- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் 7
மலேசியாவின் தலைநகரமான கோலாலும்பூரில் பிரதான சாலையின் மூன்று முச்சந்தியில் அமைந்துள்ள, அருள்மிகு கோர்ட்டு மலை பிள்ளையார் திருக்கோவில் 1897 ஆம் ஆண்டு இந்திய தோட்டக்காரர் ஒருவரால் உருவாக்கப்பட்டதாகும்.
வாக்னர் துரை என்ற பிரபலமான பிரிட்டிஷ் போலீஸ்காரரின் பழதோட்டத்தில் இலம்போதரனுக்காய் (விநாயகர்) தொடங்கப்பட்ட அச்சிறிய சன்னிதி நாளடைவில் அங்கிருக்கும் மக்களிடையே பரவலாகி போனது.
அதனைத் தொடர்ந்து, அங்கு மணியொன்று பொறுத்தப்பட்டது தோட்டக்காரரால், மங்களகரமான நேரங்களை அறிவிக்கும் பொருட்டு.
ஆனால், வாக்னரோ மணியோசையால் எரிச்சல் கொண்டார். கோபத்தில் அங்கிருக்கும் மணியை அகற்றிட உத்ரவிட்டார். இல்லையேல், மணியோடு சேர்ந்து சன்னிதியும் உடைக்கப்படும் என்றார்.
அவ்வாக்கியத்தை உச்சரித்த நொடி, வாக்கனர் பக்கவாதம் வந்து முடங்கி போனார்.
அச்சம்பவம் நடந்தேறிய சில நாட்களுக்கு பின், தோட்டக்காரருக்கோ கனவொன்று வந்தது. வினைதீர்த்தானோ (விநாயகர்) படுத்த படுக்கையாய் கிடக்கும் வாக்னர் துறைக்காக அத்தோட்டக்காரரை பூஜை ஒன்று நிகழ்த்திட கூறினார்.
அதே வேளையில், இழுத்துக் கிடக்கும் வாக்னரின் கைகால்களிலெல்லாம் பூஜையின் திருநீறை பூசிட பணித்தார்.
தோட்டக்காரரும் கனவில் வந்த பாசபாணியின் (விநாயகர்) கூற்றுப்படி அனைத்தும் செய்ய, சீக்கிரமாகவே வாக்னர் துறை குணமாகி பழையப்படி நடமாடிட தொடங்கினார்.
அதற்கு பிறகான நாட்களிலேயே, கருணை கொண்ட கரிமுகன் (விநாயகர்) மீது பக்திக் கொண்டு அவரை வணங்கிட ஆரம்பித்தார் வாக்னர் துறை. தொடர்ந்து சிறிய சன்னிதியை பெரிய கோவிலாக உருமாற்றிடவும் உதவினார்.
கோட்டு மலை புள்ளையார் என்ற பெயரோ, சன்னிதிக்கு பக்கத்தில் முன்னாளில் நீதிமன்றம் இருக்க தோன்றியதாகும்.
சாலையோரத்து ஒற்றைமருப்பினனின் (விநாயகர்) வரலாறை சந்திரிகா கூற கேட்டுக்கொண்டிருந்த கோக்கனதையோ,
''எவ்ளோ சக்தி வாய்ந்தவர்னு பாருங்க ஆன்ட்டி இந்த விநாயகர்! கோவிலை உடைப்பேன்னு சொன்ன ஆளையே அதே சன்னிதானத்தே இன்னும் பெருசா கட்டிட வெச்சுடாருல்லே!''
என்று கணபதியின் புகழ் பாட,
''இருமா, வந்துடறேன். சித்ரா கூப்பிடறா!''
என்றுச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தார் ரகுவின் தாயாரவர்.
மாமியார் கழட்டி விட்டு போக, கோக்கனதையோ கோவிலின் மேல் சுவற்றிலிருந்த சிலைகளை நோட்டமிட ஆரம்பித்தாள்.
இதுவரை நங்கையவள் அறியா பல விதமான மகோதரன்களை (விநாயகர்) சிலை வடிவில் கண்டு சிலாகித்தாள் பாவையவள்.
அவைகளை அலைபேசி மூலம் வீடியோ எடுக்க,
''வித்தாரக்கள்ளி!''
என்ற ரகுவோ கையுங்களவுமாய் துடியிடை அவளை கற்பகிரகத்திற்கு பின்னால் சிறைப்பிடித்தான்.
பக்கென்ற அதிர்ச்சியோடு கேமராவை ஆப் செய்த சிட்டுக்குருவியோ, சிக்கிடாமல் நழுவிட பார்த்தது சிங்கத்திடமிருந்து.
''ஹலோ, அங்க எங்கே?!''
என்றவனோ கையை அவள் முன் நீட்டிட,
''எனக்கு இன்னும் கோபம் குறையலே!''
என்ற பெதும்பையோ, நமட்டு சிரிப்போடு அவனை கடந்து போக எத்தனித்தாள்.
''ஹ்ம்ம்.. வாடியிருக்க லோட்டஸ்காக கஷ்டப்பட்டு வரிசையிலே நின்னு பாயசம் வாங்கிட்டு வந்தேன். இனி இதை யார் குடிப்பா?!''
என்ற ரகுவோ, தூண் ஓரத்தில் பதுக்கியிருந்த பிளாஸ்ட்டிக் கப்பைக் கையிலெடுக்க, அவன் பாயசம் என்றதுமே கண்கள் அகல விரிந்த கோக்கனதையின் கால்களோ, யூ டர்ன் அடித்து எக்கி பறித்தது ஆணவன் பிடியிலிருந்து இனிப்பை.
''கோபமா இருக்கேன்னு சொன்னே அக்கினி சிறகு லோட்டஸை பார்த்தீங்களா வித்தாரக்கள்ளி!''
என்றவனோ மலர் அவளை சீண்ட, அவனை செல்லமாய் முறைத்தவளோ,
''தாடிக்கார பொறுக்கி!''
என்று சத்தமில்லாது சொல்லி அவன் குமட்டில் குத்தி நகர்ந்தாள் அங்கிருந்து.
''அட, எதுவுமே ஞாபகம் இல்லாத மாதிரி போனா, விட்டுடுவேனா நான்?!''
என்ற ரகுவோ, அவள் பின்னாலேயே அடிகளைத் துரிதப்படுத்த, கூட்டத்தில் முன்னோக்கி போய் விட்ட கோக்கனதையோ, ஆணவனை திரும்பி பார்த்து நாக்கை நீட்டி பழிப்பு காண்பித்து சிரித்தாள்.
இளம்பிடியாள் அவளை இமைக்காது புருவங்கள் குறுக்கி பார்த்தவனோ, பின்னந்தலை மல்லிகை சரத்தை தொட்டப்படி அவனையே ஒன்றுக்கு இருமுறை திரும்பி பார்த்து போன அந்திகையை முகிழ்நகையோடு ரசித்தான்.
கோவிலிலிருந்து வெளியான இருகுடும்பமும் அருகிலேயே ஏதாவதொரு தமிழ் கடையில் டின்னரை முடித்துக் கொள்ள முடிவெடுத்திருந்தனர்.
பேசி வைத்தாற்படி அனைவரும் காரை நோக்கி நடக்கும் முன், தமிழன் வழக்கப்படி அன்னதாம் வழங்கும் இடத்தில் நின்று யாரோடோ பேசிட ஆரம்பித்தனர்.
அதே வேளையில், முந்திக்கொண்டு முன்னே போன கோக்கனதையோ தனியாய் சிக்கினாள் ரகுவிடம், கார் பார்க்கிங்கில்.
''ரகு வேணா! பிளீஸ்! வேணா ரகு! வலிக்கும்!''
என்றுக் கெஞ்சிய பைந்தொடியோ, ஓடினாள் அங்கிருந்த கார்களை சுற்றி.
''செல்லாது வித்தாரக்கள்ளி செல்லாது!''
என்றவனோ கார்களுக்கு குறுக்கே புகுந்து சேலை கொண்டவளை பின்னாலிருந்து இழுத்து பிடித்து காரொன்றின் மீது சாய்த்தான்.
''சிக்கினாயோ வித்தாரக்கள்ளி!''
என்றவனோ சிரிப்பாய் சிரிக்க, கோக்கனதையின் கரங்கள் ரெண்டும் அவளின் முதுகுக்கு பின்னால் சிக்குண்டு போனது.
''ரகு பிளீஸ் ரகு! பிளீஸ்! வேணா ரகு! வலிக்கும் ரகு வேணாம்! நான் வலி தாங்க மாட்டேன் ரகு!''
''ஆமா, ஆமா! நீங்கதான் குட்டிமா ஆச்சே!''
என்றவனோ நிறுத்தாது சிரித்து, இருக்கர பெருவிரல்களின் நகங்கொண்டு, வாசுரை அவளின் நெற்றியோரத்தை நெருங்க,
''வேணா ரகு! பிளீஸ்! டேய், தாடிக்கார பொறுக்கி விடுடா! வேணாண்டா!''
என்றவளோ அவன் கைகளை அடித்து, பிடித்து தள்ளினாள்.
''சும்மா இரு லோட்டஸ், அப்பறம் கை அடிருச்சின்னா வேற எங்கையாவது நகம் பட்டு காயமாகிடும் சொல்லிட்டேன்!''
என்ற ரகுவோ, ஒருவழியாய் சமாளித்து ரதியவளின் அழகுக்கு திருஷ்டியாய் அமைந்த பிம்பிளை நசுக்கி சாதித்தான்.
''ரகு!''
என்றவளோ வலியில் துடித்து, ஆணவன் சட்டையை இறுக்கினாள் கைகளால்.
''இதோ, இதோ! முடிஞ்சது! முடிஞ்சது!''
என்ற ரகுவோ, நங்கையின் பருவிலிருந்து பிதுக்கி எடுத்தான் மஞ்சள் நிற சீழை வெளியில்.
''வலிக்குது ரகு!''
என்றவளோ விசும்பி தேம்ப, பொற்றொடியின் கண்மையோ கரைந்தொழிகியது காந்தாரியின் கன்னங்களில்.
''முடிஞ்சதுமா! முடிஞ்சது! முடிஞ்சது!''
என்றவனோ விரல்களை திசுவில் துடைத்துக் கொள்ள, பிம்பள் காணாது போன துளையிலிருந்தோ ரத்தம் வர ஆரம்பித்தது.
''ஓகே! கண்ணாரெல்லாம் போயாச்சு! இனி லோட்டஸ் கண் திருஷ்டி இல்லா மஹாலஷ்மி ஆயாச்சு!''
என்ற ரகுவோ, அழகி அவளுக்கு சொடுக்குடைக்க,
''வலிக்குதுடா பொறுக்கி! வின்னு வின்னுன்னு இருக்கு தலை!''
என்றவளோ பொத்தென அவன் நெஞ்சில் தலை முட்டி முகத்தை அவன் சட்டையில் தேய்த்தெடுக்க, காரின் மீது கரங்கொண்டிருந்தவனோ அதன் விளிம்பை அழுத்தி பற்றினான் உடல் திடிரென்று காய்ச்சல் கொள்ள.
''குரங்கு கையிடா பொறுக்கி உனக்கு! பாரு இப்போ அப்படியே தழும்பாகி முகத்தையே அசிங்கமாக்க போகுது அந்த இடம்! விட்டிருந்தா அதுவே போயிருக்கும்!''
என்ற கோக்கனதையோ, அவன் நெஞ்சை குத்தி கம்பளைண்டுகளை அடுக்க, சுந்தரியின் மற்றொரு கரத்தின் மணிக்கட்டினை இறுக்கி பற்றினான் ரகு.
வலிகொண்டவளோ அவனை ஏறெடுக்க, அலரவள் வதனமோ அலங்கோலமாய் கிடந்தது.
கண்மையெல்லாம் ஆங்காங்கே இழுப்பி, லிப்ஸ்ட்டிக் வேறு கொஞ்சம் காணாது போய், முன் நெற்றி கேச குழலோ கண்ணீரில் ஈரமாகி, பூவையின் விழிப்படலங்களோ வீங்கி, சரங்கொண்ட மல்லிகை சிலதோ உதிரி, பார்க்க கவர்ச்சி கூடிய பதுமையாய் தெரிந்தாள் கோக்கனதை ஆணவன் கண்களுக்கு.
எச்சில் விழுங்கியவனை அல்லாடிய பார்வைகளோடு நோக்கியவளோ, இதயம் வழக்கத்திற்கு மாறாய் வேகம் கூட்டி துடிப்பதை உணர்ந்தாள்.
ரகுவின் பாதம் தொட்ட உணர்வோ விறுவிறுவென்று மேலேறி அவன் மனசுக்குள் கெட்டிமேளம் கொட்டியது. மூச்சடைத்தவன் போல் நின்றிருந்தாலும் உடலுக்குள் நிலவிய இதமோ சுகமாகவே இருந்தது.
சரீரம் கூசி நிற்க, உள்ளுக்குள் நிகழ்ந்த வார்த்தைகளற்ற ரசாயன ஏற்ற தாழ்வுகளால் நெகிழ்ந்திருந்தாள் பகினியவள்.
காரின் மீதிருந்த கரத்தை மெதுவாய் பிரித்தெடுத்த ரகுவோ, மென்மையாய் மங்கையவள் செவியோரம் கொண்ட கூந்தலை பின்னோக்கி தள்ளினான்.
மழலையை தீண்டுகின்ற ஸ்பரிசம் போலான அவன் விரல்கள் கொண்ட சிலிர்ப்பில் சிந்தை சிதைந்தவளோ, இறுக்கினாள் அவன் நெஞ்சை பற்றியிருந்த கரத்தை மேலும் அழுத்தமாய்.
நறுதுதலின் கந்தரம் உரசி, காது பற்றிய ரகுவின் உள்ளங்கை கொடுத்த கதகதப்பில் தளர்ந்தது தளிரியளின் மனம்.
பேடையின் மணிக்கட்டை பற்றியிருந்த ரகுவின் பிடிக்கூட மெதுவாய் பிரிந்து, ஒண்ணுதல் அவளின் விரல்களோடு உரசி ஒட்டி நின்றது.
வேதியல் மாற்றங்கொண்டவளின் நேத்திரங்களோ கொஞ்சங் கொஞ்சமாய் சொக்கவா சொருகவா என்று தத்தளிக்க, இருவரின் விரல்களும் பின்னி பிணைந்து கோர்த்தது.
உள்ளங்கைகளின் ஈரமோ கிளர்ச்சியைக் கூட்டியது ஜோடிகளின் தாபத்தில் மோகமெனும் தூபத்தைப் போட்டு.
லோட்டஸை விவரிக்க முடியா உணர்வோடு ரகு பார்த்திட, சூடேறி போன தேகத்தோடு போராடிய வல்வியோ, அவன் விரல்களை உடைத்திடும் வீரியத்தில் இறுக்கமாய் பற்றி நேத்திரங்கள் கலங்க அவனையே வெறித்தாள்.
புரியவில்லை பாவையவளுக்கு நயனங்கள் கலங்கும் காரணமும் மனம் குதூகலிக்கும் அர்த்தமும். ஆனால், மூச்சு முட்டியது பூவை அவளுக்கு. நா வறண்டது.
இவ்வளவு நேரம் அவன் பெயரை ஏலம் போட்டவள், இப்போதோ மௌனியாகினாள்.
ரகுவால் இம்மியும் நகர்த்திட முடியவில்லை அவன் பார்வைகளை மலரவளின் முகத்திலிருந்து. கண்களை சிமிட்டிடவும் தோன்றவில்லை.
ஈரங்காய்ந்த காந்தாரியின் கன்னங்களில் வடுக்கொண்ட கண்ணீர் தழும்புகள் கூட கிறக்கம் கொடுத்தது ஆணவனுக்கு. புனைகுழலின் உதட்டு கோடுகள் கூட அவனை கூறுப்போட்டன.
அழுகையில் ஒன்றி ஒட்டிக்கிடந்த கண்ணிமைகளோ சூடேற்றியது ரகுவை. பட்டுப்புடவை உடுத்திய பஞ்சவர்ண கிளியை திகட்ட திகட்ட ரசித்தான் ரகு, கழுத்துக்கு கீழிறங்காது.
ஏடாகூடமாய் ஏதும் ஆகிடும் முன், விருட்டென கரத்தை லோட்டசின் வதனத்திலிருந்து விலக்கிக் கொண்டான் ரகு. கோமகளவள் பிடித்திருந்த விரல்களையும் அவசர அவசரமாய் விடுவித்துக் கொண்டவன் அங்கிருந்து நகர்ந்தான் அவன் பைக்கை நோக்கி.
நாயகன் பாதியில் தவிக்க விட்டு போக, தனித்திருந்த தாரகையோ அவளுக்குள் ஏற்பட்ட மாறுதல்களை முழுமனதாக ஏற்றுக் கொள்ள முடியாது, வாய் பொத்தி தரையில் அமர்ந்து காரோடு முதுகு ஒட்டி அழுதிட ஆரம்பித்தாள்.
வேஷ்டி சட்டையைக் கழட்டி பைக்கில் வைத்த ரகுவோ, கருப்பு ஜீன்ஸ் மற்றும் கோலார் நெக் ஆடையோடு நேராய் டின்னர் சாப்பிடும் கடை நோக்கி பைக்கை அழுத்தினான்.
இதழ் மிடறும் முத்தம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://neerathi.com/forum/forums/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.143/

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 7
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.