ram_ks
New member
- Joined
- May 8, 2024
- Messages
- 11
உறையும் நொடியில்!
உறையும் நொடியில்,
உன்மத்தம் ஏனோ!
தினமும் உனக்குத்,
திருநாள் தானோ!
பாடும் பாட்டில்,
காந்தர்வம் ஏனோ!
கூடும் கூட்டில்,
மாந்தர்வம் தானோ!
புரிதலும், தனிதலும்,
புகலிடம் தேட...
திகட்டத் திகட்ட,
தேன்குடியும் தேட!
வருவதை எண்ணி,
மயங்கும் முன்னே;
வந்ததைக் கண்டு,
பரவசம் என்னே!
எழுதி எழுதி,
வலிக்காத கைகள்!
எண்ணி எண்ணித்
தேயாத எண்ணங்கள்!
மூச்சு முட்டக்
குடிக்கும் மூளை!
ஆசைகளை அடக்கா,
அற்பமான மூளை!
தேவை அதற்கு,
அமைதியின் மூலை!
மந்திரக் கூட்டில்,
மந்தார முகவரி!
சென்று பார்த்தால்,
ப்ரம்மனின் முக-வரி!
உள்ளே சென்றால்,
உள்ளே செல்லலாம்.
வெளியே வந்தாலும்,
உள்ளேயே செல்லலாம்.
உள்ளே கண்டதை,
வெளியே சொல்லலாம்.
வெந்தாயினும், நொந்தாயினும்,
நில்லாமல் நீந்தும்!
வேட்கை அஃது,
வேகாமல் வேகும்.
உனக்கும் சேர்த்து,
யானே பாடவா?
பலகோடி ஆண்டுகள்,
சாகாவரம் பெறவா?
குளிரக் குளிர,
பனிமலைத் தவமோ!
என்னப்பனின் அருகே,
விண்ணப்பமும் போடவோ!
இருவரும் இயைந்தால்,
விண்-அப்பமும் செய்வோம்.
இயற்கையும் இயைந்தால்,
எதுவும் செய்வோம்!
அண்ட பிரம்மாண்டத்தில்,
கடலும் துளியே!
வாழ்வின் வட்டத்தில்,
துளியும் கடலே!
தத்துவ முத்துக்கள்,
வித்தகனின் சொத்துக்கள்!
என்னை அறிந்தபின்,
உன்னையும் அறிவேன்.
என்னை அரிந்துகொண்டே,
உன்னைக்கூட அரிவேன்.
ஆட்டத்தின் போக்கு,
ஆவேசத்தின் அதிரடி.
தற்போதைய நோக்கு,
வேடத்தின் சரவெடி!
குளிர்ந்த நீரோடையில்,
குருதியும் இலயிக்கும்.
கானக கானத்திலே,
சர்வமும் இசைக்கும்.
இசையதனை ஊற்றிக்கொண்டு,
இன்பமாய்ப் பாடலாம்!
எங்கே லயனமென்று,
தேடிக்கொண்டே ஓடலாம்.
எல்லாம் கற்றுக்கொண்டு,
வேண்டுமென்றே மறக்கவேண்டும்.
புரிதலில் குறையிருப்பின்,
வேண்டாமென்றே நினைக்கவேண்டும்.
நிஜமான ஆட்டமாட,
கூட்டமொன்று வேண்டாம்!
தெரிந்த கணக்கைப்போட,
கூட்டலொன்றும் வேண்டாம்!
எங்கும் எதிலும்,
நிலைத்து நிற்கவே;
பங்கும் பதிலும்,
பக்குவமாய் வந்துசேருமே!
அதுவரை பொறுக்க,
பொறுமைதான் இல்லையே!
எங்கெங்கும் கொட்டிக்கிடக்கும்,
பெருமைதான் தொல்லையே!
பெரும்பகழிக் கூத்தனே,
என்னையும் வாழவை!
மாசுகளைச் சுருக்கி,
மாந்தரையும் மீளவை!
இன்னும் உண்டு,
அறிந்தால் கொற்றம்!
பற்றை விட்டால்,
அதுவே பற்றும்.
© Stellar Ram 2024
© ராம் குமார் சுந்தரம் 2024
© Ram Kumar Sundaram 2024
உறையும் நொடியில்,
உன்மத்தம் ஏனோ!
தினமும் உனக்குத்,
திருநாள் தானோ!
பாடும் பாட்டில்,
காந்தர்வம் ஏனோ!
கூடும் கூட்டில்,
மாந்தர்வம் தானோ!
புரிதலும், தனிதலும்,
புகலிடம் தேட...
திகட்டத் திகட்ட,
தேன்குடியும் தேட!
வருவதை எண்ணி,
மயங்கும் முன்னே;
வந்ததைக் கண்டு,
பரவசம் என்னே!
எழுதி எழுதி,
வலிக்காத கைகள்!
எண்ணி எண்ணித்
தேயாத எண்ணங்கள்!
மூச்சு முட்டக்
குடிக்கும் மூளை!
ஆசைகளை அடக்கா,
அற்பமான மூளை!
தேவை அதற்கு,
அமைதியின் மூலை!
மந்திரக் கூட்டில்,
மந்தார முகவரி!
சென்று பார்த்தால்,
ப்ரம்மனின் முக-வரி!
உள்ளே சென்றால்,
உள்ளே செல்லலாம்.
வெளியே வந்தாலும்,
உள்ளேயே செல்லலாம்.
உள்ளே கண்டதை,
வெளியே சொல்லலாம்.
வெந்தாயினும், நொந்தாயினும்,
நில்லாமல் நீந்தும்!
வேட்கை அஃது,
வேகாமல் வேகும்.
உனக்கும் சேர்த்து,
யானே பாடவா?
பலகோடி ஆண்டுகள்,
சாகாவரம் பெறவா?
குளிரக் குளிர,
பனிமலைத் தவமோ!
என்னப்பனின் அருகே,
விண்ணப்பமும் போடவோ!
இருவரும் இயைந்தால்,
விண்-அப்பமும் செய்வோம்.
இயற்கையும் இயைந்தால்,
எதுவும் செய்வோம்!
அண்ட பிரம்மாண்டத்தில்,
கடலும் துளியே!
வாழ்வின் வட்டத்தில்,
துளியும் கடலே!
தத்துவ முத்துக்கள்,
வித்தகனின் சொத்துக்கள்!
என்னை அறிந்தபின்,
உன்னையும் அறிவேன்.
என்னை அரிந்துகொண்டே,
உன்னைக்கூட அரிவேன்.
ஆட்டத்தின் போக்கு,
ஆவேசத்தின் அதிரடி.
தற்போதைய நோக்கு,
வேடத்தின் சரவெடி!
குளிர்ந்த நீரோடையில்,
குருதியும் இலயிக்கும்.
கானக கானத்திலே,
சர்வமும் இசைக்கும்.
இசையதனை ஊற்றிக்கொண்டு,
இன்பமாய்ப் பாடலாம்!
எங்கே லயனமென்று,
தேடிக்கொண்டே ஓடலாம்.
எல்லாம் கற்றுக்கொண்டு,
வேண்டுமென்றே மறக்கவேண்டும்.
புரிதலில் குறையிருப்பின்,
வேண்டாமென்றே நினைக்கவேண்டும்.
நிஜமான ஆட்டமாட,
கூட்டமொன்று வேண்டாம்!
தெரிந்த கணக்கைப்போட,
கூட்டலொன்றும் வேண்டாம்!
எங்கும் எதிலும்,
நிலைத்து நிற்கவே;
பங்கும் பதிலும்,
பக்குவமாய் வந்துசேருமே!
அதுவரை பொறுக்க,
பொறுமைதான் இல்லையே!
எங்கெங்கும் கொட்டிக்கிடக்கும்,
பெருமைதான் தொல்லையே!
பெரும்பகழிக் கூத்தனே,
என்னையும் வாழவை!
மாசுகளைச் சுருக்கி,
மாந்தரையும் மீளவை!
இன்னும் உண்டு,
அறிந்தால் கொற்றம்!
பற்றை விட்டால்,
அதுவே பற்றும்.
© Stellar Ram 2024
© ராம் குமார் சுந்தரம் 2024
© Ram Kumar Sundaram 2024
Author: ram_ks
Article Title: உறையும் நொடியில்! - கவிதை
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உறையும் நொடியில்! - கவிதை
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.