2) ஜானகியிடம் வெண்ணிலா பேசிக் கொண்டிருந்ததை அந்த பக்கமாக வந்த அவளது கணவன் கேட்க நேர்ந்தது.. வெண்ணிலா, "இனி நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்" என்று சொல்வது தான் அவனுக்கு கேட்டது.. அதை கேட்டதுமே அவனுக்கு சர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.. அவன் உணர்வுகளை அவனாலையே புரிந்துக் கொள்ள முடியவில்லை.. அவள் சமையலறையில் இருந்து வெளியே வரும் போது அவன் அங்கு இருக்கவில்லை.. எங்கே காணோம் என்று அங்கும் இங்குமாக அவள் பார்த்துக் கொண்டிருக்க அவன் மாடியில் இருந்து வந்து கொண்டிருந்தான்.. நேரே அவள் முன்னே வந்து நின்றவன்.. ஒரு பிளாங்க் செக்கையும் இன்னொரு காகிதத்தையும் அவள் கையில் கொடுத்து விட்டு, "இந்த செக்ல எவ்வளவு வேணும்னாலும் ஃபில் பண்ணிக்கோ அண்ட் இந்த அகிரீமெண்ட்ல சைன் பண்ணு" என்று கேட்க..
அதையே வெறித்து பார்த்த நிலா.. பின் அவனுடைய பார்வையை நேரடியாக சந்தித்தாள்.. அவனை முதல் முதலில் சந்தித்த நாள் அவளுக்கு நியாபாகம் வந்தது. இதே தீர்க்கமான பார்வையுடன் தான் அன்றும் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.. இவள் அவனின் தாத்தாவன சூர்ய பிரகாசுடன் அவர்கள் வீட்டில் அமர்ந்திருந்தாள்.. அத்தனை நாளும் அவனை பற்றி தெரிந்து அவனை பார்க்காமலேயே ஒருதலையாக விரும்பிக் கொண்டிருந்தவள் அன்று தான் அவனை நேரில் பார்த்தாள்.. அவனைப் பார்த்ததுமே அவளுக்கு இன்னும் இன்னும் இவனைப் பிடித்துப் போனது.. அவனின் தாத்தா அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் மறுபேச்சின்றி சரி என்று உடனே ஒப்புக் கொண்டான். அதுவே அவளுக்கு அது பெரும் ஆச்சர்யம். தன் இத்தனை நாள் கனவு இவ்வளவு சுலபமாக பழித்து விட்டதா என்று சந்தோஷத்தில் மிதந்தாள்.. ஆனால் அதற்கு அவன் வைத்த நிபந்தனை ஒன்றே ஒன்று தான். தனக்கு திருமணம் முடிந்தது இப்போதைக்கு வெளியில் தெரிய வேண்டாம்.. என்னுடைய பெர்சனல் விஷயங்களை பொது வெளியில் இப்போதைக்கு சொல்ல விரும்ப வில்லை என்றும் தான் இன்னும் வியாபாரத்தில் தான் நினைத்த உயரத்தை அடைந்ததும் தானே அதை அப்போது வெளியில் சொல்லி கொள்வேன் என்பது மட்டும் தான்..
ஏனோ தாத்தாவும் அதற்கு சரி என்று சம்மதித்தார். அவளுக்கும் அப்போதைக்கு அதில் பெரிதாக வில்லங்கம் இருப்பதாக தோன்றவில்லை.. வெளியில் தெரிகிறதோ இல்லையோ எப்படியும் தான் தானே அவன் மனைவி என்ற மகிழ்ச்சியோடு அவன் திருமணத்திற்கு தயாரானாள்.. மூன்று நாட்களிலேயே யாருக்கும் தெரியாமல் தாத்தா மற்றும் அவன் உதவியாளர் முன்னிலையில் எந்த ஆடம்பரமும் இன்றி பதிவு திருமணம் செய்தார்கள்..
அவனுக்கு அவளை பிடித்துப் போய் தான் திருமணத்திற்கு அவன் ஒப்புக் கொண்டான் என்று அவள் எண்ணியிருந்ததை நொறுக்கிப் போடும் விதமாக அவர்களின் முதலிரவிலையே அவளிடம் ஒரு அகிரீமெண்ட் காண்ட்ராக்ட்டை கொண்டு வந்து கொடுத்தான்.. அதை புரியாமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, "என்ன பாக்குற.. படிக்க தெரியாதா? எனக்கு இந்த மேரேஜ்ல சுத்தமா இஷ்டமில்ல.. என் தாத்தாக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல.. அவர் பேச்சை இந்த நேரத்துல என்னால மீறவே முடியாது.. அதனால தான் அவர் சொன்னதும் சரின்னு சொன்னேன்.. எனக்கு வேற ஒரு பொண்ணோட லவ் இருக்கு.. என்னால எப்போவும் அதை மறக்க முடியாது.. நான் எப்போ உன்னை போன்னு சொல்றனோ அப்போ நீ எந்த பிரச்சனையும் பண்ணாம என் லைஃப்ப விட்டு எந்த கேள்வியும் கேக்காமா போய்கிட்டே இருக்கணும்.. ஆனா நீ இங்க இருக்குற வரைக்கும் உனக்கு எந்த குறையும் இருக்காது.. பணத்தை பத்திக் நீ கவலையே பட வேணாம். நீ எவ்வளவு வேணும்னாலும் செலவழிக்கலாம்.. போகும் போதும் உன்னை அப்படியே சும்மாலாம் அனுப்பிட மாட்டேன். உனக்கு என்ன வேணுமோ அதை தந்து தான் அனுப்புவேன். சோ நீ வொர்ரி பண்ணிக்க வேணாம்" என்று அவள் மனநிலை என்ன என்று கூட யோசிக்காமல் மொத்தமாக அவளை நொறுக்கி இருந்தான்.
ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை.. தன் காதல் இவனை இந்த இடைப்பட்ட காலத்தில் மாற்றி விடும் என்று.. அதனால் அவளும் அதற்கு சம்மதித்து கையெழுத்திட்டாள்.. அவள் உடனே ஒப்புக் கொண்டதைப் பார்த்து அவளைப் புருவத்தை சுருக்கி பார்த்தவன், "ஆமா பணம்னா பேய்க் கூட வாயை பிளக்கும்.. இவலாம் எம்மாத்திரம்.. அதுதான் உடனே ஒத்துக்கிட்டா" என்று இகழ்சியான புன்னகையோடு அந்த காண்ட்ராக்ட் பேப்பரை எடுத்து கொண்டு சென்றவன் தான்.. அதற்கு பிறகு அவன் இங்கு வருவதில்லை.. ஆனாலும் அவளுக்கு செல்வத்தில் எந்த குறையும் வைத்ததில்லை..
திடீரென்று ஆறு மாதத்திற்கு முன்பு குடித்து விட்டு கடும் போதையில் வந்தவன் அவளை சுயநினைவு இல்லாமல் அவள் மறுக்கவும் வழியின்றி முரட்டுத்தனத்துடன் அவளை மொத்தமாக களவாடினான்.. அன்றிலிருந்து அவன் தினமும் இங்கு வந்துப் போக இருக்கிறான். இப்பொழுது அவன் தேவையும் மொத்தமாக முடிந்து விட்டது.. அவனின் காதலியும் வந்து விட்டாள். பிறகு எதற்கு தான் என்று நினைத்து விட்டான் போல என்று அன்று அவனை சந்தித்ததில் இருந்து அனைத்தையும் நினைத்து பார்த்தவள் உடனே ஒன்றும் பேசாமல் மனதில் கனத்தோடு அதில் கை எழுத்திட்டாள்.. அதைப் பார்த்ததும் அவன் கோபம் பல மடங்காக பெருகியது..
கையை மடக்கி அவன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டிருக்கும் போதே, "இது எப்போ முடியும்" என்று கேட்டாள் நிலா..
"ஏன் அவ்வளவு அவசரமா?" என்று வித்தியாசமாக அவன் கேட்க..
அவன் கேட்பதில் இருந்த உள்ளர்த்தங்களை புரியாதவள், "ஆமா உங்களுக்கும் உங்க வருங்கால மனைவிக்கும் இடைஞ்சலா இருக்க நான் விரும்பல" என்று சொல்ல..
"எனக்கு என்னவோ என்னை விட உனக்கு தான் அவசரம் போல தோணுது அந்த ராஜா கூட சேர" என்று நக்கலாக கேட்க..
அவன் கேள்விக்கு அவள் பதில் சொல்ல விரும்பாமல் எழுந்து கொள்ள முயற்சிக்க, "இந்தா செக் இதை விட்டுட்டு போற.. இதுக்காக தான இத்தனை நாளும் நீ என்னை சகிச்சுக்குட்டு இருந்த" என்றதும் அவனை வெற்றுப் பார்வையை அவன் மீது வீசியவள்.. அதனை எடுத்துக் கொண்டாள்..
அவள் மீண்டும், "இந்த கேஸ் எப்போ ஹியரிங் வரும். இது எப்போ முடியும்" என்று கேட்க..
"சீக்கிரமே முடியும். ஆனா இப்போதைக்கு இல்ல.. இப்போ தாத்தாக்கு உடம்பு இன்னும் கொஞ்சம் பலகீனமா ஆகி இருக்குன்னு அன்றைக்கு டாக்டர் சொன்னாரு.. அதனால இப்போதைக்கு இதை அவர்கிட்ட" என்று சொல்ல..
"சொல்ல மாட்டேன்.. என்னால அவருக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்" என்றாள் நிலா..
"குட்" என்றவன் அதை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.. செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் கையில் இருந்த செக்கையும் பார்த்தாள்.. பிளாங்க் செக் கொடுக்கும் அளவிற்கு அவன் செல்வத்தில் குறை இல்லாதவன் தான்.. இல்லையா பின்ன.. மொத்த உதயம் நகைக் கடைகளுக்கும் இருக்கும் ஒரே வாரிசு.. அவன் தருவான் தான் என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டாள் நிலா.. ஆம் நிலாவின் கணவன் அவளை வார்த்தைகளால் சூரியனாக சுட்டெரித்து கொண்டிருக்கும் அவன் பகலவன்..

Author: நிகாஷா
Article Title: பகல் நிலவு - 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.