Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 3

எலியும் பூனையுமாய் அடித்துக் கொண்ட ஜோடிகளோ, குடும்பத்துக்கு ஏற்ற குல விளக்குகளாய் மாறிப்போயினர், கீழ் தளத்தில் அரங்கேறிய காட்சிக்கு சாட்சியாய் ஆக.

நடப்பது நடந்தாயிற்று, இனி பேச என்ன இருக்கிறது என்பது போல் டோம் அண்ட் ஜெரியாய் முட்டிக் கொண்டவர்கள் அமைதியாகவே கடத்தினர் சுபகாரியம் நடந்தேறிய அன்றைய சுபமுகூர்த்த நாளை.

அடுத்த மாதத்தின் கடைசி வாரத்திலேயே நல்ல நாள் ஒன்று இருக்க, சீக்கிரமாகவே நிச்சயத்தை வைத்துக் கொள்ள முடிவெடுத்தனர் பெரியவர்கள்.

ஆகுவோ பெண் பார்க்க வந்ததோடு சரி, மற்ற எதிலும் பெரிதாய் இண்ட்ரஸ்ட் காட்டிடவில்லை.

அதுவும் வித்தாரக்கள்ளியவள் அடித்த கூத்தில், மீண்டும் அக்கருப்பு தினத்தை நினைத்துப் பார்த்திடக் கூட ஆணவன் விரும்பவில்லை.

தாலி கட்டினால் சரி, என்பது மட்டும்தான் அவன் எண்ண ஓட்டமாய் இருந்தது. அதுவும் தாத்தாவிற்காக.

ஆகவே, மேற்படியான விஷயங்கள் எதையும் அவன் கணக்கில் கொண்டு பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.

வார இறுதியில் நடக்கவிருக்கின்ற நிச்சயதார்த்தத்திற்கான அழைப்பிதழ் அச்சிடும் பொறுப்பு பெண் வீட்டாருடையது என்பதால், அதற்கான தேர்வினை ஆகுவோடு சேர்ந்து கலந்தாலோசிக்க சொல்லியிருந்தார் தெய்வீகன் மகளிடத்தில்.

அதான் குறைச்சல் என்றெண்ணிய சண்டைக்காரியோ, அவளாகவே ஒரு டிசைனை தேர்தெடுத்து இருவரின் பிடித்தம் என்றாள் வாய் கூசாமல், அவள் அப்பாவிடம்.

முற்றிழை அவளிடத்தில் ஆகுவின் நம்பர் கூட இல்லை. அவனிடமும் இல்லை. கண்ட நொடி முட்டிக்கொண்டதால் அன்றை சந்திப்பே கடைசியாகி போனது இருவருக்கும்.

அவ்வப்போது அவரவர் வீட்டில் கேஷுவல் விசாரிப்பாய் அமைந்த, இருவரும் பேசுகிறீர்களா என்ற கேள்விக்கு மட்டும் பொய்யாய் தலையை ஆட்டி வைத்தனர் ஒற்றுமைக் கொண்டு.

இதற்கிடையில், அச்சிடப்பட்ட நிச்சயதார்த்த அழைப்பிதழோ தெய்வீகனின் வீடு தேடி வர, ஆபிஸ் முடிந்து வீடு திரும்பிய குட்டிமாவோ, அழைப்பிதழில் ஹீரோவின் முழுப்பெயரை கண்டு காண்டாகி போனாள்.

ஒரண்டு இழுப்பதற்காகவே அவள் அப்பாவிடமிருந்து ஆகுவின் நம்பரை வாங்கினாள் மதங்கியவள். போனை போட்டாள் பாவையவள், ரத்னவேலு தாத்தாவின் பேரனுக்கு.

நல்லலுறக்கத்தில் இருந்தவனை எழுப்பியது போனின் ரிங்டோன். வேலை முடிந்து அப்போதுதான் வந்து படுத்திருந்தான் உழைக்கும் கரமவன், அரை மணி நேரத்திற்கு முன்னதாய்.

அலறிய கைப்பேசியைக் குப்பிற கிடந்தப்படி கைப்பற்றிய ஆகுவோ, பெயரில்லா எண்ணை அரை விழியில் பார்த்து கோலை அட்டண்ட் செய்தான்.

''ஹேலோ..''

என்றவனோ நித்திரையிலான குரலை செருமிட,

''டேய், தாடிக்கார பொறுக்கி என்னடா பேர் இது?!''

என்றவளோ கையில் அழைப்பிதழை கசக்கியப்படி கேள்வியெழுப்பினாள்.

''குருடியா வித்தாரக்கள்ளி நீ?!''

என்றவனோ முதலிலேயே பார்த்திருந்தான் தாத்தா ரத்னவேலு பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த நிச்சயதார்த்த கார்ட்டை.

பிஸ்னஸ் மீட்டிங் ஒன்றுக்காய் அந்தப் பக்கம் போன தாத்தாவோ, செல்ல பேரனின் வருங்கால மனைவியின் வீட்டுக்கு ஒரு எட்டு போய் வர விரும்பினார்.

வரவேற்ற காஞ்சனாவோ, தாத்தாவிற்கு சர்க்கரை இல்லா காஃபி கொடுத்து, கிளம்புகையில் இரண்டு பெட்டிகள் நிரம்பிய நிச்சயதார்த்த அட்டைகளைக் கொடுத்தனுப்பினார்.

அதில் ஐந்தாறு அட்டைகளை தாத்தா காஃபி டேபிளில் கொண்டு வந்து வைக்க, ஹீரோவை தவிர மற்ற அனைவரும் அதைப் பார்த்து கருத்து சொல்லி ஓய்ந்து போயினர்.

பணி முடிந்து வீடு திரும்பிய ஆகுவோ, அதில் ஒன்றை தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தான் படுக்கையறைக்கு.

இன்விடேஷனை பார்த்தப்படியே உறங்கியும் போயிருந்தான்.

''வாயே உடைச்சிடுவேன்! யாரே பார்த்து குருடின்னே?! கண்ணு நல்லா தெரிஞ்சனாலதான் அன்னைக்கு உன்னே பார்க்காமே உன் அண்ணனே பார்த்தேன்டா பொறுக்கி!''

என்றவளோ முகத்தில் அடித்தாற்போல பேச, கடுப்பாகிய ஆகுவோ டக்கென போனை கட் செய்தான்.

ஆகுவிற்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரியும். எல்லா நேரமும் கொட்டிட குனிந்திட மாட்டான்.

சில வேளைகளில் அவனை மீறி வார்த்தைகளை தவற விட்டு எதிர்தரப்பினரை காயப்படுத்திடுவான்.

இப்போதும் அருளை அவனோடு ஒப்பிட்டு ஒண்ணுதல் அவள் பேச, எரிச்சல் கொண்டவனோ, எங்கே ஒளியிழையின் மனம் சங்கடப்படும் படி ஏதாவது சொல்லிடுவானோ என்று பயந்தே அழைப்பை கட் செய்தான்.

''ஹலோ! ஹலோ! டேய், பொறுக்கி! தாடிக்கார பொறுக்கி!''

என்ற பேடையோ, மறுமுனையில் அவனை அழைத்து பார்த்து பதில் வராது போக, அலைபேசியை கையிலெடுத்து பார்த்தாள்.

அழைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த பெதும்பைக்கோ, இப்போது பொத்துக் கொண்டு வந்தது கோபம்.

டிக்டாக் பார்த்துக் கொண்டிருந்த ஆகுவோ, அவளின் பெயரை அதற்குள் சேவ் செய்திருந்தான், வித்தாரக்கள்ளி என்று.

மீண்டும் அழைத்தாள் பொற்றொடி அவள், வருங்கால கணவனுக்கு. அவனோ கண்டுக்காது வீடியோஸ் பார்க்க,

''எடுடா! எடுத்திடுடா தாடிக்காரா! எடு!''

என்றவளோ விடாது அழைத்தாள் ஆகுவை, இருபதாவது முறையாக கறுவிக் கொண்டே.

''எடுக்கலன்னா விட மாட்டா போலிருக்கே! இந்த வித்தாரக்கள்ளி!''

என்றவனோ சத்தமாய் சொல்லி அழைப்பை ஏற்று,

''உங்களுக்கு புடிக்கலன்ற காரணத்துக்காகலாம் என் பேரே மாத்திக்க முடியாது மேடம்! இதுதான் என் பேர்! எனக்கு இந்த பேர்தான் புடிக்கும்! நீங்க வேணுன்னா உங்களுக்கு புடிச்ச பேர்லே இருக்கறே எவனையாவது பார்த்து மாப்பிள்ளையா ஆக்கிக்கோங்க!''

என்று கடகடவென சொல்லி முடித்தான்.

''அது சரி! எப்போ பாரு என்னே வேறே எவங்கிட்டையாவது தள்ளி விடறது பத்திதான் யோசனை போலே, திருவாளர் ஆகுரதனுக்கு! ஹும்! பேரே பாரு, ஆகுரதனாம், ஆகுரதன்!''

என்றவளோ நக்கல் தொனியோடு சலிப்பொன்று கொள்ள,

''அதை யார் சொல்றாங்க பாரு! கோக்கு மாக்கா பேர் வெச்சிருக்கறே, கோக்கனதை! என்னா பேர் இது?! கோனே கழுத்தி மாதிரி!''

என்றவன் சுந்தரியவளை கலாய்த்து சிரிக்க,

''டேய்! சொல்லிட்டேன் சிரிக்காதே! வேணா உன்னே கொன்னுடுவேன், சிரிக்காதே! தாடிக்கார பொறுக்கி சொல்றந்தானே சிரிக்காதன்னு!''

என்றவளோ சினமும் ஆவேசமும் கொண்டு குமுற,

''ஓஹ், நீங்க அடுத்தவன் பேரே கிண்டல் பண்ணலாம்! ஆனா, உங்க பேரே யாரும் எதுவும் சொல்லிடக்கூடாதோ?! இது என்னே நியாயம்?!''

''ஆமா இவர் பெரிய கர்ணன்! தர்மத்தை நிலைநாட்டிடுத்தான் அடுத்த வேலை பார்ப்பாரு! மூஞ்சியே பாரு! படிச்சிருந்தாதானே இதுக்கெல்லாம் அர்த்தம் தெரிய! அதான், முகரையிலையே எழுதி ஒட்டிருக்கே பணத்துக்கு கேடுன்னு! அப்பறம் எப்படி கற்பூர வாசனையே பத்தி கழுதைக்கு தெரியும்?! நானே சொல்றேன், தெரிஞ்சிக்கோ! கோக்கனதைன்னா, மஹாலஷ்மின்னு அர்த்தம்!''

என்ற மவராசியோ மூச்சு முட்ட ஆகுவை கழுவி ஊற்ற, தலைக்கு பின்னால் கைக்கொண்டப்படி பொறுமையாய் அவள் பேசுவதை செவிமெடுத்தவனோ,

''அப்போ, ஏன் அறிவாளி உங்களுக்கு ஆகுரதன், விநாயகர் பேர்னு தெரியலே?!''

என்றுக் கேட்டான் நறுக்கென்று.

''அதெல்லாம் தெரியும்! ஆனா, சிங்கிள் அவரோட பேரே வெச்சுக்கிட்டு உனக்கு கல்யாணம் ஒரு கேடாங்கிறதுதான் இப்போதைக்கு என்னோட ஒரே பிரச்சனை பொறுக்கி!''

''ஹலோ மேடம், சித்தி புத்தின்னு ஒன்னுக்கு ரெண்டு மனைவி இருக்கு புள்ளையாருக்கு! தெரியும்லே!''

என்றவன் மல்லாக்க படுத்தப்படி கால் மேல் கால் போட்டு சிரிக்க,

''ஓஹ், அப்போ சாருக்கும் ரெண்டு பொண்டாட்டி கேட்குதோ?!''

என்றவளோ சடீரென்று எழுந்தமர மஞ்சத்திலிருந்து,

''கணபதி பேரே காப்பாத்த வேணாவா வித்தாரக்கள்ளி?!''

''முதல்லே உன் உசுரே என்கிட்டருந்து காப்பாத்திக்கோடா பொறுக்கி! வெட்டி போட்ருவேன் கழுத்தே, பார்த்துக்கோ!''

என்றவளோ போனை ஸ்பீக்கரில் போட்டு தலையணை மீது வைக்க,

''தவறாக சொல்லி விட்டாய் வித்தாரக்கள்ளி! வெட்ட வேண்டியது கழுத்தை அல்ல..''

என்றவன் முடிக்கும் முன்,

''டேய்! டேய்! டேய்! தாடிக்கார பொறுக்கி!''

என்றவளோ போனை மெத்தையில் போட்டு காதுகளை பொத்திக்கொண்டாள் என்னவோ ஏதோவென்று நினைத்து.

''கைகளைன்னு சொல்ல வந்தேன் குட்டிமா! ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது!''

என்றவன் சொல்ல, உதடுகள் மடக்கிய வண்ணம் ரகசியமாய் குலுங்கி சிரித்த கோக்கனதையோ மெத்தையில் புதைந்தாள்.

''என்ன மேடம், இருக்கீங்களா இல்லே அந்த ரெண்டாவது பொண்டாட்டியே தேடி போயிட்டிங்களா?!''

என்ற ஆகுவோ வேண்டுமென்று பெண்ணவளை வம்பிழுக்க,

''வாய மூட்றா தாடிக்கார பொறுக்கி! பேச்சே பாரு! சரி சொல்லு, கார்ட் புடிச்சிருக்கா?!

''ஹ்ம்ம்..''

என்றவனோ வார்த்தையில்லா உம் கொட்டிட,

''புடிக்கலையா?!''

என்றவளின் குரலோ சுணங்கியது அந்தப்பக்கம்.

''புடிச்சிருக்கு! புடிச்சிருக்கு!''

என்ற ஆகுவோ உற்சாகமாய் சொல்ல,

''எது?!''

''ஹான், அருளே மாப்பிள்ளைன்னு நினைச்சவங்க, தாடிக்கார பொறுக்கி ரெண்டாவது பொண்ணு தேடுவான்னு சொன்ன உடனே சந்திரமுகியா மாறினாங்களே அது!''

என்றவன் கூற்றில் சிவந்து போனவளோ,

''போடா பொறுக்கி! தாடிக்கார பொறுக்கி!''

என்று செல்லக்குரல் கொள்ள,

''தாமரை பூவுக்குள்ள உட்கார்ந்திருக்கறே லக்ஷ்மியைத்தான், கோக்கனதைன்னு சொல்வாங்க. கோகனதம்னா தாமரைன்னு அர்த்தம்.''

என்றவன் குரலோ இதுவரையிலும் கொண்டிடாத இதம் கொள்ள,

''உனக்கு இவ்ளோ தெரியுமா?!''

என்ற முற்றிழையின் குரலோ ரகசியமாய் மாறிப்போனது.

''ரைட் சைட் காதோரம் ஒரு மச்சம் ஒளிஞ்சிருக்கு. அதுகூட எனக்கு தெரியும் ''

''இல்லையே!''

''நல்லா தேடிப்பாரு!

''எனக்கு தெரியாதா?! நான் இல்லங்கறேன்!''

''நான் இருக்கின்றேன்!''

''அப்படி இல்லன்னா?!''

''அப்படி இருந்துச்சின்னா?!''

''இல்லன்னா?!''

''இருந்துச்சின்னா?!''

''ஓகே! இல்லன்னா, நீ ஒரு கிளாஸ் வேப்பிலை ஜூஸ் குடிக்கணும் பொறுக்கி! டீலா?!''

''ஓகே டன்! ஆனா, இருந்துச்சின்னா உன் நெத்தியோரத்துலே இருக்கறே பிம்பல்ஸே என் கையாலே நானே பிச்சி எடுப்பேன் லோட்டஸ், உனக்கு ஓகேவா?!''

என்றவனோ வில்லன் தோரணை கொள்ள,

''டேய், அது இன்னும் பழுக்கவே இல்லடா!''

என்றவளோ கண்ணாடி முன் நின்று முகப்பரு அதைத் தொட்டுத்தடவி பொய் சொல்ல,

''அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்! நீங்க மச்சத்தே மட்டும் கண்டுப்புடிங்க வித்தாரக்கள்ளி!''

''போடா தாடிக்கார பொறுக்கி!''

என்றவளோ ஆணவன் செய்த நோஸ் கட்டில் கடுப்பாகி அழைப்பைத் துண்டித்தாள்.

இதழ் மிடறும் முத்தம்...
 

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 3
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top