இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 25
வீட்டினுள் சென்ற வெயினி ரவியும் பெற்றோரும் வெளியே நிற்பதைக் கண்டு "என்ன வெளியில நிக்கிறீங்க உள்ள வாங்க" என அழைத்தாள்.. அவள் அழைக்கவும்" சரி வாங்க போகலாம் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும்" என ரவி முன்னெச்சரிக்கையாக பெற்றோரிடம் கூறி உள்ளே அழைத்து சென்றான்...
அவர்களை உட்கார வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்து வெயினி டீ போட்டுக் கொண்டிருக்கையில் சுமியும் அவளது பெற்றோரும் உள்ளே வந்தனர்... ரவியையும் அவனது அம்மா அப்பாவையும் கண்ட வெயினியின் சித்தி "நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? அது தான் சம்மந்தம் வேணாம்னு சொல்லிட்டீங்களே!" என சத்தம் போட இதைக் கேட்ட வெயினி சமயலறை விட்டு வெளியே வந்தாள்...
"சித்தி" என அவள் அழைக்க," நீ தான் இவங்கள உள்ளே உக்கார வெச்சியா?" எனக் கேட்க" ஆமா சித்தி" என்றாள் அவள் ..."வெயினி உனக்கென்ன அறிவு மயங்கி போச்சா? இவங்க தான் எல்லாம் முடிஞ்சுனு போய்ட்டாங்க தானே! "என சித்தி கேட்க, நடந்த அத்தனையும் சொன்னாள் வெயினி.... அவளது இந்த பதிலை எதிர்பாரா சித்தி ரவியையும் அவனது பெற்றோரையும் பார்த்து வழிந்து கொண்டு "சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் ...பெரிய விஷயம் தான் நீங்க செஞ்சது" எனக் கூறினார்....
"நீங்க பேசுங்க சித்தி, நான் டீ கொண்டு வரேன் "என்று உள்ளே வெயினி போக ரவியின் தாய் பேச ஆரம்பித்தார்....
"அதாவது நாங்க அன்னைக்கு அவசர பட்டுட்டோம்.... அத சரி செய்ய தான் இவ்வளவு பண்ணோம்... அது மட்டும் இல்ல எங்களுக்கு வெயினிய ரொம்ப பிடிச்சிருக்கு... அவள எங்க வீட்டுக்கு மருமகளா கூப்டு போக ஆசை படுரோம்... இப்ப அவளுக்கு அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் தான்...உங்க கிட்ட இதை சொல்றது தானே முறை" என்று ரவியின் தாய் ஐஸ் மலை ஒன்றை தலையில் வைக்க "அதுக்கென்ன தாராளமா கூப்டு போங்க" என்று வெயினியைக் கேட்காமலேயே முடிவு சொன்னாள் சித்தி...
அதே நேரம் வெயினியும் டீ கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள்..." சரி நாங்க கெளம்புறோம்... நீங்க பேசிட்டு சொல்லுங்க" என ரவியின் தாய் சித்தியிடம் கூறிவிட்டு அனைவரிடமும் விடை பெற்று சென்றனர் ரவியின் பெற்றோர்...
அவர்கள் சென்ற பிறகு வெயினிடம் நடந்தவை பற்றி விவரித்தார் சித்தி... "இல்லை சித்தி எனக்கு இந்த கல்யாணம் வேணாம் ....நான் எப்படியாவது அவங்க பணத்தை திருப்பி கொடுத்துடுவேன்..." என வெயினி திருமணத்திற்கு மறுப்பு கூற "உன் வாழ் நாள் முழுக்க உழைச்சாலும் இவ்வளவு பணம் புரட்ட முடியாது... அது மட்டும் இல்ல வயசு பொண்ணு நீ! கோர்ட் படியேறி டிவி, பேப்பர்னு எல்லாத்துலயும் உன் மூஞ்சி வந்துட்டு... இதுக்கு மேல உன்னை எவன் கட்டிப்பான்.... அவங்க இவ்வளவும் பண்ணியும், உனக்கு வாழ்க்கை பிச்சையும் போடுறாங்க "என சித்தி விஷயமாய் பேச வெயினி அழுது விட்டாள்..." எனக்கு சம்மதம் சித்தி" என கூறி படுக்கையறைக்குள் புகுந்து கொண்டு கட்டிலில் வீழ்ந்து அழுதாள்...
நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த சுமி "அம்மா பெரியம்மா, பெரியப்பா இருந்தா உன்னை யெல்லாம் இப்டி பேச விடுவாங்களா? உனக்கும் ஒரு பொண்ணு இருக்குனு மறந்துடாத" என கூறி விட்டு வெயினியை காணச் சென்றாள் சுமி...
வெயினி அழுவதைப் பார்த்து சுமியும் அழுதாள் ..."அக்கா அழாத பிளீஸ்! எனக்கு என்னமோ நீ பட்ட கஷ்டதுக்கு எல்லாம் ஒரு முடிவு வர போகுதுனு தோனுது ...அழாத அக்கா "என சுமி கூறி வெயினியை தேற்றினாள்...
சுமி வெளியே வந்து பார்க்க தன் தாய் தந்தை இருவரும் இல்லை..
சமயலறைக்குள் சென்றவள் பிரிட்ஜில் இருந்த மேகியை எடுத்து கிண்டி விட்டு டீயும் போட்டுக் கொண்டு வந்து "அக்கா எந்திரி!" என வெயினியை எழுப்பினாள்... வெயினி எதுவும் பேசாமல் இருக்க "அக்கா ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி மேகியும் கிண்டி ,டீயும் போட்டுக் கொண்டு வந்து இருக்கேன்.. பிளீஸ்! என் கஷ்டத்தை வீணாக்கிடாத சாப்டு "என சொன்னாள் சுமி... அவள் சொன்ன பாணியைக் கேட்டு வெயினி சிரித்து விட்டாள்..."தா" என கேட்டு வாங்கி சுமி கொண்டு வந்ததை மிச்சமின்றி உண்டாள்... அவளது பசியை பார்த்த சுமிக்கு கண் கலங்கியது...உண்டு விட்டு வெயினி நிமிர" அச்சோ எனக்கு இல்லையா ?"எனக் கேட்டாள் சுமி... "ஐயோ சாப்டேனே! இப்போ என்ன பண்றது?" என வெயினி கேட்க சுமி அழுவது போல் பாசாங்கு செய்தாள்...
" அச்சோ சாரி!" என வெயினி உதட்டை பிதுக்க சுமி சிரித்து விட்டாள்..." சும்மா சொன்னேன் அக்கா... நான் சாப்டேன்.. நாம தூங்கலாம் வா" என்று சொல்லி தூங்க சென்றனர் இருவரும்..
காலையில் எழுந்து வெயினி வெளியே வர சுமியின் தாய் வந்திருந்தார் .."வாங்க சித்தி" என அவள் அழைக்க "மாப்ளை வீட்ல இருந்து வாரங்க ..புடவை நகை எடுக்க கூப்டு போக போறாங்க.. நீ ரெடியா இரு" என கட்டளை போல் சித்தி கூற ,"தன் பெற்றோர் இறந்து ஒரு மாதம் தான் ஆகியுள்ளது... இதற்குள் தனக்கு திருமணமா? இதை இவர்களிடம் யார் எடுத்து கூறுவது?" என மனதுள் மருகினாள் வெயினி....
"சரி சித்தி நான் ரெடியாகுறேன் "எனக் கூறி வெயினி குளித்து ரெடியாகி சுமியை எழுப்பினாள் .."சுமி இந்தா டீ.. எழுந்து பல்லு விளக்கிட்டு வந்து குடி "என அவள் கூற "அட போக்கா ..ஆடு, மாடு பல்லு விளக்குதா?" என்ன என்று விட்டு, சுமி மட மடவென டீயை குடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள்..
வெயினி எங்கோ போவதற்கு தயாராகி நிற்பது போல் தெரிய "அக்கா எங்க போக போற" என சுமி கேட்டாள்... அமைதியாக கட்டிலில் உக்கார்ந்தவள், சுமியின் கைகளைப் பிடித்து" கல்யாணத்துக்கு புடவை ,நகை எடுக்க போறேன்.. ரவியும் அவங்க அப்பா, அம்மாவும் வர்ராங்க" என வெயினி கூற "அக்கா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு எனக்கு தெரியும்... நன்றி கடன் தீர்க்க தான் நீ ஓகே சொல்லிருப்பா.." என சுமி கூற, வெயினி அவளைப் பார்த்து சிரித்து "ரொம்ப பெரிய மனுசி ஆகிட்ட" என்றாள்..
"நீ எதைப் பத்தியும் யோசிக்காத அசோகை லவ் பண்ற வேலைய பாரு" என வெயினி சிரிக்க ,"அக்கா என அதிர்ச்சியானாள் சுமி.." எனக்கு தெரியும்.. அசோக் எதுவும் சொல்லல... நானாவே தெரிஞ்சிக்கிட்டேன் ..அசோக் உன் மேல காட்ர அக்கறை ,நீ அசோகை வம்புக்கு இழுக்றது ,உன் நடவடிக்கைல வித்தியாசம் தெரிஞ்சது ..அப்போ தான் ப்ரொஜெக்ட் கடைசி நாள் நீ !அசோக் கிட்ட பேசினது கேட்டேன்.." என வெயினி கூற சுமி அமைதியாக இருந்தாள்... அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி "நாளையோட ப்ரொஜெக்ட் கடைசி நாள்... எனக்கு ஒரு முடிவு சொல்லு அசோக்னு ' நீ கேட்டு ,அசோக்கை அணைச்சதும் பாத்தேன் ...அசோக் விரல் கூட உன்னை தீண்டாததையும் கவனிச்சேன்... சுமி அசோக் ரொம்ப நல்ல பையன்... அவனுக்கும் உன்னை பிடிக்கும்.." என்று பேசும் வேளை வெளியே கார் சத்தம் கேட்டது...
" அவங்க வந்துட்டாங்க போல நான் போறேன்.." என்று விட்டு வெயினி எழுந்து சென்றாள்...வெயினியை கண்டதும் அசோக் காரின் முன் கதவை திறந்து ஏற்றிக் கொள்ள, அவளும் அமைதியாக ஏறினாள்... அத்தனையும் ஒரு ஜோடி கண் திரையில் திரைப்படம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தது...
வெயினி புடவை எடுக்க கடையினுள் நுழைய ,ஒரு சேல்ஸ் கேர்ள் வந்து "இன்று மலிவு விற்பனை எனவும், இன்னும் ஒரு மணி நேரம் மாத்திரமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்றும், ஒரு இலட்சம் சேலை வெறும் பத்தாயிரம் மட்டுமே" என்று கூற பின்னால் வந்த ரவி மற்றும் பெற்றோர் "அங்கேயே சென்று சேலை எடுத்துக் கொள்ளலாம்" என முடிவு செய்தனர்...
அந்த சேல்ஸ் கேர்ள் சொன்ன ஆபரில் ஒரே ஒரு புடவை மாத்திரமே மீதம் இருந்தது... தங்க நிற பட்டில் ,வெண் முத்துக்கள் கோர்த்தது போல் ஜொலித்தது... இதைப் பார்த்ததும் ரவியின் தாய்க்கு ஆசை வந்தாலும், ஆபரில் இது மட்டுமே மீதம் உள்ளதால் வெயினிக்கே அந்த புடவையை தெரிவு செய்தார்...
" மேடம் இன்னைக்கு இந்த மால் ஓனர்கு பிறந்த நாள்... இந்த சேலைய யாரு வாங்குறாங்களோ அவங்களுக்கு அஞ்சு சவரன் நகை இலவசம் "என அந்த சேல்ஸ் கேர்ள் சொல்ல "என்னடா இது அதிசயம் "என வியந்த ரவியின் தாய், அந்த அஞ்சு சவரனிலேயே தாலியை தெரிவு செய்து கொண்டாள்..
குறைந்த செலவில் நிறைந்த ஆஃபர் என ரவியும் அவன் பெற்றோரும் மகிழ்ந்தனர்.. ரவிக்கு தேவையான அனைத்தையும் பாரபட்சமின்றி அட்டகாசமான முறையில் வாங்கி குவித்தனர் ...அதில் எந்த நாட்டமும், ஒட்டுதலும் இன்றி ஒரு ஓரமாக வெயினி பார்த்துக் கொண்டு நின்றாள்...
அனைத்தையும் முடித்து கொண்டு வெயினியையும் அழைத்துக் கொண்டு திருமண நாள் நிச்சயிக்க சென்றார்கள்... இன்னும் இருபத்தெட்டு நாளில் தான் நல்ல நாள் வருவதாகவும் ,இடையில் பல நாட்கள் நல்ல நாட்கள் எனினும்; குறிப்பிட்ட நாளில் திருமணம் நடந்தால் தாலி பாக்கியம் பெருகும் என்றும் ஜோதிடர் கூறினார்...
யாருக்கோ திருமணம் என்பது போல் அமர்ந்திருந்தாள் வெயினி... எதுவும் இவளைக் கேட்டு முடிவெடுக்கவில்லை என்பது தான் உண்மை...
அனைத்து காரியங்களையும் முடித்து விட்டு வெயினியை வீட்டில் விட்டு சுமியின் பெற்றோரிடம் விவரம் கூறினார்கள் ரவியின் பெற்றோர்...." சிம்பிளா கோயில்ல வெச்சு மோதிரம் மாத்தி நிச்சயம் பண்ணிட்டு அங்கயே கல்யாணத்தை முடிச்சிடலாம்" என இரு தரப்பினரும் பேசி முடிவெடுத்தனர்..
நாட்கள் ஒவ்வொன்றும் சுழல் காற்றாய் வேகமாய் நகர குறிப்பிட்ட திருமண நாளும் வந்தது ...கவி அவனது பெற்றோர்,சுமி அவளது பெற்றோர்,ரவி அவனது பெற்றோர், அசோக் என அனைவரும் வந்திருந்தனர்.. வெயினி தாய் தந்தையர் புகைப்படம் முன் நின்று " எனக்கு இன்னைக்கு கல்யாணம்...இது சரியா? தப்பா? புரியல.... நீங்க தான் உங்க பொண்ணை பத்திரமா பாத்துக்கணும் "என பேசி அழுதாள் ...
தொடரும்....