதும் தான் அவன் தவறும் புரிந்தது.. நம்மை நம்பி நம்முடன் வருபவளுக்கு நாம் நம்பிக்கையை கொடுக்காமல் அவநம்பிக்கையை கொடுத்து விட்டோம் என்றுப் புரிந்து கொண்டான்.. அவளிடத்தில் நாம் இருந்தாலும் நாமும் இப்படி தான் பண்ணிருப்போம் என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டான்..
சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் தோளை சுரண்டுவது போல உணர படபடப்பு மேலோங்க அவன் பக்கம் கோபமாக திரும்பியவள் ஏதோ பேசுவதற்கு வாயை திறக்க .. அவன், "ஏங்க கோபப்படாதிங்க.. கொஞ்ச நேரமாவே கூப்பிட்டு பார்த்தேன் உங்களுக்கு கேக்கல அதான் எழுப்பி விட்டேன் சாரி" என்று சொல்ல அப்போதுதான் வண்டி நின்று கொண்டிருப்பதையே கவனித்தாள்..
சக்தி, "என்னாச்சு?? ஏன் வண்டி நிக்குது??.. நீங்க ஏன் என்ன எழுப்புனீங்க??"..
சிவா, "அதான்.. அதாங்க.. அதை சொல்லத்தான் கூப்பிட்டேங்க"..
சக்தி என்ன என்பது போல் அவள் பார்க்க.. "இங்கே வண்டி கொஞ்ச நேரம் தான் நிற்கும் .. ரெஸ்ட் ரூம் போறதுனா போங்க.. மறுபடியும் எப்போ நிற்கும் என்று தெரியாது" என்று சொல்ல.. "அவளும் சரி" என்று இறங்கிச் சென்றாள்.. அவளுக்கு துணையாக அவனும் சென்றான்..
பின் அனைவரும் வந்து பேருந்தில் அமரப் பேருந்தும் கிளம்பியது.. இருவருமே உறங்காமல் தான் வந்தனர்..மழை வேறு தூரிக் கொண்டிருந்தது.. ஜன்னலை மூடி விட்டு அதில் சாய்ந்து கொண்டே வந்தாள்..
சிறிது நேரம் கழித்து மற்றொரு இடத்தில் வண்டியை நிறுத்த, "ஏங்க டீ காஃபி ஏதாச்சும் குடிகிரீங்களா? இதுக்கு மேல வண்டி நிற்காது" என சொல்ல "சரி" என்று அவளும் தலையசைக்க அவன் சென்று அவளுக்கு வாங்கி வந்து கொடுத்தான்..
சக்தி, "ஏங்க நீங்க குடிக்கலயா?" என கேக்க நான் அங்கேயே குடிச்சுட்டு தாங்க வாங்கிட்டு வந்தேன் என சிவா சொல்ல அவளும் குடித்தாள்..
சிவா, "ஏங்க உங்க பெயர் என்ன?? எவ்ளோ நேரம் தான் ஏங்க ஏங்கன்னு கூப்பிடுறது..
சக்தி அதற்கு முறைக்க..
சிவா, "ஏங்க இதுக்கும் முறைக்குறீங்க .. பெயர் கேட்டது கூடத் தப்பா.. அதிக தூரம் டிராவல் பண்றோம்.. பெயர் தெரிஞ்சு கொள்ளலாமேன்னு கேட்டேன் " என்று சொல்ல..
சக்தி, "தாராளமா தெரிஞ்சுக்கலாம்.. என் பெயர் சக்தி" என்று சொல்ல..
சிவா, "ஏங்க என் பெயர் என்னன்னு கேட்க மாட்டிங்களா?"..
சக்தி, "மாட்டேன்"..
சிவா, "ஏன்?" என கேக்க..
சக்தி, "உங்களுக்கு கேக்கனும்னு தோணுச்சு கேட்டிங்க.. எனக்கு தோணல" என்று சொல்ல சிவாவிற்கு தான் ஏதோ போல ஆகி போனது..
சக்திக்கு மழைக்கும் இந்த தேனீருக்கும் சற்று இதமாகத் தான் இருந்தது.
அவள் ரசித்துக் குடித்து முடித்ததும் அவள் பக்கம் இருந்த ஜன்னலைத் திறக்க முயற்சிக்க..
சிவா, "அட ஏங்க அதை திறந்துக்கிட்டு" என்று அவள் கையில் இருந்த கப்பை வாங்கி எதிர் சீட்டின் ஜன்னல் திறந்து இருக்கவும் யாரும் இல்லாமலும் இருக்கவும் ஜன்னலின் வழியே தூக்கி போட்டான்.
அது எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் மேல் பட்டு விட அவர் சரமாரியாகத் திட்டி விட்டார்.. "கண்ண எங்க வச்சு இருக்கீங்க?? ஆள் இருக்காங்களா இல்லையானு பார்த்து போட மாட்டிங்களா??"ன்னு என்றுத் திட்டித் தீர்த்து விட்டார் ..
அவன் சாரிங்க என்று திரும்ப திரும்ப சொல்லவும் அவரும் அமைதியாகி விட்டார்..
சக்திக்கு நம்மனால தான இவர் திட்டு வாங்குறாரு என்று சின்ன அனுதாபம் பிறந்தது. ஆனாலும் அதை அவள் வெளிகாட்டது ஏங்க அவசரப்பட்டு நீங்க வாங்கி போட்டீங்க நான் இந்த பக்கமா போட்டு இருக்க மாட்டேனா என்று அதற்கும் கடிந்து கொண்டாள்.
அவன் அதற்கு அவளை பாவமாக பார்த்து வைத்தான்..
குளிர் அதிகமாக.. காலை மேலே ஏற்றி வைத்து முட்டியை கட்டி கொண்டு.. புடவையை இழுத்து போர்த்தி கொண்டு படுத்து கொண்டாள்.. ஜன்னலின் புறமாக பார்த்து கொண்டே தன் அஜாக்கிரதையால் ஏற்பட்ட சூழ்நிலையை எண்ணி வருந்தி கொண்டிருந்தாள்..
கொஞ்ச நேரத்தில் மறுபடியும் தன் தோள் மேல் பாரம் ஏற பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு பத்ரகாளியாக திரும்பி பார்த்தாள்.. வேற யாரு நம்ம சிவா சார் தான் மறுபடியும் சுகமாக தூங்கி கொண்டிருந்தார்..
அவள் தள்ளியதில் மறுபடியும் தலை நங்கென்று மோதியது..
அவன் நிலைமை உணர்ந்து பாவமாக அவளைப் பார்க்க அவளோ கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.

Author: தஸ்லிம்
Article Title: அத்தியாயம் - 8
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.