இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 25
இளவெயினியின் போராட்டம் தமிழர் வரலாற்றை தோண்டி எடுப்பது தான்.... எனினும் அதைத் தாண்டி மிகப் பெரிய மர்மம் ஒன்று மறைந்துள்ளது ..
அதை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதே அவள் நோக்கம்..
ருத்ரனிடம் தொல்லியல் பொருளில் கிடைக்கும் "மருத்துவ குறிப்புகள்" தான் தேவை என்று அந்த மர்மக் கும்பல் கூறியது... அவர்களின் ஆவணங்கள் தாண்டி ருத்ரன் இதைப் பற்றி நன்கு அலசி ஆராய்ந்த போது தான், வெயினி கண்டுபிடித்த அதே விடயத்தை அறிந்து அதிர்ந்தான் அவன்...எல்லோரது தேடலும் அந்த பொருள் தான் ஆயினும் நோக்கங்கள் வேறு வேறு....
அழகிய பொழுது விடியலாய் பூமி தழுவ, காலை விடியல் யாருக்கு வலை விரித்துள்ளதோ...
"இன்னைக்கு நாம சேகரிச்ச தகவல் எல்லாம் எடுத்திட்டு முகேஷ் சார் சொன்ன ஹோட்டலுக்கு போகனும் மேடம்" என வந்து நின்றான் அசோக் ... "ம்ம் அசோக்! போகலாம் ..எத்தனை மணிக்கு?" என வெயினி கேட்க ;"ஒரு ஒன்பது மணி வாக்கில போனும் மேடம் "என்று அசோக் கூறிய வேளை அவ்விடம் வந்து நின்றாள் சுமி....." அக்கா இந்த அண்டங்காக்கா கூட எங்க போக போற? நானும் வரேன் கூட்டி போ" என்றாள் அவள்... அசோக் "இவளை" என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே;" சரிங்க ஆன்டி "என்றான் சுமியைப் பார்த்து...
வெயினி மூளைக்குள்" அலார்ட்டா ஆறுமுகம் இதுங்க ரெண்டும் சண்டை போட்டு, போற வேலைய நாசம் பண்ண போறாங்க" என எச்சரிக்கை மணி அடிக்க, "அசோக் நீங்க வண்டிய ரெடி பண்ணுங்க... சுமி வா போலாம் "எனக் கூறி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் வெயினி...
அசோக் வண்டியை கிளப்ப, எதிரில் வந்து நின்றான் ரவி..." இவன் ஒருத்தன் "என மானசீகமாக தலையில் அடித்த வெயினி, "விலகி வழி விடுங்க ரவி ..முக்கியமான மீட்டிங் அட்டண்ட் பண்ணனும் "எனக் கூற "நானும் வரேன் எனக்கும் போர் அடிக்குது" என்றான் ...போகும் நேரத்தில் எதுக்கு வீண் விவாதம் என்று எண்ணிய வெயினி "சரி வாங்க "என கூறி ,ரவியை வண்டியில் ஏற்றினாள்..." ஹேய் நீ முன்னாடி உக்காரு... நான் உன் அக்கா கூட இருக்கேன் "எனக் கூறி சுமியை முன்னாடி அமர வைத்து விட்டு, ரவி வெயினியின் அருகில் உக்கார்ந்து கொண்டான்...
இவனது அணுகுமுறை ,மற்றும் சுமியை "ஹேய்" என விழித்தது எதுவும் அசோக்கிற்கு ஒப்பவில்லை.. இருந்தும் அமைதியாக வண்டியை எடுத்தான்... போகும் வழியில் ஒரு ஆக்சிடன்ட் என்பதால் அசோக் வேறு வழியாக சென்றான்... காலையில் உண்ட உணவு சரியாக செரிமானம் அடையாததால் சுமிக்கு வாந்தி வந்தது ...அசோக் வண்டியை ஓரமாக நிறுத்தி அவளை இறக்க வெயினியும் உடன் இறங்கினாள்.... அசோக் ஓடிச் சென்று சுமிக்கு சோடா வாங்கி வந்து அதைப் பருக கொடுக்க, இவை அனைத்தையும் ரவி காரில் இருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான்... இவன் உதவி செய்யவில்லை என்பதை விட ,இவன் உதவி அவர்களுக்கு தேவைப்படவில்லை என்பது தான் நிஜம்....
ஏதோ ஒரு வழியாக ஹோட்டல் நயாகராக்கு சொன்ன நேரத்திற்கு வெயினி வந்து விட்டாள்... "சுமி
நீ ரவி கூட உக்காரு... நானும் ,அசோக்கும் எல்லாம் முடிச்சிட்டு வரோம் "எனக் கூறி வெயினி அந்த விஐபி அறையில் அசோக்குடன் நுழைந்தாள்... ரவி எதை பற்றியும் யோசிக்காமல்,
தனது போனை நோண்டிக் கொண்டு இருந்தான்... தனியாக இருப்பது சுமிக்கு அலுப்பாக இருக்கவே, சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களுக்கு ருத்ரன் அகப்பட்டான்..."ஐஐ அயர்ன் மேன்! இங்க என்ன பண்றாரு?" என அவள் எண்ணிய வேளை; ருத்ரன் யாரோ இரு வெளிநாட்டவருடன் கைகுலுக்கி பேசிவிட்டு செல்வதை அவதானித்தாள்... "அயர்ன் மேன் "என அவள் அழைக்க நினைத்து கை உயர்த்த முன் ஹாலில் இருந்த கண்ணாடியில் சுமியை கண்டு கொண்டான் ருத்ரன்....
உடனே சுமி புறம் திரும்பிய ருத்ரன்; சட சடவென வேக எட்டு வைத்து சுமியை அடைந்தான்... மாறாத அவன் மிடுக்குடன் கூலர்ஸ் வழியே ரவியை பார்த்தவாறே "இங்க என்ன "என்றான்... " அயர்ன் மேன்! அக்காவும் , அண்டங்காக்கா அசோக்கும் மீட்டிங் ல இருக்காங்க... நான் மாமா சார் கூட உக்காந்திருந்தேன்... அப்போ தான் உங்கள பாத்தேன் ...கூப்பிட நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க.." என்றாள் சுமி.. "வா" என்ற ஒற்றை வார்த்தை மட்டும் கூறி அவளை அழைத்துக் கொண்டு ,அருகில் இருந்த மேசையில் ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ணி விட்டு உட்கார்ந்தான் ருத்ரன்...
"மீட்டிங் சக்ஸஸ்" என வெயினி மற்றும் அசோக் மகிழ்வுடன் பேசிக் கொண்டே வெளியே வர அங்கு ரவி மட்டும் இருந்ததைப் பார்த்து "சுமி எங்கே "என வெயினி கேட்டாள்.. " அவ என்ன சின்ன பொண்ணா? தொலஞ்சி போக.. இங்க தான் எங்கயாவது இருப்பா" என்ற ரவியின் பொறுப்பற்ற பதிலில் அசோக்கிற்கு அவ்வளவு கோபம் வந்தது....
" என்ன ரவி சொல்றீங்க! ஒரு இருபது வயசு பொண்ணு இந்த ஊருக்கு வேற அவ புதுசு... இப்டி அசட்டையா பதில் சொல்றீங்க" என வெயினி பேசிக் கொண்டிருக்கையில் அங்கு இரு கைகளிலும் ஐஸ் கிரீமுடன் வந்தாள் சுமி... அவளின் பின்னே ருத்ரன் நின்றான்..." எங்க போன சுமி என அசோக் கேட்க "அயர்ன் மேன் கூட போனேன் அக்கா! மாப்ளை சார் ரொம்ப போர்" என அவள் கூறவும் ;"உனக்கு பொழுது போக தான் நான் இருக்கேனா? என்றான் ரவி ...அப்பறம் எனக்கு ஒரு வேலை இருக்கு... நான் போய்ட்டு மதியம் வந்திருவேன்.." என கூறியவன் யார் பதிலும் எதிர்பாராமல் சென்று விட்டான்...
" அசோக் நீங்க சுமிய கூட்டிட்டு போங்க" என வெயினி கூற ;"அப்போ நீங்க "என அசோக் கேட்க ; "நான் வரேன் ...நீங்க பாத்து போங்க" என அவர்களை அனுப்பி விட்டு, ருத்ரன் அருகில் வந்தாள் வெயினி ...வாயுள் சென்டர் பிரஸ் போட்டு மென்று கொண்டு யாரையும் கவனிக்காமல் நின்ற ருத்ரனைப் பார்த்து "யாரையும் பாக்க வந்தீங்களா ஈஸ்வர்?" என வெயினி கேட்க;" ஏன் நீ கேட்டு நான் பதில் சொல்லனுமா?" என்பதைப் போல் இருந்தான் ருத்ரன்..."உங்க வண்டில நான் வரட்டுமா?" என மெலிதாக அவள் கேட்க; வா என்று கூடக் கூறவில்லை... உடனே வேக எட்டுக்கள் வைத்து நடக்க ஆரம்பித்து விட்டான்... வெயினி அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் காரில் அவன் பின்னால் ஓடிப் போய் உக்கார்ந்தாள்....
அவள் பின்னாடி உட்காரவும்" மேடம் என்னைப் பாத்தா உனக்கு ட்ரைவர் மாதிரி இருக்கா?" என ருத்ரன் கேட்க; எதுவும் பேசாமல் முன்னாடி உக்கார்ந்து கொண்டாள் வெயினி...வேகமாக காரை திருப்பியவன் வண்டியை நிறுத்திய இடம் ஆள் அரவமற்ற சாலை ஒன்று... வெயினி அவனை நிமிர்ந்து பார்க்க ,அவள் பின்னந்தலை சிகையினுள் வலக்கையை நுழைத்தவன், அவனது மூச்சுக் காற்று முட்டும் அளவுக்கு அவளது முகத்தை அருகில் கொண்டு வந்தான்... வெயினி அவனை நோக்கி நேர் பார்வை பார்க்க ,மறு கையால் அவளது குரல் வளையை நெருக்கினான்...
நேற்று இரவு நடந்த பேச்சு வார்த்தைகளின் வீரியம் தான் இது ...ஆம் அசோக் மற்றும், எசக்கியுடன் பேசி விட்டு இது பற்றி ருத்ரனும் அறிந்து இருக்கலாம் என எண்ணிய வெயினி, அவனிடம் பேச சென்றாள்... அப்போது ருத்ரன் அது தொடர்பான வரைபடம் ஒன்றை விரித்து வைத்துக் கொண்டு யாரிடமோ போனில் பேசுவது துல்லியமாக கேட்டது வெயினிக்கு ...போனில் மறுபுறம் என்ன பேசப்பட்டதோ," கண்டிப்பா இதை நான் தான் கைப்பற்றுவேன் என ருத்ரன் கூறவும் ,வெயினி அவன் எதிரில் நிற்கவும் சரியாக இருந்தது... அவள் கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு சீ ! இத கொள்ளை அடிக்க தான் இவ்வளவு ட்ராமாவா?" என்க;" அது தான் முழுசா ஒட்டுக் கேட்டியே! அப்பறம் ஏன் ஈர வெங்காயத்தை கேக்ற? என்றான் அவன்....
இரவு நடந்தது நினைவில் வர "இப்போவே உன்னை பத்தி போலீஸ் கிட்ட சொல்றேன்" என வெயினி கூற; "மேடம் என் கூட வேலைக்கு வந்த ஆழ்கடலோடிகள் எல்லாரும் காசுக்காக என்ன வேணா பண்றவங்க.....
நீ கொஞ்சம் எனக்கு எதிரா அசஞ்சா போதும் எல்லாரோட சங்கையும் அறுத்துட்டு கடல்ல குதிச்சிடுவாங்க.... மேடம் வசதி எப்படி ?"என ருத்ரன் கேட்க வெயினி திகைத்து விட்டாள்...
அவள் இவனைப் பற்றி எதுவும் ஆராய எண்ணிடவில்லை.. நிச்சயம் செய்தவனை மனம் ஏற்கவில்லை ..இவன் பால் அவள் மனது சாய்ந்தது உண்மை தான்..இவன் குற்ற செயலில் ஈடுபடுபவன் என்று அவள் அறியவில்லை... அதுவும் தன்னிடமே அபகரித்து செல்ல வந்துள்ளான் என்பது தான் அவள் இடிந்து போக காரணம்.. எனினும் வெயினி தன்னை ஒரு இடத்தில் தேக்கி வைத்திருக்கும் பெண் அல்ல அதிலிருந்து மீண்டு விடுவாள்... அவ்வாறு தான் இன்று இந்த ப்ராஜெக்ட் பத்தி உயர் மட்ட குழுவினரை சந்தித்து தைரியமாக பேச காரணம்...
வெயினியின் முகத்தை பட்டும் படாமல் வருடிய ருத்ரன், அவள் கழுத்தோரம் முகம் புதைத்து ஆழ மூச்செடுத்து, தோளில் முத்தமிட வெயினி சிலிர்த்து விட்டாள்... அவளின் அவஸ்தை உணர்ந்தவன் குறுநகை மெலிதாக புரிந்து, அவள் கழுத்தில் இருந்த கை எடுத்து இடையில் இறுக்கி அரிதாரம் இன்றி அவள் அங்கம் சிவக்கும் அளவு அவளை அணைத்து விடுத்தான்...
" நீயும் சரி ..உன் ப்ராஜெக்ட்ல கிடைக்ற பொருளும் சரி ..ரெண்டுமே எனக்கு தான்" என அவன் கூற;
அவள் எந்த எதிர் வினையும் காட்டவில்லை... அவளுக்கு அவனை எதிர்க்க வலுவும் இல்லை.. அமைதியாக இருந்து விட்டாள்..
அவனது காரின் முன் இருக்கைக்கு அருகில் இவளை அணைக்கும் போது; ஒரு சிறிய ரக துப்பாக்கியை வெயினி கண்டு கொண்டாள்... இவன் இவ்வளவு கொடூரமானவனா ?என அப்போது தான் யோசித்தாள் வெயினி ..மனது பல எண்ணவோட்டங்களில் மிதக்க கூடாரம் வந்து சேர்ந்திருந்தான் ருத்ரன்...
தொடரும்...