இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 29
(உண்மைத் தகவலோடு கற்பனையும்
சேர்ந்து புனையப்பட்ட கதை )
ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு ஊக்குவிப்பு என்பது மிகவும் அவசியம்... இல்லை என்பதற்கும் ,தெரியாது என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு...
இளவெயினி கடலினுள் செல்லும் அனைவருக்கும் சில விடயங்கள் பற்றி கூற ஆரம்பித்தாள் ..."கடல்ல இறங்கி ஆராய்ச்சி செய்வதற்கு ஆழ்கடல் மீனவர்கள்னு சொல்ற கடலோடிகள் நீங்க தான் ரொம்ப முக்கியமானவங்க.. நீங்க முத்துக்குளிக்க போறத விட இந்த வரலாற்று சின்னங்கள் ரொம்ப முக்கியமானது ....அதையும் தாண்டி இந்த இடத்துல நிறைய மீன் வளம் இருக்கு.... இதையும் நாம கண்டு பிடிக்க போறோம்..." என கூறி படகில் அனைவரும் ஏறும் வரை பாத்திருந்தாள்... ருத்ரன் மிகவும் ஸ்டைலாக வந்து ;அவள் அருகில் நின்று "ஓய் பாப்பா "எனக் கூற அவளுக்கு திகுதிகுவென எரிந்தது... இருந்தும் இது விவாதத்திற்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்தவள்" மிஸ்டர் ஈஸ்வர் கோல் மீ இளவெயினி" என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு... அவன் மேலிருந்து கீழ் வரை அவளை ஆராய்ந்து விட்டு "இத்தூண்டு சைஸ்ல இருக்க நீ பாப்பா தான்... அப்பறம் கன்னி நீ இங்க இருக்கும் போது கடலுக்குள்ள என்ன தேடனும் "என அவள் கண்களை பார்த்து அவன் சொல்ல அவளுக்கு எதுவும் புரியவில்லை... சில வினாடிகளில் தான் தன்னை அவன் "கடல் கன்னி "என கூறியது உறைக்க ,அவனை திட்ட வாய் முற்பட அவன் படகில் ஏறி பயணமாகி இருந்தான்..." இடியட் எனக்கு ரொம்ப பெரிய தலைவலி இவன் தான்" என தனியாகப் பேசிக்கொண்டே லாப்டாப் முன்னாடி உட்கார்ந்தாள்...
அசோக்கிடம் தான் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாள்... ஒவ்வொருவராக கடலினுள் குதித்தனர்... எல்லோரும் ஆழத்தில் சென்று கொண்டிருக்கும் போது ருத்ரன் சர்வ சாதாரணமாக ஆழ்கடலில் நீந்துவதைப் பார்த்த வெயினிக்கு ஆச்சரியமாக இருந்தது ...எனினும் இது அவனது வேலை அதனால் இதற்கு பரிச்சயப்பட்டு இருப்பான் என நினைத்துக் கொண்டாள்...
ஆழ் கடலோடிகள் அங்கு ஆராய்கையில் வெயினி கையில் சில புகைப்படங்களை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.... அவள் அருகே வந்த சுமி "அக்கா இதெல்லாம் என்ன போட்டோ.. எவ்வளவு பெரிய பானை "என்று கூறி அந்த புகைப்படத்தை பார்த்தாள்..." ஹேய் அத தாடி ..அது ஒன்னும் பானை இல்லை" என்றாள் வெயினி ..."பானை இல்லையா? அப்போ அது என்ன" என கேட்டாள் சுமி ..."இதுக்கு பேர் தான் முது மக்கள் தாழி "என வெயினி கூற என்ன இது முதுமக்கள் தாழியா ?அப்டினா என்ன கா !என கேட்டாள் அந்த சிறு பெண்....
"உனக்கு சங்க காலம் பத்தி தெரியுமா?" என வெயினி கேட்க ;சுமியோ "தெரியும்னு சொன்னா அதுல எதுவும் கேள்வி கேட்பா; சோ தெரியலனு சொன்னா தான் அவ முழுசா சொல்லுவா என எண்ணி தெரியலகா "என உரைத்திட்டாள்... "என்ன தான் தெரியும் உனக்கு என கடிந்து கொண்டு லாப்டாப்பில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு வெயினி தாழி பற்றி கூற ஆரம்பித்தாள்....
" சங்க காலத்தில் பெயரளவு தெய்வ வழிபாடு இருக்கவில்லை ...ஆனால் மூத்தோர் வழிபாடு என்ற ஒன்று இருந்தது"...."மூத்தோரா "என கேட்டாள் சுமி..." ம்ம் ஆமா இறந்தோரை அவங்க மூனு முறைல அடக்கம் செஞ்சி வழிபட்டு இருக்காங்க "ஒன்னு இறந்தோரை சம்மணமிட்டு உட்கார வைத்து அவர்களின் கையில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதத்தை கொடுத்து இடுப்பு வரை தானியம் நிரப்பி மீதி இடத்தை அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் உடைகளால் பூரணம் செய்து மண்ணில் புதைப்பது.....
இரண்டாவது.. இறந்த உடலை ஒரு வெட்டவெளியில் கிடத்தி காகம் நாய் இதர விலங்குகள் உண்ட பிறகு எஞ்சிய உடல் பாகத்தை தாழியில் இட்டு புதைப்பது...
மூன்றாவது இறந்த உடலை எரியூட்டி சாம்பலை ஒரு குடுவையில் நிரப்பி புதைப்பது ..."இதுல முதலாவது தான் ரொம்ப விஷேசம் "என்றாள் வெயினி... "எதேய் சம்மணமிட்டு சடலத்தை உட்கார வைக்றதா? அட போக்கா !"என அவள் கூறவும்; இளவெயினி லாப்டாப் திரையில் ஏதோ ஒன்றை அவதானிக்கவும் சரியாக இருந்தது....உடனே அசோக்குடன் தொடர்பு கொண்டு "அசோக் அந்த இடத்தை பாருங்க நடுகல் ஏதோ சம்திங் மாதிரி இருக்கு ...பாஸ்ட் பாருங்க ..அந்த இடத்தை! என வேகமாக உத்தரவு இட்டாள் வெயினி..
அசோக்கும் ஓகே என கட்டை விரலை காட்டி விட்டு;அவ்விடத்தை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டு சிறிய ரக பிரஷ்ஷால் அந்த கல்லை துப்புரவு செய்ய ஆரம்பித்தான்... வெயினி அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்..." அக்கா அது ஒரு கல்லு தானே அதை ஏன் இவ்வளவு ஆழமா பாக்ற" எனக் கேட்டாள் சுமி... அசோக் செய்வதை அவதானித்துக் கொண்டே ;"சுமி ;கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு ஏன் எதுக்காக சொல்லப்பட்டுச்சுனு தெரியுமா ?என வெயினி கேட்க ;"இதெல்லாம் நீ தான் தெரிஞ்சிகனும்.... ஏன்னா உனக்கு தான் கல்யாணம் ஆக போகுது ரவி மாமா தான் உன் தெய்வம் "எனக் கூறி சுமி கலகலவென சிரித்தாள் ..."ரவி" என்ற பெயர் கேட்டதும் ஐயோ என்றானது வெயினிக்கு... ஆறு மாசம் அமெரிக்கா ஆறு மாசம் இந்தியா என வாழும் ஐடி வேலை பார்க்கும் இளைஞன்... போன மாதம் தான் இவளை பெண் பார்த்து விட்டு சென்றான்... பார்த்ததும் அனைவருக்கும் வெயினியை பிடித்து விட இன்னும் மூன்று மாதங்களில் நிச்சயமும் ;அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணமும் எனக் கூறி விட்டு சென்றனர் அதில் இருந்து இவளுடன் நெருங்க ரவி செய்யும் அனைத்து முயற்சிகளும் வெயினியினால் வெற்றிகரமாக முறியடிக்கப்படுகிறது..... அவளுக்கு அவன் மீதோ இல்லை கல்யாணத்தின் மீதோ ஏனோ நாட்டமில்லை....
"இப்போ எதுக்கு டி அவன் பேச்சை இழுக்ற ...இதோ பாரு இந்த நடுகல்ல! இந்த கல் முதுமக்கள் தாழி மேல தான் நடுவாங்க..." என்றாள் வெயினி...
"நடுகல் என்பது போரில் இறந்த வீரர்களுக்கு அவர்கள் சடலத்தை புதைத்த இடத்தில் நடப்படும் வீரக்கல் ஆகும் .. இவ்வாறு போரில் இறந்தவன் மனைவி உடன் கட்டை ஏறினால் ;அல்லது கைம்மை நோன்பு எனும் பின்பற்ற இயலா வாழ்வை வாழ்ந்தால் அந்த நோன்பின் ஒரு அங்கமாக கணவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வளர்ந்திருக்கும் அருகம் புல்லை மாலையாக தொடுத்து, அதை கல்லுக்கு அணிவித்து கணவன் ஆன்மாவை சாந்தமாக்குவாள் ...அதனால் தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி தோன்றியது" என வெயினி கூற "ஒரு பழமொழியே இத்தனை ஆயிரம் வருஷம் பழமையானதா ?"என வாய் பிளந்தாள் சுமி...
இதைப் பார்த்த வெயினி வாய் விட்டு சிரித்தாள்..." ஆமாடி இத மாதிரி தாழி தமிழ் நாட்டுல ஆதிச்சநல்லூர் ,கொற்றை, பூம்புகார் இன்னும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு "என சுமியோடு பேசிக்கொண்டே நேரம் மதியத்தை தொட "அசோக் கடல்ல இருந்து வெளியே வாங்க "என கட்டளையிட்டாள் வெயினி... உடனே அசோக், ஸ்டீவ் ,ருத்ரன் மற்றும் ஏனையோர் படகை அடைந்து கரையை நோக்கி பயணமானார்கள்....
அவர்களின் வருகையை எதிர்பார்த்து இருக்கும் போது ;அவளது கூடாரத்திற்கு வந்து சேர்ந்தனர் கவி ,மீனா மற்றும் எசக்கி.... மீனா வந்ததும் வராததுமாக "நிஜமாடி" என வெயினியைப் பார்த்து கேட்க;" புரியுற மாதிரி எப்ப நீ பேச போறா?" என அவளைக் கூறி விட்டு இல்லமா கவி சொன்னான் ;அந்த ருத்ரன் ஏதோ சரில்லனு என்னாச்சு என எசக்கி பொறுமையாக கேட்டான்.... அவளும் நடந்தவை கூறினாள் ..."என்னடி இவன் இப்டி பண்றான்... ப்ராஜெக்ட்கு ஸ்பான்சர்னா எப்படியும் நடக்கலாமா? எதுக்கும் நீ கவனமா இரு! அவன் கிட்ட தனியா போய் பேசாத.." என மீனா கூற; "மேடம் ஆல்ரெடி அவன் கிட்ட ஃபிளாட்" என கவி வேண்டும் என்றே வெயினியின் காலை வாரினான்... அவனின் பேச்சு வெயினிக்கு சிரிப்பை உண்டாக்கியது...
கடலினுள் சென்றவர்கள் கரையை அடைந்தார்கள் ....வெயினி அவர்களை நோக்கி சென்றாள்.... படகில் இருந்து முதல் ஆளாக இறங்கினான் ருத்ரன்.... வெயினியிடம் வந்து "என்னா செல்லாக்குட்டி எனக்காக வெயிட்டிங்கா?" என கண் சிமிட்டி கேட்க ;அவளது கூர் நாசி கோவத்தில் சிவந்து விட்டது... இருந்தும் அமைதியாக அவன் அருகில் நெருங்கி" செருப்பு பிஞ்சிடும் நாயே செல்லம் கில்லம்னு சொன்னா" என அவனைப் பார்த்து கூறி சிரித்துக் கொண்டே விலகி நின்று ;"டயர்டா இருக்கும் நீங்க பிரஸ் ஆகுங்க ஈஸ்வர்" என்றாள் வெயினி....இதை எசக்கி கவனித்து விட்டான்... எனினும் எதுவும் பேசவில்லை எசக்கி ...வெயினியின் வார்த்தை ருத்ரனின் தான் எனும் செருக்கை தூண்டி விட்டது... தலையைக் கோதி கோபத்தை அடக்கிக் கொண்டு கூடாரம் சென்றான்.... அசோக் தான் கொண்டு வந்த மாதிரிகள் மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் பற்றி வெயினிடம் கூறி விட்டு நகர்ந்தான்....
ரத்னா அக்கா மற்றும் சுருதி இணைந்து மதிய உணவு தயார் செய்திருந்தனர்.... அனைவரும் உணவுண்டு விட்டு அமர்ந்திருக்க அங்கு இரு பத்திரிகையாளர்கள் வெயினியை பேட்டி காண வந்தனர்.....
தன் கூடாரத்தினுள் முகேஷ் உடன் போன் பேசிக் கொண்டிருந்த வெயினியிடம் மீனா வந்து பத்திரிகையாளர்கள் வருகை பற்றிக் கூறினாள்... உடனே வெயினியும் காலை கட் செய்து விட்டு பத்திரிகையாளர்களைக் காண்பதற்காக வெளியில் வந்தாள் ...ஓர் ஆணும் பெண்ணுமாக இருவர் வந்திருந்தனர்.... அவர்களை இன்முகத்துடன் வரவேற்று இருக்குமாறு நாற்காலியைக் காட்டினாள் வெயினி.... அவர்களும் உட்கார்ந்தனர்..
"நான் மாதேஷ் இவங்க என் அசிஸ்டண்ட் மேகலா.... நாங்க சாகரம் என்கிற பத்திரிகைல இருந்து வரோம் ..."என தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள் வந்தவர்கள்....
இவர்கள் இருக்கும் இடம் மற்றும் பேசுவது அனைத்தும் ருத்ரனுக்கு தெளிவாகக் கேட்டது ....பத்திரிகையாளர்கள் மாதேஷ் மற்றும் மேகலா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சாட்டையடி போல் பதிலளித்தாள் வெயினி...." தோற்ற மயக்கம் காட்சி பிழைனு" பாரதியார் சொன்ன மாதிரி வீட்ல இருந்து ஒரு விஷயத்துக்கு கமெண்ட் பண்ற சுலபம்.... அந்த செயலை முன்னெடுக்ற எவ்வளவு கஷ்டம்னு ஸ்பாட்ல நின்னா தான் தெரியும்.... கடல்ல இறங்கும் போது கடல் பஞ்சாங்கம் ,அஷ்டமி ,நவமி எல்லாம் பாத்து தான் இறங்கனும்... குமரி கண்டம் னு ஒரு வெள்ளைக்காரன் சொல்லி இருந்தா இவ்வளவு கேள்வி வருமா? இருக்குனு சொல்ல நாங்க போராடுறோம்... இல்லை னு நிரூபிக்க அத சொல்றவங்க போறாடுங்க... வெட்டி கமெண்ட் வேஸ்ட்... என நச்சுனு முடித்தாள் வெயினி... ஏனோ அவளது இந்த ஆவேசம் ருத்ரனை சுண்டி அவள் பால் ஈர்த்தது...
தொடரும்....

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி - அத்தியாயம் 4
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.