- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் 8
காரை ராக்கெட் வேகத்தில் ஒட்டிக்கொண்டு வந்தான் திகழ் ரோட்டில் எவனையும் மதிக்காது. சீட் பெல்ட் போட்டிருந்தாலும் தென்றலவள் அங்கும் இங்கும் தாவாத குறைதான்.
''மாமா.. சத்தியமா எனக்கு தெரியாது மாமா.. அவர் பெரிய ஆளுன்னு..''
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க தன்னிலை விளக்கம் கொடுக்க முனைந்தாள் புருஷனின் வேலைக்கு வேட்டு வைத்த மவராசி.
''தெரிஞ்சிருந்தா மட்டும் அறையாமே விட்டிருப்பியா!! இதுலே செருப்பாலே வேறே அடிப்பாளாம் செருப்பாலே!! என்னே அடி!! உன்னே கட்டினேன்லே
அந்த செருப்பாலையே என்னே அடி!!''
கத்தினான் காது செவிடாக ஆத்திரங்கொண்டு திகழ்.
கணவனவன் கோபத்தை கடந்த ஒரு மணிநேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் தென்றல். கல்யாணமாகிய ஒரு வருட காலத்தில் இதுதான் முதல் முறை அவன் சினப்பட்ட சிங்கமாய் கர்ஜிப்பதை காரிகையவள் காண்பது.
''நான் தெரியாமே அடிச்சிட்டேன் மாமா.. நான் வேணும்னா அந்த பெரியவருக்கிட்டே மன்னிப்பு கேட்கவா..''
''நீ ஒரு மயிரும் புடுங்க வேணாம்!! வாயே மூடிக்கிட்டு பேசாமே இருந்தாலே போதும்!!''
என்றவன் போட்ட சத்தத்தில் அதிர்ந்து போனவள் அழுகையோடு அப்படியே ஸ்தம்பித்து மௌனமாகி விட்டாள் அவனின் காட்டமான வார்த்தையில்.
''படிச்சு படிச்சு சொன்னேன் அந்தாளுக்கிட்டே!! கேட்டாரா!! இப்போ பாரு எங்க வந்து நிக்குதுன்னு! இதுக்குத்தான் இங்கிதம் தெரியாத பட்டிக்காட்டு முட்டாளையெல்லாம் அவ்ளோ பெரிய ஃபங்சன் கூட்டிக்கிட்டு போறது யானை தன் தலையிலேயே மண்ணே வாரி போட்டிருக்கறதுக்கு சமம்னு சொன்னேன்!! கேட்டாரா அந்தாளு!! போயி இருக்கு அவருக்கு!!''
என்ற டாக்டரோ லைசன்ஸ் வித்ஹோல்ட்டான கடுப்பில் மனசில் உள்ள அத்தனை வக்கிரத்தையும் கொட்டிட தாரமாகி போனவளோ அவளின் நிலைக்கு அவளே பரிதாபப்பட்டு ஜன்னலோரம் முகத்தை புதைத்து கண்ணீர் ஒப்பாரி கொண்டாள்.
எதார்த்தமாய் நடந்த கல்யாணம்தான். தெரியும் தென்றலுக்கு.
ஆனால், பெண்ணவளை ஒரு சக மனுஷியாக கூட திகழ் இலயனுக்கு பிடிக்கவில்லை என்ற உண்மையறிய உடைந்து விட்டாள் பேதையவள். அதுவும் வரிக்கு வரி வாய் நிறைய விண்ட் என்றழைப்பவன் நெஞ்சில் இவ்வளவு நஞ்சா என்று வேதனைக் கொண்டாள்.
''போச்சு எல்லாம் போச்சு!! என் கேரியரே போச்சு!! அந்த ப்ளேக் மார்க்காளே என் வாழ்க்கையே போச்சு!! லைஃப் லோங் இனி என் சர்வீஸ்லே அழிக்க முடியாதே ஒன்னாகிடுச்சு அது!! ச்சே!! என்னென்னல்லாமோ யோசிச்சு வெச்சிருந்தேன்!! இப்போ எல்லாம் வெறுங்கனவாவே போயிடுச்சு!!''
அடித்தான் திகழ் சீறிய கதத்தோடு கார் ஸ்டேரிங்கை.
''மாமா.. கோபப்படாதீங்க மாமா.. எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் ஆற அமர பேசுவோம் மாமா..''
என்றவளோ எங்கே ஆவேசம் கொண்டிருக்கும் திகழ் கார் ஓட்டுவதில் கவனத்தை சிதற விட்டிடுவானோ என்று பயந்து அவனின் தோளில் கை வைத்தாள்.
''கையே எடு!! வந்துட்டா மாமா நோமான்னு!! இப்போ இவ்ளோ வக்கணையா பேசறியே.. இதே மாதிரி நீ அவரே அடிக்கறதுக்கு முன்னாடி வந்து என்கிட்டே கேட்டிருக்கணும்!! அடிக்கவா வேணவான்னு!!''
என்றவனின் ஆத்திரம் அடங்காது மேலும் கூடிப்போக அதற்கு மேலும் அவனை ஏதும் சீண்டாது அமைதியாக அமர்ந்துக் கொண்டாள் குலியவள்.
பதினைந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தார்கள் தம்பதிகள் இருவரும்.
''நீ போ..''
என்றவனோ கார் லோக்கை திறந்து விட,
''நீங்க மாமா..''
''வெளிய போயிட்டு வந்துடறேன்..''
''இதுக்கு மேலையும் வெளிய போகணுமா மாமா..''
என்றவள் பரிவோடு கேட்க, அவளை முறைத்தவனோ காரின் எண்ணையை அழுத்தினான்.
இன்னும் ஐயனார் மலையிறங்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டவளோ வேறேதும் பேசாது கார் கதவை சாத்தி வீடு நோக்கி பயணித்தாள்.
தென்றலை டிராப் செய்த டாக்டரோ நேராய் காரை பப் ஒன்றிற்கு விட்டான். மனசு ஆறும் வரை குடித்தவன் விடியற்காலை ஒன்றிற்கு வீடு திரும்பினான் தள்ளாட்டமாய்.
அவனுக்காகவே காத்திருந்தாள் தென்றல் தூங்காது.
அறை நோக்கியவன் நிற்க கூட முடியாது தள்ளாடினான்.
''விண்ட்.. காஃபி வேணும்.. தலை ரொம்ப வலிக்குது..''
என்றவன் டவலோடு குளியலறை நுழையும் முன்னரே வாந்தியெடுத்து தரைக்கு அபிஷேகம் செய்தான்.
அவனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசாதவளோ அவன் கக்கி வைத்த கன்றாவி அனைத்தையும் துடைத்து கிளீன் செய்தாள்.
அதற்குள் குளித்து முடித்த வந்திருந்தான் திகழ் போதை கொஞ்சமாய் இறங்க.
''விண்ட்.. காஃபி..''
என்றவனின் வாக்கியம் முடியும் முன்னரே எடுத்து நீட்டினாள் வதுகையவள் ஏற்கனவே சுடசுட கலக்கி வைத்திருந்த காஃபியை.
ஈரத்தலையை துவட்டிக் கொண்டவனோ காஃபியை ஒரே முடக்கில் நெட்டி குப்பிற விழுந்தான் மெத்தையில்.
ஒரு வார்த்தையேனும் அந்த காஃபியையும் விண்ட்டையும் தவிர அதிகமாய் பேசிடுவான் என்று எதிர்பார்த்திருந்த தென்றலுக்கு பெருத்த ஏமாற்றமே.
அழுகையோடு மஞ்சம் சரிந்தாள் மங்கையவள்.
தலைவலிக்கு வாக்கப்பட்டவனோ துயில் கொள்ளாது புரண்டு படுத்தான் பலமுறை. நித்திரை கொள்ளாது விழித்திருந்த பூமகளோ ஏதாவது கேட்டிடலாம் என்று நினைக்க ஒருபுறம் பயம் அவளை தடுத்துது எங்கே மீண்டும் குறைத்திடுவானோ திகழென்று.
சடீரென்று எழுந்தவனோ தடதடவென கீழ் மாடி நோக்கினான். பின்னாலேயே தென்றலும் ஓடினாள். அடுக்களை நுழைந்தவன் பிரிட்ஜை திறந்து அலசியெடுத்தான் ரெண்டு மது கேன்களை.
புதுசாய் பார்ப்பது போல் அதை திருப்பி முன்னும் பின்னும் பார்த்தவன் அதன் நிலவரங்களை படித்து பின் அதை படக்கென்று உடைத்து கடகடவென வாயுக்குள் இறக்கினான்.
மாடிப்படியிலிருந்து கணவனின் செயலை கண்டவளுக்கோ நின்ற இடத்திலேயே தொண்டைக்குழி அடைத்தது. சோபாவில் சென்றமர்ந்தான் தலையை தரை பார்க்க குனித்து மற்றொரு கேனையும் உடைத்து பருகினான்.
தென்றலோ பூனைப்போல் சோபாவின் எதிரே வந்து நின்றாள்.
''மாமா.. போதும்.. வந்து படுங்க..''
என்றவளை திரும்பி மேலும் கீழும் அளந்தவன்,
''நீ போய் படு..''
''நீங்களும் வாங்க மாமா.. ரொம்ப குடிச்சிட்டிங்க.. உடம்புக்கு நல்லதில்லே மாமா..''
''கொஞ்ச நேரம் என்னே நிம்மதியா விடறியா!! எப்போ பார்த்தாலும் மாமா நோமான்னு நொட்டிக்கிட்டு!! ஏனோயிங் பீட்ச்!! (annoying bitch)''
என்றவனோ கையிலிருந்த கேனை அவள் நோக்கி வீச தூக்கி பின் நிறுத்தினான்.
திகழ் இலயன் முகத்தையும் அவன் கையையும் பார்த்த தென்றலோ வாய் பொத்தி கதறியவாறே மேல் மாடி ஓடினாள் அவன் வார்த்தைகளில் நெஞ்சம் துண்டாக.
இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://neerathi.com/forum/forums/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE.142/

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 8
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.