- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் 6
மச்ச சண்டை மூன்று நாட்கள் ஆகியும் சமாதானம் ஆகாமல் இழுத்துக் கொண்டே போனது.
ஒருவரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை மற்றொருவர் பார்த்தாலுமே, அதோடு நிறுத்திக் கொண்டனர் நேரடி உரையாடல்கள் ஏதுமின்றி.
காதலர்களை போல் ஊடல் கொண்டனர் என்றே சொல்லிட வேண்டும் அரேன்ஜ் மேரேஜ் செய்துக் கொள்ளப்போகும் ஜோடிகள். ஆனால், தாடிக்கார பொறுக்கியும் சரி, வித்தாரக்கள்ளியும் சரி, அதை உணராமலேயே அச்சூழலில் உழன்றிட ஆரம்பித்திருந்தனர்.
கோக்கனதையோ வேண்டுமென்றே அவளின் ஆதங்கமான கோபத்தை ஸ்டேட்டஸ் மற்றும் போஸ்ட்டுகள் போட்டு வெளிப்படுத்தினாள்.
அவளின் நீளமான ரைட்டாப்புகளை பார்த்த ரகுவோ, தலையை ஆடு போல் ஆட்டியதோடு சரி, படித்திடாமல் வெறும் லைக் மட்டும் போட்டு கடந்தான்.
அவனுக்கும் பேஸ்புக் இருக்கிறது, அதில் நம்மை போலோ வேறு செய்கிறான் என்பதை அன்றைக்குத்தான் கண்டேக்கொண்டாள் முற்றிழையவள்.
ஆனால், ரகுவோ மங்கையின் பக்கத்தைத் தொடர்ந்ததோடு சரி, நட்பழைப்பெல்லாம் விடுக்கவில்லை.
தாடிக்கார பொறுக்கி என்று அவன் டீபியை பார்த்து கறுவியவளோ, அவனைப் பற்றி எவ்வித விபரங்களையும் அங்கே அவன் பதிவு செய்யாததைக் கண்டு ரொம்பவே ஆச்சரியப்பட்டாள்.
இப்போதெல்லாம் ஒரு ஜட்டி வாங்கினால் கூட அதைப் படம் பிடித்து போட்டு பந்தா காட்டும் ஆட்களுக்கு மத்தியில், பெரும் புள்ளியின் வாரிசவன் நடுத்தர குடும்பத்து பையன் போல் அவனை முன்னிறுத்திக் கொள்வது நிஜமாகவே ஆணவன் லோ ப்ரொபைலை மெயிண்டன் செய்ய விரும்புகிறான் என்பதை கோக்கனதைக்கு உணர்த்தியது.
பணக்காரர்களில் சில அறிவாளிகளும் உள்னனர் என்பதை ரகுவின் மூலம் மூளைக்கு சொல்லி புரியவும் வைத்தாள் வித்தாரக்கள்ளியவள்.
ஆகவே, பிரெண்ட் ரிக்வஸ்ட் கூட கொடுத்திடாத ரகுவிற்காகவே அம்மணியவள் தனியொரு போஸ்ட் போட்டாள். அதில், லைக் போடும் ப்ளூ ஆசாமிக்கு ரொம்பதான் கொழுப்பென்று எழுதி, கூடவே தாடிக்கொண்ட ஆணின் ஓவியமொன்றையும் சேர்த்து இணைத்திருந்தாள்.
மேடமின் வார்த்தைகளை ரசித்து சிரித்த ரகுவோ, இம்முறை சிவப்பு இதயத்தைப் பறக்க விட்டு கமெண்ட்ஸ் ஏதும் செய்யாமல் பதிவைக் கடக்காமல் அங்கேயே தேங்கி நின்றான்.
இதற்கிடையில், மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று ரத்னவேல் தாத்தாவின் கட்டளைப்படி, அங்கிருக்கும் கோட்டு மலை புள்ளையார் கோவிலில் அனைவரும் மாலை ஆறுக்கு ஆஜராகி இருந்தனர்.
கோக்கனதையோ இளஞ்சிவப்பு வர்ணத்திலான சேலையில் தேவதைப் போல் காட்சியளித்தாள். விலோசனங்களிலோ கண்மை அடர்த்தியாய் இருக்க, குழலோரமோ இம்முறை மல்லிகையுடன் ரோஜாவும் சேர்ந்துக் கொண்டது.
ரகுவின் வீட்டை சார்ந்தவர்களிடம் சிரிக்க பேசினாலும், பாவையின் கண்கள் என்னவோ தாடிக்கார பொறுக்கியைத்தான் தேடியது.
தாத்தா ரெண்டு நாளைக்கு முன்னாடியே நினைவூட்டியிருந்தார் ரகுவிற்கு ஆலய சமாச்சாரத்தை. இருந்தும், ஆணவன் விடுமுறை சொல்ல மறந்து விட்டான் மேலிடத்தில்.
சந்திரகலா போனை போடவும்தான் ஹீரோவிற்கு இன்விடேஷனுக்கான பூஜை மேட்டரே ஞாபகத்திற்கு வந்தது.
ஐயோ, என்று தலையை அடித்துக் கொண்டவனோ நேராய் நிர்வாகத்திடம் போய் நின்றான். ஆபத்துக்கு பாவமில்லை என்பதால், அம்பாளுக்கு உடம்பு முடியவில்லை என்று சொல்லி அங்கிருந்து எடுத்தான் ஓட்டம் வீட்டுக்கு.
அம்மாவிற்கு என்று சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. அப்பறம் நிஜமாகவே அவன் தாய்க்கு உடம்பு முடியாமல் போனால் ரொம்பவே வருத்தப்பட்டிடுவான் ரகு.
அதனால்தான், ஞாலத்தை காக்கும் அம்மனையே பலியாடாய் ஆக்கி விட்டான் நல்லவன் அவன்.
அவசர குளியல் ஒன்றை போட்டு அழுத்தினான் ரகு பைக்கை ஒரு அழுத்து, தலைநகரின் பிரதான ஏரியாவில் இருக்கும் பூழ்க்கை முகனின் (விநாயகர்) சன்னிதானத்தை நோக்கி.
ஆகு எங்கே என்று தாத்தாவின் தொனியில் அழுத்தங்கூட, குருமூர்த்தியோ சமாளித்தார் மகன் தேங்காய் வாங்க போயிருக்கான், பூ வாங்க போயிருக்கான் என்று.
இத்தனைக்கும் ரத்னவேலுவிற்கு நன்றாகவே தெரியும் பேரனின் நுனி மூக்குக்கூட இன்னும் கோவிலை எட்டிப்பார்த்திடவில்லை என்று.
இருந்தும், பொறுமைக் காத்தார் தாத்தா, எப்படியும் கடைக்குட்டியவன் வந்திடுவான் என்று.
கோவிலின் மூத்த குருக்களோ, ரத்னவேலு வீட்டு நிச்சயதார்த்த அட்டையை விகடசக்கரனின் (விநாயகர்) பாதத்தில் வைத்து பூஜை செய்ய தயாராகினர்.
''மாப்பிள்ளை இன்னும் வரலே. வந்த பிறகு பூஜையே வெச்சுக்கலாமே?!''
என்ற காஞ்சனாவோ இப்போதே ரகுவிற்கு ஜிங்கிச்சா அடிக்க,
''அவர் வரும் போது வந்து கலந்துக்கட்டும். பூஜையெல்லாம் லேட் பண்ண வேணாம்!''
என்ற தெய்வீகனோ பெருந்தன்மையாய் சொல்ல, ரத்னவேலுவோ திரும்பி பார்த்தார் குருமூர்த்தியை.
அப்பார்வையே சொல்லியது, போடு போனை ஆகுரதனக்கு என்று.
''அவன் வரட்டும்! நாமே சாமியே கும்பிடலாம்!''
என்ற தாத்தாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட இருகுடும்பமும் ஏரம்பனை (விநாயகர்) வணங்கிட ஆரம்பித்தது.
கோக்கனதையின் நேத்திரங்களோ அலைபாய்ந்தது ரகுவை தேடி தளத்தைச் சுற்றி.
வாசல் நோக்கிய வெங்கட் சித்தப்பாவோ,
''பைக்லே வந்துக்கிட்டு இருப்பான். விடு, வந்திடுவான்! வா, நாமே முதல்லே போய் சாமி கும்பிடுவோம்!''
என்றுச் சொல்லி மகனுக்கு போன் செய்த குருமூர்த்தியைத் தடுத்தார்.
''ஆமா, மாமா. நீங்க வாங்க! ஆகு வந்திடுவான்!''
என்ற சித்ராவும் மூத்தவரோடு சன்னிதானம் நோக்கி விரைய,
''கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாமா தாத்தா?''
என்ற புவனாவோ, வந்து சேர்ந்திடாதவனுக்காய் ரகசிய குரலில் ஆகுவிற்காக பரிந்து கேட்டாள்.
அக்கா அவளுக்கு தம்பியவன் அங்கு இருப்பதே நன்று என்றுத் தோன்றியது. காரணம், மணமகன் அவன் இல்லாது அவனின் நிச்சயதார்த்த அழைப்பிதழை பூஜிப்பது அவள் மனசுக்கு சங்கடமாக இருந்தது.
''நாமே சாமிக்காக காத்திருக்கலாம் புவனா. ஆனா, சாமி நமக்காக காத்திருக்க கூடாது!''
என்று குறுக்கிட்ட சந்திரனோ,
''அவன் வந்திடுவான் தாத்தா. நீங்க குருக்கள்கிட்ட சொல்லி பூஜையே ஆரம்பிக்க சொல்லுங்க!''
என்று மேலும் தொடர்ந்து வக்ரதுண்டரை (விநாயகர்) கையெடுத்து கும்பிட ஆரம்பித்தான்.
அனைவரும் பக்தியில் நிலைக்க, கேப்பில் கெடா வெட்டினாள் வஞ்சியவள் கோவிலின் முன் வாசல் நோக்கி ஓடி.
எக்கி பார்த்து தேடினாள் சாலையில் எங்காவது ரகுவின் பைக் தெரிகிறதா என்று.
''எங்கடா போய் தொலைஞ்சே பொறுக்கி?! எவ்ளோ முக்கியமான நாள் இது, இன்னைக்கு போய் லேட் பண்ணலாமா?! வாடா உன்னே வெச்சுக்கறேன் தாடிக்காரா! கொட்டுறே கொட்டுலே இனி லேட்டுங்கறே வார்த்தை உன் வாழ்க்கையிலே இருக்கக்கூடாது!''
என்றவளோ முனகி கறுவி மீண்டும் சன்னிதானத்தை நோக்கி நடைப்போட்டாள்.
கைகள் கூப்பிய கோக்கனதையோ, மறுபடியும் ஒருமுறை வெளிவாசலை திரும்பி பார்த்தாள். மனதுக்குள் ரகுவை சீக்கிரமாய் வரச்சொல்லி கெஞ்சி, திட்டிகளை மூடினாள் கசானனனை (விநாயகர்) பிராத்தித்திட.
ஆலய மணியோசையில், குருக்களின் தீபாராதனை கொண்ட மந்திர சத்தத்தில் நயனங்கள் விரித்தாள் நேரிழையவள்.
அம்மணியின் சக்குகளோ, நேரெதிராய் நின்று பிராத்தனையில் மூழ்கியிருந்த ரகுவை இதழ்கள் நாண இமைக்காது ரசித்தது.
வேஷ்டி சட்டையில் அவன் நேர்த்தியைக் கண்டவளின் கைகாலெல்லாம் இனம் புரியா சிலிர்ப்பில் வெட்கியது.
ஏற்கனவே, ரகுவின் நெற்றியில் திருநீறு இருந்தது. அப்போதுதான் கவனித்தாள் கோக்கனதை ஆணவன் ரோயல் ப்ளூ வர்ணத்தில் லோங் ஸ்லீவ் கொண்டிருப்பதை.
முழங்கை வரைக்கும் மடக்கி விட்டிருந்தவன் கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலி ஒன்றோ கண்ணுக்கே புலப்படாது இருந்தது.
ஒருகையில் வாட்ச், மறுகை விரலில் தங்க மோதிரம் ஒன்று என்று பெண் பார்த்திட வந்த வேளையில், ஆணவனை சரியாய் கவனிக்காது கோதையவள் தவற விட்டிருந்த அத்தனையையும் இப்போது இம்மியும் மிஸ் செய்திடாது ரசித்தாள்.
குருக்களின் தீபாராதனையில் சிந்தை கலைய, முன்னிருந்தவனோ கண்ணால் சைகை செய்தான் அவளின் நெற்றியை சுட்டிக்காட்டி.
ஊமை பாஷை புரியா கள்ளியோ அவனையே அம்பகங்கள் குறுக்கி பார்க்க, எதார்த்தமாய் தொடுவதை போல் அவன் நெற்றியோரத்தை இரு விரல்கள் கொண்டு தேய்த்தான் ரகு.
அதைக் கண்டவளின் கண்களோ அகல விரிந்தது.
உதடு கடித்து வன்ம புன்னகை கொண்ட ரகுவோ,
'சிக்கிவிட்டாயே வித்தாரக்கள்ளி வசமாய்!'
என்று மனசுக்குள் சொல்லி சிரிக்க,
'ஆத்தி, மறந்திருப்பான்னு நினைச்சேனே!'
என்றவளின் மனமோ பதறியது.
சம்பந்திகள் இருவரும் சுபகாரியத்தின் அழைப்பிதழை முறையாக கைமாற்றிக் கொள்ள, ரகுவிடமிருந்து முதலில் தப்பித்திட வேண்டுமென்று நினைத்தாள் கோக்கனதை.
மெதுவாய் நழுவி ஓடிட பார்த்தவளை பிடித்து நிறுத்திய புவனா புருஷனோ, வருங்கால மாப்பிள்ளையோடு லோட்டஸையும் சேர்த்து பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கிட சொன்னான்.
மாமாவின் பேச்சுக்கு ஏற்ப, தாத்தா தொடங்கி குருமூர்த்தி மற்றும் சந்திரிகா என்று இறுதியில் சந்திரன் மற்றும் புவனா கால் வரைக்குமே விழுந்து எழுந்தனர் ஜோடிகள் இருவரும்.
ஆசீர்வாதம் பெற்ற இருவரும் மணக்கோல தம்பதிகள் போல் காணப்பட, அங்கேயே திருஷ்டி சுத்தினார் சித்ரா.
தாத்தாவின் பாதங்களில் விழுகையில், கோக்கனதையின் மல்லிகைச் சரம் முன்னோக்கி சரிந்தது சுந்தரியின் தோளில்.
அதன் வாசத்தை நுகர்ந்த ரகுவோ, நறுதுதல் அவளை ஓரக்கண்ணால் பார்க்க, பக்கமிருப்பவனின் பார்வைகளை உணர்ந்த வல்வியவளோ கூசிப்போனாள் மேனி சிலிர்க்க.
வந்த வேலை முடிய, பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கிய குடும்பமோ ஆங்காங்கே பிரிந்துப் போக ஆரம்பித்தனர்.
கோக்கனதையும் எஸ்கேப் ஆகிட பார்க்க, அவள் முன் வந்து நின்றான் ரகு கைகளை நம்பியார் கணக்காய் பிசைந்தப்படி.
'கடவுளே, விட மாட்டான் போலிருக்கே!'
என்று மனதுக்குள் புலம்பியவளோ தப்பிக்க முனைந்து குனிந்த தலையோடு அடிகளை வேறு பக்கமாய் நகர்த்த, ரகுவோ அவள் திரும்பிய பக்கமெல்லாம் செக் போஸ்ட் போட்டான் அலரவளை நகர விடாது.
கோவிலுக்குள் கூட்டம் ஜாஸ்தியே. ஆகவே, அவர்கள் இருவர் அடித்த கூத்து தனித்து தெரியவில்லை.
எப்படியாவது ரகுவை கழட்டி விட நினைத்த லோட்டஸோ தூரத்தில் தெரிந்த அருளை நோக்கி கையசைத்தாள்.
''அருள்! அருள்!''
என்று சத்தமாய் அழைத்தவளோ, குடுகுடுவென்று ஓடினாள் பக்தர்களுக்கு இடையில் புகுந்து அருளை நோக்கி.
ரகுவும் அவளை விடாது துரத்தி போக,
''ரகு நீங்களே சொல்லுங்க, அருள் மாமா இந்த ரெட் கலர் ஜிப்பாலே செம்ம அழகா இருக்காருதானே?! எவ்ளோ எடுப்பா இருக்கு மாமாக்கு இந்த ஜிப்பா!''
என்ற தெரியிழையோ வேண்டுமென்றே அருளை புகழ்ந்து தள்ள, ரகுவின் விழிகளோ அவன் அண்ணனை பார்த்தது.
அருளும் எதுவும் பேசாது வெறுமனே தம்பியை பார்க்க,
''நிஜமா சொல்றேன் மாமா, இந்த மாதிரி சூப்பர் ஜிப்பா சூஸ் பண்ணத்துக்காகவே உங்களுக்கு ஒரு டைட் ஹக் கொடுக்கணும்! எவ்ளோ நேர்த்தியான எம்பிராய்டரி!''
என்றவள் தொடர்ந்து அருளின் ஜிப்பாவிற்கு உயர்தர சர்டிபிக்கேட் கொடுக்க, ரகுவோ நெஞ்சுக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு லோட்டஸ் அப்படி என்னதான் முயற்சிக்கிறாள் என்று பார்த்திட பொறுமைக் கொண்டான்.
அருளிடம் இளிக்க பேசியவளோ,
'என்ன இவனுக்கு கோவமே வரலே! அன்னைக்கு வந்துச்சே அருள் பத்தி பேசும் போது! இப்போ அண்ணங்காரங்கிட்ட நேரடியாவே வந்து பேசறேன், இந்த தாடிக்கார பொறுக்கி என்னான்னா கடுப்பாகமே இங்கையே கையை கட்டிக்கிட்டு படம் பார்க்கறே மாதிரி நின்னுக்கிட்டு இருக்கான்! ஒருவேளை, கோவில் அப்படின்னு அமைதியா இருக்கானோ? இல்லே, நம்பக்கிட்ட மட்டும்தான் இந்த கெத்தா? வெளியே வெத்தா?!'
என்று உள்ளுக்குள் பல கேள்விகள் கொண்டு கண்களை உருட்ட,
''அப்போ நீ ஆகுவத்தான் கட்டிப்புடிக்கணும்!''
என்ற அருளோ சிரிக்க, அதுவரை புன்னகைக் கொண்டிருந்தவளின் முகமோ சடன் பிரேக் போட்டது.
ரகுவோ உடல் குலுங்க சிரிக்க, அவனை பாவமாய் திரும்பி பார்த்தவளோ கண்களை சிமிட்டினாள் உதடு பிதுக்கி.
''சரி, நீங்க பேசிக்கிட்டு இருங்க, நான் இதோ வந்துடறேன்!''
என்ற அருளோ அங்கிருந்து விலக, ரகுவோ கைகளை அகல விரித்து சைகைக் கொண்டான் நேரிழை அவளை வந்து கட்டியணைக்கக் கோரி.
குண்டு கண்களை ராட்டினங்கணக்காய் சுற்றிய கோக்கனதையோ,
''மாமா! மாமா!''
என்றப்படி ஓடினாள் அருளின் பின்னாலேயே.
ரகுவோ உதடுகள் மடக்கிய முகிழ்நகையோடு அன்னதானம் வழங்கும் பக்கமாய் நடையைக் கட்டினான்.
இதழ் மிடறும் முத்தம்...

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 6
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.