Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
29
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும் படுபயங்கரமான சித்தரிப்புகளும் அடங்கிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட வாசர்களுக்கு மட்டுமே உரித்தான படைப்பாகும். கதைப்போக்கு நாவல் வாசிப்போரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

ஆகவே, இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல் சுகமற்றவர்கள் இக்கதையைத் தவிர்ப்பது நல்லது.

ஆதலால், கதையோடு ஒன்றி அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டோர் மட்டும் இக்கதையை படிப்பது நல்லது.

நன்றி. வணக்கம்.

______________________________________________________________

பெண்கள் மூவரும் தங்கள் ஊரை வந்து அடைந்தனர்.. சாஹிபா மற்றும் அவளின் தோழிகள் அங்கேயே இறங்கிக் கொள்ள போலீஸ் அதிகாரிக்கு மட்டு நகரில் ஏதோ வேலை இருந்ததனால் தர்ஷன் ,யசோ மற்றும் அசோக்கை தானே அழைத்து செல்வதாக கூறினார்.. அவர்களும் இந்நேரத்திற்கு பஸ் கிடைக்குமா என்ற ஐயத்தில் சரியென ஆமோதித்தனர்... சாஹியிடம் கண் ஜாடையிலேயே தர்ஷன் விடை பெற்று சென்றான்...

தோழிகள் மூவரும் தங்களது ஆடையினை நேர்த்தியாக சரி செய்து கொண்டு அவரவர் இல்லம் செல்ல ஆயத்தமானார்கள்... "வீட்ல இரிக்றவங்க கிட்ட பயப்புர்ர மாதிரி எதையும் பேசிடாதீங்க " என சாஹி கூற நண்பிகளும் அதையே ஆமோதித்தார்கள்... கதீஜா மற்றும் சைத்தூன் தங்களின் வீடு நோக்கி ஒரு திசையிலும் சாஹிபா இன்னொரு திசையிலும் என பயணப்பட ஹதீஜா தன் வீட்டை அடைந்தாள் ... அவளது வீடு மிகவும் துக்கத்தில் மூழ்கி காணப்பட்டது..

ஹதிஜாவிற்கு புரிந்து விட்டது.. மாட்டுக்கார கனிபா முதலாளியின் இறப்பு சம்பவம் தான் தன் வீட்டின் இந்நிலைக்குக் காரணம் என்று... ஹதீதா பணக்காரியும் அல்லாது ஏழையும் அல்லாது இரண்டிற்கும் இடையில் வாழும் பெண்... " சுதந்திரமாக கனவு காண முடியும் ஆனால் அதை செயல்படுத்தும் கைங்கரியம் இல்லை" என்ற வாழ்க்கை வாழ்பவள்.. தந்தை புகையிலை தோட்டத்தில் வேலை செய்பவர்.. அக்கா ஒருத்தி உள்ளாள்... அருகில் தான் அவளின் வீடு.. அவள் கணவன் சூது விளையாட்டிற்கு பேர் போனவன்... ஆனால் அதற்கு அவளது அக்காவுமே உடந்தை என்பதுதான் இங்கு விந்தை .. கதீஜாவின் தாய் இடியாப்பம் அவித்து விற்பனை செய்கிறார்.. இவர்களின் வீட்டில் கதீஜா தான் கொஞ்சம் தெளிவான, மற்றும் படித்த பெண்ணாவாள் ....

சாஹிபா வீட்டை அடைந்ததும் அவள் அண்ணன் ஜமால் மிகவும் பரபரப்பாக எங்கோ வெளியாகிக் கொண்டிருந்தான்... "என்ன நீ இப்படி பறக்குற "என்று சாஹிபாவின் குரலில் சட்டென திரும்பிய அவன் கண்கள் கலங்கி இருந்தது... அவனை ஒரு நொடி ஆழமாக பார்த்த சாஹி " என்ன நீ!! நல்லாத்தானே இருக்க, முகம் எல்லாம் சாதியா கவலை மாதிரி கிடக்கு.. என்ன நடந்த உனக்கு" என்று கேட்டாள்...

தங்கையின் கையை மென்மையாக பற்றிய ஜமால் "யுனிவர்சிட்டிக்கு போற வழியில ஃபயரிங்ககுனு கேள்விப்பட்டேன்.. உன்ன பாக்க வாரதுக்கு தான் இவ்வளவு அவசரமா ரெடியானேன்.. உனக்கு ஒன்னும் இல்லை தானே... சரி யார் கூட நீ வந்த" எனக் கேட்டான்.. " எனக்கு எதுவும் இல்ல .. நான் நல்லாத்தான் இருக்கேன்" என்றும் தான் ஊருக்கு வந்த கதையையும் ஜமாலிடம் சுருக்கமாக சொல்லி முடித்தால் சாஹிபா ...

அனைத்தையும் செவி மடுத்த ஜமால் "இல்ல நீ ஊட்டுக்குள்ளுக்கு போ .. எனக்கு கொஞ்சம் வேலை கிடக்கு.. நான் வெளியே போக போறேன்.." என்றான் ஜமால்.. " சரி!! உம்மா எங்க" என சாகிபா கேட்க "உள்ளுக்குள்ள தான் இருக்காங்க" என்ற ஜமால் "நீ ஊட்டுக்குள்ள போ" எனக்கூறி விட்டு அவள் அழைக்க அழைக்க சென்று விட்டான்...

அந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் வருகைக்கு முன்னர் முஸ்லிம் மற்றும் இந்துக்கள் உறவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது.. சாஹிபாவின் ஊருக்கு இறைவனின் கொடை அளவுக்கதிகமாகவே இருந்தது... விவசாயம், வியாபாரம் , ஆடு மாடு பண்ணை, தோட்டம் துறவு போன்றவற்றால் கல்வியை விட கையில் காசு அதிகம் புலங்கியது எனலாம்... இரண்டு சமூகமும் ஒருவரில் ஒருவர் தங்கி காணப்பட்டனர் ..

சாஹிபாவின் வீட்டிற்கு ஒரு இந்து பெண் வேலைக்கு வருவார்.. அவரது கணவர் ஒரு குடிகாரன்.. அவருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள்.. மூத்த பிள்ளைகள் மூன்றுமே பெண்பிள்ளைகள் ஆகும்.. நான்காவதாக ஒரு ஆண்பிள்ளை.. முதலாவது பெண் பிள்ளையின் வயது 14 ஆகும் ... இயக்கத்தினர் ஒரு எழுதப்படாத விதியை தமிழ் மக்களில் மீது திணித்து இருந்தனர்.. "வீட்டுக்கு ஒரு பிள்ளை ஈழப்போராட்டத்திற்கு வேண்டும்" என்பதே ஆகும்.. எத்தனையோ இந்து தாய்மார்கள் இவர்களது இத்தகைய செயலால் தங்களது பிள்ளைகளை இழந்து தவித்தனர் ...

சாஹிபா வீட்டுக்குள் நுழைய அந்த வேலைக்கார பெண் தனது தாயிடம் அழுது கொண்டிருப்பதை கண்டாள்.. "உம்மா" என என சாகிபா அழைக்க, அவளது குரலில் நிமிர்ந்து தாய் "வா சாஹி... இங்க பாரு தேவி அழுறா" என்றாள்...

தேவியின் அருகில் முட்டுக் காலிட்டு அமர்ந்த சாகிபா "ஏன் தேபி அம்மா அழுகுறீங்க... என்ன நடந்த உங்களுக்கு" என வாஞ்சையுடன் அவர் தோளைப் பிடித்து கேட்க; அவளின் மடி மடியில் முகத்தை புதைத்து அழுத அப்பெண் "எண்ட மூத்த பொம்பள புள்ளைய இயக்கம் கடத்திட்டு போயிட்டானுங்க.. நான் எப்படி அந்த புள்ளைய காப்பாத்துவேன்" என அழுதாள்... சாஹிபாவுக்கு அவருக்கு ஆறுதல் எவ்வாறு கூறுவது என்று வழி தெரியவில்லை ...

தேவியின் குடும்பத்தில் ஏற்கனவே இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது... அவளது மச்சாள் வீட்டில் மொத்தமாக ஐந்து ஆண் பிள்ளைகள் இருந்தனர் ... மூத்த இரண்டு ஆண் பிள்ளைகளை ஈழப் போராட்டத்திற்கு தருமாறு இயக்கம் அவர்களை கட்டாயப்படுத்தி படாத பாடுபடுத்தி இருந்தது... வேறு வழி தெரியாத அந்த குடும்பம் தங்களுக்குத் தெரிந்த முஸ்லிம்களின் வீட்டில் ஒவ்வொரு பிள்ளையாக மறைத்து வைத்தனர் ... கடைசியில் காப்பாற்றிய ஒரு முஸ்லிம் குடும்பத்தை இயக்கம் காவு வாங்கியதுதான் மீதமானது... தீர்வு இன்னும் எழுதப்படாத இந்தப் போராட்டத்தில் சிதைந்தது மானிடம் , மானம், பொருளாதாரம் என்பனவே என்றெண்ணினாள் சாஹி...

பெருமூச்சுவிட்ட சாஹிபா " இப்ப என்ன செய்யப் போறீங்க.." எனக் கேட்டாள்..."எனக்கு என்ன செய்ரன்டே தெரியாதே புள்ள " என தேவி அழுகவும், உங்கட தங்கச்சிக்கு புள்ள இல்ல தானே "உங்க மூத்த பிள்ளய அவங்கட புள்ளனு விதானைக்கிட்ட உறுதிப்படுத்தி கடிதத்தை எடுத்து இயக்கத்துக்கிட்ட காட்டி உங்கட பிள்ளைய கூட்டி வாரத்துக்கு வேலை செய்வோம் தேவி அம்மா "என்றாள் ...

இயக்கத்தின் இவ்வாறான செயல்களை எதிர்க்க EPLRF, Telo, Eros போன்ற அமைப்புகள் தோற்றம் பெற்றன... இதில் அதிகமாக இயக்கத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களே இணைந்தனர்.... சொல்ல போனால் எல்லோரும் போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏதோ ஒரு வகையில் கஷ்டத்துக்கு ஆளாக்கினர்..

ஜமால் போய் நின்ற இடம் தனது பாடசாலை நண்பன் ஒருவனின் வீட்டில்... அவன் இராணுவத்தில் பணியாற்றுகிறான்... அக்காலத்தில் அரச படையினருக்கு விடுமுறை என்பது எட்டாக் கனியாகும்... இவரது மனைவிக்கு மகப்பேறு காலம் என்பதால் இராணுவ அதிகாரி விடுப்பில் வந்திருந்தார்...

உணவு உண்டு கொண்டிருந்த ஜமாலின் நண்பர் வீட்டின் வெளியே யாரோ தன்னை அழைக்கும் சத்தம் கேட்கவும் சிறியரக துப்பாக்கி ஒன்றை மறைவாக எடுத்துக் கொண்டு யார் என்று பார்க்க சென்றார்... ஏன் என்றால் தெரிந்தவர்களை கூட்டி வந்து உரிய நபரை பெயர் சொல்லி அழைத்து அவரை அந்த இடத்திலேயே கொல்வது தான் அக்கால போராளிகளின் கைங்கரியம்...

ஜமாலைக் கண்ட நண்பன் மிகவும் மகிழ்ந்தார்... "அடடே!! மச்சான்.. எப்டிடா இருக்க... நல்லா இருக்கியா? பாத்து எவ்வளவு நாள் ஆகிட்டு... உம்மா, வாப்பா, சாஹிபா எல்லாரும் சுகமா இரிக்காங்களா?" என
ஆரத் தழுவி விசாரித்தார்...

தொடரும்.....
 
Back
Top