பகலவன் வெளியில் சென்ற சில நிமிடங்களிலேயே வெண்ணிலாவும் தான் தன் பணத்தில் வாங்கி இருந்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.. பகலவன் வீட்டிற்கு வராத இந்த நாட்களில் எல்லாம் அவள் பகுதி நேர வேலைக்கு சென்று கொஞ்சம் பணத்தையும் சேமித்து வைத்திருந்தாள்.. அவன் கொடுத்த கார்டயோ அவன் மாதம் மாதம் அனுப்பிய பணத்தையோ அவள் தொடவே இல்லை ஆனால் அது அவனுக்கு தெரியாது.. அவள் என்ன செய்கிறாள் என்று கூட அவன் கேட்டது கூட இல்லை.. அவள் ஒருத்தி இருக்கிறாள் என்பது அவனுக்கு நியாபாகத்தில் இருக்கிறதா என்று அவள் பல முறை நினைத்ததுண்டு..
அவள் தன் சூட்கேஸை இழுத்துக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்த ஜானகி பதறிப் போனார்..
ஜானகி, "என்னம்மா எங்க கிளம்பிட்ட?" என்று பதறியபடி கேட்டார்.. அவர் பதறியதிலும் காரணம் இருந்தது அவள் திருமணம் ஆகி வந்து இந்த இரண்டு வருடத்தில் அவள் எங்கேயும் சென்றதில்லை.. இப்பொழுது காலையிலிருந்து அவள் ஒரு மாதிரியாக பேசிக் கொண்டிருந்தது வேறு அவருக்கு உறுத்தியது.. அவர் மீண்டும் மீண்டும் கேட்கவே அவரை இறுக ஒரு தடவை கட்டி அணைத்தவள் நான் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வேறெதுவும் பேசாமல் கலங்கிய கண்களுடன் அங்கு இருந்து வெளியில் வந்து விட்டாள்..
அங்கிருந்து வந்து விட்டாளே தவிர அடுத்து எங்கு செல்வது என்று தெரியவில்லை.. அவள் கஷ்டத்திற்கு தோள் சாய அவள் அம்மாவும் அவளுடன் இல்லை.. அம்மா வீடு என்றும் ஒன்றும் இல்லை.. உடனே அவளின் நியாபகத்திற்கு வந்தது அவள் தோழி நிவேதிதா தான். ஆனால் இப்போதைக்கு அவளுக்கும் அழைக்க அவளுக்கு தோன்றவில்லை.. இப்பொழுது அவளுக்கு அமைதி மட்டுமே தேவையானதாக இருந்தது.. உடனே ஒரு கேப்பை புக் செய்தவள் அங்கிருந்து நேராக ஒரு லாட்ஜுக்கு சென்றாள்..
இங்கு அவள் வெளியே சென்றதுமே ஜானகி பகலவனுக்கு அழைத்து வெண்ணிலா வெளியில் சென்று விட்டதையும் அவள் இதை தன்னிடம் கொடுத்து விட்டு சென்றாள் என்று அவன் அவளிடம் கொடுத்த கார்டையும் காட்டினாள்.. அவனுக்கு அதை பார்த்ததுமே கோபம் சர்ரென்று ஏறியது.. அந்த கார்டை அவன் அவளிடம் கேட்பதாகவே இல்லை.. எதுவும் இன்னும் அவர்களுக்குள் முடியவில்லை என்று அவன் தெளிவாக சொல்லி இருந்தும் கூட அவள் இப்படி அவசரமாக வெளியேறியதை நினைக்கும் போதே பற்றிக் கொண்டு வந்தது..
உடனே பகலவன், "ராகுல்" என்று அவன் உதவியாளனை அழைக்க..
ராகுல், "எஸ் சார்" என்றான்..
பகலவன், "வெண்ணிலாவோட கார்ட் எல்லாத்தையும் பிளாக் பண்ணு" என்று சொல்லவும் அதிர்ந்து போய் நின்றான் ராகுல். "இரண்டு நாட்களாகவே பகலவன் அனைவரிடமும் கடுமையாக தான் நடந்துக் கொள்கிறான். இவனை தான் எதுக்கெடுத்தாலும் போட்டு குதறிக் கொண்டிருக்கிறான்" என்று நினைத்த ராகுலும் ஓகே சார் என்று உடனேயே அதை செயல்படுத்தி விட்டான்..
இங்கு வெண்ணிலா ஹோட்டலில் அறை எல்லாம் எடுத்து பதிவு செய்து விட்டு பணம் கட்டுவதற்கு தன் கார்டை கொடுக்க அது வேலை செய்யவில்லை என்று திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.. என்னவென்று வங்கிக்கு அழைத்து விசாரித்ததில் அனைத்தும் பிளாக் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது..
அங்கிருந்து வெளியில் வந்தவள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது அங்கேயே நின்றிருந்துவிட்டு பின்னர் உடனே நிவேதிதாவிற்கு அழைக்க, அழைத்த சில நிமிடங்களிலேயே அவள் காரை எடுத்துக் கொண்டு வெண்ணிலாவை காண வந்து விட்டாள்.. வெண்ணிலாவின் கலங்கிய முகத்தை பார்த்ததுமே ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று புரிந்து போனது..
நிவேதிதா, "என்னாச்சு வெண்ணிலா? ஏன் ஒரு மாதிரி இருக்க? இது என்ன கையில சூட்கேசு?" என்று குழப்பமாக அவளை பார்த்துக்கொண்டே கேட்க..
வெண்ணிலா, "நான் அந்த வீட்டை விட்டு வந்துட்டேன்" என்று ஒரு பெருமூச்சுடன் சொல்லவும்..
"சரி முதல்ல கார்ல ஏறு.. என்னன்னு அப்புறமா பேசிக்குவோம்" என்று நிவேதிதா சொன்னதும் அவளும் ஏறிக்கொண்டாள்..
அவள் காருக்குள்ளே ஏறியதுமே படபடவென தன் கேள்விகளால் பொரிய தொடங்கி விட்டாள் நிவேதிதா..
"என்னாச்சு நிலா எதுக்கு வீட்டை விட்டு வந்துட்ட உன் புருஷன்னு சொல்லி ஒருத்தன் இருந்தானே அவன் கூட உனக்கு எதுவும் சண்டையா?" என்று சொன்னதும் இவள் முறைக்க..
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. சரி அவருக்கும் உனக்கும் எதுவும் சண்டையா? போதுமா இப்போ சந்தோஷமா?" என்று கேட்க.. நிலா ஒன்றும் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள்.
"என்ன ஆச்சு சொல்லு நிலா? இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்க..
ரோட்டையே வெறித்துக் கொண்டே வந்த நிலா, "நான் டைவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டேன்" என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெறுமையாக சொன்னதும், சட்டென்று வண்டி கீரிச்சிட்டு நின்றது..
நிவேதிதா, "ஹே என்ன சொல்ற, நீ எப்படி டைவோர்ஸ் கொடுத்த, அந்தாள அவ்வளவு லவ் பண்ணுனியே" என்று சொல்ல.. இவ்வளவு நேரமும் வைராக்கியமாக வெளி வராமல் தடுத்து விட்ட கண்ணீர் அதற்கு மேலும் தாக்கு பிடிக்காமல் அவளையும் மீறி வெளி வந்தது.. முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுக ஆரம்பித்தாள்..
"அச்சோ அழாத நிலா" என்று நிவேதிதா எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்காதவள் ஐந்து நிமிடம் முற்றிலுமாக அழுது தீர்த்து விட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்..
பின் நிவேதிதா தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்த நிலா, "நம்ம பிடிக்காதவங்களை நமக்கு பிடிச்சு இருக்குறதுக்காக வற்புறுத்தி நம்ம கூடவே வச்சுக்க முடியாதுல" என்று சொல்லவும் அவளும் தலையசைத்துக் கொண்டு வண்டியை எடுத்தாள்..
நிவேதிதா, "நான் அப்போவே சொன்னேன்.. இந்த பணக்காரங்களை நம்பாதன்னு.. பாரு இப்போ அவன் புத்தியை காட்டிட்டான்.. நீ அப்படியே அவனை சும்மா விட்டுட்டு வந்துட்டியா? கோர்ட்டுக்கு இழுக்கணும்.. பணம் இருக்குறதால தான இந்த ஆட்டம் ஆடுறான்.. அவன் பாதி ப்ராப்பர்ட்டிய எழுதி வாங்கிடு.. அப்போ தான் இவனுக்கு எல்லாம் புத்தி வரும்" என்று அவள் பேசிக் கொண்டே போக. நிலா அவன் கொடுத்த காசோலையை எடுத்து அவள் முன் நீட்டினாள்.. அது என்னவென்று பார்த்து விட்டு மீண்டும் திடீரென்று ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள் நிவேதிதா..
தன்னை நிதானித்து கொண்டு காரை எடுத்தவள், "எல்லாம் திமிரு, பணம் இருக்குற கொழுப்பு.. பிளாங்க் செக் கொடுக்குறானா பிளாங்க் செக்கு, நீ அதுல பத்து கோடி எழுது.. இல்ல இல்ல கூடவே எழுது" என்று ஆவேசத்துடன் சொன்னவள், "ஆமா இப்ப எதுக்கு நீ லாட்ஜ்ல வந்து நின்ன?" என்று கேட்க .. நிலா அவன் கார்டை பிளாக் பண்ணிதை பற்றி கூறினாள்..
"அந்த ஆளுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும் எதுக்கு உன் கார்டு பிளாக் பண்றது இதனை சம்பாதித்தது தானே அவன் கொடுத்ததா? நீ இத சும்மாவே விட கூடாது.. அவன் கொடுத்த பிளாக் செக்ல பத்து கோடி எழுதுவோம்" என்று சொல்ல..
நிலா, "அதெல்லாம் வேணாம் நிவி.. இப்போதைக்கு ஏதாவது நல்ல லாட்ஜ பார்த்து நிப்பாட்டு.. கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத உன்கிட்ட ஒரு பத்தாயிரம் இருந்தா கொடு.. திருப்பி தந்துடறேன் கண்டிப்பா" என்று அவள் தயங்கிக் கொண்டே கேக்கவும் நிவேதிதவுக்கு ஒரு மாதிரியாக போனது.. அவள் ஒரு நாளும் பணம் என்று வந்து நின்றதில்லை.. இப்படிப்பட்ட ஒரு கோடிகளுக்கு அதிபதியானவனின் மனைவிக்கு இந்த நிலைமையா என்று உள்ளுக்குள்ளையே அவளை நினைத்து வருத்தப்பட்டாள்.
நிவேதிதா, "நான் பணம் தரேன் நிலா.. ஆனா உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. எங்க வீட்ல வந்து தங்கு.. நீ வெளியே எல்லாம் தங்க வேணாம்.. பின்னாடி வீடு பார்த்ததுக்கு அப்புறமா போ.. ஹோட்டல் எல்லாம் சேஃப் இல்ல" என்று சொல்ல..
நிலா, "அதெல்லாம் சரியா வராது நிவி.. நீ ஒரு லாட்ஜ் கிட்ட ஸ்டாப் பண்ணு" என்று உறுதியாக சொல்ல..
நிவி, "நீ எதுக்கு யோசிக்கிறேன்னு எனக்கு புரியுது.. அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல.. உன்னை டிஸ்டர்ப் பண்ணாம நான் பாத்துக்குறேன்.. நீ எங்க வீட்ல வந்து தங்குடா" என்று அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க..
"இல்ல வேணாம் நிவி.. எனக்கு இப்போதைக்கு கொஞ்சம் பீஸ் ஃபுல்லா இருக்கணும் ப்ளீஸ் ஏதாவது லாட்ஜ் கிட்ட நிப்பாட்டேன்" என்று மீண்டும் கேட்கவும்..
நிவேதிதா, "சரி நிப்பாட்டுறேன் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருக்கு என்று சொன்னவள் ஒரு வங்கியின் முன்பு நிறுத்தினாள்..
"எதுக்கு இங்க வந்திருக்கோம்?" என்று கேள்வியோடு நிலா அவளை பார்க்க..
"அந்த செக்கத் தா" என்று அவள் கையில் இருந்ததை பட்டென்று வாங்கியவள் அதில் ஒரு கோடி ரூபாயை எழுதினாள்.. அதை நிலா அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, "உன் கார்ட பிளாக் பண்றதுக்கு அந்த ஆளுக்கு எந்த உரிமையும் கிடையாது.. வா நம்ம போகலாம்.. இதெல்லாம் அவருக்கு ஒரு காசே இல்லை" என்று சொல்லி விட்டு வெண்ணிலாவின் கை
யையும் பிடித்துக் கொண்டு வங்கியை நோக்கி நடந்தாள்..

Author: நிகாஷா
Article Title: பகல் நிலவு - 3
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.