Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 1

ஏர்கண்டிஷனர் சில்னஸ் நிறைத்திருந்தது அவ்வறையை. வலது பக்கம் மதில் சுவரை மறைத்திருந்த ஊதா கலர் திரைசீலையை வெறுமனே பார்த்து அமர்ந்திருந்தாள் தென்றல்.

ஆண் அவனோ ட்ரஸிங் டேபிளின் முன் நின்று சட்டையின் ஒவ்வொரு பொத்தான்களையும் மெதுவாய் கழட்டினான். சிந்தையில் ஆயிராயிரம் யோசனைகள். மனம் கனத்து கிடந்தது ஆளானவனுக்கு.

ட்ரஸிங் டேபிளின் முன் நின்றாலும் என்னவோ அவனுக்கு முகம் பார்த்துக் கொள்ள விருப்பம் இல்லை. கழட்டுகின்ற ஆடையையும் பார்த்திட மனம் நினைக்கவில்லை.

ஆதலால், பார்வையை அதே முகம் பார்த்திடும் கண்ணாடி விளிம்பினில் ஒட்டிக் கிடந்த அவளின் சிவப்பு நிற பொட்டினில் பதித்தான் மருத்துவன் அவன்.

''லைட் அடைச்சிடவா..''

அவன் தான் கேட்டான் சுரமில்லாத குரலில்.

''ஹ்ம்..''

இவ்வளவே அவளின் பதில். விளக்கை அணைத்தவன் மெத்தையில் வந்தமர்ந்தான். அவளோ வலது நோக்கியிருக்க இவனோ இடது நோக்கியிருந்தான்.

''சாப்பிட்டது போதுமா..''

அவனுக்கு பேச வேண்டும். ஆனால், எதை என்றுதான் தெரியவில்லை. நேரம் ஆக, திகழ் இலயன் நெஞ்சம் சீக்கிரம் சீக்கிரம் என்று அவனை உந்தி தள்ளியது காரணமே இன்றி.

''ஹ்ம்ம்..''

என்றவளோ வேறேதும் பேசாது மீண்டும் மௌனியாகி போனாள்.

அவன் தான் அப்படி என்றால் இந்த தென்றலும் இனி என்ன இருக்கிறது பேச என்பதைப் போலவே பட்டும் படாமலும் பதில், இல்லை வெறும் ஹ்ம்ம் மட்டும் கொட்டி நிறுத்திக் கொண்டாள்.

பெருமூச்சு விட்டவன் அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான். இடது கால் மெத்தையில், வலது காலோ தரையில்.

''காலை ஆட்டாதிங்க மா..''

நிறுத்தினாள் தென்றல், வார்த்தைகளை விழுங்கி.

''திகழ்..''

முடித்தாள் குலியவள் முடிவற்ற வாக்கியத்தை அவன் பெயர் சொல்லி.

தலையைக் குனித்திருந்தவன் ஏறெடுத்தான் தென்றலை. என்னவோ இலயனுக்கு இம்முறை தென்றல் அவன் பெயரை உச்சரித்தது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அவனை நினைத்தால் அவனுக்கே வேடிக்கையாக கூட இருந்தது. காரணம் அவனே பலமுறை கேட்டிருக்கிறான் தென்றலிடத்தில் அவன் பெயர் சொல்லி ஒருமுறையேனும் திகழ் இலயனை அழைத்திட.

ஆனால், கிராமத்துக்காரி கள்ளியோ முடியவே முடியாது என்று சமாளித்து டிமிக்கி தந்திடுவாள். ஆனால், சில மாதங்களாகவே எல்லாம் தவிடு பொடியாகி போனது போலாகி விட்டது. அவளாகவே அழைக்கிறாள் இப்படி சில காலமாக.

வேண்டாம், இப்படி அழைக்காதே என்று அவளிடத்தில் சொல்லிடவும் திகழுக்கு மனம் வரவில்லை. மாமா தான் வேண்டும் என்று கெஞ்சிட அவனிடத்தில் திராணியும் இல்லை.

மெதுவாய் அவளின் கரம் பற்றினான் திகழ்.

''I'm going to miss you so much wind..''
(உன்னே ரொம்ப மிஸ் பண்ணுவேன் விண்ட்..)

என்றான் அவளின் உள்ளங்கையைத் தடவியப்படி.

அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றிருந்தது தென்றலுக்கு. அவளாகவே முதல் முறை. எப்போதுமே அவன்தான் ஆரம்பிப்பான். ஆகவே, தயக்கத்தில் வெறுமனே சங்கடம் கொண்டாள் காரிகையவள்.

கடந்த ஒரு வருட காலத்தில் ஒருமுறை கூட அவன் மனம் கோணும் படி அருணியவள் நடந்துக் கொண்டதே இல்லை. இப்போதும் அவனை கஷ்டப்படுத்தி பார்த்திட பாவையவள் விரும்பிடவில்லை.

''நான் சொல்றது உனக்கு புரியுதுல..''

படிக்காதவள் என்ற நினைப்பே இன்னமும் திகழ் இலயன் மூளைக்குள் பட்டா போட்டிருந்தது. படித்தவள் மேம்பட்டிடவே இப்போது போக போகிறாள் என்பதனை முற்றிலும் மறந்திருந்தான் தாலி கட்டிய நல்லவன்.

''ஹ்ம்ம்..''

என்றவள் தலையாட்டினாள் ஏதும் சொல்லாமலேயே தன்னை அவன் இன்னும் உலகம் புரியாதவள் என்றெண்ணி கொண்டிருப்பதைப் பெரிதாய் எடுத்துக் கொண்டு வம்பு வளர்த்திடாமல்.

வசதியாக தென்றல் முகம் பார்த்திட திரும்பி அமர்ந்துக் கொண்டான் திகழ். அவளின் முகத்தை இருக்கரங்களால் பற்றினான்.

ஆணவனின் செய்கையால் உடலுக்குள் காய்ச்சல் கொண்டாள் தென்றல். அனலோ நாசியில் கடை பரப்ப தந்தியடித்த நேத்திரங்களோடு அவனை நேரெதிராய் பார்த்திருந்தவளுக்கு முதுகு தண்டோ உறைந்து போனது.

ஒன்றை வருடங்கள் கடந்த குடும்ப வாழ்க்கையில் இதுதான் முதல் முறை திகழ் மனைவியவள் வதனத்தை இப்படி கையிலேந்துவது. நள்ளிரவுக்கு பின்னாடியான சமாச்சாரங்களில் நிகழ்வதெல்லாம் சாமானிய நேர நெருக்கத்தில் சேராது.

விளக்கில்லா இருட்டில் அவனின் கருவிழிகள் விரிவடைந்து பெண்ணவள் உருவத்தை அவனுக்கு அழகாய் காட்டிக் கொடுத்தது.

''விண்ட்..''

அழைத்தான் இலயன்.

நாணம் இன்றைக்கு ஏனோ விடுப்பு எடுத்துக்கொள்ள படபடக்கும் இதயத்தோடு அவனை இமைக்காது பார்த்தாள் இயமானியவள் கொஞ்சங் கொஞ்சமாய் மானங்கெட்ட மனதது அவனில் லயிக்க.

''விண்ட்..''

மீண்டும் அழைத்தான் கணவனவன். அவனுக்கு ஏன் என்று தெரியவில்லை. ஆனால், நெருங்கியிருந்தவளின் சூடான மூச்சு காற்றில் அமைதியாக ஸ்தம்பித்திருக்க பிடித்திருந்தது.

காரிகையின் மனமே இப்போதாவது அவன் வாய் உரைத்திடாதா அவள் கேட்க நினைக்கின்ற வார்த்தையை என்று ஆவலாக காத்திருந்தது. பொத்தென அவன் மாரில் துஞ்சி கதறிட முடியாத என்ற பெண் மனமோ ஏக்கத்தை பார்வைகளில் தேக்கியது.

இலயனின் மனதுக்குள்ளேயே வார்த்தைகள் வரிசைக் கட்டி நின்றன. ஆனால், அவனால் பேசிட முடியவில்லை. தொண்டைக் குழியில் சிக்கிய கிடந்த வார்த்தைகளோ வெளிவர மறுத்தன. உள்ளுக்குள்ளேயே புழுங்கிட பார்த்தன.

அந்த இருட்டிய அறையில் கணவன் அவன் படும் பாடு அறியாதவளா தென்றல். அவன் வலிக்கு எளிதாய் முற்று புள்ளி வைத்திட முனைந்தாள் உல்லியவள்.

''குளிச்சிட்டு வறேன்.. தி..''

அவள் முடிக்கவில்லை. அதற்குள் திகழ் அவளின் இடையை பட்டென பற்றி சட்டென இறுக்கிக் கொண்டான் ஆளானவன் மார் இடிக்க இடைவெளியில்லாது.

தம்பிராட்டியோ திகைத்து சிலிர்த்திருக்க,

''வேண்டாம்..''

என்றவனின் குரலோ மெதுவாய் சொல்ல,

''என்.. என்னே.. வேண்டாம்..''

என்றவளின் தொனியோ கிறங்கியது புருஷனின் விரல்கள் மெது மெதுவாய் மங்கையவள் கீழ் முதுகில் படியிறங்கி வருடல் கொள்ள.

''குளிக்க..''

என்றவனோ மேலும் பொஞ்சாதியவளை நெஞ்சோடு அழுத்த மூச்சு முட்டியது வதனியவளுக்கு முன்னழகு நசுங்க.

''மாம்.. மா.. மா.. மா..''

என்றவளோ கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் திகழின் இதழ்கள் இளம்பிடியாளின் கந்தரத்தில் முத்தங்கொண்ட முக்தி கொள்ள.

''தலை ரொம்ப வலிக்குது விண்ட்.. முடிச்சிட்டு போய்..''

என்றவனோ முறுக்கேறிய கனல் தாளாது வாக்கியத்தை பாதியிலேயே தொங்க விட்டு மனைவியவளை மஞ்சத்தில் சரிக்க,

''திகழ்..''

என்றவளின் வாயை அவனின் அதரங்கள் கொண்டு பட்டா போட்டான் திகழ்.

இருவரின் விழிகளும் மூடிக்கிடக்க முத்த வேட்கை மட்டும் நிறுத்தாது தொடர்ந்தது. இதழ்கள் கொண்ட வேகத்தில் தென்றலுக்குமே இப்போது அவசியமாய் குளிக்கணுமா என்று தோன்றியது.

அதுவும் இப்படியான முன்னெடுப்புகளெல்லாம் திகழிடத்தில் ரொம்பவே புதிது. அவன் இப்படி இன்ச் இன்சாக காரியம் சாதிக்கும் ஆளில்லை.

ஆசை ஆசையாய் பேசி அவளை தொடுபவனும் இல்லை. உடல் தேவைக்காக மட்டுமே துணைவியள் முந்தானையை கலையும் உரிமையான உத்தமன்.

ஆனால், இன்றைக்கு எல்லாம் வேறு மாதிரி நடக்க அதன் காரணம் என்னவென்றுதான் தென்றலுக்கு புரியவில்லை.

கணவனின் செயலுக்கான அஸ்திவாரம் என்னவென்பதை கோமகளவள் சிந்திக்க சீமாட்டியின் சிந்தனையோ தடைப்பட்டு போனது புருஷனின் சில்மிஷத்தால்.

''மா.. மாமா.. ஆஹ்ஹ்.. மா.. மாமா..''

என்றவளோ அவளறியாது இன்றைக்கு முதல் முறை வாயை மூடாது சும்மாவே கிடந்தாள் சுகத்தில் லயித்து.

திகழின் ட்ரிம் செய்திடாத தாடியோ தாரமவளின் புவ்வத்தில் உரசல் கொண்டு மென்மையாய் முத்தமொன்றை பதித்து பின் மெல்லிய வலிக்கொண்ட சிறியதொரு கடி கொள்ள கணவனின் பின்னந்தலை சிகையை ஐவிரல்களுக்குள் புதைத்தவளோ முன்னேறி வந்தவனின் உதடுகளுக்கு முகத்தை தாரை வார்த்தாள்.

திகழின் அடங்கா முத்தங்கள் வல்லபியவளை மூச்சு முட்டிட வைக்க வியந்தவளோ அவனை விலக்காது சொன்னாள்.

''திகழ்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அஞ்சே நிமிஷம் குளிச்சிட்டு மட்டும் வந்துடறேன்..''

அந்த ஒரு வாக்கியம் மட்டுமே தென்றலின் வாயிலிருந்து வெளிவந்த முழுமையான வார்த்தைகளைக் கொண்ட கடைசி வாக்கியம்.

ஆயந்தியவள் அணிந்திருந்த மொத்த புடவையையும் உறுவி தரைக்கு உடை கொடுத்த பாரி வள்ளல் திகழோ நாச்சியவளின் உள்ளாடைகளை கூட விட்டு வைத்திடாது தூக்கியெறிந்தான் கேபினெட் பொருட்களுக்கு ஆடையாய்.

''ஐயோ மாமா!!''

என்றவளின் வெட்கத்தில் மலர்ந்த ரகசியமான வார்த்தையில்,

''போர்வே வேணா விண்ட்..''

என்றவனோ அவளிழுத்து மறைத்த அழகுகளை கண் கொண்டு பார்க்க உத்தேசித்து அதையும் துகிலெறிந்தான்.

நாணங்கொண்டு முகத்தை மூடியவளின் கரங்களோ மெதுமெதுவாய் பிரிந்து திகழின் முறுக்கேறிய அங்கங்களை தழுவிக் கொண்டன டாக்டரின் வைத்தியத்தில் சரணாகதியடைந்து.

சூடான மதியவள் மதி மயங்கி அனத்த என்றைக்கும் இல்லாத கைவித்தை வாய் வித்தையென்று அத்தனையையும் ஒரு சேர களமிறக்கி கட்டியவளை திணறடித்தான் திகழ்.

தாம்பத்யத்தில் முதல் முறையாக சொன்னாள் தென்றலவள் விரும்பாது தாலி கட்டியவனின் பெயரை நிறுத்தாது.

தெனாவெடுத்துக் கிடந்தவனுக்கு பாரியாளின் முனகல் இச்சையை கூட்ட வலியுடன் கூடிய அத்தனை லீலைகளையும் அவளில் நிகழ்த்தி பிதற்றியவளை பித்தேறிட வைத்து வாயடைத்தான் திகழ்.

வெட்கமறியா காமம் பொண்டாட்டியவளை கணவனவன் இழுத்து இழுப்பிற்கு இசைந்து இணைய வைத்தது அவனால் உண்டான ரணம் ரசிக்கத்தக்க ரசனையாக மாறிப்போக.

தென்றலின் இருளினை திருடிக்கொண்டான் திகழ் இலயவனவன் மொத்தமாய்.

இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்...
 

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 1
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top