Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
25
அந்த வயதான ஆணிடம் "கொஞ்சம் உக்கார்ந்து பேசலாமா? என வெயினி கனிவாக கேட்க;" அம்மா! நீங்க உத்தரவு போட்டீங்கனா செய்ய போறேன்.. இதுக்கு ஏன் மா கெஞ்சுறீங்க" என்கவும் "சரி வாங்க" என்று விட்டு கோயிலில் ஒரு புறம்பாக உட்கார்ந்து பேசலானார்கள்..

"சரி சொல்லுங்க... உங்க கிட்ட இருந்து என் வீட்டை மீட்டது யாரு?" என அவள் கேட்க," என் பேரு விநாயகம்.. நான் வட்டித் தொழில் செய்றவன்.. சில நேரங்களில் என் கிட்ட வட்டிக்கு வாங்குறவன் சொத்து மதிப்பு அதிகமாகவோ ,இல்லை அழகாகவோ இருந்தா... நான் அதை வட்டிக்கு மேல வட்டி போட்டு அபகரிச்சிடுவேன்.. அப்படி தான் உங்க வீட்டையும் அபகரிக்க நினைச்சேன்.. ஒரு நாள் உங்க வீட்டுக்காரர் என்னை பாக்க வந்தாரு... பணத்தை வட்டியோட திரும்ப கொடுத்தாரு "..

"பணம் வாங்கினவங்க செத்துடாங்க... பொண்ணு வீட்டை எனக்கு தாரன்னு சொல்லிட்டானு "அவர் கிட்ட சொன்னேன்... எதுவும் பேசல எழுந்து நின்னு என் வலது கைய விரிச்சு, உள்ளங்கைல துப்பாக்கியால சுட்டுட்டாரு..."என காயம் பட்டு கட்டுப் போட்ட தன் கையைக் காட்டினான்...."இங்க சுட்ட எனக்கு உன் மண்டைல ஓட்டை போட எவ்வளவு நேரம் ஆகும்னு? கேட்டாரு.... வீடு புல்லா அவரோட அடியாளுங்க அடிச்சு துவம்சம் பண்ணிடாங்க...." இப்போ வட்டி காசுக்கு கணக்கு சரியாப் போச்சுனு" சொல்லி பத்திரத்தையும் திரும்பி உன் பேர்ல எழுதி வாங்கிடாங்க."....

"ஆனாலும் உன் "என்று ஒருமையில் கூற வந்தவன் பின்னர்"மன்னிச்சிடுங்க உங்க புருஷன் ரொம்ப தைரியமாள ஆளு... திமிரு அதிகம்... கர்ஜிக்கிற சிங்கம் போல அவரோட ஒரு வார்த்தைல அகிலமே அடங்குது ...அவரு போன பிறகு சிசிடிவில பதிவான வீடியோ காட்சிகளை வெச்சு அவரை குற்றவாளியாக்க எவ்வளவு முயற்சிகள் செஞ்சேன்... அப்பறம் தான் இமயமலைய அசைக்க முடியாதுனு நானே அடங்கி போய்ட்டேன்" என அவர் கூறி முடிக்க ;வெயினிக்கு தலை சுற்றியது....

"தனக்கு தன்னுடைய வீட்டை மீட்டுக் கொடுத்தது ரவி இல்லையா? ருத்ரனா? இவற்றை செய்தது ஏன்? எதற்காக? பின்னர் ஏன் ரவி தான் வீட்டை மீட்டது என்று நாடகம் ஆடினான்?.... இதற்கு ரவி அல்லது ருத்ரன் வாய் திறந்தால் தான் உண்மை அறியலாம்.. ருத்ரன் கூற மாட்டான் ...ஆனால் ரவி என எண்ணியவள் மனதில் ரவி இதில் மீண்டும் பொய் சொன்னால் என்னாவது?" என சிந்தித்தாள்...

கோயிலை விட்டு வெளியேறும் போது ருத்ரனைக் கண்டு, அந்த வயதான ஆண் முதுகை வளைத்து கூனல் கும்பிடு போட்டு கடந்து போவதை அவரின் பின்னால் வந்த வெயினி கண்டு கொண்டாள்... "இவன் எப்படி இவ்வளவு சாதாரணமாக தன்னிடம் உள்ளான்".... என்றும் அவள் சிந்திக்காமல் இல்லை...

அமைதியாக சென்று காரினுள் ஏறினாள்... அவனும் ஏறிக் கொண்டான்... "அப்பறம் எங்க" என அவன் கேட்க அவள் "வீட்டுக்கு "என்றாள்...அரை மணி நேரத்தில் அவள் பெற்றோருடன் இன்பம் பொங்க வாழ்ந்து ,பின்னர் அநாதையாக அகதியாக வாழ்ந்த தன் சொந்த வீட்டை அடைந்தாள் ....கார் ஹார்ன் சத்தம் கேட்டதும் கதவு திறக்கப்பட்டது... அப்போது தான் வெயினி கவனித்தாள் வீட்டு சுற்று புறம் சுத்தமாக இருந்தது... பராமரிக்க தோட்டக்காரன் இருந்தான்... வீட்டினுள் நுழைய வீடும் தூய்மையாக இருந்தது ...சமையலறைக்குள் சென்று பார்த்தாள் நடுத்தர வயது பெண் ஒருவர் டீ போட்டுக் கொண்டு இருந்தாள்...

அவரின் அருகில் வெயினி சென்று "யார்மா "நீங்க என கேட்க ;"என் பேரு சரஸ்வதி மா... தோட்ட வேலை செய்றது தான் என் புருஷன் வேலு ....ஐயா தான் எங்கள வேலைக்கு வெச்சு இருக்கு... காலைல வந்து சாயங்காலம் ஆறு மணிக்கு போய்டுவோம்..." என்று கூறினாள்.. "நீங்க போங்க மா நான் டீ எடுத்துட்டு வரேன் "என அந்த பெண் தன் வேலையைத் தொடர்ந்தாள்....

வெயினி ஒவ்வொரு அறையாக பார்த்தாள்... அனைத்தும் சுத்தமாக இருந்தது ...அவள் தன் அலமாரியில் ஆடைகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பதை கவனித்தாள்....

"இதை அனைத்தையும் பேக் செய்து எடுத்து செல்லலாம் "என எண்ணி, அலமாரியின் மேல் உள்ள தனது ட்ராவலிங் பேக்கை எட்டி எடுத்தவள், பொத்தென்று கீழே விழுந்து விட்டாள்... நல்ல வேளை அடி எதுவும் இல்லை... சத்தம் கேட்டு ருத்ரன் வந்து பார்க்க, அவனைக் கண்டதும் வேகமாக எழுந்து நின்றாள்...

கதவில் சாய்ந்து கொண்டு அவன், அவளை ஏற இறங்க பார்க்க;" இல்லை போடாடுக்க ட்ரெஸ் இல்லை... அது தான் இதெல்லாம் கொண்டு போகலாம்னு பை எடுக்க ஏறி கீழே விழுந்துட்டேன்..." என அவள் ஏதும் அறியா சிறுமி போல் பேச; ருத்ரனின் ஆண்மை அவனை மீறி வெகுண்டெழுந்தது ...எனினும் முயன்று தன்னை அடக்கி கொண்டான்... "இதெல்லாம் நீ இங்க வரும் போது போட்டுக்க இருக்கட்டும்... நம்ம கடைல வேற வாங்கிக்கலாம்"" என்றான்... வெயினி வாய் பிளந்து அவன் பேசுவதைப் பார்த்தாள் ..."இவ்வளவு பேசுவானா? என அப்போது தான் தெரியும்...

அவள் அவ்வாறு நிற்கவும் அவள் அருகில் வந்தவன் சுவரோடு அவளை சிறை பிடித்து," இந்த சின்ன தேன் சுளை ரெண்டும் ஏன் மூடாம ஆ னு பாக்குது? என கூறி ,அவள் இடையின் இரு மருங்கும் இறுக்கி , அவன் உயரத்திற்கு அவளை தூக்கி ,திறந்த அதரங்களுக்குள் தன் கரடு முரடான இதழ்கள் புகுத்தி, 'சாகரமே வற்றியது 'எனும் அளவிற்கு அவள் எச்சிலை உறிஞ்சி விட்ட பிறகு தான் அவளை இறக்கி விட்டான்...

இமைக்கும் நேரத்தில் என்ன நடந்தது என்று அவள் அதிர்ந்து நின்றாள் ...அவளது கழுத்து வளைவினில் முகம் புதைத்தவன், விரல்களை அவள் ஆடையின் கழுத்து பிளவிற்குள் நுழைத்து, மெலிதாக நுனி விரல் கோலம் போட்டான் ...."என் பக்கத்துல நீ இருக்கும் போது, நான்! நானாவே இல்லை...' யினி பேட்லி நீட் யூ'" என போதையாக அவன் உளறினான்...

அவனை தள்ளி விட்டவள்" ஆமா உனக்கு இதென்ன புதுசா? என்னை கேக்காம தான் முழுசா அனுபவிச்சிட்டியே! இன்னும் என்ன இருக்கு... கல்யாணம் ஆன அன்னைக்கே பொண்டாட்டி முன்னாடி இன்னொருத்தி கூட படுத்தவன் தானே நீ! இது மட்டும் பேச உன் வாய் திறக்குமா? என்னை கேட்டா நீ! என் பெண்மைய பறிச்ச? என்னை கேட்டா என் கழுத்துல தாலி கட்டின? இப்ப மட்டும் ஏன் கேக்கற? என் வாழ்க்கைல பரமபதம் விளையாடினவன் தானே நீ! "என அவள் தன் புடவை முந்தானையை அவிழ்த்து ரவிக்கையோடு அவன் முன் நிற்க இவளின் இந்த சொற்களையும், செயலையும் துளியும் எதிர்பாராத ருத்ரன் காரினுள் சென்று அமர்ந்து கொண்டான்....

ஆயிரம் வினாக்களின் ஆதிக்கம்.. வரும் வழியில் நிகழ்ந்த நிகழ்வு என அவளை அறியாமல் கொந்தளித்து விட்டாள் வெயினி... ஆடைகளை சரி செய்து கொண்டு வெளியே வர; கவியும், சுமியும் வந்தனர் ...சுமி "அக்கா "என்று ஓடிச் சென்று வெயினியைக் கட்டிக் கொண்டாள்..கவி தள்ளி நின்று கோபமாக வெயினியைப் பார்க்க அவனை பேசி பேசி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டாள்.. அவள் கவியுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ருத்ரன் இடைவிடாது காரின் ஹார்னை அழுத்திக் கொண்டு இருந்தான்..."போமா போ! உன் புருஷனுக்கு அப்பவே என் கிட்ட பேசினா எரியும்... இப்போ கேக்கவா வேணும் .."என கவி கூற; "ஓஓ! இது தான் உன் பிரச்சினையா ?"என வெயினி சிரித்து விட்டாள்...

பின்னர் சுமியிடம் "நீயும், கவியும் நாளைக்கு அம்மா ,அப்பா போட்டோவை எடுத்துட்டு வாங்க.. நான் வரேன்" என்று கூறி விடைபெற்று ருத்ரனுடன் காரில் பயணமானாள்...

அவன் வேறெங்கும் செல்லவில்லை.. நேராக தனது அரண்மனைக்கே சென்று விட்டான் ..காரை பார்க் செய்த வேகத்தில் அவன் கோபம் புரிந்தது.. எனினும் வெயினிக்கு கவலை இல்லை பேச வேண்டியது இன்னும் உள்ளது அவளிடம்... அவன் வேக வேகமாக மாடிப்படி ஏறி அவனது அறைக்கு சென்று விட்டான்.. வெயினி அவளது அறையில் முடங்கிக் கொண்டாள்.. மதிய உணவிற்கு கூட அவன் வரவில்லை ..இத்தனை நாட்களில் அவன் வராமல் விட்டதும் இல்லை ..அவனும் உண்டு விட்டு அவள் உண்பதையும் ஃபோன் நோண்டுவதைப் போல் ஓரக் கண்ணால் பார்த்து விட்டு தான் எழுந்து செல்வான் ...அவன் வராதது அவளை சற்று அசைத்தாலும், அதை பெரிதாக எண்ணவில்லை.. இரவு உணவிற்கும் அவன் வரவில்லை... பாட்டி தான் அவளை உண்ண அழைத்தார்...

வெயினி மாடி படிகளை அண்ணார்ந்து பார்க்க, அவள் ருத்ரனைத் தான் தேடுகிறாள் என்பதை உணர்ந்த பாட்டி "நான் வந்த இத்தனை வருஷத்துல இந்த ரெண்டு வாரமா தான் தம்பி மூனு வேளை சாப்பிட்டு பாத்திருக்கேன் மா... இன்னைக்கு காலைல சாப்டது தான்.. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வரும் போது மேல போனவரு இன்னும் கீழ வரவே இல்லை .."என பாட்டி கூற அவள் இரண்டு தோசை உண்டு விட்டு, அவனுக்கு மூன்று தோசையும் ,சட்னியும் ஒரு தட்டில் வைத்து கொண்டு மெதுவாக படிக்கட்டுகளில் ஏறினாள்...

மேலே சென்று பார்த்தவள் மூச்சடைத்து விட்டாள்.. "ஆடம்பரமான ஹால்.. பல அறைகள்.. பூந்தோட்டம் நடுவே நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு... மரத்தால் ஆன வேலைப்பாடுகள்.. நவீன ரக மின் குமிழ்கள்.. விலையுயர்ந்த மேசை நாற்காலிகள்....ஆயுதம் ஏந்தி கறுப்பு நிற ஆடை அணிந்த காவலாளிகள் "என ஒரு சாம்ராஜ்ஜியமே அங்கு இருந்தது ...ஆனால் வெளியாட்கள் வர வேறு வழி இருந்ததை அப்போது தான் கண்டாள்..

அவளைக் கண்டதும் காவலாளிகள் வழி விட, அறைக் கதவை ஒருவன் திறந்து விட்டான்...சிங்கத்தின் குகைக்குள் சிக்குண்ட மான் போல வெயினி உணர்ந்தாள் ...அவன் அறையே அவ்வளவு விஸ்தானமாக இருந்தது... நின்றவாறே கண்களை சுழற்றி தேட அவளின் பின்னால் இருந்து "எதுக்கு இங்க வந்த" என்று கேட்ட கம்பீர குரலில் அவள் பயந்து விட்டாள்... நிதானமாக திரும்பி "நீ! கீழ வந்து இருந்தா.. நான் ஏன் வர போறேன்" என்றவள் கண்ணில் அப்போது தான் சிக்கியது வெளிநாட்டு மது போத்தல்கள் காலியாகி ஓரிடத்தில் கிடந்ததும் ,கலைந்த தலையும், கசங்கிய ஆடையும், சிவந்த கண்களும் என தன் முன்னாள் நின்ற ருத்ரனின் அலஙகோலமும்...

தொடரும்...



தொடரும்....
 
Back
Top