Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

இதழ் மிடறும் முத்தம்: 10

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 10

கொளுத்தும் வெயிலில் ஜோடியாய் ஒரு பைக் பயணம்.

ஹெல்மட் இல்லா கோக்ஸ் முதலில் ரகுவோடு ட்ரவலிங் போக மறுக்க, பக்கமே என்றவன் இழுத்துக் கொண்டு போனான் அவன் தலைக்கவசத்தை லோட்டசுக்கு தாரம் வார்த்து.

தேகங்கள் கொஞ்சமாய் ஒட்டிக்கொண்டாலும் ஒற்றை ஹெல்மட் கொண்ட காரணத்தால் அந்நிலையை ரசித்து லயிக்க முடியவில்லை இருவராலும்.

கோதையவளோ வருங்கால கணவனின் இடையை வலிக்காது பற்றியிருக்க, கண்ணாடியை அட்ஜர்ஸ்ட் செய்தவன் முறுவல் கொண்டான் கொக்கு போல் செங்குத்தாய் அமர்ந்திருந்த லோட்டஸை பார்த்து.

அந்த பைக் அப்படித்தான். பின் பக்கம் உசரமாக இருக்கும். ஆகவே, ஆள் உட்கார்ந்தால் ஓட்டுனரை தாண்டி பின்னாலிருப்பவர்களின் சிரமே ஓங்கி நிற்கும்.

''ஷோபாக்கா (zobha) வந்திருக்கோம்?''

என்றவளோ விழிகளை விரித்தப்படி பைக்கை பார்க் செய்தவனிடம் கேட்க,

''ஐயையோ! ஆமாவா?! நான் கூட காபாவோன்னு நினைச்சுட்டேன்!''

என்றவனோ சிரித்தப்படியே அடிகளை கடையை நோக்கி வைக்க,

''பொறுக்கி! பொறுக்கி! தாடிக்கார பொறுக்கி!''

என்றவளோ அவன் பின்னாலேயே ஓடினாள், சால்வையை சரி செய்தவாறே.

அதுவொரு தனியார் பூட்டிக் (boutique). தனித்துவமிக்க டிசைனர் கலெக்ஷன் மட்டுமே தயாரிக்கும் உயர் ரக துணிக்கடையாகும். தரமும் மெச்சும் அளவுக்கே இருக்கும்.

கடைக்குள் நுளைந்தவர்களை வரவேற்க அப்பூட்டிக்கின் உரிமையாளரே வந்தார்.

''வாங்க! வாங்க! ஹாய் ரகு! இவுங்கதான் பொண்ணா?! ரொம்ப அழகான ஸ்கின் டோன்!''

என்ற பெண்ணோ வந்தவர்களை வரவேற்று கேள்வியோடு சிறு புகழையும் வாரிக்கொடுக்க, கோக்ஸ் லைட்டாய் இதழ் விரித்து அமைதி காத்தாள்.

''சரி வாங்க, டிசைன்ஸ் பார்க்கலாம்! ஆமா, உங்க சாய்ஸ் ஆப் கலர் என்னே?''

என்ற பெண்ணோ அடுத்த கேள்வியை உதிர்த்து அங்கிருந்த கிளைண்ட் அறையை நோக்கி முன்னோக்கி நடந்தார்.

''ரோயல் ப்ளூ!''

என்ற ரகுவோ, நேரிழையவள் வாய் மலரும் முன்னே அவள் விரும்பும் வண்ணத்தை வாய் மொழிந்தான்.

ஆணவனை திரும்பி பார்த்த லோட்டஸின் அம்பஙங்களிலோ ஆச்சரியம் மறையாமலே இருக்க, அவளைப் பார்த்து இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி சாம்பாஷணை செய்தான் ரகு.

"பொறுக்கி! பொறுக்கி! தாடிக்கார பொறுக்கி!"

என்று இதழ்கள் பிரிக்கா மௌன பாஷையில் சைகை மூலம் சொல்லியவளோ அந்நிலைக்கொண்ட ஸ்பரிசத்திலேயே தங்கிட ஆசை கொண்டாள்.

எப்படி தெரியும் என்பதை தாண்டி ஏந்திழையவள் சற்றுமுன் கொண்டிருந்த குழப்பமான சூழலுக்கு விடையாய் அமைந்தவன் குரலும் காட்சிகளும் கண்முன் விரிந்து வல்வியின் நெஞ்சை இதமாக்கியது.

''டியர், இந்த கருப்பு கவர் ஆல்பம் முழுக்க உங்களுக்கு பிடிச்ச கலர்லே இருக்கக்கூடிய சாரி வகைகள் இருக்கு. இந்த வெள்ளை கவர் ஆல்பம்லே பிரத்தியேகமான எம்பிராய்டரி வர்க் டிசைன்ஸ் இருக்கு. சோ, ரெண்டையும் பார்த்திட்டு உங்களுக்கு என்ன வேணுமோ அதை எனக்கு இன்போர்ம் பண்ணிடுங்க!''

என்ற பெண்ணோ அவ்வறையிலிருந்து வெளியேறினார்.

ரகுவோ மேஜை மீதிருந்த போத்தல் நீரை ரெண்டு சிப் இழுத்து மூடியை மூட,

''டேய் பொறுக்கி, எதுக்குடா இப்போ என்னே இங்க கூட்டிக்கிட்டு வந்தே?!''

என்று சாங்கியத்துக்காய் கேள்வி ஒன்றை கேட்டு வைக்க,

''சரி, வா கிளம்பு!''

என்றவனோ விருட்டென எழுந்தான் நாற்காலியில் இருந்து.

'ஐயோ! இவன் வேறே! பொசுக்கு பொசுக்கின்னு மூஞ்சியே காட்டிக்கிட்டு!'

என்று மனதுக்குள் கறுவியவாறே, அவனை இழுத்து அமர்த்தினாள் மீண்டும் இருக்கையில்.

ரகுவோ ஆல்பங்களை லோட்டஸின் முன் தள்ள,

''இல்லே, இப்போ அங்க எடுத்த புடவையெல்லாம் என்ன பண்றதுண்ணுதான்..''

என்று இழுத்தப்படியே ரகுவைப் பார்த்து விலோசனசங்கள் சிமிட்டினாள் கோக்கனதை.

''வளைக்கப்புக்கு கட்டிக்கலாம்!''

என்றவனோ நக்கலடித்து சிரிக்க, நாணம் வந்தும் அதை மறைத்து கொஞ்சமாய் முறைத்து,

''பொறுக்கி! பொறுக்கி! தாடிக்கார பொறுக்கி!''

என்று முனகியவாறு ஆல்பங்களில் பார்வைகளைத் திருப்பி கவனத்தை செலுத்தினாள் பெதும்பையவள்.

ரகுவோ சோஷியல் மீடியாவை ஒரு ரவுண்டு போய் வர, துணிக்கடைக்கார அம்மணியோ அறைக்குள் நுழைந்தார்.

அரை மணி நேரத்திற்கும் மேற்பட்டு இரு பெண்களும் மும்முரமாய் ஏதேதோ பேச, ரகுவோ மண்டையை மட்டும் ஆட்டிக் கொண்டான் போனில் ஆழ்ந்தப்படி.

அவனை ஓரக்கண்ணால் பார்த்த பைந்தொடியோ, உதைத்தாள் ரகசியமாய் அவன் காலை, போனை எடுத்து வைத்திட சொல்லும் ஆர்டராய்.

அப்போதும் ரகு கண்டுக்காது இருக்க, தொண்டை தண்ணீர் வற்ற விளக்கம் கொடுத்து கொண்டிருக்கும் மங்கைக்கு பாவம் பார்க்கும் வண்ணமாய், திருகினாள் ஒரு திருகு, தாடிக்கார பொறுக்கியின் தொடையில்.

மெல்லிய சத்தத்தோடு தலை தூக்கி நறுதுதலை பார்த்தவனோ, அவளின் ரகசியமான வஞ்சக முறுவலை உணர்ந்து போனை தூக்கி ஓரம் போட்டான்.

''டியர் நீங்க உங்களுக்கு பிடிச்சதை பைனல் பண்ணுங்க நான் உங்களுக்கான ஸ்பெஷல் கிஃப்ட்டே எடுத்திட்டு வறேன்!''

என்ற பெண்ணோ மீண்டும் அறையிலிருந்து வெளியேறினார்.

''ரகு, இது ஓகேவா பாரு?!''

என்ற லோட்டஸோ பக்கமிருந்தவன் முன் ஆல்பத்தை தள்ள,

''அப்போ, முடிவே பண்ணிட்டிங்களா வித்தாரக்கள்ளி இந்த தாடிக்கார பொறுக்கியத்தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு?!''

என்றவனோ கிண்டலாய் கேட்டு சிரிக்க, வாயை அகல திறந்த கோக்ஸோ, அதே வாயை வெட்டியிழுத்து கொண்டு தலையை திருப்பி அறையை நோட்டமிட்டாள், ஆணவனின் கேள்விக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல்.

"லோட்டஸ் தாக்கப்பட்டாரா!"

என்றவன் அடித்த விபூதியில் அவன் பக்கம் திரும்பியவளோ, கைகளால் சிரித்த வண்ணம் அவனை செல்லமாய் அடிக்க முனைய, கராத்தே குங்ஃபூ போலான கை சைகைகள் மூலம் அவளைத் தடுத்தான் ரகு, அவனும் வஞ்சி அவளோடு சேர்ந்து விளையாடி.

''மிஸ் லோட்டஸ் அண்ட் மிஸ்ட்டர் ரகு, ஷோபாவே உங்களோட ஸ்பெஷல் டேய் சாய்ஸா தேர்தெடுத்ததுக்கு எங்களோடு சின்ன அன்பளிப்பு! எங்கேஜ்மெண்ட் வாழ்த்துக்கள்!''

என்ற பெண்ணோ, கோக்கனதையின் கையில் அன்பளிப்பு பையைக் கொடுக்க,

''தேங்கியூ!''

என்ற இருவரும் அப்பெண்ணிடம் கைகுலுக்க,

''மேக்சிமம் ரெண்டு வாரதுக்குள்ள நீங்க கேட்கறே டிசைன்லே உங்களோட ட்ரஸஸ் ரெடியாகிடும். சோ, முடிவு பண்ணிட்டிங்களா?!''

''இது!''

என்ற ரகுவோ முதலில் லோட்டஸ் எதை அவனிடம் காண்பித்து பிடித்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி கேட்டாளோ, அதையே சுட்டிக்காட்டினான் ஆடை வடிவமைப்பாளரிடம்.

நேரிழையே நெகிழ்ச்சியோடு ரகுவை ஜாடை பார்வை பார்க்க,

''வாவ்! இது எனக்குமே ரொம்ப பர்சனால புடுச்ச ஆரி வார்க்ஸ் இருக்கறே டிசைன்! சோ, இதுலே என்ன பேர் போடறதா ஐடியா?! முழு பேரா இல்லே ஏதாவது செல்ல பேரா?!''

என்ற பெண்ணின் கேள்விக்கு ரகுவிடமிருந்து பார்வைகளை பிரித்தெடுத்துக் கொண்ட மொய்குழலோ, அங்கிருந்த பேப்பர் பேனாவை எடுத்து எழுதினாள் இப்படி.

'ரகு @ தாடிக்கார பொறுக்கி & லோட்டஸ் @ வித்தாரக்கள்ளி'

காகிதத்திலிருந்த பெயர்களை பார்த்த பெண்மணியோ அதை சத்தம் போட்டு படித்து ஒருமுறை சரிப்பார்த்துக் கொண்டார் தமிழ் எழுத்துகளை.

கோக்கனதையின் நிச்சயதார்த்த சேலையில் பொதிக்கப்போகும் இருவரின் பெயர்களையும் கேட்ட ரகுவின் இதழோரமோ முகிழ்நகை ஒன்று எட்டி பார்த்தது, அவன் வாயை புறங்கையால் மறைத்திருக்க.

''ஓகே, அப்போ நான் இன்வாய்ஸ் ரெடி பண்ணிடறேன்! கார்ட் ஓர் கேஷ்?''

''புஃல் பேய்மண்ட்!''

என்ற ரகுவோ அவன் பர்ஸிலிருந்து கார்ட்டை எடுத்து நீட்ட, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரசீது அவர்களின் கைச் சேர்ந்தது.

பில்லை பார்த்த லோட்டஸுக்கோ நெஞ்சு அடைத்தது.

''என்னடா, இவ்ளோ?! நான் கூட ஏதோ ஆயிரம் ரெண்டாயிரம் இப்படித்தான் வருன்னு நினைச்சேன்! ஆனா, இது என்னான்னா பத்தாயிரத்துக்கு மேல இருக்கு!''

என்ற கேள்வியோடு அத்துணிக்கடையிலிருந்து வெளியேறிய வண்ணம் விறலியவள் அவளின் அதிருப்தியை வெளிப்படுத்த,

''அப்போ, ஆர்டரை கேன்சல் பண்ணிடலாமா?!''

என்றவனோ அவன் பாணியிலேயே கோக்ஸை மடக்கி, பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

'இவன் ஒருத்தன்! சும்மா, சும்மா ஏதாவது உளறிக்கிட்டு! பொறுக்கி! பொறுக்கி! தாடிக்கார பொறுக்கி!'

என்றவளோ முனகி ரகுவின் தலையில் நங்கென்று கொட்ட,

''அந்த இடத்துலதான் ஒரு வெள்ளை முடி இருக்கும்! முடிஞ்சா புடுங்கிடு!''

என்றவனோ மறுபடியும் கோக்கனதை முகத்தில் விபூதி அடிக்க.

''மீண்டும்! மீண்டுமா?!''

என்றவளோ ரகுவின் ட்ரொல் தாளாது அவன் முதுகிலேயே முகம் ஒட்டினாள்.

இருந்தாலும் வதனியின் வாய் வெறுமனே கிடக்காது, சனீஸ்வரனை வாடகைக்கு வாங்கி குடித்தனம் வைத்தது.

ரேட் அதிகமாகி ரகு பணம் கட்டிட, அதில் சந்தேகம் கொண்டாள் லோட்டஸ்.

''டேய், பொறுக்கி எப்படிடா உன்கிட்ட இவ்ளோ காசு வந்தது?! நீ உங்க பேமிலி பிஸ்னஸையும் பார்க்கலே. ஏதோ நார்மல் ஜோப் போறன்னுதான் அப்பா சொன்னாரு. அப்படி இருக்கும் போது, எப்படி உனக்கு இவ்ளோ கேஷ்?! அதுவும் சிங்கள் ஸ்வப்லே மொத்தமா எல்லாத்தையும் கட்டிட்டே!''

''ஏன், என்ன பார்த்தா சேவிங்ஸ் பண்றவன் மாதிரி தெரியலையா?!''

''ஆனா, இவ்ளோ பணத்தை எப்படி சேவிங்ஸ் பண்ண முடியும் ஒரு சாதாரண வேலையிலே இருக்கும் போது?! அதானே இடிக்குது!''

''நான் ரொம்ப காஞ்சன்மா!''

என்றவனோ சிக்னலில் நின்றப்படி சொல்லி சிரிக்க,

''நம்பறே மாதிரியே இல்லையே!''

''நான் உன்னே நம்ப சொல்லி கேட்கலையே?!''

என்றவனோ மீண்டும் பைக்கை முறுக்கி சிரிக்க,

''டேய் பொறுக்கி, பொய் சொல்லாமே சொல்லு எல்லாம் அங்கிள் காசுதானே?!''

''இல்லே, என்னோட சேவிங்ஸ்!''

''நான் நம்ப மாட்டேன்! பணக்காரன் வீட்டு பையன் நார்மல் ஜோப் போறதே பெரிய காமெடி! அதுவும் ஆர். வி. குரூப்ஸ் பேரன் சொல்லவா வேணும்! ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் என் டேடி உன்னப்பத்தி என்கிட்ட இப்படி சொல்லிருக்காரு!''

என்ற லோட்டஸோ விபரீதம் அறியாது வம்பை வளர்க்க,

''அவர் உண்மையைத்தான் சொல்லிருக்காரு. நான் அனாவசியமா செலவு பண்ண மாட்டேன். எனக்கு புடிக்காது! சொல்ல போனா காசு விஷயத்துல நான் ரொம்ப கறார்!''

''பாருடா! ஆனா, இதையெல்லாம் நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்லே! எனக்குத் தெரியும் கண்டிப்பா நீ ஒரு வெட்டி பீசாத்தான் இருப்பேன்னு! அதை வெளிப்படையா சொல்லவா முடியும்! யாராவது பொண்ணு கொடுப்பாங்களா என்னே?! அதனாலே, அதை கவர் பண்றதுக்கும் இப்படி ஊதாரித்தனமா நீ செலவு பண்றத்துக்குமே உன் தாத்தா உனக்காக பத்து பதினைஞ்சு கார்ட்டே நேந்து விட்டிருப்பாரு! அதை வெச்சுக்கிட்டு நீயும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ பந்தா பண்ணிக்கிட்டு இருக்கே!''

என்றவளோ அவன் தோள்களை தட்டி சிரிக்க, சடன் பிரேக் போட்டான் ரகு. ஆணவன் முகமோ இறுகி, விழிகள் ரெண்டும் கோபத்தில் சிவந்து போயிருந்தது.

''என்னாச்சு ரகு?! ஏன் பைக் ஸ்டோப் பண்ணே?!''

''இறங்குடி கீழே! இறங்கு!''

என்றவனோ சத்தம் போட,

''ஏன் ரகு?! எதுக்கு?!''

''இறங்குன்னு சொல்றேன்லே!''

என்றவனோ அவளின் கரம் இழுத்து கீழிறக்க பார்க்க, விழுந்திடுவாளோ என்று பயந்த காரிகையோ அவளாகவே இறங்கிக் கொண்டாள் பைக்கிலிருந்து.

''நீ லேபல் பண்ணி கேவலமா சிரிக்கிற ஆம்பலே நான் இல்லே! என் தாத்தா பேரையோ என் குடும்ப சொத்தையோ யூஸ் பண்ணி நான் கட்டிக்க போற பொண்ணுக்கு புடுச்ச சேலையே வாங்கி கொடுக்கறே கையாலாகாதவன் நான் இல்லே!''

என்றவனோ பர்ஸை திறந்து முதலில் பயன்படுத்திய அவன் செலரி கார்ட்டை எடுத்து, கோக்கனதையின் கையை இழுத்து உள்ளங்கையில் பதித்தான்.

''என் ஆடிட்டர் ஜோப் செலரி இதுலதான் எண்டர் ஆகும்! இதுவரைக்கும் யார்கிட்டையும் சொன்னதில்லே!''

என்றவனோ அவளை நடு வீதியிலே விட்டு விட்டு பைக்கை நேராய் வீட்டுக்கு அழுத்தினான்.

இதழ் மிடறும் முத்தம்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://neerathi.com/forum/forums/இதழ்-மிடறும்-முத்தம்.143/
 

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 10
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top