Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
25
தன்னோடு பேசும் போது மட்டும் அவள் அருவருப்பு அடைவதையும் அதே நேரத்தில் மற்றவர்களோடு அன்பாகப் பழகுவதையும் பார்த்த ருத்ரனுக்கு ஆன்மா கொதித்தது ...இவளிடம் தான் மயங்குகிறோம் என அவன் அறியவே இல்லை....

ருத்ரனுடன் வந்தவர்கள் "சார் நாங்க ரெடி ஆகுறோம் ...நீங்களும் வரீங்களா?" எனக் கேட்க "ம்ம்" என தலையை ஆட்டி கடலுக்கு புறப்படத் தயாரானான்..

அங்கு வெயினியோ எசக்கியிடம் விவாதித்து கொண்டு இருந்தாள்... "எனக்கு கல்யாணம் வேணாம்டா...அதுல சுத்தமா விருப்பமே இல்லை ... எனக்குனு சில நோக்கம் இருக்கு நான் அந்த வழில போகனும் "என்று கூறிக்கொண்டே தன் அலுவலக கோப்புகளை காண்பித்தாள்...
"பாரு !பாரு !இன்னைக்கு வரைக்கும் முடிவே இல்லாம இருக்குற ஆய்வு மட்டும் இல்லை ...ஆராயவே விடக் கூடாதுனு நினைக்ற ஆய்வுல இது ஒன்னு.... அதுக்காக எவ்வளவு பேர் முயன்று தோத்துடாங்க ...எசக்கி நான் முழுசா கண்டு பிடிக்க போறேன்னு சொல்லல... முடிஞ்ச வரைக்கும் கண்டு பிடிக்றேன்... ஆட்டிக்ல இருக்ற பனிகட்டிகளை எடுத்து ஐஸ் ஏஜ் பத்தி ஆராயும் போது ,ஏன் கடலுக்கு அடியில இருக்றத நாம தோண்டக்கூடாது? கல்யாணமே வேணாம்னு சொல்லல... இப்போதைக்கு வேணாம்னு சொல்றேன் .."என அவள் தன் ஆதங்கத்தை கொட்ட அங்கு வந்தாள் மீனா... அவளைக் கண்டதும் எசக்கி என்ன என்பதை போல் பார்க்க ,"ரவி அண்ணா ஆன் த வே "என கூறவும் வெயினிக்கு ஏதோ ஓர் அழுத்தம் உள்ளூர தாக்கியது... இருக்கையில் தலையைப் பிடித்து அமர்ந்து விட்டாள்...

அவளது கையில் இருந்த கோப்புகளை வாங்கி பார்த்த எசக்கி "இப்போதைய தமிழகம் இரண்டு வீதம் கூட வராதா? அவ்வளவு பெரிய இடமா குமரி நாடு "என வாய் பிளந்தான்..."ஆமா எசக்கி 1960-1970 வரை பத்து வருடமா நடந்த கடல் தொல்பொருளியல் ஆராய்ச்சில அரபிக்கடல் ,லச்சதீவு ,மாலைதீவு, சாகோஸ் வரை 20 ஆயிரம் மைல் எல்லைப் பரப்பைக் கொண்டது தான் குமரிக் கண்டம்னு உறுதியாகி இருக்கு" என்றாள் வெயினி..

"எம்மாடி எவ்வளவு பெரிசு "என மீனா கூற "ஆமா மீனா கடலுக்கு அடியில 200 மீட்டர் ஆழத்தில் அல்ட்ரா சோனிக் ஒலிக் கற்றைகள் பயன்படுத்தி ஆராய்ந்து பாத்ததுல சிலப்பதிகாரம் சொல்ற "பஃறுளி ஆற்றுடன் பன்மலை படுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள" என்பதை நம்மவர்கள் உறுதி செய்தார்கள் "என வெயினி கூற ;புரியல என்றாள் மீனா ...

"உனக்கு புரிஞ்சா தான் அதிசயம்" என எசக்கி கூற ;"என்ன சொன்ன "என முறைத்தாள் மீனா.." எனக்கும் புரியலனு சொன்னேன்மா... எதுக்கு இப்போ கண்ணை உருட்ற" என்றான் எசக்கி... "அதானே பாத்தேன் என மீனா முறுக்க," "நீ சொல்லுடா "என்றான் எசக்கி வெயினியிடம்.....

"குமரி மலைனு ஒன்னு இருந்ததாகவும், பஃறுளி னு ஒரு ஆறு ஓடினதாகவும், அதை சுனாமி வந்து அழிச்சதாகவும் சிலப்பதிகாரம் சொல்லுது" என அவள் கூறவும், ரவீந்திரன் வந்து கூடாரத்தினுள் கவியுடன் நுழையவும் சரியாக இருந்தது...." வாங்க மாப்ள சார் "என எசக்கியும் ,"வாங்க அண்ணா "என மீனாவும் வரவேற்க ,"ஹாய் மாம்ஸ்" என கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சுமி... "வாங்க "என சுருதியும் ,ரத்னா அக்காவும் வரவேற்று காபி கொடுத்தார்கள்...." இப்போ தானே வந்து இருக்காரு கொஞ்சம் பிரீ ஆகட்டும் "என கவி கூறும் வேளை "அக்கா எல்லாம் ரெடி" என வந்து நின்றான் ஸ்டீவ் ..."அசோக் அசோக் போக ரெடி பண்ணிடீங்களா" என வெயினி கேட்க; "எஸ் மேடம் போலாம்" என்றான் அவன்....

"எங்க போற இளா "என ரவி கேட்க; அவனின் "இளா" என்ற அழைப்பில் இளவெயினிக்கு இரத்தம் கொதித்தது... "கப்பல்ல" கடலுக்கு போக போறேன் என அவள் கூற," நானும் வரலாமா "எனக் கேட்டான் ரவி ..."அதுக்கென்ன வாங்க மாமா போலாம்" என ஸ்டீவ் முதல் ஆளாக ரவியை கூட்டிக் கொண்டு சென்றான்... வெயினி, ஸ்டீவ், அசோக் ,ருத்ரன் ,ரவி மற்றும் ஆழ்கடலோடிகள் என அனைவரும் கப்பலில் ஏறி கடலுக்குள் சென்றனர்...

"இருநூறு மீட்டர் ஆழம் போகனும் அசோக்" எனக் கூறி வெயினி திரும்பி நிற்க ,அவள் தலை முட்டியது ருத்ரனின் மார்பில் தான் .."ஆஆஆ" என தலையைத் தடவிக் கொண்டே அவள் நிமிர ,ருத்ரன் கோவக் கனல் தெறிக்க அவளைப் பார்ப்பது நன்றாக தெரிந்தது.. "யார் அவன் "என ருத்ரன் கேட்க ,"எவன்" என கேட்டாள் வெயினி ..."அது தான் காலைல வந்தானே அவன் " என ருத்ரன் சொல்ல "ஓஓ ரவியா !எனக்கு பாத்த மாப்பிள்ளை "என வெயினி சாதாரணமாக கூற, ருத்ரனின் உள்ளிருக்கும் மிருகம் முழித்துக் கொண்டது ...அவளது பின்னந்தலை பற்றி, இடை பிடித்து இரண்டடி அவளைத் தூக்கி ,அவள் உயிரை வாய் வழி உறிஞ்சி விட்டான் ..கேட்டால் காதல் இல்லை இவள் அழகு தன்னை அழைக்கிறது என்பான்.. வெயினி பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு "ஏன் இப்டி என்னை பாடா படுத்துற நீ !வந்த வேலையை பார்க்காம என்னை ஏன் சீண்டுற" என அவனைப் பாராப்பதை தவிர்த்து கடலைப் பார்த்தபடி கேட்டாள்....

அவனுக்கு விடை தெரிந்தாலே சொல்ல மாட்டான்... தெரியாத ஒன்றைக் கேட்டால் எவ்வாறு சொல்வான் ...அவள் அருகில் வந்து விழிகளை உற்று நோக்கி "உனக்கு பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை... அப்பறம் ஒன்னு "என இவன் கூற என்ன என்பதை போல் பார்த்தாள் வெயினி ..."தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றினு சொல்வாங்களே அவருக்கு தேர்ட் ஐ இருந்துச்சி தானே !அவரு தான் குமரி கண்டத்தோட ஆதி குடிமக்களுக்கு பேரரசன் ...சோ தேர்ட் ஐ டெலிபதியோட இன்குளூட் ஆன ஒன்னு ...அவங்க அதிக மூச்சுப் பயிற்சி செய்வாங்க ..ஆழ்கடல்ல போறது அவங்களுக்கு சாதாரணம்... டெலிபதி தெரிஞ்சவங்க உள்ளுணர்வு மூலமா மெசின் கண்டுபிடிக்காத இடத்தை கண்டு பிடிப்பாங்க.... நீ டெலிபதி ரிலேடட் பீப்பிள் பாரு ...காட் இட்!" என சர்வசாதாரணமாக பேசி சென்றவனைப் பார்த்து வெயினி வாயடைத்து நின்றாள்....

அவன் அங்கிருந்து செல்லவும் ரவி வரவும் சரியாக இருந்தது ...."இளா சாப்டியா "என ரவி கேட்க ;"ம் நீங்க" எனக் கேட்டாள் வெயினி..." ம் இல்லை உன் கூட சாப்ட நினைச்சேன் ...என்றான் ரவி .....திடீரென உள்ளே நுழைந்த ருத்ரன் "நேத்து ,இன்னைக்கு மாதிரி நீயே சாப்பாடு கொடுத்திடு ...செம்ம டேஸ்ட் ...என தன் நாவை சுழற்றி ருசி கண்ட பூனை போல் கூறி சென்று விட; அதன் அர்த்தம் புரிந்த வெயினி வெறி ஆனாலும் ,அவன் அறிவைக் கண்டு வியந்தாள் ....என்ன ஒன்று அவன் பேசும் தமிழ் தான் இவளை ஐயோ என உள்ளுக்குள் அலற வைக்கிறது... தப்பி பிறந்த வெள்ளைக்காரன் போல் உள்ளது அவன் தமிழ்.... "அவன் கூட சாப்டியா இளா நீ !"என ரவி கேட்க ,"இல்லை சாப்பாடு கொடுத்ததே அவ தான் "என கதவின் அருகில் நின்று தலையை நீட்டி சொல்லி விட்டு ,தென் அவன் இல்லை ருத்ரன் ஓகே என கூறினான் ...

அதே சமயம் அசோக் வந்து "மேடம் கணினி திரைல பாண்டியர்களோட கட்டிட சாயல்ல ஒரு இடம் தெரியுது "என கூற கப்பலில் உள்ள தங்களது ஆய்வறை நோக்கி சென்றாள் வெயினி ...அவளுடன் அசோக் ,ருத்ரன், ரவி என மூவரும் பின்னாடி சென்றார்கள்....

அல்ட்ரா சோனிக் மூலம் இடிபாடாடு கட்டிடங்களின் முழு மாதிரிப் படங்களை உருவாக்க முடியும் என்பது தொல்லியலாளர்களின் நியதி... குமரி கண்ட மக்கள் இன்று நாம் பயன்படுத்தும் சீமெந்தை விட பல மடங்கு வலிமை வாய்ந்த சாந்தை பயன்படுத்தி கட்டிடங்கள் உருவாக்கினார்கள்.... அதனாலேயே எத்தனை ஆயிரம் வருடங்கள் போனாலும் அவற்றின் எச்சங்கள் எம் முன் எழுந்து நிற்கிறது.... என்பதை அங்கிருந்த அனைவருக்கும் விளக்கிய வெயினி கப்பலின் கண்ணாடியின் ஊடாக வானத்தை அவதானித்து விட்டு, வெளியே வந்து பார்த்தாள் ...."உடனே அசோக்! அசோக்! கப்பலை திருப்பு கீழ் வானம் சிவக்குது... கடல் அலை எழும்ப போகுது " என்றாள்... "மேடம் மூனு பேர் கடலுக்குள்ள போய் இருக்காங்க "என அசோக் கூற "வாட்! யாரு ?"என அவள் கேட்டாள்..." ருத்ரன் அண்ட் டீம் மேடம்" ..." என் கூட தானே வந்தான் ...எப்போ போனான்?" என வெயினி யோசனையாக கேட்க" நீங்க இத பாத்து பேசிட்டு இருக்கும் போது மேடம் "என்றான் அசோக்... வெயினிக்கு சொல்ல முடியாத உணர்வு... ருத்ரனுக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற தவிப்பு...

"அசோக் அவங்கள மேலே வர சொல்லுங்க" என உத்தர விட்டாள் அவள்..." மேடம் நாம உடனே கரைக்கு போகனும் ‌.அலை வேகம் அதிகமா இருக்கு" என அசோக் கூற ;"என்ன சொல்றீங்க அசோக்? அவங்கள விட்டு எப்டி போகலாம் ?"என அவள் கத்த;" இளா இப்போ நாம பாதுகாப்பா போறது தான் முக்கியம்... இப்படி ஆக்ஸிடென்ட் எல்லாம் நடக்கும்னு தானே ஒப்பந்தம் பண்ணி வேலைக்கு வாராங்க ..."என ரவி கூற "உயிர் போறது உங்களுக்கு சாதாரணமா இருக்கா" என அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அசோக் ஓடி வந்தான்...." மேடம் அவங்க மூனு பேரும் வந்தாச்சு கரைக்கு போகலாம்" எனக் கூறி ,கரைக்கு கப்பலை திருபாபினான்...

அங்கு அவளோ மூவரையும் பார்க்க சென்ற போது, மற்றைய இருவரும் நன்றாக இருந்தனர் ருத்ரனுக்கு தான் முகத்தில் அடிபட்டு கடைவாய் வழி இரத்தம் கசிந்தது ...அதைப் பார்த்த வெயினி பதறி விட்டாள்... "அசோக் பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் தாங்க" என கேட்டு வாங்கி அவன் அருகில் வந்து கலங்கிய கண்களை சிமிட்டி சரி செய்து விட்டு அவனது காயத்தை பஞ்சால் துடைத்தாள்..... ருத்ரனுக்கு சிரிப்பாக இருந்தது ....எத்தனை துப்பாக்கி குண்டுகளை இந்த உடல் தாங்கி இருக்கும் ...இதற்கு இவள் அழுகிறாளே! இருந்தும் அவள் மருந்து பூசியதால் வந்த எரிச்சலில் எதுவும் செய்ய முடியாது போனது அவனுக்கு ....கப்பலும் கரையை தொட்டது அனைவரும் கீழே இறங்கி தங்களது கூடாரத்திற்கு
சென்றனர்....

தொடரும்.....
 
Last edited:
Back
Top