Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 5

முதல் முறை கன்வர்சேஷனே சண்டையில் ஆரம்பித்து ஸ்பெஷலாய் முடிய, கல்யாணத்தை தாண்டிய வேறொன்று இருவருக்குள்ளும் பூத்திட ஆரம்பித்தது.

ரகுவிற்குத்தான் கழுத்தை நீட்டியாக வேண்டிய தலையெழுத்தில் ஏந்திழை அவளும், தலைகீழாய் நின்றாலும் கோக்கனதையைத்தான் கட்டியாக வேண்டிய சூழ்நிலையில் ஆணவனும், அன்றைய அலைபேசி உரையாடலுக்கு பின் ஏதோ பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்தனர்.

அந்நியமாய் இருந்தவர்கள் அன்யோன்யமாய் மாறிட காலமும் இளமையும் மன்மதன் மூலம் தூது விட்டன.

வருங்கால புருஷன் சொன்னதை நம்பி தேடோ தேடென்று தேடினாள் தெரிவையவள் அவள் செவிகள் செவிடாகி போகும் அளவுக்கு அலசி.

வீட்டு வேலைக்கார அக்காவை கூட விட்டு வைத்திடாது காதை காட்டி, மச்சம் எங்கே என்று கண்டறிய சொன்னாள் அரிவையவள்.

பக்கத்து வீட்டு வண்டு சிண்டுகளைக் கூட டார்ச்சர் செய்தாள் அந்திகையவள், ரகு சொன்னதை முற்றிலும் நம்பியவளாய்.

மூன்று நாள் ஓடிப்போனதுதான் மிச்சம்.

எவ்வளவு தேடியும் மச்சத்தைக் கண்டுப்பிடித்திட முடியவில்லை ஆயிழை அவளால். அழைத்தாள் பெதும்பையவள், ஆண்மகன் அவனை, இனியும் ஸ்ட்ரெஸை சமாளிக்க முடியாது என்று தோற்றவளாய்.

பணியிடத்தில் பேக்கிங் லிஸ்ட்டை செக் செய்துக் கொண்டிருந்த ரகுவோ, பின் பாக்கெட்டில் சிணுங்கிய போனை கையிலெடுக்க,

''அட, வித்தாரக்கள்ளி! என்னே இத்தனை மணிக்கு கோல் பண்றா?! கண்டுக்கிண்டு புடிச்சிட்டாளா மச்சத்தே?!''

என்ற கேள்வியை தன்னைத்தானே கேட்டப்படி அலைபேசியை தூக்கி காதில் வைத்தான் விடியற்காலை மூன்றுக்கு.

''டேய் தாடிக்கார பொறுக்கி! எங்கடா இருக்கு அந்த மச்சம்?! சொல்லித்தொலையேன்! நிம்மதியா சாப்பிட முடியலே! தூங்க முடியலே! ஏன், வேலைக்கூட பார்க்க முடியலடா! முக்கியமான டாக்குமெண்டில்லே வேறே மச்சம் எங்கே, மச்சம் எங்கன்னு எழுதி வெச்சி இன்னைக்கு பெரிய ரகளையாச்சுடா ஆபிஸ்லே! தயசு செஞ்சு சொல்லிடுடா பொறுக்கி, அந்த மச்சம் எங்க இருக்குன்னு!''

என்றவளோ கண்ணீர் இல்லா கதறல் கொள்ள, ரகுவிற்கோ சிரிப்பை அடக்கிட முடியவில்லை.

''அதெப்படி லோட்டஸ் சொல்ல முடியும்?! கேம் ரூல்ஸ் தெரியும் தானே?!''

என்றவனோ சிரித்துக்கொண்டே அங்கிருந்த பாக்ஸோன்றின் மீதமர்ந்தான்.

''ஐயோ, வெட்கத்தை விட்டு சொல்றேண்டா பொறுக்கி, இன்னைக்கு பொறுக்க முடியாமே ஈ.என்.டி. டாக்டரையே போய் பார்த்திட்டு வந்துட்டேன்டா, அப்படி எங்கதான் இருக்கு அந்த மச்சம்னு தெரிஞ்சிக்க!''

என்றவளோ செல்ல விசும்பல் கொள்ள,

''லூசாடி நீ! இதுக்காகெல்லாம் யாராவது டாக்டர்கிட்ட போவாங்களா?!''

என்றவனோ நிறுத்தாத சிரிப்போடு,

''சரி கண்ணாடி முன்னுக்கு போ!''

என்றான் மேலும் அவளை காத்திட வைக்க விரும்பாது. கோக்கனதையோ ஓடோடி போய் நின்றாள் அவளின் ட்ரஸிங் டேபிளின் முன் ரகுவின் கட்டளைக்கு ஏற்ப.

''காதோரம் இருக்கறே முடியெல்லாத்தையும் எடுத்து பின்னாலே போடு!''

''ஹான், போட்டுட்டேன்!''

''அப்படியே கண்ணாடிக்கிட்ட நெருக்கமா போ! இப்போ காதோட அவுட்டர் (outer) லேயர்லே (layer) பாரு!''

என்றவன் சொல்ல, அவன் ஆர்டரை தட்டிடா தளிரியலோ செவியின் மேல் நுனியில் விரல் கொண்டு தடவி, உன்னிப்பாய் பார்த்தாள் படிமக்கலத்தை.

''தெரியுதா லோட்டஸ்?!''

''ஹுஹும்! தெரியலடா பொறுக்கி!''

என்ற வித்தாரக்கள்ளியோ உதட்டை பிதுக்க,

''அங்கெப்படி இருக்கும்?! மச்சம் என் காதுலலே இருக்கே!''

என்ற ரகுவோ சத்தம் போட்டு சிரிக்க,

''ஆர்ர்ர்ர்! தாடிக்கார பொறுக்கி! கொன்னுடுவேன்டா உன்னே!''

என்ற கோக்கனதையோ ஆவேசமாய் அலறினாள் கதங்கொண்டு.

''நான் காதோரமா ஒரு ரகசிய மச்சம் இருக்கின்னு சொன்னேன்! உன் காதுன்னு சொன்னேனா லோட்டஸ்?! நீ சரியா புரிஞ்சிக்காமே, இப்போ தோத்து போய் அசிங்கப்பட்டு நின்னா, அதுக்கு நானா பொறுப்பு?! வாட் இஸ் திஸ் வித்தாரக்கள்ளி!''

என்ற ஆகுவோ மீண்டும் மங்கையவளை கலாய்த்து சிரிக்க,

''ரகு!''

என்றலறியவளோ போனை விட்டடித்தாள் கட்டில் நோக்கி.

வருங்காலத்தை மூக்குடைத்த ரகுவோ, தொடர்ந்து தானாகவே சிரித்தான் ஆளில்லா ஸ்டோர் அறைக்குள் தனியொருவனாய்.

நிமிடங்கள் கடக்க போனில் முகநூல் பக்கம் போனவனோ, கோக்கனதையின் டீபி படத்தை இமைக்காது பார்த்தான், இதழோரம் புன்னகை ஒன்று ரகசியமாய் ஊறிட.

தாத்தா ரத்னவேலு திடுதிப்பென்று நாளை பெண் பார்க்க போகிறோம் என்றிட, விருப்பமில்லதவன் சரியென்று தலையாட்டியதென்னவோ, குடும்ப சொத்து கையை விட்டு போயிடக் கூடாதென்பதற்காகத்தான்.

ஆனால், பேரன் சொத்துக்கும் சரி, சுகத்துக்கு சரி, அலைபவன் அல்ல என்பதை நன்கறிந்த தாத்தாவோ அவனை எப்படியாவது ஒரு கால் கட்டைப் போட்டிட பார்த்தார்.

முன்னாடி நடந்த தவறை போல் இப்போது ஏதும் நடந்திடக்கூடாதென்பதில் ரொம்பவே கவனமாக இருந்தார் தாத்தா.

ஆதலால், மகன் குருமூர்த்தி பால்ய நண்பன் தெய்வீகனை சந்தித்த கதையையும், தட்டு மாற்றிட இருவர் பேசிய சங்கதியையும் ரத்னவேலுவிடம் தெரிவிக்க, பெருசோ ரகுவின் குழந்தையைக் கையிலேந்திட கொண்ட ஆசையை நிறைவேற்ற தாமதிக்காது செயல்பட்டார்.

தாத்தாவும் பேரனும் ராத்திரி உரையாடலை முடித்துக்கொள்ள, மகனின் தகப்பனாரோ வருங்கால மருமகளின் பேஸ்புக் லிங்க்கை புத்திரனுக்கு வாட்ஸ் ஆப் செய்தார்.

ரகுவோ அப்பாவின் வாய்ஸ் நோட்டுக்கு ஓகே என்று ஒத்த வார்த்தையில் பதில் சொல்லியதோடு சரி, மூஞ்சு புக்கின் லிங்க்கை தட்டி கோக்கனதையின் மூஞ்சியை பார்த்திடவே இல்லை.

பெண் பார்க்கும் சடங்கில்தான் முதல் முறைக் கண்டான் ஆகுரதனவன், செவத்த புள்ளை அவளை மாடிப்படியிலிருந்து இறங்கி வருகையில்.

கோக்கனதையின் முகரையைப் பார்த்தானோ இல்லையோ, தெரியாது. ஆனால், அவள் குழல் கொண்ட மல்லிகை சரத்தில் மயங்கியே போனான் எனலாம்.

சனிதையின் கையிலிருந்த நீலம் மற்றும் சில்வர் கலந்த வளையல்கள் தொடங்கி, துடியிடையின் கால் நகங்கள் கொண்டிருந்த அடர் நீல வர்ண நகப்பூச்சு வரை அளந்தான்.

பச்சிளங்குழந்தை போலான அவள் முகத்தைத் தூரத்திலிருந்து சைட்டடித்தவன், தனியாய் பேச மொட்டைமாடி போய் சண்டாளியிடம் சிக்கி சின்னாப்பின்னமாகினான்.

இப்படியொரு சண்டைக்காரியை தன்னோடு கோர்த்து விட பார்த்த அப்பாவையும் தாத்தாவையும் பொளந்து கட்டும் கடுப்பில் கீழ் தளம் நோக்கியவன் தலையிலோ இடி விழுந்தது, சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்து முடிந்திருக்க.

இனி மாற்ற எதுவுமில்லை என்றெண்ணியவனோ நடந்ததை மறந்து வேலையைப் பார்த்திட, கைக்கு கிடைத்தது நிச்சயதார்த்த அழைப்பிதழ்.

பெண்ணவள் பெயரை பார்த்தவனுக்கோ வியப்பும் சிரிப்பும் ஒருசேர வந்தது.

தமிழ் மொழிக்கும் சரி சங்ககாலத்து பெயருக்கும் சரி, இக்காலத்தில் இப்படியொரு மதிப்பா என்ற ஆச்சரியத்தோடு மெத்தையில் சரிந்தவன், அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்த மெல்லியளின் வதனத்தை ஆழமாய் நோக்கினான்.

டக்கென்று ஞாபகம் வந்தது ரகுக்கு, அன்றைக்கு அவன் டேடி அனுப்பிய மேடமின் முகநூல் கணக்கின் லிங்க்.

வாட்ஸ் ஆப் பக்கம் போனவன் லிங்க்கை தட்டிட, தொடுதிரையில் சிரித்திருந்தாள் கோக்கனதை அடர் நீல வண்ணத்திலான கவுனோடு.

ஸ்க்ரோல் செய்து அவளின் பல படங்கள் தொடங்கி போஸ்ட்டுகள் வரைக்கும் படித்தவன் மீம்ஸ்களை கூட சத்தம் போட்டு சிரித்து அப்படியே உறங்கி போனான்.

திருமணம் வேண்டாமென்றவனின் மனமோ தன்னிச்சையாய் கோக்கனதையை வட்டமடிக்க ஆரம்பித்தது.

இதழ் மிடறும் முத்தம்...
 

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 5
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top