- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் 10
காலை மணி ஆறுக்கெல்லாம் இன்றைக்கு வீடு சாம்பிராணி மூட்டம் கொண்டது.
துயில் கொள்ள விடாது இருமுறைக்கு மேல் தென்றலுக்குள் புதையலை தேடி அவளை துவள வைத்தவன் இறுதியாய் விடியற்காலை ஐந்துக்குத்தான் தூங்கிப் போனான்.
திகழ் இலயனை மொத்தமாய் அவளுக்குள் வாங்கிக் கொண்டவளோ இன்ப சுகம் கண்டாலும் முதல் முறை கலவியிலான வலியோ நித்திரையிடமிருந்து நாயகியவளை பிரித்து வைத்தது.
நடக்க சிரமமாகினும் அடி வயிறு உயிர் போகும் வேதனையை தந்தாலும் ஒருவழியாய் சமாளித்தவள் குளியலொன்றை போட்டு மூலிகை தைலத்தை தடவிக் கொண்டு பூஜையை தொடங்கினாள் சாமிக்கு.
திகழ் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து ரெடியாகிக் கொண்டிருந்தான் மெடிக்கல் அசோசியேஷன் டைரக்ட்டர் தந்தி போட்டிருக்க அவனை பத்து மணிக்கு பார்த்திட வர சொல்லி.
சாலை நெரிசலில் மாட்டிடாமல் நேரத்துக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் சீக்கிரமாகவே கிளம்பி விட்டான் திகழ்.
''விண்ட்.. விண்ட்.. காஃபி எடுத்து வா..''
கணவனின் குரல் அடுக்களையிலிருந்த தென்றலின் காதில் விழ,
''தோ வறேன் மாமா..''
என்றவளோ வெட்கத்தோடு மேல் மாடி நோக்கினாள்.
''என்ன மேடம் மூஞ்சு பளபளக்குது.. என்ன விஷயம்.. எங்கப்பா எல்லா சொத்தையும் உன் பேர்லே எழுதிட்டாரா என்னே!''
கிண்டலடித்தவனோ காஃபியை உறுஞ்சிட,
''நீங்க தூங்கனதே லேட்டு மாமா.. சீக்கிரமா வேறே எழுஞ்சிட்டிங்க.. எங்க தூக்கம் பத்தும்.. பார்த்து சூதானமா வண்டி ஓட்டுங்க மாமா.. தூக்கம் வந்தா எங்கையாவது வண்டியே நிறுத்தி தூங்கிடுங்க மாமா.. தூக்கத்தோட ஓட்டாதிங்க மாமா..''
என்றவளோ வழக்கம் போல பல மாமாக்களுக்கு பிறகு கண்மையை அவனின் பின்னந்தலையில் தடவிட,
''எனக்கு தூக்கமெல்லாம் ஒன்னுமில்லே விண்ட்.. நான் பிரெஷா இருக்கேன்! எல்லா நல்லப்படியா நடக்கணும்னு உன் சாமிக்கிட்டே வேண்டிக்கோ விண்ட்.. அந்த டைரக்டர் சார்தான் வர சொல்லிருக்காரு..''
என்றவனோ சட்டை கையை மடக்கி விட,
''நான் அடிச்சேனே அந்த பெரியவரா மாமா..''
என்றவளின் பம்பலில்,
''ஹ்ம்ம்.. அவரேதான்.. பாவம் அவருக்கு என்னே கெட்டே நேரமோ போயும் போயும் உன் கையிலே பேயரே வாங்கிட்டாரு நேத்து..''
என்றவனின் நக்கலில் சிரித்தவளாய் ஜன்னல் திரைசீலைகளை விலக்கிய தென்றலிடத்தில்,
''ஆஹ்ஹான்.. விண்ட்.. நேத்து.. அது.. கொஞ்சம் போதை ஓவர் ஆயிடுச்சு.. அதான் என்னே அறியாமே கொஞ்சம் எல்லை மீறி நடந்துக்கிட்டேன்.. நீ எதுவும் தப்பா எடுத்துக்காதே.. இனி மேலே அப்படி எதுவும் நடக்காது.. சோரி.. நீ இதை பாசிங் க்ளவ்ட்ஸ்சா நினைச்சு.. ஐ மீன் கெட்ட கனவா நினைச்சு மறந்துடு.. சரியா.. நான் கிளம்பறேன்..''
என்றவன் அறையிலிருந்த வெளியேறினான் குடித்த காஃபி செரிக்க.
கதிர் வீச்சுகள் முத்தமிட்டு எழுப்ப கண் விழித்த டாக்டரோ ஒட்டு துணியின்றி கிடக்க நேற்றைய இரவு துணையோடு சல்லாபம் கொண்டது அவனின் ஞாபகத்துக்கு வந்தது.
திகழ் நடந்ததை நினைத்து வருத்தப்படவும் இல்லை சங்கடம் கொள்ளவும் இல்லை. தென்றல் விரும்பியே அவனோடு இணைந்தாள் என்று அவர்களின் கூடலை நியாயப்படுத்தி சம்பவத்தை அவனுக்கு சாதகமாக்கிக் கொண்டான் டாக்டர்.
முந்தி விரித்து விருந்து வைத்த விருந்தனையோ புருஷனின் வார்த்தைகளை கேட்ட நொடி கையிலிருந்த காஃபி காப்போடு மெத்தையில் நடைப்பிணமாய் வந்தமர்ந்தாள்.
மைவிழிகளின் கண்மை கரைந்தோடியது காரிகையின் விழிகளிலிருந்து.
அடிவயிறு வேறு நேற்று திகழின் வேகத்தில் சுகவேதனை அனுபவித்த சூடு தணியாது இன்னும் வலிக்கொண்டிருக்க ஆளானவனோ நடந்த தாம்பத்தியத்தையே தீய சொப்பனமாய் நினைத்து மறந்திட சொல்லி செல்லும் கொடூரத்தை எங்கனம் வாய் விட்டு கதறுவது என்றறியா பேதையோ மெத்தையில் சரிந்தாள் மௌன சிலையாய் உள்ளம் உலையாய் கொதித்து வெம்பிட.
திறலினி தென்றல் அறிவாள் திகழ் இலயனுடன் அவளுக்கு நடந்த திருமணம் ஊரறிய நிகழ்ந்த வைபோகமில்லையென்று.
ஆனால், அவனுடன் இத்தனை காலம் வாழ்ந்து நேற்று நிர்வாண கோலம் கொண்டு கணவனவன் தீண்ட சிணுங்கி சிலாகித்து உச்சம் தொட்டு இனி உயிர் விடும் வரை அவன் ஒருவனே என்று நிந்தித்தவளை வெறும் தேவைக்கு மட்டுமே தொட்டதாய் திகழ் சொன்னதைத்தான் சீமாட்டியவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://neerathi.com/forum/forums/இருள்-திருடும்-திகழா.142/

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 10
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.