Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -5)

Joined
May 18, 2024
Messages
29
வெயினி பேசுவதை ருத்ரன் பார்த்துக் கொண்டு நின்றான்.. அவளது அத்தனை வார்த்தைகளும் அவனுக்கு அச்சுப் பிசகாமல் காதில் கேட்டது ..இவள் இதுக்காக எவ்வளவு பாடுபடுகிறாள் என அவனுக்கு புரிந்தது ...எனினும் அவனுக்கு அது தேவையற்றது தானே..

அவன் நோக்கம் எல்லாம் அங்கு தொல்பொருளியல் பொருட்களை கடத்தி கை மாத்தி விட வேண்டும்...
இது என்ன இன்று மட்டும் நடக்கும் ஒன்றா? இல்லை ருத்ரன் மட்டும் தான் செய்கிறானா? இல்லை...எதிர்காலத்தில் ஓர் போர் வரும்.... அது பெரும்பாலும் மூன்றாம் உலகப்போரே... போர் என்றால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது சாதாரண விடயம் தான்... ஆனால் உணவு இல்லாமல் போவது தான் போரே ஆகும்...

நம் கோயில் கலசங்களில் நவ தானியங்கள் வைத்து, கோபுர உச்சியில் உள்ள கலசத்தில் அரசர் காலத்தில் இருந்தே வைத்து வரும் பழக்கம் உண்டு... இது ஏன்? மழை ,வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பயிர்ச்செய்கை அழிந்தால் ;கோபுர கலச தானியங்களை விதை நாற்றாக பயன் படுத்தி மீண்டும் பயிர்ச்செய்கை செய்வதற்கே ஆகும்... ஆனால் ஆராய்ச்சி என்ற பெயரில் அவை நம் கைவிட்டு போனது தான் அந்தோ பரிதாபம்... ஆங்கிலேயரிடம் நம் வைரமணி நெற்கள் அகப்பட்டுள்ளன...கோதுமை உண்ணும் அவர்கள் எம்மை கோமாளியாக்கிவிட்டனர்...‌ஒரு மூடை விதைத்தால் பாதியளவு கூட இன்று விளைச்சல் இல்லை என்பதே உண்மை...

நம் இந்தியாவின் பல கலைப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இப்போதும் பிரித்தானியாவின் அருங்காட்சியகத்தில் உள்ளது.... இதற்கு உடந்தை நம் அரசியல்வாதிகளில் சிலர்.. ஹரிஹரன் சிலையில் இருந்து ,விநாயகர் சிலை, மதுரா காலத்து புத்தர் சிலை ,சிவன் சிலை வரை எம் ஆதி அரிய தமிழன் தொல் பொருள் அங்கு காணப்படுகிறது...

உலகிலேயே கோகினூர் வைரம் என்றால் சான்றோர் பலர் அறிவார்கள்... காக்கத்தியரின் ஆட்சியின் போது வாரங்கல்லில் உள்ள தம் குல தெய்வமான பத்திரகாளி அம்மனின் இடது கண்ணாக இருந்த வைரமணி தான் அது ...ஆனால் தற்போது இங்கிலாந்தின் டவர் ஆஃப் லண்டன் எனும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் என ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டுள்ளது ...எனவே இது காலம் காலமாக தமிழுக்கும் தமிழருக்கும் நடக்கும் செயல் அவ்வளவே..

வெயினியை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்து கைகுலுக்கி வாழ்த்து கூறி விட்டு சென்றனர்... அவர்கள் சென்ற பிறகு தான் அவள் மூளை இன்னும் துரிதமாக செயற்படத் தொடங்கியது...இது போன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டோர்க்கு எவ்வாறான தடங்கல்கள், இன்னல்கள் வந்துள்ளன என்பதை அவள் அறிவாள்... பத்திரிகையாளர்கள் சென்ற பிறகு ருத்ரனிடம் இது பற்றி கலந்துரையாடி ஒத்துழைப்பு வேண்ட எண்ணி அவன் கூடாரம் செல்ல முற்பட ;"எங்க போற நீ அந்த பக்கம்?" என கவி கேட்டான்...

"ஈஸ்வர் கிட்ட பேச போறேன்டா "என வெயினி கூற "எதேய் அந்த பொறுக்கி கிட்டயா ?"என கவி கேட்க ;"பிளீஸ் கவி அமைதியா பேசு !இதென்ன வார்த்தை லோக்கலா பேசுற?" என கவியை அதட்டி விட்டு சில கோப்புகளை கையில் எடுத்துக் கொண்டு ருத்ரனைக் காண சென்றாள் வெயினி....

வெயினியை அங்கு எதிர் பாராத ருத்ரன் "வாட் எ சப்பிரைஸ் என் பக்கம் காத்து... சாரி சாரி தென்றல் வீசுது "என பேச வெயினிக்கு அவன் பேச்சில் எரிச்சல் உண்டானாலும் தன் காரியம் நடக்க வேண்டும் என அமைதியை கடைப்பிடித்தாள்.....

" ஈஸ்வர் எனக்கு உங்க உதவி வேணும்... இதெல்லாம் நான் சரி வர பண்ணனும்..." என வெயினி கூற அவளது கை பற்றி முதுகு புறம் வளைத்து ,அவள் காது மடலில் இவன் உதடுகள் உரசும் அளவு அவளை அவன் பால் நிறுத்தி இருந்தான் ருத்ரன்... அவன் உயரத்திற்கு இவள் அவனின் மார்பளவே இருந்தாள்...வெயினி எதிர்பாராத செயலில் அதிர்ந்து விட்டாள்...

"ஏன்டி நான் தொட்ட இடம் உனக்கு அருவருப்பா இருக்கா? உன் பின்னாடி ஒரு நாய் சுத்துமே! ஹான் கவி என்னை பாத்து பொறுக்கினு சொல்லுது"
என ருத்ரன் கூற "அட சண்டாளா அம்புட்டு தூரம் இருந்து பேசினது கேடாடுட்டா உனக்கு" எண எண்ணிக் கொண்டு;" கவி கிராதகா இப்டி மாட்டிவிட்டிட்டியே" என கவியை மனதில் கருவிக் கொண்டு; "கொஞ்சம் தள்ளி நில்லுங்க ஈஸ்வர் "என மென்மையாக கூறினாள் ..அவன் பேசும் போது அவன் மீசை அவளது காது மடலில் உரசும் போது அவளுக்கு ஏன் என்று சொல்ல முடியாத ஒரு குறுகுறுப்பு உண்டானது... மேலும் கையும் வலித்தது... ஆனால் அவன் விடவில்லை... இந்த முறை கொஞ்சம் அதட்டலாகவே" ஈஸ்வர் கைவலிக்குது விடு" என கூறினாள் ...எந்த பலனும் இல்லை... கைவலி தாங்க முடியாமல் "டேய் விர்ரா! சீஈஈஈ ஆம்பளயா நீ ?"என அவள் கூறி முடிக்கும் முன்பே அவள் அதரம் இரண்டும் அவன் வாயினுள் அகப்பட்டு இருந்தது...

வெயினி போய் இவாவளவு நேரமாச்சு ஏன் இன்னும் காணோம் என தேடி வந்த கவி இதைப் பார்த்து அதிர்ந்து நின்றான்... கவியை கண்டதும் வெயினியை விடுத்து ஸ்டைலாக தன் தலையைக் கோதிக் கொண்டு ;கவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு" இன்னிக்கு ராஸ்பெர்ரி செம்ம டேஸ்ட் "எனக் கூற கவி ருத்ரன் மீது பாய்ந்தான்...

" பிளீஸ் கவி வா "எனக் கூறி; அழுகையை உள் இழுத்துக் கொண்டு கவியை கைபிடித்து அழைத்து சென்றாள் வெயினி... இதைப் பார்த்த ருத்ரனுக்கு ஏனோ புரியவில்லை அவள் யாரிடமும் பேசுவது பழகுவது தவறாக இல்லை என்ற போதும் பிடிக்கவில்லை அவனுக்கு..

கூடாரத்தினுள் வந்த கவி வெயினிக்கு கன்னத்தில் ஒரு அரை விட்டான் ..."அவனை தள்ளி விட கூடவா உனக்கு திராணி இல்லை? ஏன் வெயினி இப்டி மாறிட்ட?" என திட்ட வெயினி தன் கையைக் காட்டினாள்... அவள் நடந்தது கூறவும் வெயினியை அவசரப்பட்டு அடித்ததை எண்ணி மனம் வருந்தினான் கவி...

"கவி "என அவள் அழைக்க ;என்ன என்பது போல அவன் பார்த்தான் ..."பிளீஸ் யார் கிட்டவும் சொல்லாதடா "என வெயினி கூற; "இந்த ப்ராஜெக்ட் முடியட்டும் அப்பறம் இருக்கு அவனுக்கு ...வீட்ல இருந்து கால் வந்துச்சு நாளைக்கு மதியம் போல ரவி வருவாராம் நீ ஏன் கால் அட்டண்ட் பண்ணலனு கேட்டாங்க அம்மா " என கவி கூற" நான் கவனிக்கலடா "என்றாள் வெயினி..
" சரி வா ரத்னா அக்கா சாப்ட கூப்டாங்க போகலாம் ...மூஞ்சை கழுவிட்டு வா" என்றான் கவி ....அவளும் ஆடை மாற்றிக் கொண்டு உணவுண்ண சென்றாள் ...மீனா ஹார்ட் வடிவ பூரி சுட்டு எசக்கிக்கு பரிமாறுவதைப் பார்த்த வெயினி அனைத்தும் மறந்து சிரித்து விட்டாள்..." என்னடி இது "என வெயினி கேட்க "என் மாமாக்கு என் இதயத்தை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்" என மீனா கூறா அந்த பூரியில் சுருதி ஒரு ஓட்டை போட்டாள் "இதயத்தில் இடி வீழ்ந்தது" என ஸ்டீவ் கூற;" மூடிட்டு சாப்டுங்க "என எசக்கி அறிவுறுத்தினான்...

"என்னாச்சுமா கன்னம் சிவந்து இருக்கு" என ரத்னா அக்கா வெயினியிடம் கேட்க; அப்போது தான் எல்லோரும் அதை அவதானித்தார்கள் ..."என்னடா மாப்பு யார் வெச்சா ஆப்பு "என எசக்கி கேட்க; கவிக்கு புரையேறியது..." நான் தான் கைல பூச்சி கடிச்சிட்டுனு கையை உதறினேன்... இவ கன்னத்துவ பட்டுட்டு.." என சாப்டுக் கொண்டே கூற; "கண்ணில்லயா "எனக் கூறி எல்லோரும் அவனை திட்டினார்கள் ...கவிக்கு பழிப்பு காட்டி விட்டு "பரவால சின்ன பையன் விடுங்க... ஆயின்மண்ட் போட்டா சரியாகிடும் "என்றாள் வெயினி ...சுருதி ஆயின்மண்ட் எடுத்து கொடுக்க மீனா போட்டு விட்டாள்....
எப்படியோ அரட்டையோடு உணவு வேளை கடந்து எல்லோரும் உறங்க சென்றனர்....

ருத்ரனுக்கு உறக்கமே வரவில்லை ...காதல் என்றால் 1/4 கிலோ எவ்வளவு என்பான்.... இவனுக்கு தன் உணர்வின் பெயர் பிடிபடவில்லை... தானாக வரும் பெண்களிடம் தான் தன் ஆளுமையை காட்டுவான்... தான் ஏன் இவளிடம் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை ஊகிக்க மறந்தான் அவன்... இவளின் மென்மை, வாசம் புதிதாக இருந்தது ...அவள் அருகில் இருந்தால் அகிலமும் அற்பமென தோன்றுகிறது ...இதில் இருந்து வெளி வர கஞ்சா சுருட்டை புதைத்துக் கொண்டு; யாருக்கோ இன்று கடலில் பார்த்தவை பற்றி குறிப்பு அனுப்பி விட்டு உறங்க சென்றான் ருத்ரன்....

விடியல் இன்று வினோதமாய் இருந்தது நம் சுமிக்கு... அவளின் மூஞ்சியில் யாரோ முறுக்கு மீசை ஒட்டி இருந்தனர் ....சுமி, அசோக், வெயினி மூவரும் ஒரே கூடாரத்தினுள் தான் தூங்கினர் ...இதை முதலில் பார்த்தது அசோக் தான் ...அவன் சுமியைப் பார்த்து அலறி விட்டான்... அவனது அலறலில் விழித்த வெயினி மிரண்டு விட ;சுமியோ "என்னடா இது எல்லாருமே நம்ம மூஞ்சை பாத்து ஓடுதுங்க !அவ்வளவு அழகா மாறிட்டோமா" என எண்ணி கண்ணாடியைப் பார்த்த அவளும் பயந்து விட்டாள்....

"அக்கா இங்க பாரு யாரோ பாத்த சதி வேலை தான் இது என் அழகுல பொறாமைப் பட்டு பண்ணிட்டாங்க" என சுமி கூற"எதேய் அழகா அது எங்க இருக்கு " என அசோக் கூற " யோவ் பூமர் நானும் பாக்றேன் ரொம்ப பேசுற நீஈஈஈஈ " என்று சுமியும் அசோக்கும் மாறி மாறி சண்டை இட்டனர்..

எதோ பண்ணுங்க என எண்ணிய வெயினி கூடாரத்தின் வெளியே வர;அவளது கூடாரத்தைப் பார்த்தவாறே காபி அருந்தி கொண்டு நின்றான் ருத்ரன்...இவளைக் கண்டதும் தன் இதழ்களை நாவால் தடவி ருசித்துக் காட்டினான்....காலைலயே இவன் மூஞ்சிலயா முழிக்கனும் எல்லாம் விதி என தன்னை நொந்து கொண்டாள் அவள் ... "இந்தாமா டீ"என அங்கு வந்தார் ரத்னா அக்கா.... அவரைக் கண்டதும் வெயினியின் முகம் மலர்வதைக் கண்ட ருத்ரன்; கோபத்தோடு உள்ளே சென்றான்....

தொடரும்.....
 

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -5)
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top