- Joined
- Apr 24, 2024
- Messages
- 31
பார்க்க பார்க்க
பார்வை பரிதவிக்கிறது..
படிக்க படிக்க
மனம் மரித்துப்
போகிறது..
உணர உணர
உள்ளம் உடைந்து
போகிறது…
நினைக்க நினைக்க
நெஞ்சில் வலியெடுக்கிறது…
நானில்லாத உன்
எழுத்தை எண்ணியல்ல..
உன்னகம் தொட்ட
முதல் பெண்ணென்ற
என் அகந்தையை..
கற்பனையில் என்
காதலை கட்டி.
வைத்த கர்வத்தை..
உன நேரத்தை
என் நேசத்திற்கு
நேரந்துவிட்டாய் என்ற
மமதையை…
அடி தொட்டு அழித்துவிட்ட
என் விதியை எண்ணி..
என்னை மறக்க வைத்த
உன் மயக்கத்தை எண்ணி…
கசிந்தோடும் கண்ணீரும்
என் காதலின் கடைசிச் சொட்டையும்
விடாது கொட்டிடும் அவலத்தை
எண்ணி எண்ணி
இறுக்கத்தின் இருப்பிடமாய்
மாறிப் போனேன் நானடா…♥