Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 7

''அயோக்கிய ராஸ்கல்!! யார் மேலடா கை வெச்சே! அக்கா தங்கச்சி கூட பொறக்கலே நீ! சீ!!''

என்ற தென்றலின் அர்ச்சனையுடன் கூடிய செவினி அறையை ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் இலவசமாக பெற்றுக் கொண்டு நின்றார்.

''த்த்தூ!! எச்சகளே நாயே!! நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷன்!! உனக்கு கோட்டு சூட்டுத்தான் ஒரு கேடு!!''

என்ற தென்றலின் காரசாரமான வார்த்தைகள் ஆவேசமாய் ஒலிக்க, அங்கே கூடியது கூட்டம்.

காவலாளிகள் செருப்பு கையோடு கொந்தளித்து கொண்டிருந்த தென்றலை தடுக்க முனைய கையாமுய்யா மானிட சந்தைக்குள் எல்லோரை போலவும் வேடிக்கை பார்த்திட வேகம் கொண்டான் திகழ்.

''விடுங்க என்னே!! விடுங்க!! இவனுக்கெல்லாம் செவினி அரை பத்தாது!! செருப்படித்தான் பத்தும்!! இவனே அடிக்காமே எனக்கு இன்னைக்கு தூக்கமே வராது!! விடுங்க என்னே!! விடுங்கன்னு சொல்றேன்லே!!''

வதம் செய்யும் காளியம்மன் கணக்காய் காட்டு கூச்சல் தென்றல் போட சம்பவத்தை வெறுமனே பார்த்திட வந்தவன் ஆடிப்போனான் படம் ஓட்டிக் கொண்டு நிற்பது அவனின் தர்மபத்தினியென்று.

அதிர்ந்தவன் மானிட கும்பலை விலக்கி சம்பவத்தார்களின் பக்கம் நெருங்க,

''மாமா!!''

என்று கதறியவளோ மொத்தமாய் சாய்ந்தாள் அவன் நெஞ்சின் சேலை முந்தானையை முழுதாய் மூடிக்கொண்ட கொலு பொம்மையாட்டம்.

''விண்ட் என்னாச்சு!! என்னாச்சுன்னு கேட்கறேன்லே!! சார் நீங்க எங்கே இங்க!! என்னாச்சு சார்!!''

வந்தவன் என்ன நடந்தது என்று புரியாது அங்கிருந்த இருவரையும் மாறி மாறி நோக்கி வினவ,

''நான் சொல்றேன் மாமா.. இந்தாளு நான் பாத்ரூம் போயிட்டு வெளியிலே வரும் போது என்கிட்ட இங்கிலீஷுலே தஸ்ஸு புஸ்ன்னு என்னவோ சொல்லி என் பின்னாடியே வந்து.. என் முந்தானையே புடுச்சு இழுத்து..''

விண்ட் அழுகையோடு சொன்னதை கேட்டவனோ எதிரே நின்றிருந்த ஆபிசரை பார்க்க அவரோ ஆங்கிலத்தில் கதைத்தார் அவனிடத்தில் நடந்ததை.

திகழின் முகமோ தொங்கிப் போனது ஆங்கில உரையாடல்கள் சூடுப்பிடிக்க. கூடியிருந்தம் மக்களை காவலாளிகள் அங்கிருந்து கலைந்து போக உத்தரவிட்டனர்.

திகழ் முக இறுக்கத்தோடு நெற்றியோரத்தை இறுக்கி ஓரக்கண்ணால் மணவாட்டியவளை வெட்டி போட, இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்த தென்றலோ அச்சங்கொண்டு பதறினாள்.

''இவனே தமிழ்லே பேச சொல்லுங்க மாமா! தமிழ்லே பேச சொல்லுங்க! இல்லாட்டி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உங்க மனசே கெடுத்திடுவான்!''

என்று அவனின் சட்டையை கசக்க,

''பேசாமே இரு விண்ட் சொல்லிட்டேன்!!''

என்றவனோ முன்னிருக்கும் ஆபிசருக்கே முக்கியத்துவம் கொடுத்தான் அழுத்தமான தொனி கொண்டு.

''இல்லே மாமா அவன் நல்லவன் இல்லே! தப்பானவன்! நிஜமாவே அவன் என்னே!''

''வாயே மூடு விண்ட்! அறைஞ்சேனா பாரு!''

என்று அவளிடத்தில் கோபமாய் எகிறிய திகழ் இலயனோ திரும்பினான் ஆபிசரிடத்தில்.

எவ்வளவோ முயற்சித்தான் திகழ். பேசி தீர்த்திடலாம் என்றான். வேலைக்கு ஆகவில்லை. மன்னிப்பும் கோரினான். அதுவும் செல்லவில்லை. கெஞ்சினான் அதுவும் எடுப்படவில்லை.

மனசிறங்காத ஆபிசரோ கடுங்கோபத்தோடு அங்கிருந்து நகர்ந்தார் திகழின் டாக்டர் லைசன்ஸை தாற்காலிகத்துக்கு ரத்து செய்வதாய் சொல்லி.

எல்லாம் தென்றல் அடித்த கூத்தால் வந்த வினைதான்.

பணம் பத்தும் செய்வது போல் பதவியும் நன்றாகவே வெச்சு செய்யும் இடம் பொருள் ஏவல் பார்த்திடாது.

திகழ் இயலனின் பிறந்தநாளை முன்னிட்டு அவனுக்கு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள் மெடிக்கல் சங்க உறுப்பினர்கள். அதற்கு தென்றலையும் உடனழைத்து வந்திருந்தான் திகழ்.

அதுவும் செழியனின் வற்புறுத்தலின் பேரில். வேண்டா வெறுப்பாய் கண்டாங்கி சேலை கட்டி தலை நிறைய மல்லி வைத்த அவளை விருந்துக்கு கூட்டி வந்தவனோ ஓரிடத்தில் அவளுக்கு வேண்டிய உணவுகளை தட்டில் போட்டு கொடுத்து அமர வைத்து விட்டான்.

''நீங்க எங்க மாமா போறீங்க!''

''ஐயோ விண்ட்!! வாய மூடு! ஏன் அலறே!''

பொத்தினான் சத்தமாய் கேட்டவளின் வாயை திகழ்.

''என்னே மாமா நீங்க.. என்ன மட்டும் இங்க தனியா விட்டுட்டு போறீங்க..''

என்றவளோ அவனை பாவமாய் பார்க்க,

''ஏன் இந்த ஹால்லே இருக்கறவங்களையெல்லாம் பார்த்தா மனுஷங்க மாதிரி தெரியலையா!!''

''ஆனா.. என் மாமா நீங்க ஒருத்தர்தானே.. உங்ககூட இருக்கறே மாதிரி வருமா..''

''இதெல்லாம் வக்கனையா பேசு!!''

''ஏன் மாமா என்னே திட்டறீங்க.. இதுக்கு நான் வீட்டுலையே இருந்திருப்பேன்!''

''நான் மட்டும் என்னே உன்னே கூட்டிக்கிட்டு வறென்னு அடிச்சிக்கிட்டேன்னா!! எல்லா அந்த டேடியாலே வந்தது!''

கடுகடுத்தான் திகழ் சுற்றி முற்றி பார்த்து மற்றவர்களிடம் மட்டும் புன்னகையை சிந்தி.

''நீங்க போய் உங்க கூட்டாளிங்க கூட சந்தோஷமா இருங்க மாமா.. நான் இங்கையே இருக்கேன்.. நீங்க வரே வரைக்கும்..''

சொன்னவளின் முகமும் குரலும் மாறி போக,

''ஏய் விண்ட்.. என்ன பாரு இங்க.. கோச்சிக்கிட்டியா..''

என்றவனோ அவளின் முகத்துக்கு கீழே குனிந்து நோக்க,

''இல்லே மாமா.. எனக்கு புரியுது நீங்க உங்க ஆளுங்களாம் இங்கிலீஷுலே பேசுவீங்க எனக்கு ஒன்னுமே தெரியாது.. அது உங்களுக்கு அவமானம்.. அதானே..''

''லூசு!! அதெல்லாம் ஒன்னும் இல்லே!! சும்மா ஏதாவது உளறிக்கிட்டு.. இங்க ஆம்பளே பொம்பளே எல்லாம் தண்ணியடிப்பாங்க.. அப்பறம் உன்னையும் குடிக்க சொல்லுவாங்க.. உனக்கு ஓகேனா சொல்லு.. போகலாம்..''

''ஆத்தி!! குடிக்கணுமாமே!! நான் குடிகாரியா என்னே!! குடும்ப குத்து விளக்காக்கும்!!''

என்றவளோ அந்த குட்டி சேரில் அமர்ந்தாற்படி வழக்கம் போல் அவளின் கண்மையை எடுத்து அவனின் பின்னந்தலையில் தடவ,

''அப்போ சமத்து புள்ளையாம் இங்கையே உட்கார்ந்து சாப்பிடுவியாம்.. நான் ஒரு எட்டு அந்த பக்கம் போயிட்டு வந்திடுவேனா..''

என்றவனோ அவளின் நாசியை பிடித்தாட்டி அங்கிருந்து நகர்ந்தான்.

கரண்டியில் சாப்பிட ஏதோ கற்றுக்கொண்டு விட்டாள் வள்ளியின் உதவியால் தென்றல். ஆகவே, உண்டு முடித்தவள் ஒன்னுக்கு போகணும் என்று அவள் மாமாவை தேடி பிடித்து ஓடினாள் அவன் நோக்கி.

பக்கம் போய் நின்றவளோ குசுகுசுவென ரகசியம் பேசி நெளிய,

''இரு விண்ட்.. அந்த பொண்ணே கூப்பிடறேன்.. அவுங்க கூட்டிக்கிட்டு போவாங்க..''

என்றவனோ அங்கிருந்த பெண் பணியாளினியை அழைக்க முனைய,

''ஐயோ மாமா நான் தனியாத்தான் போவேன்..''

''கடவுளே!! அப்பறம் என்னே எல்லாரும் பத்து பேரே கூட்டிக்கிட்டா போவாங்க!! அவுங்க உனக்கு வாஸ் ரூமுக்கு வழி காட்டுவாங்கே விண்ட்! அவுங்க கூட போ!''

சலித்துக் கொண்டான் திகழ் பல்லைக் கடித்து கொஞ்சம் கடுப்போடு.

''என்னே மாமா.. யாருன்னே தெரியாதவங்க கூட போய் போன்னு சொல்லறீங்க.. நீங்க வாங்களேன் மாமா..''

''முதல்லே இந்த மாமான்னு கூப்பிடறதே நிறுத்தறியா!! எத்தனே தடவே சொல்லிட்டேன்!''

''நான் என்னே மாமா பண்றது.. எனக்கு அப்பிடித்தான் வருது!''

''எல்லாம் என் தலையெழுத்து! வந்து தொலை!''

என்றவனோ கடுப்பில் முனகிக் கொண்டே வீட்டாள் அவளை கழிவறை பக்கமாய் அழைத்து போக,

''நீங்க போங்க மாமா.. நான் வந்திடுவேன்.. எனக்கு தெரியும்..''

''இதுக்கொன்னும் குறைச்சல் இல்லே!!''

என்றவனோ அங்கிருந்து நகர்ந்து அவன் கூட்டத்தோடு மீண்டும் மிங்களாகி போனான்.

அப்போதுதான் கையில் வைன் கிளாஸோடு அளவளாவி கொண்டிருந்தோரின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது திருமதி திகழின் ஆரவாரம்.

உண்மையிலே என்ன நடந்ததென்றால் அம்மணி அணிந்து வந்த சேலையின் பின்புறத்தில் என்னவோ ஒட்டிக்கிடக்க அதை பெரியவரவர் அவளிடத்தில் ஆங்கிலத்தில் சொல்ல அது புரியாதவளோ பேந்த முழித்து நின்றாள்.

மகள் வயதில் இருப்பவளிடத்தில் பெருசு திசுவை நீட்ட அதை கூட வாங்காதவளோ அவரை முறைத்து ஒதுங்கி போனாள்.

ஆனால், வயதானவரோ மற்றவர்கள் கண்கள் அவள் மீது தவறாய் பதிந்திட கூடாதென்பதற்காக அவளின் புடவையை உடலை சுற்றி போர்த்திட சொல்லும் எண்ணத்தில் மடவரல் அவளின் முந்தானையை கைப்பற்றினார்.

இருந்தும், அவரின் நல்லுள்ளம் புரியா தென்றலோ மொத்தத்தையும் தவறாய் புரிந்துக் கொண்டு ரணகளம் செய்து விட்டாள்.

அவமானப்பட்ட ஜீவனோ மெடிக்கல் சங்கத்தின் தலைமையாய் இருக்க தென்றலின் மீது பதவியாள் கொண்ட ஆத்திரம் அப்படியே கணவன் திகழ் மேல் திரும்பியது.

இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://neerathi.com/forum/forums/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE.142/
 

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 7
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top