Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
25
எதிர் பாராமல் அவனை இவ்வாறு கண்டதும் வெயினி பயந்து விட்டாள்... கிட்டத்தட்ட ப்ரொஜெக்ட் வேலையாக ஒரு மாதகாலம் அவனுடன் தங்கி இருந்தாள்.. அவன் குடிப்பதை ஒரு போதும் கண்டது இல்லை... இவனுக்கு என்னாச்சு என கேட்கவும் துணிவில்லை.. உணவுத் தட்டோடு நின்றவளின் கையில் இருந்த சாப்பாட்டை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்தான் ருத்ரன்....

"எதுக்கு இங்க வந்த" என நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு சொல்லாக கேட்டான்.." நீங்க சாப்டலனு பாட்டி சொன்னாங்க அது தான் " என அவள் கூற; தாடையை இறுக்கி பிடித்து அவனது கட்டிலில் தள்ளி விட்டான்.. பத்து பேருக்கு மேல் படுத்து தூங்கலாம் ..அவ்வளவு விசாலமான மெத்தை அதில் வெயினி துரும்பு போல் கிடந்தாள்..

அவள் அருகில் வந்தவன் கட்டிலில் வலது காலை ஊன்றி, வெயினியிடம் குனிந்து, "சாப்பாடு ஊட்ட வந்தியா? "என கேட்க; அவளும் "ஆமா" என்றாள்... கையில் இருந்த மது பாட்டிலை தூக்கி சுவரில் அடித்து விட்டு "ஏன்டி! ஏன்! என் கண் முன்னாடி வந்து தொலச்ச.. என்னை பெத்தவங்க யாருனே எனக்கு தெரியாது.. நீ! தான்டி முதன் முதலா எனக்கு சாப்பாடு ஊட்டி விட்ட... பணத்தை தவிர எதையுமே எதிர் பார்க்காதவன்டி நான்...ஆனா உன்னை நினைக்க வெச்சிட்டல.. ஹேய்! நான் ஒன்னும் யோக்கியன் இல்லை தான்... பல பொண்ணோட படுத்தவன் தான் ...ஆனா உன்னை தொட்ட பிறகு எவளையும் தொட முடியலடி... முதன் முதலா உன்னை கிஸ் பண்ணேன்ல அன்னைக்கு தான்டி பெண்ணுக்குள்ள இவ்வளவு மென்மை இருக்கானு யோசிச்சேன்... எந்த பெண்ணையும் அவ அனுமதி இல்லாம தொட மாட்டேன்டி... ஆனா உன்னை தொட்டேன்... உன் கிட்ட ஹோட்டல்ல நடந்துக்கிட்ட முறை சரியா? தப்பானு? தெரியல... ஆனா அந்த கூடல் தான் நீ! எனக்கு சொந்தம்னு நினைக்க வெச்சது ‌‌.. உன் கிட்ட நான் தொலைஞ்சேன் ...அமைதி, சந்தோஷம், இன்னும் வேணும்னு ஏக்கம் , என்னமோ சொல்ல முடியாத உணர்வு உள்ளுக்குள்ள" என்று தன் மார்பின் இடது புறத்தை தொட்டு காட்டினான்....

"உன் மடி தான் என் ஏகாந்தம்னு தோனிச்சு.. ஆனா நீ! அந்த ரவி பின்னாடி போய்ட்ட ...எனக்கு எவ்வளவு கோவம் வரும்" என்றவன் தடுமாறி விழப் போக வெயினி பிடித்தாள்...மலை மாடு போல் உள்ளவனின் பாரம் தாங்காமல் அவனுடன் அவளும் சேர்ந்து மீண்டும் மெத்தையில் வீழ்ந்தாள்...

அவளைப் பார்த்து சிரித்தான்... அவள் முறைத்தாள்.."இராவணனோட இன்னொரு பெயர் ஈஸ்வரன்.. ருத்ரன்னு சிவனையும் சொல்வாங்க... நான் ருத்ரேஷ்வரன்... அடுத்தவன் பொண்டாட்டியை நான் அபகரிக்கல.. எனக்கானவள தான் நான் தூக்கிட்டு வந்தேன்" என அவன் கூற ;"போதைல கூட எப்படி தெளிவா உளர்ர" என கேட்டாள் வெயினி ‌.

அவனை தள்ளி விட்டவள் சாப்பாட்டை எடுத்து ஊட்ட போக" வேண்டாம் "என்றான் அவன்..." குடிகாரன் சாப்டாம கிடந்தா குடல் அவிஞ்சு செத்துடுவா... அப்பறம் பல பொண்ணு விதவை ஆவாங்க" என வெயினி கூற ;ஏன் மேடம் என் பொண்டாட்டி இல்லையா? சட்டபூர்வமா லைசென்ஸ் மாட்டி இருக்கேன் மேடம்" என்று அவள் கழுத்தில் தொங்கிய தாலியை காட்டினான்..." நீ! செத்தா நான் ஏன் விதவை ஆகனும்.. ரவியை கட்டிப்பேன்" என்றாள் வெயினி.. கையில் இருந்த சாப்பாட்டை வாங்கி இரண்டே வாயில் முழுவதையும் முழுங்கி விட்டான் ருத்ரன்... "நான் சாப்டாம செத்து நீ! வேற ஒருத்தன் கூட நிம்மதியா வாழ விட்ருவேனா? டெய்லி என் கொடுமைய அனுபவிக்கனும் " என பேசிக் கொண்டே அவளது நைட்டியில் கை துடைத்தான்...

"சீ! போடா .".என்று கூறி தன் நைட்டியை பிடுங்கி எடுத்து கொண்டு வெயினி வெளியேற "மேடம் இன்னைக்கு நைட்டு இங்க தூங்கலாமே" என்று அவன் கேட்க; மூக்கு புடைக்க அவனை முறைத்து விட்டு, காலியான தட்டை எடுத்து கொண்டு வெயினி கீழே வந்து விட்டாள்.. தன் அறைக்குள் வந்து அவன் பேசியதை அசை போட்டவாறே உறங்கி விட்டாள்...

வைகறை வெளிச்சம் அறை முழுதும் பரவி அவள் அங்கங்களை தழுவ இமை திறந்தாள் வெயினி.. தன் இடை மீது உலக்கை ஒன்றின் பாரத்தை உணர்ந்தவள் என்னவென்று பார்த்து பயத்தில் அலறி விட்டாள்.. இவளது சத்தம் கேட்டு அருகில் படுத்த ருத்ரன் துள்ளி எழுந்து அருகில் இருந்த துப்பாக்கியை கையில் எடுத்தான்... அதைப் பார்த்த வெயினி திறந்த வாய் மூடாமல் ஆஆ வென கைகளை மேலே உயர்த்தி கொண்டு மெத்தை மீது சிலையாய் இருந்தாள்...சுற்றி முற்றி பார்த்த ருத்ரன் "ஏன் சத்தம் போட்ட "எனக் கேட்க ;அவள் அசையாது இருந்தாள் ..."இவளுக்கு என்னாச்சு இப்டி சிலையாட்டம் உக்காந்து இருக்கா?" என எண்ணியவன் அவள் அருகில் வந்து தோளைப் பற்றி குலுக்க, அப்போது தான் சுய நினைவிற்கு வந்தாள்...

மீண்டும் ருத்ரன் அவளிடம் "என்னாச்சு?" என கேட்க; "இல்லை என் பக்கத்துல நீங்க தூங்கினது தெரியாது.. என் இடுப்பை சுத்தி ஒரு கை இருக்கவும் பயந்துட்டேன்" என்றாள் அவள்..சூஊஊ என சலிப்பாக மூச்சு விட்டான் ருத்ரன்...

சரி நீங்க எதுக்கு என் ரூமுக்கு வந்தீங்க? எதுக்கு என் மேல கை போட்டீங்க? கைல ஏன் துப்பாக்கிய எடுத்தீங்க? என அவள் பல கேள்விகள் கேட்க துப்பாக்கியால் தலையை தேய்த்துக் கொண்டே நத்திங் என்றான்..

இவ்வளவு கேள்விக்கும் நத்திங் தான் பதிலா? இப்போ புரியுதா தூக்கத்துல கூட நிம்மதி இல்ல...தூங்கி உயிரோட கண் விழிப்போமானு உத்தரவாதம் இல்லை..சுத்தி இருக்ற யாரு மேலயும் நம்பிக்கை இல்லை... இது தான் நீங்க வாழ்ற வாழ்க்கை" என வெயினி கூற; எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் அவளை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்து விட்டு அவன் வெளியே வரவும் கவியும் ,சுமியும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது..

ருத்ரன் வெளியே வரவும் அவன் பின்னால் வெயினியும் வந்தாள்... இருவரும் தூங்கி எழுந்த கோலம் இவர்களை இவ்வாறு கண்டதும் கவிக்கு அதிர்ச்சி.. சுமியோ சங்கடத்தில் நெளிந்தாள்.. ருத்ரனுக்கு புரிந்து விட்டது.. "எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்" தலையை விரல்களால் கோரியும்.. உடைகளை சரி செய்வது போலும் பாவனை செய்தான்... ருத்ரனின் கடுப்பேத்தும் படலம் வெற்றிகரமாக முடிவடைந்ததும் அவன் மேலே தன் அறைக்கு சென்று விட்டான்...

இதை எதுவும் அறியா வெயினி "சுமி ,கவி எப்டி வந்தீங்க? "என கேட்டு கொண்டே வர அப்போது தான் கவனித்தாள் இருவரின் முகங்களும் இரு வேறு பாவனைகளைக் காட்டுவதை..
" என்னாச்சு" என இரு கைகளையும் விரித்து அவள் கேட்க;" கொஞ்சம் இங்க வா" என்று கவி அவளது கையை பற்ற இதனை மாடிப்படியில் நின்று பார்த்திருந்த ருத்ரன் தன் குரலை கனைத்து சரி செய்தான் ...

"இப்போ தானே போனான்... இவ்வளவு வேகமா ப்ரெஸ் ஆகிட்டானா? ... எங்க இருந்து தான் வருவானோ? ...நான் இவளோட பேசினா மட்டும் இவனுக்கு மூக்கு வேர்த்துடும் போல "என நினைத்து கவி கடுப்பாகி அவளது கையை விட்டான்...

வெயினிக்கு அந்த ரணகளத்திலும் குதூகலம் என சிரிப்பு பொங்கியது... "உக்காருங்க எப்டி இங்க வந்தீங்க?" என ருத்ரன் கேட்க "அக்கா தான் அன்னைக்கு வீட்ட வந்தபோது விசிட்டிங் கார்ட் கொடுத்தா... அத காட்டவும் தான் உள்ள விட்டாங்க "என சுமி பதிலளித்தாள்...

" கைல என்ன?" என்று அவன் கேட்க; "பெரியம்மா ,பெரியப்பா போட்டோ அக்கா கிட்ட கொடுக்க எடுத்து வந்தோம்" என சுமி கூறவும் "ம்ம்" என தலையாட்டினான்..." நான் இவங்க கூட போய் மீனாவை பாத்துட்டு வரேன்"...என வெயினி கூற "சரி ட்ரைவர் கூட போ.. கார்ட்ஸ் ரெண்டு பேர் வருவாங்க" என சொல்லி விட்டு ருத்ரன் லாப்டாப்பில் அவனது வேலைகளை கவனிக்கலானான். .

பாட்டி சுமி, கவி இருவருக்கும் டீ கொடுக்க வெயினி மீனாவைப் பார்க்கச் செல்ல தயாராக உள்ளே சென்றாள்...
" நான் உங்கள எவ்வளவு நல்லவர்னு நினைச்சேன்.. எங்க அக்காவ அவ சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து இப்டி அடச்சு வெச்சு இருக்கீங்க... இது சரியா? உள்ளே வாரதுக்கும் வெளியே போறதுக்கும் எவ்வளவு செக்இன் பண்றாங்க.. ஜெயில் மாதிரி இருக்கு" என சுமி கூற அவளை கூர்ந்து நோக்கிய ருத்ரன் "அப்டின்னா உன் அக்கா இங்க பாதுகாப்பா இருக்கானு அர்த்தம்" என்றான்... இந்த பதிலை சுமி மட்டும் அல்ல கவியும் எதிர்பார்க்கவில்லை..

" நான் ரெடி "என இளஞ் சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு வெயினி வந்து நிற்க "சர்க்கரையில் மொய்த்த ஈ போல்" ருத்ரனின் பார்வை அவளை தின்று கொண்டு இருந்தது.. அவனின் பார்வையால் பாவை உடல் சிலிர்த்தடங்கியது.." நான் மீனாவை பாத்துட்டு, ட்ரெஸ் கொஞ்சம் வாங்கனும்.. அதையும் ஸ்கை பால் மால்ல வாங்கிட்டு வரேன்"..." சரி "என்று தலையாட்டியவன் கார் ட்ரைவரை அழைத்து "பாத்து கூப்டு போ "என்றான் ருத்ரன்...

" எஸ் சார் "என கூறி ட்ரைவர் முன்னே செல்ல சுமி ,கவி இருவரும் பின்னே சென்றனர்... கடைசியாக வெயினி செல்ல அவளை கைப்பிடித்து இழுத்தவன் பின்னர் என்ன நினைத்தானோ விட்டு விட்டான்...அவனது செயலில் உண்டான குறுகுறுப்பு வெயினியின் கன்னங்களில் ஒட்டிக் கொண்டது.. இருப்பினும் விட்டால் போதுமென வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டாள்... என்னக்கா மூச்சு வாங்குற என சுமி கேட்க "ம்ம்ம் உன் மாமன் தான் அடிக்கடி அவ கூட மூச்சு பயிற்சி செய்வானே அது தான் "என்றான் கவி.. "உங்க ரெண்டு பேருக்கும் என்ன வாய்க்கா தகராறு தெரியல" என வெயினி சலித்து கொள்ள, எல்லோரும் மீனாவை அனுமதித்து இருந்த ஹாஸ்பிடலை அடைந்தனர்...

மீனாவின் அறையின் முன் ரத்னா அக்கா, எசக்கி என இருவரும் பதட்டமாக நின்றனர்... வெயினி வேகமாக போய் "என்னாச்சு ஏன் பதட்டமா நிக்கிறீங்க" என கேட்டாள்... எசக்கி தான் "மீனுக்கு நினைவு வந்தது ... அப்பறம் பத்து நிமிஷத்துல
திரும்பவும் மயங்கிட்டா" என்றான் ...

தொடரும்..
 
Back
Top