இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 29
இறங்கு" என ருத்ரன் கூற எதுவும் அவள் செவி புகவில்லை ...அவனுக்கு புரிந்து விட்டது இவள் சிந்தனையில் சிக்கியுள்ளாள் என்று ...அவள் செவியோரம் "யினி "என காற்றுக்கும் வலிக்காமல் அழைத்தான் ...அவள் "ம்" என பதில் கூற "மாம்ஸ் கூட நீ எப்போ வேணும்னாலும் பர்ஸ்ட் நைட் கொண்டாடலாம் ...இப்போ கீழ இறங்கு கூடாரம் வந்துட்டு "என்றான் ருத்ரன்... அவன் வார்த்தைகளின் ஆழம் உறைத்த பின்னரே அவள் உணர்வு கொண்டு அவனை முறைத்து விட்டு சென்றாள்....
கூடாரத்தினுள் ஸ்டீவ் ஊருக்கு செல்ல தயாராகி நின்றான் ...அவனுடன் சுருதியும் நிற்கவே "என்ன "என்று வெயினி கேட்டாள் ...அவளது தந்தை மாதாந்திர மருத்துவ செக் அப்பிற்கு செல்லவில்லை என்று தெரியவந்ததாகவும், அதனால் தான் சென்று அவரை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல வேண்டும்" என்றும் சுருதி தயக்கமாக கூறினாள் ..."நான் தான் சொன்னேன்ல இது என் தொழில்.. உங்களுக்கு எவ்வளவு கடமை இருக்கு..
நீங்க என் கூட வந்து மெனக்கெட்டா உங்க குடும்பத்தை யாரு பாத்துப்பாங்க? நீங்க இங்க வந்து ஹெல்ப் பண்ணா தான் என் மேல அக்கறை இருக்குனு அர்த்தமா! பத்திரமா போய்ட்டு கால் பண்ணுங்க.. அசோக் கூட போய் பஸ் ஏத்தி விட்டு வாங்க "என்றாள் வெயினி... சுருதியும், ஸ்டீவும் அவளை ஆரத்தழுவி விட்டு ஏனையோரிடமும் கூறி விட்டு ஊருக்கு செல்ல அசோக்குடன் பஸ் ஸ்டாப் பயணமானார்கள்....
அசோக் அவர்களை அழைத்துக் கொண்டு செல்ல கவி உள்ளே நுழைந்தான்... "வெயினி" என அவன் அழைக்க" ம்ம் சொல்லு கவி "என்றாள் அவள்..." எனக்கு ஏதோ அந்த ருத்ரன் மேல சந்தேகமா இருக்கு வெயினி,அப்பறம் இந்த ப்ராஜெக்ட் மனசுக்கு நெருடலா இருக்கு " என கவி கூற; இவள் எவ்வாறு உண்மை கூறிடுவாள் .... எப்போதும் சிக்கலான கட்டங்களில் அமைதியாகவே இருந்திடுவாள்... அதுபோலவே இப்பொழுதும் அமைதியைக் கடைப் பிடித்தாள் ..."என்ன வெயினி அமைதியா இருக்க?" என கவி கேட்க ;"நீ எப்போ துப்பறிவாளன் ஆனானு யோசிக்கேன்டா" என வெயினி பதில் கூறினாள் ... "ஆன்டி நல்லது சொன்னா உன் காதுல விழாது... எப்டியோ போ" என கவி கூற;" படிச்ச படிப்புக்கு வேலை தேடு... என் பின்னாடி சுத்தாம "என வெயினி எதிர் பேச்சு பேச அங்கு ரத்த ஆறு ஒன்று ஓடும் முன் தடுத்து நிறுத்தினர் எசக்கி மற்றும் மீனா....
" என்ன சத்தம் "என்று எசக்கி கேட்க; "அவளயே கேட்டுகோங்க "என கூறி விருட்டென வெளியே சென்றான் கவி... "என்னடி ஆச்சு இவனுக்கு" என மீனா கேட்க;" விடு அவனுக்கு பொண்டாட்டி தேவைனு விளம்பரம் கொடுத்திடலாம்" என வெயினி சொல்ல மீனாவும் எசக்கியும் ஒரு சேர சிரித்தனர்... இன்னைக்கு சாயந்திரம் நான் கேட்ட ஆளுங்க ஹெட் ஆபிஸ்ல இருந்து வாராங்க ...நாளைக்கு கடலுக்குள்ள போய் அவங்க ஓகே சொன்னா ஃபைனல் பண்ணிடலாம்... நம்ம வேலையும் முடிஞ்சிடும் .."என வெயினி கூற "சூப்பர் நீ சிறப்பா பண்ணு "என எசக்கி வாழ்த்த; "ம்க்ஹூம்" என தொண்டையைச் சரி செய்து கொண்டு அவ அதெல்லாம் சரியா முடிப்பா.... இங்க முடியாத விஷயமும் தோண்டத் தோண்ட புலப்படாத மர்மமும் நிறைய இருக்கு... அதுக்கு உண்டான பதில முதல் சொல்லச் சொல்லுடி வெயினி" என மீனா எசக்கியைச் சாட; "அத நீ நேரடியாகவே கேளேன்டி ...ஏன் ஜாடை பேசுற?" என கூறினாள் வெயினி..
மீனா மிகவும் மனத் தாங்கலுடன் எசக்கி அருகில் வந்து ,நிமிர்ந்து அவன் கண்ணை நேராகப் பார்த்து ,உனக்கு ஏன் என்னைப் பிடிக்கல? இந்த நாலு வருஷத்துல ஒரு தடவை கூடவா என் மேல காதல் வரல? நான் உனக்குள்ள நுழையல? "என கண்களில் நீர் ததும்ப, உதடுகள் துடிக்க, உயிர் போகும் வலியுடன் கேட்டாள் அந்த பேதை ...அந்த நொடி கல் கூட காதல் உரைத்திடும் அவள் நிலை கண்டு...ஆனால் அவள் கள்வனோ அசையாது பாறையென நின்றான்...
" அவ தான் கேக்றாளே! பதில் சொல்லு எசக்கி ...எவ்வளவு நாள் தான் இந்த மௌனத்தை பதிலா சொல்ல போற நீ?* என வெயினி கேட்க ;"எனக்கு மட்டும் பாறைலயா மனசு இருக்கு ?நானும் மனிசன் தான் ...ஆனா ஒருத்திய காதலிச்சு அவ இல்லைனு ஆனதுக்கு பிறகு ,வேற யாரையும் என் மனசு ஏத்துக்க தயாரா இல்லை" என அவன் ஆவேசமாக பேச மீனாவும் ,வெயினியும் அதிர்ந்து விட்டனர் ....எசக்கி இவ்வளவு ஆவேசமாக பேசுபவன் இல்லை.... அதனையும் தாண்டி இவர்களுக்கு தெரியாமல் இவனுக்கு காதல் தோல்வியா ?வெயினிக்கே இவ்வளவு அதிர்ச்சி என்றால் ,மீனாவின் நிலை? வெயினி மீனாவை ஏறெடுத்துப் பார்க்க அவள் சுற்றம் மறந்து சிலையென சமைந்து நின்றாள்..."இன்னைக்கே இது எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்" என்றவன் ஐந்து வருடங்கள் முன்னோக்கி சென்றான்...
நான் வேலூர்க்கு பில்டிங் கான்ட்ராக்ட் ஒன்னுல வேர்க் பண்ண போனேன் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ....அங்க தான் அவள சந்திச்சேன்... அவ பேர் நித்யா.... ரொம்ப அமைதியான பொண்ணு ...அப்பா ,அம்மா யாருமே இல்லாம ஆஸ்ரமத்தில வளர்ந்து படிச்சவ... எங்க கான்ட்ராக்டர் பில்டிங் கட்ரப்ப பூஜை செஞ்சு அன்னதானம் போட்டாரு ....அப்போ தான் நித்யாவ பாத்தேன் ...பாத்ததும் ரொம்ப புடிச்சு போச்சு.. நேராவே போய் என்னை கட்டிப்பியானு கேட்டுட்டேன்... இத அவ எதிர்பாக்கல பயந்துட்டா...... ஆஸ்ரம நிர்வாகி கிட்ட சொல்லிட்டா ....அவரு என்னை கூப்டு கேட்டாரு ....நான் என்னை பத்தின எல்லா தகவல்களும் சொன்னேன் ...அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.... நித்யாவ கூப்டு எல்லாம் சொல்லி உனக்கு சம்மதமானு கேட்டாங்க.... அவ முகம் மலர்ந்து என்னைப் பாத்தா..." என கூறிய எசக்கி கண் கலங்கினான் ....மீனா இடிந்து போய் உக்கார்ந்து விட்டாள்... வெயினி எசக்கியின் தோளை அழுத்தினாள்.... அவன் மேலும் கூறத் தொடங்கினான்... அந்த பார்வையே சொன்னிச்சு நித்யாவோட சந்தோஷத்தின் அளவை...
"ஒரு வருஷம் எப்டி போச்சுனே தெரியல... கான்ட்ராக்ட் முடிச்சிட்டு ,நித்யாவையும் அழைச்சிட்டு ஊருக்கு வர பஸ் ஏறும் போது நித்யா மயங்கிட்டா. என்னவோ ஏதோனு பயந்து பக்கத்துல இருக்ற ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்... அப்போ தான் தெரிய வந்துச்சு அவ மூளை செயலிழந்து போச்சுனு... அடிக்கடி தலை வலினு சொல்லி மாத்திரை போடுவா... ஹாஸ்பிடல் கூப்டா வர மாட்டா... ஆனா கடைசில" என கூறிய எசக்கி தரையில் விழுந்து முகத்தை மூடி அழத் தொடங்கினான்... எதுவாயினும் டேக் இட் ஈசி என எடுத்துக் கொள்ளும் தன் நண்பன் அழுவதை வெயினியால் தாங்க முடியவில்லை..." எசக்கி" என அவள் அவனின் தோள் மீது கை வைக்க" ஒரு வாரத்தில இறந்துட்டா வெயினி... என்னால அவள மறக்க முடியலடா" எனக் கேவலோடு வெயினியை கட்டிக் கொண்டான்...மீனா இந்த உலகிலேயே இல்லை ....இந்த நிமிடமே பூமி பிளந்து அதனுள் செல்ல மாட்டோமோ என தவித்தாள்...
மீனா எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள் ...ரவி தொண்டையைச் செருமிக் கொண்டு வெயினியின் கூடாரத்தினுள் நுழைந்தான் ...உடனே எசக்கி வெயினியை விட்டு விலகி கொண்டான்... "வாங்க மாப்ளை சார் "என கூறி முகத்தை அழுந்த துடைத்து விட்டு வெளியே சென்றான் ...ரவி வெயினியின் அருகில் வந்து நான் பாத்தாலே எரியுது ம்ம்ம் "என எதோ வஞ்சகமாய் சிரித்திட்டான்....
"இவன் ஒருத்தன்" என எண்ணிய வெயினி தன் கோப்புகளை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வர ,அசோக் வந்தான்..." மேடம் அவங்கள பஸ் ஏத்தி விட்டாச்சு "என கூறினான்... இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில்; வெயினிக்கு அவள் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது... யார் என்று பார்த்தால் அப்பா என இருந்தது ....போனை காதில் வைத்து "அப்பா "என்றாள் இளவெயினி..." அப்பா ,அம்மா நியாபகம் இருக்கா உனக்கு ?"என அப்பா கேட்க அவளும் அவர்களிடம் சிரித்துக் கொண்டே சகஜமாக பேசினாள் ...அப்பறம் மா மாப்ளை அங்க தான் இருக்காரு போல எதுவும் பிரச்சினை இல்லையே?" என்று கேட்டது அம்மா... "எதுவும் இல்லை மா நான் அப்பறம் பேசுறேன்" என போனை துண்டித்து விட்டு, ரத்னா அக்காவின் இடம் நோக்கி சென்றாள் வெயினி... "அக்கா" என அழைக்க" வா வெயினி மதியம் சாப்பாடு ரெடி ,சாப்ட வா" எனக் கூறி அவரும் ,சுமியும் சேர்ந்து சமைத்த சாம்பார் ,ரசம், அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல் என அனைத்தையும் எடுத்து வைத்தார் ...கவி, எசக்கி, ரவி, சுமி ,ரத்னா அக்கா ,வெயினி என அனைவரும் இருந்தனர் ...மீனாவை காணவில்லை...."மீனா எங்க அக்கா "என வெயினி கேட்க "தலை வலிக்குது கடல் ஓரமா உக்காந்துட்டு வரேன்னு சொன்னாமா" என்றார் ரத்னா அக்கா... வெயினி வேக வேகமாக சாப்டு விட்டு மீனாவைத் தேடிச் சென்றாள்...
மணலில் ஏதோ கிறுக்கிக் கொண்டு படகின் விளிம்பில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் மீனா.." என்ன பண்ற இங்க? சாப்ட கூட வராம "என வெயினி கேட்க ; மீனாவோ "தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டேன்டி... அப்பறம் என் சாவுக்கு அவன் தான் காரணம்னு குற்ற உணர்ச்சில துடிப்பான்.. அந்த வேதனை அவனுக்கு எதுக்கு"என மீனா கூற ;"என்ன பேச்சுடி இது "என வெயினி கடிந்து கொண்டாள்...
"மீனா வா சாப்ட போலாம் "என வெயினி எழுந்து நிற்க ,ருத்ரன் வந்து "வெயினி மேடம் கூட நான் தனியா பேசணும் ..நீ போலாம்" என மீனுவிடம் உத்தரவாய் கூற," இவனுக்கு யார் கிட்டவும் அமைதியா பேசியே பழக்கம் இல்லையா?" என வெயினி சோர்ந்து போய் நின்றாள் .."சரி சார் நீங்க பேசுங்க" என கூறிவிட்டு "வெயினி நான் போறேன்.. பேசிட்டு வா "என வெயினியிடமும் சொல்லி விட்டு மீனா சென்றாள்...
ருத்ரனை பார்த்து வெயினி முறைக்க, அவளை இலாவகமாக தூக்கி படகில் ஏற்றி விட்டு ,ஒரே எட்டில் அவனும் ஏறி அருகில் அமர்ந்து கொண்டான் ...வெயினி அமைதியாகவே இருந்தாள்...அவனது செய்கைகள் அவளை கவராமல் இல்லை.. எனினும் ஒரு மாஃபியா கூட்டத் தலைவன்.. இவனை எவ்வாறு தன் வாழ்க்கையோடு இணைப்பது ..அது மட்டுமா ?தனது இத்தனை நாள் தேடலை கூட களவாட தருணம் தேடுபவன்.. இவனை எப்படி நம்புவது? என மனதில் பல எண்ணங்கள் ஓட அவளின் எண்ணங்களின் தலைவனே அதனை கலைத்தான்...
தொடரும்..

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம்-9)
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.