இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 29
ருத்ரன், வெயினி மற்றும் ஏனையோர் அவர் அவர் கூடாரத்தினுள் நுழைய, ரவி தனியாக கம்பெனி விஷயமாக போன் பேசிக் கொண்டு நின்றான்....
வெயினிக்கு ருத்ரன் நியாபகமாகவே இருந்தது ..இவள் மருந்திடும் போது எரிச்சலில் அவன் கண்களை இறுக மூடியதே இவள் கண் முன் நிழலாடியது...
ரவி போன் பேசிவிட்டு கூடாரத்தினுள் நுழைந்தான்... வெயினி அசோக்குடன் லாப்டாப்பில் எதையோ காட்டிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்...
அவனைக் கண்டதும் அசோக்" சரி மேடம் நான் நைட் டீடைல்ஸ் பாத்துட்டு சொல்றேன் "எனக் கூறி விட்டு வாங்க சார் என ரவியைப் பார்த்து சொல்லிக் கொண்டே வெளியே சென்றான்...
வெயினியின் அருகில் வந்த ரவி அவளிடம் "என்ன வெயினி சீரியல் டிஸ்கஸ் போல நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் ? "எனக் கேட்க" ப்ராஜெக்ட் பத்தி தான் ... நீங்க கில்டியாகுற மாதிரி எதுவும் இல்லை "என பட்டும் படாமல் பதில் சொன்னாள்.. அவள் லாப்டாப்பில் மூழ்கி விட்டாள்.. ரவியின் பார்வை அவளை அத்து மீறியது.. பெண்களுக்கு இயல்பாகவே ஒரு திறன் உண்டு... யாரும் தங்களைப் பார்த்தால் அசௌகரியமாக உணர்வார்கள்... அவ்வாறே தன்னை யாரோ பார்ப்பது போல் உணர வெயினி நிமிர்ந்து பார்த்தாள்... ரவி தான் தன்னை பார்வையால் அளந்து கொண்டு இருக்கிறான் எனப் புரிந்தது.... வெயினி தனது ஆடைகளை சரி செய்து கொண்டு "என்ன ரவி எப்போ ஊருக்கு போக போறீங்க" எனக் கேட்டாள்.... அவள் தன்னை அவதானித்தது கூட அவன் அறியவில்லை .... "ம்ம் போகலாம் என்ன அவசரம்" என்றான் ...வெயினிக்கு வந்த கோபத்திற்கு அருகில் இருந்த தண்ணீர் போத்தலை தட்டி விட்டாள் ...அது ரவியின் மடியில் கொட்டி அவன் பேண்ட் ஈரமான பின்னரே அவன் உணர்வுக்கு வந்தான்... "என்ன வெயினி தண்ணி கொட்டிட்டா" எனக் கேட்டவனைப் பார்த்து"இவ்வளவு நேரம் உன் வாய்ல இருந்து தான் தண்ணி ஊத்திச்சு " என மனதில் எண்ணினாள் வெயினி....
"ரவி உங்க பார்வையை சீர் செஞ்சுகோங்க" என வெயினி மேலோட்டமாக கூற;" பார்க்க வேண்டியவங்க பாத்தா தப்பில்லை" என்றான் ரவி...
"பொருள் இன்னும் உங்களுக்கு உடைமை ஆகல ரவி" எனக் கூறி விருட்டென வெளியே சென்றாள் வெயினி... அவள் போய் நின்ற இடம் ருத்ரனின் கூடாரம் . .அங்கு அவன் மேலாடையற்று கால் நீட்டி மெத்தையில் மல்லாக்க படுத்து கொண்டிருந்தான்... இவளைக் கண்டதும் "என்ன பாப்பா" என்று உதடு வளைத்து நக்கலாக சிரிக்க; ம்ச் என உச்சிக் கொட்டிய வெயினி, "இப்போ எப்டி இருக்கு சாப்டிங்களாக?" எனக் கேட்டாள் . இவ்வாறெல்லாம் அவன் மீது யாரும் பரிவு காட்டியதில்லை....காட்ட அவனும் விடவில்லை என்பது தான் நிஜம்...இவளின் அன்பு அவனின் மண்டைக்கு உறைக்கவுமில்லை.. "உனக்கு ஏன் நான் பதில் சொல்லனும்" என்பதைப் போல் இருந்தான் ருத்ரன்... அவனின் ஆட்டிடியூட் இவளுக்கு சிறு பிள்ளை தனமாக இருந்தது...
வெயினி சுமிக்கு கால் பண்ணி விட்டு காத்திருந்தாள் ...சுமி சுடச் சுட பொங்கல் கொண்டு வந்திருந்தாள்..." அக்கா! இந்தா வாங்கிக்கோ. நான் போறேன்..." எனக் கூறி வெயினியின் கையில் உணவுத் தட்டை திணித்து விட்டு," என்ன அயர்ன் மேன் வாய்ல மீன் கடிச்சிட்டா" என ருத்ரனைப் பார்த்து கேட்டு சிரித்து கொண்டே சென்று விட்டாள் ... அவனின் திடகாத்திரமான கட்டுடல் தான் சுமி அயர்ன் மேன் எனக் காரணம்...அவளின் குறும்பு ருத்ரனை கவராமல் இல்லை எனினும் வாய் விட்டு கூறுபவனா அவன்...
" இந்தாங்க சாப்டுங்க "என அவள் நீட்ட; "நான் கேட்டேனா !"என்றான் ருத்ரன்... "கேக்கல நான் தான் கொடுத்தேன்" என வெயினி கூற ;"கையெல்லாம் வலிக்குது ஊட்டி விடு "என்றான் . அவள் கரண்டியால் ஊட்டி விட "கை எதுக்கு இருக்கு? நீ பாப்பானு காட்ர பாத்தியா" என நக்கலாக கூற ; அவனை முறைத்துக் கொண்டே முழுவதையும் ஊட்டி விட்டாள் வெயினி...
" டெலிபதி தெரிஞ்சவங்க பாக்கனும்னு சொன்னீங்க... நான் மேல இருக்ற ஹையர் ஆபிசர் கிட்ட அனுமதி கேக்கனும் ...ஸ்ட்ராங் ரீசன் வேணும்... என்று கூறி விட்டு அமைதியாக இருந்தாள் வெயினி...
அவளை பார்த்தவாறே அவளுக்கு தேவையானதை கூறத் தொடங்கினான் ருத்ரன்...
"மூன்றாம் கண் விழிப்புணர்வு அதாவது தேர்ட் ஐ டெலிபதியின் அறிஞர்னு சொல்ற "லாஸ் கிங் "என்பவர் குமரி கண்டத்தோடு தொடர்புடைய மேரு மலை உச்சியில குமரி கண்ட மக்கள் வணங்கிய ஓர் தெய்வம் என மனக் கண்ணில் உற்றறிந்து ,தூய வெண்தாமரை மலரில் வீற்றிருக்கும் ஓர் தெய்வத்தை வரஞ்சு காட்டினார் ...அதன் இடது கையில் நீள வாக்கில் சங்கும், மற்றும் வலது கையில் வஜ்ர ஆயுதமும், உடல் மற்றும் முக அமைப்பு ஆண் போலவும் இருந்தது ...இது இந்திரனே ஆகும்.. மேலும் பௌத்த மதத்தில் புத்தருக்கு ஞானம் போதித்த சங்கன் என்ற பெயர் குறிப்பிடுவது இந்திரனே ஆகும்... பௌத்தர்கள் புத்தருக்கு வெண் தாமரை வைப்பது போல், இந்திரனுக்கும் வெண் தாமரை வைத்து வழிபடுவது புலனாகிறது ...அது மட்டுமல்ல பாண்டியர்களோட கோயில் கட்டிட அமைப்பில் நெற்றிக் கண் ஓவியத்தை அதிகமாக காணலாம் ...."என ருத்ரன் முடிக்க யார்ரா நீ என்பதைப் போல் அவனை வியந்து பார்த்தாள் வெயினி...
வெயினியின் முகத்திற்கு நேராக சுடக்கு போட்டு நினைவிற்கு கொண்டு வந்தான் ருத்ரன்...." வந்த வேலை முடிஞ்சா ?நீ போகலாம்" என்றான் முகத்தில் அடித்தால் போல்...." அப்பறம் நீ எனக்கு வேலைகாரியா கொஞ்சம் நேரம் இருந்ததுக்கும் நான் இப்போ டீடைல்ஸ் சொன்னதுக்கும் சரியா போச்சு "என கூற அவள் நொந்து விட்டாள் ....மனதார விரும்பியே இதை எல்லாம் செய்தாள்.... வெளியே முறைத்தாளும் உள்ளே ஓர் ஆனந்தம் அவனுக்கு உணவூட்டும் போது.... இவன் வார்த்தைகள் வாளின்றி அவள் இதயத்தை துண்டாடியது ....எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள் அவள்...
தன்னுடைய கூடாரத்தினுள் நுழைந்து முகேஷிற்கு ருத்ரன் கூறிய அனைத்தையும் மெயில் அனுப்பினாள்.... ருத்ரன் தனக்கு உதவுவதாக நினைத்தாள் அப்பேதை ....ஆனால் அவளுக்கு புரியவில்லை அவன் காரியம் சுலபமாக சீக்கிரம் முடிய வேண்டும் என்று தான் வெயினிக்கு உதவுகிறான்....ஆடு நனையுதேனு ஓநாய் ஈழுவுறது நடிப்பு தான்னு அவளுக்கு புரியல....என்று இது தெரிந்தால் என்னாகும் அவள் உள்ளம்......
கூடாரத்திற்கு வெளியே ஏதோ சண்டை இடுவது வெயினியின் காதில் கேட்க; வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் என்னவென்று... அங்கு அசோக்கும், சுமியும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்து பார்த்து நின்றனர்.... இதுங்களுக்கு என்னாச்சு என வெயினி யோசிக்க ;அருகில் ஓடி வந்தாள் சுமி..." அக்கா அந்த அண்டங் காக்கா தான் எனக்கு அன்னைக்கு மீசை வரஞ்சி இருக்குனு இப்போ தான் தெரிய வந்துச்சு.... கவி கிட்ட சொல்லி சிரிச்சிச்சா... அத நான் கேட்டுட்டேன்" என்றாள் சுமி....
வெயினி அசோகை பார்த்து "நிஜமாகவா" என்பதைப் போல் ;கேட்க "ஆமா "என தலையசைத்தான் .. அசோக்கிடம் "ஏன் "என வெயினி சைகையால் கேட்க "அவ்வளவு வன்மம் "என வாய் விட்டு சொன்னான் அசோக்.... வெயினி சிரித்து விட்டாள்... இங்கு வந்து வெயினி இவ்வாறு சிரிப்பது இது தான் முதல் முறை.... இந்த வேலை காரணமாக தன் சிரிப்பை தொலைத்திருந்தாள் அவள்...
இங்கு இவ்வாறு நகர்கையில், அந்தி சாயும் நேரம் நெருங்கி விட்டது... ஸ்டீவ் மற்றும் சுருதி வெயினியைப் பார்க்க வந்திருந்தனர்... "வெயினி சித்தி கால் பண்ணாங்க இவனுக்கு அங்க சாம்பியன்ஷிப் லீக் போட்டி ஆரம்பிக்க போகுதுனு அறிவித்தல் விட்டிருக்காங்களாம் வர சொன்னாங்க" என ஸ்டீவைக் காட்டி சுருதி கூற ;"அது தான் சுருதி முக்கியம்.. போகட்டும்" என்றாள் வெயினி....
" இல்லை உனக்கு உதவிக்கு ஆள் வேணுமே "என சுருதி கேட்க ;"இல்லை நான் வேற ஆளுங்க பாத்துக்றேன் ...இவன் பியூசர் தான் முக்கியம் "என வெயினி கூறினாள் ..."சாரி கா என்னால இந்த ப்ராஜெக்ட் கூட இருந்து முடிச்சு தர முடியல "என ஸ்டீவ் வருத்தமாக கூற "விடுடா நீ சாம்பியன் ஆனா அக்காவே இதை விட பெரிய ப்ராஜெக்டா கூட்டி போறேன் ஓகேவா ?"என அவனைத் தோன்றினாள் வெயினி....
இவ்வாறு நாழிகை நகர்ந்து ஆதவன் மறைந்து இரவானது.... அனைவரும் உண்ணச் செல்ல வெயினிக்கு ருத்ரன் நினைவாக இருந்தது ....அவனை ஒரு வார்த்தை உணவுண்ண அழைக்கலாமா? என்று யோசித்தாள் ..."சரி எதுக்கு வம்பு அப்பறம் ஏதாவது பேசுவான் "என யோசித்து கொண்டே ரத்னா அக்காவின் கூடாரத்தை நோக்கி செல்லும் போது; தெரியாமல் ரவி மீது மோதி விட்டாள் வெயினி... இதை தூரத்தில் இருந்து ருத்ரன் அவதானித்து விட்டதை வெயினி அறியவில்லை ....கவியும் ,சுமியும் இதைப் பார்த்து என்ன ரொமான்ஸா எனக் கேட்டு சிரித்தனர் ..."பஞ்சு மாதிரி இருக்கு" என வெயினியின் காதோரம் ரவி கிசு கிசுத்தான்.... ரத்னா அக்காவுடன் எசக்கி சப்பாத்தி சுட ,மீனா அவனை சீண்டிக் கொண்டிருந்தாள்.... சுருதி "குருமா ரெடி சாப்பிட வாங்கோ"என அனைவரையும் வந்து உட்காரச் சொன்னாள்....
எல்லோரும் உண்டு முடித்த பிறகு அசோக் ,வெயினி மற்றும் எசக்கி என மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்... "அசோக் அதை பாத்திங்களா?" என வெயினி கேட்க ;"ஆமா மேடம் இதோ அந்த டீடைல்ஸ்" என காட்ட வெயினி முகம் மலர்ந்தது ...."என்னடா மாப்ள எத பாத்து இவ்வளவு ஹாப்பி எ"ன எசக்கி கேட்க ,"இது தான் பாரு "என வெயினி காட்ட "கடவுளே "என எசக்கி அதிர்ந்தான்..." இதுக்கு தான் நீ இவ்வளவு போராடினியா? இறைவன் துணை இருக்கு உனக்கு ...நீ போற வழி சரி ...அது தான் உனக்கு இது கிடைச்சிட்டு .."என எசக்கி ஆனந்தம் பொங்க கூறினான்...
" ம்ம் ஆமா எசக்கி இதுக்கு எவ்வளவு போட்டி தெரியுமா? உலகமே இதை தான் தேடி ஓடுது... ஆனா நம்ம மூதாதையர் இத எப்போவோ கண்டு பிடிச்சிட்டாங்க... தெளிவானதும், நிரூபிக்க தக்கதுமான ஆதாரம் இல்லை..எல்லாமே புராணம் இலக்கியம்னு இருக்கு...." என வெயினி கூறிய வேளை அங்கு ருத்ரன் யாருக்கோ "அதை நெருக்கிட்டோம்" என தகவல் அனுப்பினான்..
தொடரும்....

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -7
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.