Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

பகலவனின் நிலவு - 1

நிகாஷா

New member
Joined
May 15, 2024
Messages
3
கோயம்பத்தூரில் மிகப் பிரமாண்டமான எல்லோராலும் அறியப்பட்ட பெரும் புகழுக்குரிய உதயம் நகை கடை தனது எட்டாவது கிளையை சென்னையில் தொடங்கி உள்ளது.. இந்த ஐந்து வருடத்தில் மட்டும் ஐந்து கிளைகளை திறந்து அசுர வளர்ச்சி பெற்று வளர்ந்து நிற்கும் நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.. அதற்கெல்லாம் முக்கிய காரணமான பகலவனை சந்திப்பதற்காக பத்திரிக்கை நிருபர்கள் காத்துக் கொண்டிருந்தனர்..

அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் விரைந்து வந்து சேர்ந்தான் நம் கதையின் நாயகன் பகலவன்.. முப்பதுக்கும் மேற்பட்ட ஒலிவாங்கிகளுக்கு (மைக்) முன் அமர்ந்தவன் கேள்வியை தொடங்குமாரு கையால் செய்கை செய்ய அவர்கள் தங்கள் கேள்வியை கேக்க தொடங்கினார்கள்..

நிருபர்: சார்.. நீங்க உதயம் ஜூவல்லரில பொறுப்பேற்றதுல இருந்து உங்க நகை கடை அபார வளர்ச்சி அடைஞ்சுட்டு வருது.. வருஷத்துக்கு ஒன்னுண்ணு திறந்துட்டு போய் கிட்டே இருக்கீங்க. இன்னும் எத்தனை ப்ரான்சஸ் ஓபன் பண்ணலாம்னு ஐடியால இருக்கீங்க?

பகலவன்: "எனக்கு முடியாது கிடையாதுன்னு வார்த்தையை பிடிக்காது.. சோ என்னால இது தான் முடியும்னு சொல்ல போறது இல்ல.. இனி வருஷா வருஷம் இதே மாதிரி மீட்டிங்ல உங்களை சந்திப்பேன்னு நினைக்கிறேன்" என்று சின்ன சிரிப்புடன் சொல்லி முடித்தான்.

நிருபர்: சார் உங்களோட சக்சஸ்க்கு என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிறீங்க?..

பகலவன்: என்னோட கடின உழைப்பும் விடா முயற்சியும் முக்கியக் காரணம்.. நம்ம ஒரு கோல் ஃபிக்ஸ் பண்ணிட்டா அதை நோக்கி ஓடிக்கிட்டே இருக்கணும்.. எந்த டிஸ்டிராக்சனும் நம்மள நெருங்காம பார்த்துக்கணும்.. அது மட்டும் இல்லாம என் தாத்தா இல்லைனா என்னால இவ்வளவு தூரம் சீக்கிரமே வந்திருக்க முடியாது . சோ அவரும் என்னோட வெற்றிக்கு காரணம்..

நிருபர்: நீங்க இன்னும் சிங்கிலா இருக்குறதுக்குக்கு ரீசன் என்ன?

பகலவன், "நோ டிஸ்டிராக்சன்ஸ்" என்று சொல்லி கண்ணடித்து விட்டு அதைச் சின்ன சிரிப்புடன் கடந்தவன், "நெக்ஸ்ட்" என்றான்..

நிருபர்: நீங்க ரொம்ப நாள் லவ் பண்ண பொண்ணு உங்களை விட்டு போனதுனால தான் நீங்க மேரேஜ் பண்ணிக்காம இருக்கிங்கன்னு சொல்றாங்களே உண்மையா?.

பகலவன்: நான் ரூமர்ஸ்க்கு எல்லாம் பதில் சொல்றது இல்ல..

நிருபர்: "அப்போ நீங்களே ஒரு தெளிவான பதிலை தந்துருங்களேன்.. உங்க மேரேஜ் எப்போ?" என்று கேட்க..

பகலவன், "கூடிய சீக்கிரமே" என்று முடித்துக் கொண்டவன், "ஓகே கைஸ் தேங்க்ஸ் ஃபார் கம்மிங்" என்று சொல்லி விட்டு அவன் மேனரிசத்தோடு எழுந்து அங்கிருந்து சென்று விட்டான்..

அவன் எழுந்து சென்றதுமே அங்கிருந்த நிருபர்கள் தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.. "இந்தாளு பல பொண்ணுங்களோட சுத்திக் கிட்டு திரியுறான்.. அதனாலதான் கல்யாணம் முடிஞ்சா எங்க அதைத் தொடர முடியாமல் போய்விடுமோன்னு பயந்துகிட்டு கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்" என்று ஒருவர் சொல்ல..

இன்னொரு நிருபரோ, "ஏற்கனவே இவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு வேற ஒரு பேச்சு அடிபடுது" என்று சொல்ல..

"இருக்கும் இந்த மாதிரி பணக்காரங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடந்ததைக் கூட மறைக்கிறது அவ்வளவு பெரிய விஷயமா என்ன?" என்று அவர்களுக்குள்ளேயே தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்..

"இதுல இவனே தான் இது எல்லாத்தையும் உருவாக்கின மாதிரி என்னால முடியாதது இல்லை அது இதுன்னு ஏதேதோ உளருறான்.. எல்லாம் அவன் தாத்தா வீட்டு காசு.. அந்த ஆளு உருவாக்கி கொடுத்ததை இவன் வளர்த்துக்கிட்டு இருக்கான் அவ்வளவு தான்" என்று சொல்ல.. இன்னொருத்தன், "பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. நமக்கு என்ன வாங்கடா போகலாம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்..

பகலவன் பேசியது எல்லாம் நேரடி ஒளிபரப்பாக ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் அமர்ந்து வெறுமையான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலா, "கடைசியாக மேரேஜ் எப்போ? என்று கேட்ட கேள்விக்கு, "கூடிய சீக்கிரமே" என்று அவன் பதில் சொன்னதை நினைத்து கசப்பாக புன்னகைத்து கொண்டாள்..

அந்த இரவில் அவள் தூங்கிக் கொண்டிருந்த போது அவள் இடுப்பை இறுக்கி பிடித்தவாறு அவளுக்கு தோன்றியது. ஆனாலும் அது கனவோ என்று நினைத்தவளுக்கு நேரம் ஆக ஆக இறுக்கம் கூடி வலி எடுக்க தொடங்கவும் தான் அது கனவல்ல நிஜம் என்பதே அவளுக்கு உரைத்தது.. அது யார் என்று தெரிந்ததும் அவள் கையை விலக்க முற்பட தொடங்கவும் இடுப்பில் மட்டும் இருந்த அவன் கை இப்பொழுது அவள் உடலெல்லாம் பயணிக்க ஆரம்பித்தது..

நிலா, "ப்ச் விடுங்க.. எனக்கு அதுக்கு இப்போ மூட் இல்ல" என்று சொன்னது தான் தாமதம்.. அவளை அப்படியே திருப்பி போட்டவன், "உன்னோட மூட் எனக்கு தேவையே இல்லை.. எனக்கு இப்போ கண்டிப்பா வேணும் அவ்வளவு தான்" என்று அவளை வன்மையாக கையாளத் தொடங்கினான்..

அவர்களுக்கு திருமணமாகி இந்த ஒரு வருடத்தில் அவள் அவனிடம் இதற்கு மறுப்பு தெரிவித்தததே இல்லை.. ஆனால் இன்று அவள் வேண்டாம் என்று அவனை விலக்க முயலவும் அவனுக்கு கோபம் எல்லை மீறியது.. அதனால் அவளை அளவுக்கு அதிகமாகவே படுத்தி எடுத்தான்.. கிட்டத்தட்ட வன்புணர்வு செய்தான். அவள் கண்களில் இருந்து அந்த இருட்டறையில் யாருக்கும் தெரியாமல் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.. நிலா நிலா என்ற அவனின் முனங்கல் சத்தம் மட்டுமே அந்த அறையில் எதிரொலித்து கொண்டிருந்தது..

அனைத்தும் முடிந்ததும் அவள் மேலேயே படுத்துக் கொண்டவன், "உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நாளைக்கு நம்ம அகிரீமெண்ட முடுச்சுக்கலாம்.. என் லவ்வர் என்னை தேடி வந்துட்டா" என்று சிரித்தபடி சொல்லவும் அவளுக்கு நெருப்புக் கட்டையை எடுத்து அவள் மேல் எரிந்தது போல உள்ளுக்குள் துடி துடித்து போனாள்.. எந்த பொண்ணும் இப்படி ஒரு சூழ்நிலையில் கேட்க கூடாதா வார்த்தை.. தன் தாய் தன்னுடன் இல்லாததை நினைத்து இந்த நொடி பெரிதும் வருந்தினாள்..

எப்படியும் அவன் அவளை விவாகரத்து செய்வான் என்று தெரியும்.. ஆனால் அதற்குள்ளாகவே நடக்கும் என்று அவள் யோசிக்க கூட இல்லை.. தனக்கும் ஒரு மனசு இருக்கு என்று இவனுக்கு புரியவே செய்யாதா.. தான் என்ன அவன் விளையாடும் பொம்மை என்று நினைத்து விட்டானா.. எனக்கும் உயிரும் உணர்வும் இருக்கு என்று இவனுக்கு எப்பொழுது புரியும் என்று உள்ளுக்குள் மட்டும் குமைந்து போனாள்.. வெளியில் சொல்லும் அளவிற்கு அவனிடம் அவளுக்கு தைரியமில்லை..

அவளுக்கு முந்திய நாள் இரவு நடந்தது அப்போது நியாபாகம் வந்தது.. தான் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் இருப்பதாகவும் அவளிடம் இருக்கும் ஒரு ஆரம் தனக்கு இப்போதே தேவைப்படுகிறது என்றும் அதை எடுத்துக் கொண்டு வந்து தருமாறு அவள் கணவனின் தங்கை பிரீத்தி கேட்க.. வேறு வழி இல்லாமல் நடந்து செல்லும் தூரம் தான் என்பதால் அந்த இரவில் அவளிடம் கொடுப்பதற்காக நடந்தே சென்றாள்.. அதை கொடுத்து விட்டு வந்தவளை நால்வர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்ட அதில் அவள் மிரண்டு ஓடப் பார்க்க, "எங்கடி ஓடுற. டேய் அவளை பிடிங்கடா" என்று அவளை துரத்தவும் அவள் என்ன செய்ய என்று தெரியாது எப்படியும் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தோடு தன் துப்பாட்டாவை கொஞ்சம் கொஞ்சமாக கிழித்து அவள் போற வழி எல்லாம் போட்டுக் கொண்டே ஓடினாள்.

அவள் நினைத்தது போலவே அவளை அந்த கயவர்கள் பிடித்து தூக்கி சென்று மறைவான இடத்திற்கு கொண்டு சென்றார்கள். தன்னை கற்பழித்து விடுவார்களோ என்று அவர்களைத் தடுக்க போராடிக் கொண்டிருந்தவளை சரியான சமயத்தில் வந்து போலீஸ் காப்பாற்றியது..

அவளையும் சேர்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு சென்று கம்ப்ளைன்ட் எழுதி வாங்குவதற்காக அமர வைத்திருக்க அவள் அப்பொழுது நடுநடுங்கும் கரங்களோடு அவள் கணவனுக்கு அழைத்தாள்.. ஆனால் இரண்டு முறை அழைத்தும் எடுக்கப்படாமல் போக மூன்றாம் முறையில் எடுத்து ஹலோ என்ற ஒரு பெண் குரல் கேட்டது..

அதை சமாளிக்க பெரிதும் முயன்று அதில் வெற்றியும் கண்டவள், "ஹலோ அவர் இருக்காரா?" என்று மெதுவாக கேட்க.. "அவர் குளிச்சுகிட்டு இருக்காரு" என்று சொல்லிவிட்டு மறுபக்கம் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.. அந்த குரல் அவளுக்கு அவள் யார் என்று சொல்லாமல் சொன்னது.. அது அவள் மறக்க நினைக்கும் குரலான காவியாவின் குரல்.. அவன் இப்போது அங்கு அவளோடு தான் இருக்கிறான் என்று புரிந்ததுமே உள்ளுக்குள் குறுகி போனாள்.. கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் எப்படியும் அவன் விவாகரத்து பேச்சை எடுப்பான் என்று அப்போதே நினைத்துக் கொண்டாள்.. ஆனால் இப்படி ஒரு நிலையில் இருக்கும்போது இந்த பேச்சை எடுப்பான் என்று அவள் நினைக்கவே இல்லை.. தன் கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவள் ஏற்கனவே காயப்பட்டிருந்த உடம்போடு இப்பொழுது இவனும் சேர்ந்து பாடாய் படுத்தி எடுத்ததில் மொத்தமாய் உரு குலைந்து போயிருந்தாள்..

ஆனாலும் தன் குரலை சிறுமி கொண்டவள், "கங்கிராஜுலேஷன்ஸ்" என்று வாழ்த்தை தெரிவித்தாள்..உங்க லவ்வரோட நீங்க சேர்ந்து வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று முடிந்தவரை குரலில் நடுக்கம் இல்லாது சொல்ல நினைத்தாள்.. ஆனால் அவனுக்கு என்ன புரிந்ததோ, "அழுகிறியா" என்று கேட்டான்..
அதற்கு அவள், "இல்லையே" என்று சொன்னதும்..
"ஆமா நீ எதுக்கு அழுக போற? உனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கும்.. உன் முன்னாள் காதலன் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான்.. அந்த ராஜா கூட சேர்ரதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு அவள் மேல் இருந்து எழுந்து விட்டான்.. அவனுக்கு ஏனோ அவள் இப்படி உடனே அவனை விட்டு பிரிய ஒத்துக்கொண்டது சுத்தமாக பிடிக்கவே இல்லை..
பிறகு அசதியில் அவள் கண் உறங்கி போக அவள் எழும்போது அவன் அவள் அருகில் இல்லை.. எழுந்து ஃப்ரெஷ் ஆகி விட்டு கீழே வந்தவள் அவன் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே வந்தவள் அடுப்படிக்குள் நுழைந்தவள் அந்த வீட்டில் வேலை செய்யும் ஜானகியை பின்புறமிருந்து கட்டிக் கொள்ள..

ஜானகி, "என்னம்மா ஆச்சு.. காலைலையே இப்படி".

வெண்ணிலா, "இன்னும் எத்தனை நாளைக்கு உங்க கூட இப்படி இருப்பனோ தெரியல அதான்" என்றதும் அவளை இந்த பக்கமாக இழுத்தவள், "காலைலையே என்ன பேச்சுமா இது.. இப்படி எல்லாம் பேசாத.. நீ எப்போவும் நல்லா இங்க தான் இருப்ப" என்றதும்..

"எனக்கு நம்பிக்கை இல்லைம்மா இன்னைக்கே கூட நான் வெளி
ய போக வேண்டிய சூழ்நிலை வரும்" என்றாள்..
 

Author: நிகாஷா
Article Title: பகலவனின் நிலவு - 1
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top