Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
25
எசக்கி மீனா "திரும்பவும் மயங்கிட்டா" என்று கூறும் போது அவளின் அறையினுள் இருந்து டாக்டர் வெளியே வந்தார்... "யாராச்சும் ஒருத்தர் அவங்கள பாக்க போங்க "என அவர் கூற; "இப்போ அவளுக்கு எப்டி இருக்கு டாக்டர்" என கேட்டு முன்னே வந்து நின்றான் எசக்கி..

"அவங்களுக்கு மயக்கம் தெளியல பாக்கலாம்" என அவர் அடுத்த நோயாளியைப் பார்க்க சென்றார்..

"வெயினி நீ வேணும்னா போய் பாத்துட்டு வாமா" என ரத்னா அக்கா கூற;
" சரிக்கா "என வெயினி மீனாவின் அறையினுள் நுழைந்தாள்.. அங்கு ஆக்ஸிஜன் மாஸ்கின் மூலம் சுவாசம் செல்ல, இடது கையில் ட்ரிப்ஸ் ஏற, விரல்களின் நுனியில் பல வண்ண வயர்கள் பூட்டப்பட்டு, கணினி திரையில் இதயத்துடிப்பு காட்டப்பட, வைத்தியசாலையின் பச்சை நிற ஆடையில் அமைதியாக உறங்கினாள் மீனா... கன்னங்கள் குழி வீழ்ந்து, உதடுகள் காய்ந்து வெடிப்புகளோடு, தோல் வரண்டு வாடிய மலராக காணப்பட்டாள்... விசும்பிக் கொண்டே வெயினி அவளது கைகளை பற்றி "எனக்கு உதவ வந்து தானே உனக்கு இப்டி ஆச்சுது மன்னிச்சிடு மீனா "என வெயினியின் கண்ணில் இருந்து நீர் வழிய, அவளது கண்ணீரை மீனாவின் கரம் துடைத்தது ...வெயினிக்கு மிகவும் அதிர்ச்சியும் ,தாள முடியாத சந்தோஷமும்..

"மீனா! மீனா!.. நீ! நீ! கண் முழிச்சிட்டியா?.. உனக்கு சரியாகிட்டு.. இரு! இரு! வரேன்.. டாக்டர கூப்டு வரேன்" என வெயினி பேச வார்த்தைகளின்றி தடுமாறி எழப் போக, மீனாவின் கரம் அவளை தடுத்தது.. "ஏன்" என்ற கேள்வியோடு மீனாவை அவள் பார்க்க, வெயினியை அருகில் அழைத்து அவளின் காதில் மீனா மெதுவாக பேச பேச வெயினியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து, கை கால்கள் வலுவிழந்து, ஏசி அறையிலும் குபீர் என வியர்த்தது..

" நான்! நான்! முழிச்சிட்டேன்னு நீ! சொல்லாத" என திக்கி, திக்கி மீனா சொல்ல, வெயினி தரையில் நொடிந்து போய் உக்கார்ந்து விட்டாள்...தனது சக்திகளை ஒன்று திரட்டி "வெயினி எழுந்திரு" என மீனா கூறி மூச்சு வாங்க, உடனே எழுந்த வெயினி நீ! அதிகம் பேசாத, உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. முடிஞ்ச வரைக்கும் நான் பாத்துக்கிறேன்.. கவனமா இரு" என்று மீனாவின் கையை பற்றி இறுக்கமாக பிடித்து விட்டு அறையை விட்டு வெயினி வெளியேறினாள்..

வெளியே வந்தவளிடம் எசக்கி தான் முதலில் கேட்டான் "அவ எப்டி இருக்கா? இப்போ ஓகே வா ?"என்று... "அப்டியே தான் இருக்கா.. நீ !கவலை படாத.. முன்னாடி இருந்ததுக்கு இப்போ பெட்டர் தானே" என தோளில் தட்டி ஆறுதல் கூறினாள்...

" சாரிடா மா உனக்கு நடந்த திடீர் மேரேஜ் பத்தி கேள்வி பட்டேன்... என்னால வரவும் முடியல.. தடுக்கவும் முடியல .."என்று எசக்கி வருத்தப்பட "எது நடக்கனும்னு என் தலைல எழுதி இருக்கோ, அது தானே நடக்கும்... இதுல நீ வருத்தப்பட்டா எதுவும் மாறிடுமா?" என பேசிக் கொள்ள எதிர் பாராத விதமாக ரவி வந்து நின்றான்... இவனது வருகை யாருமே எதிர்பார்க்கவில்லை... அவனைக் கண்டதும் எல்லோரும் சற்று சங்கோஜப்பட்டனர்...

வெயினியைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டவன் "அந்த அரக்கன் கிட்ட சிக்கிட்ட பூ வெயினி நீ!" என வேதனைப்பட்டான் ரவி... கவியும் ,சுமியும் அவன் கூறுவதை ஏற்க முடியாமல் நின்றனர்... அவர்கள் தான் வெயினி எவ்வாறு வாழ்கிறாள் என நேரில் பார்த்து விட்டனரே...

"என்ன செய்ற எல்லாம் விதி தான்" என்ற வெயினி "நான் புறப்படுறேன் அக்கா" என ரத்னா அக்காவிடமும்... "எசக்கி டைம் ஆச்சு" என எசக்கியிடமும்..பின்னர் கடைசியாக "அப்பறம் மிஸ்டர் ரவி ஆறுதலா இருந்து பாத்துட்டு போங்க.. நான் போறேன் "என காரை நோக்கி சென்றாள்... கவியும் ,சுமியும் காரில் ஏற, பின்னால் ஓடி வந்து ரவி வெயினியின் கையைப் பற்றினான்... கார்ட்ஸ் அவனைத் தாக்க வர வெயினி கை காட்டி அவர்களை அமர்த்தினாள்....

"ரவி பிளீஸ்" என்று கையை உருவிக் கொண்டவள் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு "சொல்லுங்க" என்றாள்..."இளா ஸ்டில் ஐ லவ் யூ..அவனை விட்டுட்டு என் கூட வா.. உன்னை ராணி மாதிரி பாத்துக்கிறேன்.." என்றவன் பேசி முடிப்பதற்குள் நாலடி தள்ளி வீழ்ந்தான்... இமைப் பொழுதில் என்ன நடந்தது என அவள் சிந்திக்க, ருத்ரன் தான் நிஜமாகவே கோபக் கனல் கண்களில் தெறிக்க ருத்ரமூர்த்தியாக மாறி ரவியை எட்டி உதைத்திருந்தான்...

கோர்டை சரி செய்து கொண்டு தூசு தட்டுவது போல் பாவனை செய்தவன் "யாரோட பொண்டாட்டிய யார் கூட்டி போக... பேசவே தகுதி இல்லாத நாய் இன்னொரு வாட்டி என் கண்ணுல பட்ட அவ்வளவு தான்" என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு ருத்ரன் வெயினியை பார்க்க ,அவள் அமைதியாக சென்று காரினுள் ஏறினாள்.. "எங்க இருந்து உன் புருஷன் வந்தான் "என கவி கேட்க; "காட்ஸ், இல்லைனா ட்ரைவர் இன்பார்ம் பண்ணி இருப்பாங்க... இப்ப இந்த ஆராய்ச்சி முக்கியம் பாரு" என சுமி சிலுப்பினாள்..

" தனக்கான நேரம் இதுவல்ல "என்று ரவி அமைதியாக இருந்தான்... வெயினியின் கார் அடுத்து நின்ற இடம் ஸ்கைபால் மால் ஆகும்.... "மேடம் இது நம்ம மால் தான்... வேலை செய்ற எல்லாருக்கும் உங்கள தெரியும்... நீங்க எது வேணும்னாலும் எடுக்கலாம்.." என ட்ரைவர் கூற; கவி ,சுமி ,வெயினி என மூவரும் முழித்தனர்..

" புரியல "என கவி கூற;" இது ருத்ரன் சேர் மால் தான்... மேடமை மேரேஜ் பண்றதுக்கு முன்னாடியே எங்க எல்லாருக்கும் தெரியும்... மேடம் மூனு பேரோட ட்ரெஸ் வாங்க இங்க வந்தாங்க ‌ ஒன்றரை மாசம் முன்னாடி இருக்கும் ..அப்போ மேடம சேர் பாத்துட்டாங்க.. இங்க இருக்ற எல்லாருக்கும் இன்டர் காம்ல 'எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு கம்மியா மேடத்துக்கு தேவையான ட்ரெஸ், நகை எல்லாம் கொடுக்க சொன்னாரு'. சோ வாட்ச்மேன்ல இருந்து, மேனேஜர் வரைக்கும் மேடம தெரியும்..." என்று ட்ரைவர் கூற வெயினிக்கு தலையே வெடித்தது...

" ரெஸ்ட் ரூம் எங்க "என ட்ரைவரிடம் கேட்டாள் வெயினி...ட்ரைவர் ருத்ரனின் அறைக்கு லிப்ட் மூலம் கூட்டிச் சென்று அங்குள்ள ரெஸ்ட் ரூமில் விட, கவியும் சுமியும் அந்த அறையின் பிரம்மாண்டத்தில் வாயடைத்து விட்டனர்... அரண்மனையில் இதை விட அதிகமான பிரம்மாண்டங்களை பார்த்ததால் வெயினி அமைதியாக ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள்...

தலையை பிடித்து கொண்டு ஆவென அலற தோன்றியது அவளுக்கு...
"அன்னைக்கு ரவி கூட வந்தப்போ ஆஃபர்ல புடவை ,நகை எல்லாம் கொடுத்தது பொய்யா? எல்லாமே இவன் வேலை தானா? எதுக்கு சுத்தி வளச்சு இவ்வளவு நாடகம் ஆடினான்? நேரடியாவே எல்லாம் பண்ணி இருக்கலாமே? கடவுளே என் கேள்வி எல்லாத்துக்கும் ருத்ரன் தான் பதில் சொல்லனும்" என எண்ணி வெயினி வெளியே வர கவியும் ,சுமியும் பேயறைந்தது போல் நிற்பதைக் கண்டாள்...

" என்னாச்சு" என அவர்களிடம் வினவ; அறை மற்றும் மாலின் பிரம்மாண்டம் பற்றி சிலாகித்தனர் இருவரும்.. வெயினிக்கு இருந்த கடுப்புக்கு இவர்கள் பேசுவது இன்னும் கோவத்தைத் தூண்டிட "நீங்க இங்கயே வாய பொளந்து பாருங்க.. நான் போறேன்" என்றவள் லிஃப்ட்காக காத்து நின்றாள்..

லிப்ட் வந்து நிற்கவும் கோபத்தில் நின்றவள் உள்ளே யார் உள்ளார்கள் என கவனிக்காமல் அவசரமாக ஏறிக் கொண்டாள்... வாய்க்குள் ருத்ரனை அர்ச்சித்துக் கொண்டே நிமிர்ந்தவள் அப்போது தான் கவனித்தாள் எதிரில் ஓர் பெண் நிற்பதை... நிற்பவளை கூர்ந்து நோக்கியவளுக்கு அருவருப்பும் வெறுப்பும் தானாக ஒட்டிக் கொண்டது....

அந்த பெண்ணும் அப்போது தான் வெயினியை கவனித்தாள்... வெயினியைக் கண்டதும் அவள் முகம் பல பாவங்களை காட்டியது...
ஆம் வெயினி சந்தித்தது திருமணத்தன்று ருத்ரனுடன் பின்னிப் பிணைந்து வந்த பெண்ணைத் தான்... வெயினியின் முகத்திற்கு நேரே சொடக்கு போட்டவள் அவளின் கன்னத்தில் கை அச்சு பதியும் அளவிற்கு ஒரு அடி விட்டாள்... இதை எதிர்பாரா வெயினி வலுவின்றி கீழே வீழ்ந்தாள்....

வெயினியின் பின்னலை கொத்தாக பிடித்த அந்த பஜாரி "ஏன்டி நீ என்ன பிரிட்டிஷ் இளவரசியா? உன்னை பேசினதுக்கு ரூம்கு கூப்டு போய் அந்த பொறுக்கி ருத்ரன் அவ்வளவு அடி அடிச்சான்.. எத்தனை நாள் என் கூட படுத்து இருப்பான்... அதெல்லாம் மறந்து நேத்து வந்த உனக்காக என்னை அடிச்சு துன்புறுத்தி" கண் முன்னாடி வந்தா உனக்கு ஆசிட் அடிப்பேன்னு" பேசுற அளவுக்கு போய்டான்...

"கார் ,வீடு எல்லாத்தையும் பறிச்சிட்டான்.. இது எல்லாத்துக்கும் நீ! தான் காரணம்" என அந்த பெண் மீண்டும் வெயினியை அடித்தாள் ..லிப்டும் முதலாம் தளத்துக்கு வந்தது... திடீரென லிப்ட் கதவு
திறக்கப்பட்டது.. வெளியே இருந்து ருத்ரன் லிப்டினுள் வந்தான்... வெயினியின் முகத்தை தாடையைப் பிடித்து இரு புறமும் பார்த்தான்...

வெயினி அவசரமாக கோபத்தோடு செல்ல ட்ரைவர் ருத்ரனுக்கு அறிவித்தான்.."சேர் மேடம் ஏதோ கோவமா போறாங்க" என ட்ரைவர் பேச அந்த பக்கம் ருத்ரன் போனை கட் செய்தான் ...

அவசரமாக மாலிற்கு வந்த ருத்ரன் சிசிடிவை செக் செய்து வெயினி எங்கு செல்கிறாள் என அறிந்து கொண்டான்... லிப்ட் நிற்கும் தளத்திற்கு மாடிப்படிகளில் தாவி ஓடி வெயினி வந்து சேர்வதற்கு முன் ருத்ரன் வந்து நின்றிருந்தான்...

தலை கலைந்து, முகம் சிவந்து உதட்டின் ஓரம் சிறிதாக இரத்தம் கசிய நின்றிருந்த வெயினியின் அருகில் வந்து, அவளது முகத்தின் இரு புறமும் மாறி மாறி பார்த்தான் .. வெயினி ஏறிய லிப்டில் யார் உடன் வருகிறார்கள் என்று ருத்ரன் சிசிடியின் மூலம் அறிந்திருந்தான்... ஆனால் இந்தளவு சம்பவம் நடக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை....

தனது கோட்டை கழட்டி வெயினிக்கு அணிவித்தவன் அவளை கார்ட்ஸுடன் அனுப்பி விட்டு எதிரில் நின்ற ரீட்டா என்ற பெண்ணை பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்து அவள் அருகில் சென்று "அவ உங்கள மாதிரி இல்லை.. ரொம்ப வித்தியாசமானவ...அவ என் பொண்டாட்டி..அவள தொட எவ்வளவு தைரியம் வேணும்... ம்ம் நீ ஒன்னு பண்ணு மும்பை ரெட் லைட் ஏரியாக்கு போ"என அவன் கூற ரீட்டா அவனது காலைப் பிடித்து கதறினாள்...

தொடரும்....
 
Last edited:
Back
Top