இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 25
மும்பை ரெட் லைட் ஏரியா தெரியுமா?" என ருத்ரன் கேட்க ,ரீட்டா ருத்ரனின் காலைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள்... சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவன் "நான் மால் உள்ள வரும் போதே உன் பினாமி நாய பாத்தேன்... அவனை நீ சும்மா எல்லாம் கூட்டி வார ஆள் இல்லைனு எனக்கு தெரியும்... அவனை அடிச்சு கை ,காலை உடைச்ச பிறகு தான், நீ !வெயினியை கடத்தி அவள அணு அணுவா கொல்ல திட்டம் போட்டு, மும்பை ரெட் லைட் ஏரியால விற்க ஏற்பாடு செஞ்சதை பத்தி சொன்னான்" என கூறி சிகரெட்டை வாயில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து ரீட்டாவின் முகத்திற்கு நேராக புகையை ஊதினான் ருத்ரேஷ்வரன்..
ருத்ரன் சொன்ன தகவலைக் கேட்டு ரீட்டா பயத்தில் உறைந்து நின்றாள்... "அப்பறம் தான் வெயினி எந்த பக்கம் போனானும், அவ கூட லிஃப்ட்ல யாரு இருக்கானும் செக் பண்ணி கன்பார்ம் பண்ணிக்கிட்டேன் ...அவ மேல கைய வைக்க எவ்வளவு தைரியம் திமிரு உனக்கு" என ருத்ரன் பேசப் பேச அந்த பெண் பயத்தில் உருகி நின்றாள்..
"அப்பறம் உன்னை யார் வந்து சந்திச்சானும், எனக்கு எதிரா எப்ப சந்தர்ப்பம் கிடைச்சாலும் காய் நகர்த்த யார் உனக்கு சொல்லி கொடுக்கானும் எல்லாம் எனக்கு தெரியும்" என கூறி "காட்ஸ்" என அவன் அழைக்க மூவர் வந்தனர் ..."இவளை இழுத்துட்டு நம்ம துரோகிகளை அடிமைகளா வெச்சு இருக்ற கொத்தடிமைகள் கம்பெனில கொண்டு விட்ருங்க" என ருத்ரன் காட்ஸ்கு உத்தரவிட்டான்...
ருத்ரனின் உத்தரவிற்கேற்ப ரீட்டா இழுத்து செல்லப்பட்டாள்...வெயினியை பார்க்க அறையினுள் நுழைந்தவன் அங்கு சுமி அவளது தலையை சீவி விடுவதையும் ,கவி ஐஸ் பேக் ஒத்தடம் கொடுப்பதையும் கவனித்தான்.. ருத்ரனைக் கண்டதும் சுமி தான் பேசினாள் "பாருங்க! அயர்ன்மேன் மாதிரி நீங்க இருக்கும் போதே அக்காவ அவ எப்டி அடிச்சு இருக்கானு ... அவ எதோ உங்களுக்கு வேண்டப்பட்டவளாமே "என நியாயம் வேண்டினாள்..
வெயினியை ருத்ரன் பார்த்து கொண்டு நின்றான்... அவள் அவனை நிமிர்ந்து பார்த்த பார்வையில் ஆயிரம் வினாக்கள் தொக்கி நின்றது.. அவனால் இன்னதென்று பிரித்தறிய முடியவில்லை.. அவளின் அருகில் வந்து அமர ட்ரைவர் சுமியையும், கவியையும் வெளியே அழைத்து சென்றார்.. கவி வெயினியை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே செல்ல. ருத்ரன் திரும்பி அவனிடம் "டோர் லாக் பண்ணிடு "என்றான் ...கவிக்கு மூக்கு வழியாக அனல் வந்தது..
அவளது கன்னங்களை அவன் மிருதுவாக வருட அவனது கையைத் தட்டி விட்டு வெயினி எழுந்து நின்றாள்... அமைதியாக ஜன்னல் வழியாக சாலையைப் பார்த்தவள் மீண்டும் திரும்பி ருத்ரனைப் பார்த்து "உன்னால தான் அவ என்னை அடிச்சா... இத மாதிரி நீ வேணும்னு எத்தனை பேர் என்னை கொடுமை பண்ண போறாங்கனு தெரியல.. அவங்க வரிசைல நானும் ஒருத்தியா உன் முன்னாடி நிற்கிறேன்ல" என வெயினி கேட்க, எழுந்து அவள் அருகில் வந்தவன்" இன்னும் புரியலியா யினி உனக்கு ?" என அவள் விழிகளில் தன் விழிகளை ஊடுருவி கேட்க, அந்த பார்வையிலும் குரலின் மென்மையிலும் கரைந்தவள் விழிகளில் நீர் திரள" எதுக்கு இதெல்லாம் செஞ்ச? சொல்லு ஈஸ்வர்... மீனா கண் முழிச்சிட்டா... எல்லா உண்மையும் சொல்லிட்டா... இன்னும் என்னை பைத்தியமா சுத்த வைக்க போறியா ? எதுவும் இருந்தா மறைக்காம சொல்லு " என அவனை பிடித்து உலுக்க, அவள் கரங்களை பற்றி மார்போடு அவளை அணைத்து உச்சியில் முத்தமிட்டான் ருத்ரேஷ்வரன்...
" ப்ரொஜெக்ட் கடைசி நாள் நீ கடலுக்குள்ள போனதும் எனக்கு திடீர்னு ஒரு மெயில் வந்துச்சு... நீ தேடுற கால பயணம் செய்ற கருவியை கைப்பற்ற தேவலனு இருந்துச்சு அதுல... எனக்கு அந்த நேரம் புரியல.. அட்வான்ஸ் கொடுத்தவங்க ஏன் வேணாம்னு சொல்றாங்கனு யோசிச்சேன்... அக்ரீமெண்ட் கேன்சல்னு ரிப்போர்ட் வந்துச்சு..எனக்குமே நீ கண்டு பிடிக்க போற பொருளை கைப்பற்ற மனசு இல்லை... உடனே என் ஆளுங்க எல்லாரையும் கூட்டிட்டு இடத்தை காலி பண்ணிட்டு போய்டேன்... அப்பறமா வந்து உன் கிட்ட பேசிக்கலாம்னு நினைச்சேன்...
" எனக்கு திடீர்னு ரெண்டு நாள் பாரின் டீல் ஒன்னுக்கு அக்ரீமெண்ட் ரெடி பண்ற வேலை இருக்கவும், அவுஸ்திரேலியா போய்டேன்.. வந்த பிறகு நடந்ததை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்...என்னால உனக்கு நடந்த கொடுமைய தடுக்க முடியலனு கஷ்டமா இருந்துச்சு" என அவளின் கன்னங்களை உள்ளங்கையில் தாங்கி சொல்ல அவள் கண்களில் அவ்வளவு வருத்தம் இருந்தது...
"உனக்கு என்ன நடந்துச்சுனு நான் தெரிஞ்சிக்கனும்னா முதல்ல உன் ஆபிஸ்குள்ள நுழையனும்.. உன் மேலதிகாரிகள் பத்தி டீடைல்ஸ் தேவப்பட்டுச்சு.. அது தான் ஸ்பான்சர் பணத்தை கேக்ற மாதிரி ஆபிஸ் உள்ள நுழைஞ்சேன்.. உனக்கு நியாபகம் இருக்கா? நான் இருக்கும் போது நீ முகேஷ் கூப்டனு வந்து போன.. உன் நடைல இருந்த சோர்வு என்னை அசைச்சிட்டு வெயினி" என கூறி அவள் நெற்றியில் முத்தமிட கண்களை மூடி அனுபவித்தாள் அவள்..
" அதுக்கு அப்பறம்" என அவன் சொல்ல, "நீ தான் கோட்ல நஷ்ட ஈட்டு பணத்தை கட்டி முன் ஜாமீனும் எடுத்தியா? என்ற கேள்வி அவனை தடுத்தது..அவள் கேட்க "ஆமா "என்றான் ருத்ரன்... "வீட்டுப் பத்திரம் மீட்டது "என அவள் கேட்க, "நான் தான் "என்றான் "ஆஃபர்னு சொல்லி புடவை ,நகை கல்யாணத்துக்கு கொடுத்தது? ", "நான் தான் "என்றான்.. அவனை சோஃபாவில் தள்ளி விட்டு அவன் முடியை கொத்தாக பிடித்து ஆட்டினாள் வெயினி..." ஏன்டா... ஏன்? இதெல்லாம் முன்னாடியே சொல்லி இருக்கலாமே? " என அவள் கூற , அவளது இடையை வளைத்து மடியில் அமர வைத்து மூக்கின் நுனியை பிடித்து "நான் சொன்னா கேக்ற மனநிலைலயா மேடம் இருந்தீங்க?" என எதிர் கேள்வி கேட்டான் அவன்...
அவனிடமிருந்து விடுபட முயற்சித்து தோற்று போனாள் வெயினி... "அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சு தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. முகேஷும் ,ரவியும் தான் இதுக்கு காரணம்னு.. உன்னை எப்டியும் பாதுகாப்பா வெச்சிக்கனும்னு தான் யோசிச்சேன்.. என் தவறு உங்க அம்மா, அப்பாவை தவற விட்டுட்டேன்" என அவன் கூற; வெயினி அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
அவளது கைகளை தன் கைகளுக்குள் இறுக்கியவன் உங்க அம்மா, அப்பா பணம் வாங்கிட்டு வர வழில ரவி அவங்கள மடக்கி பேசி இருக்கான்... உன்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னு சொல்லி இருக்கான்.. ஆனா அவங்க அதுக்கு சம்மதிக்கல..அவங்கள போக விட்டு, பின்னாடியே லாறிய ஏத்தி கொலை பண்ணிட்டான்.. இத நான் எதிர் பார்க்கவே இல்லை.. அப்பறம் அதை விசாரிக்கும் போது வீட்டுப் பத்திரம் பத்தி தெரிய வந்தது"...என அவன் சொல்ல வெயினி உடைந்து விட்டாள்..."என்னை சுத்தி இவ்வளவு சதி பின்னப்பட்டு இருக்கா? எனக்கு எதுவுமே தெரியாம போய்ட்டு " என விரக்தியாய் சிரித்தாள்..
அவளது அந்த கோலம் அவன் மனதை பிசைந்தது.." வெயினி இன்னைக்கு நைட் உன் அப்பா ,அம்மா வீட்ல தங்கிக்கலாமா? " என அவன் கேட்க அவளது தலை" சம்மதம்" என அசைந்தது...
ட்ரைவரை அழைத்து கவியையும், சுமியையும் காட்டி "இவங்கள அவங்க வீட்ல விட்ரு" என அவன் கூற கவியும், சுமியும் வெயினிடம் விடைபெற்று ட்ரைவருடன் வீடு நோக்கி பயணமானார்கள்...
அவளை பூப்போல கையில் ஏந்தியவன் தனிப்பட்ட லிப்டின் ஊடாக காரை அடைந்தான்.. அவள் எவ்வித எதிர் வினையும் ஆற்றவில்லை.. அவனுக்கு புரிந்து விட்டது பெற்றோரின் அகால மரணம் இவளை இப்படி ஆக்கியுள்ளது என்று... போகும் வழியில் அவளுக்கு உணவு வாங்கி கொடுத்தவன் ஏதோ தனக்கு தெரிந்த அளவு அவளுக்கு ஊட்டி விட்டான்.. இதெல்லாம் அவனுக்கு ஓர் புதிய உணர்வாகத் தோன்றியது..
வெயினியின் வீட்டை ருத்ரனின் கார் வந்தடைந்தது... வேலையாட்கள் இருவரும் வீட்டுக்கு செல்லும் நேரமானது... ருத்ரனைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக அவர்கள் இருவரும் வணங்கி நிற்க "நீங்க போங்க நாளைக்கு வர வேணாம்.. அடுத்த நாள் வாங்க "என அனுப்பி விட்டான்... வெயினியின் கார் சீட்டின் கதவை திறந்து விட அவள் அமைதியாக இறங்கி வீட்டினுள் சென்றாள்...
அனைத்தும் சரியாக உள்ளதா? என அவதானித்த பிறகு ருத்ரன் வீட்டுக் கதவுகளை அடைத்து விட்டு, வெயினியை தேடி வர அவள் தன் பெற்றோரின் புகைப்படம் முன் கால்களை மடித்து தரையில் அமர்ந்து இருந்தாள்.." யினி வா.. ப்ரெஸ் ஆகு" என அவளது ரூமில் கொண்டு விட்டவன், இன்னொரு அறையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து சுத்தமாகி வந்தான்.. அவள் குளித்த பிறகு முன்னரை விட சற்று தெளிவாக காணப்பட்டாள்...
அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவள் மனநிலை புரிந்து கொண்டு எதுவும் கேட்கவில்லை ..அவளே ஆரம்பித்தாள்.. அவள் பேசுவதை உன்னிப்பாக கேட்டான் ருத்ரன்... "மீனாவை பாக்க போனேன்.. அவ தான் சொன்ன அங்க வந்தது ரவினு ...'நான் அவனை அடையாளம் காணவும் தான் எனக்கு தலைல அடிச்சான்னு" அவ சொன்னா.. எவ்வளவு அழகா ஸ்கெட்ச் போட்டுட்டான்ல அவன்".. என கோவத்தில் அவள் முகம் சிவந்தது..
"நீ டென்ஷன் ஆகாத பாத்துக்கலாம்" என
கூறி கஞ்சா சுருட்டை வாயில் வைக்க வெயினி முகம் மாறியது.. அதைப் பார்த்த ருத்ரன் சுருட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்து விட்டு சுருட்டை மேசையில் வைத்தான்... "என்னாச்சு" என அவளிடம் கேட்க; " உனக்கு மூச்சு பயிற்சி தெரியும் தானே?" என பட்டென கேட்டு விட்டாள். அவள் புத்திசாலி என ருத்ரன் அறிவான்.. ஆனால் இந்தளவு யோசிப்பாள் என எண்ணவில்லை... "ம்ம் தெரியும்.. ஏன்?" என எதிர் கேள்வி கேட்டான் ருத்ரன்..
"மூச்சு பயிற்சி செய்றவங்க போதைப் பொருள் உட்கொண்டா புத்தி பேதலிக்குற அளவுக்கு போக வாய்ப்பு இருக்கு ... உனக்கு கண்டிப்பா இது தெரியும் அப்பறம் ஏன் அதை தொடுர? என கேட்டாள்.. ருத்ரன் அவள் பேசுவதைப் பார்த்து ரசித்தான்..
தொடரும்...
.