Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் ஒன்று

''ராபின் ஹூட் ஆர் பெண்டிட்!!! போலீஸ் ஆர் கிளவ்ன்ஸ்!!''
(Robin Hood or Bandit! Police are clowns!)

அனல் பார்வைத் தெறிக்க, சத்தமாக படித்தவன் பல்லை நறநறவென்று கடித்தப்படி விட்டெறிந்தான் நாளிதழை.

''பேப்பர் என்னடா பாவம் பண்ணுச்சு.. அதை ஏண்டா பறக்க விடறே..''

என்றுக் கேட்டுக் கொண்டே பறந்த செய்தித்தாளை கீழே விழாமல் பக்கென்று பற்றி பிடித்தான் கௌதம், அறைக்குள் நுழைந்தப்படி.

முழங்கை வரை மடக்கி விடப்பட்டிருந்த கருப்பு வர்ண லோங் ஸ்லீவ் (long sleeve) கொண்ட கரங்கள் ரெண்டும் இடுப்பை இறுக்கியிருக்க, அழுத்தமாய் உதட்டைக் கடித்து நின்றிருந்தான் ஸ்ட்ரெஸ் கண்ணன் நெஞ்சு பிபியில் (BP) எகிறி நிற்க.

சுவற்றில் மாட்டியிருந்தது வெள்ளை வர்ண கனகச்சிதமான போர்ட் (board) ஒன்று. நடந்தேறியிருந்த சம்பவங்களின் தொகுப்பாய். பலதரப்பட்ட மொழிகளில் வெளிவந்த அத்தனை செய்திகளையும் ஒன்றாக்கி ஒரு கதம்பத்தையே உருவாக்கி வைத்திருந்தனர் கௌதமும் கர்ணாவும்.

தீவிரமாக அதை நோட்டமிட்டவனின் பார்வைகள் போட்டி போட்டுக் கொண்டு தேடி அலைந்தன எங்கே எங்கே என்று களைத்துப் போகும் வரை, அவன் மிழிகளில் சிக்கிடாமல் சாமர்த்தியமாக ஒளிந்துக் கொண்டு பூச்சிக் காட்டிடும் விடயத்தினை.

''கர்ணா கண்டிப்பா இதை ஒரு பொண்ணு பண்ணிருக்க வாய்ப்பே இல்ல!''

காஃபியை (coffee) நெட்டிய கௌதம் சொன்னான் மேஜையின் விளிம்பில் பிட்டத்தை சாய்த்து.

இல்லை என்பதைப் போல தலையாட்டிய கர்ணனோ, அதே வேகத்தோடு திரும்பி காலால் இழுத்தான் அவன் எதிரே இருந்த நாற்காலியை.

''பேங்க் ஸ்டாப்ஸ்.. (Bank staffs) நம்பாளுங்க விசாரிச்சதுல நடுங்கி போய் கிடக்கறாங்க கர்ணா. பொய் சொல்ல வாய்ப்பே இல்ல! ஒன்னுக்கு நாலஞ்சு பேர்.. வந்தது ஆம்பளத்தான்னு சொல்றாங்க!''

நாற்காலியில் அமர்ந்து காஃபியினை சில முடக்குகள் வைத்த கௌதம் சொல்லிட, எதிர் நாற்காலியில் குனிவாய் தன்னிலையை அமர்த்திக் கொண்டிருந்த கர்ணனோ மூளைக்குள் நடந்த சம்பவத்தை பலமாக ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான் படமாய்.

''இது ஒரு ப்ரீ பிளான் அண்ட் வெல் பிளான்ட் ராபரி (Pre plan and well planned robbery) ஏறக்குறைய ரெண்டு பேர்லந்து நாலு பேர்.. இல்ல மேற்பட்டும் இருந்திருக்கலாம். நிச்சயமா ஒரு மாசத்துக்கு மேல கண்காணிச்சிக்கிட்டே இருந்திருக்கணும். ஐ.டி (I.T) படிச்சவனா இருக்கலாம்.. இல்ல ஐ.டி தெரிஞ்சவன் உதவியோடு இதைப் பண்ணிருக்கலாம்..''

சொல்லி முடித்த கௌதம் நெட்டி முறித்து கால் மேல் கால் போட, நிமிர்ந்த கர்ணனோ வலது கரத்தை பின்பக்கமாய் மேஜையில் நீட்டி துழாவி எடுத்தான் அவனின் சிகரெட் பாக்கெட்டை.

''ஆனா.. பாரு மச்சான்.. அந்த கெட்டவெய் ட்ரைவரோட (getaway driver) கார் நம்பரை கூட யாரும் பார்க்கல.. இத்தனைக்கும் அது எப்போதுமே ஆள் நடமாட்டம் அதிகமா இருக்கற ஏரியா.. தெரியுமா..''

கொள்ளை சம்பவத்தின் அவல நிலையை உச்சுக் கொட்டி சொன்னான் கெளதம்.

''ஹும்.. நீ.. இந்த மீடியாக்காரங்க.. ஏன் இந்த நாடு முதற்கொண்டு பேங்க்க கொள்ளடிச்சது ஒரு ஆம்பளைன்னு சொல்றிங்க! ஆனா.. நான் சொல்றேன்! இந்த கர்ணா நான் சொல்றேன்! கொள்ளைக்காரன் இல்ல! கொள்ளைக்காரி!''

சிகரெட்டை ஊதி தள்ளி சொன்னான் கர்ணன். புகை அறையில் வெள்ளாவியாய் உலாவிட.

''புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு. புற்றுநோயை உண்டாக்கும்..''

என்றப்படி கர்ணனின் வாயிலிருந்த சிகரெட் துண்டை விடுக்கென்று பிடிங்கினான் கௌதம்.

''டேய்..''

என்ற கர்ஜனையோடு நண்பனை முறைத்தான் கர்ணன்.

ஆனால், கௌதமோ அசரவில்லை. அவன் குடித்துக் கொண்டிருந்த காஃபியால் பிடுங்கிய கர்ணனின் சிகரெட்டை பஸ்பமாக்கினான்.

''நீ திருந்தவே மாட்டியா கர்ணா! எத்தனை தடவ சொல்லிருக்கேன்! இந்த கருமத்தை விட்டுத் தொலைன்னு!''

கௌதம் அக்கறையாய் கடிந்துக் கொள்ள, கர்ணன் அடுத்த சிகரெட்டை பற்ற வைத்திருந்தான் லைட்டர் கொண்டு.

அது பேனாவை முன்பகுதியிலும் லைட்டரை பின்பகுதியில் கொண்டிருக்கும் வித்தியாசமான லைட்டர் பேனாவாகும். கோபக்கார மன்னனுக்கு அவள் தந்த பரிசு அது. அளவாய் புகைத்தவன் அடியோடு நிறுத்திட அவளின் அப்போதைய அன்பு பரிசு.

வாயின் ஓரத்தில் சிகரெட் இருக்க,

''எந்த ஆம்பளையும் பாம்ஷெல் பர்பிஃயூம் (bombshell perfume) யூஸ் (use) பண்ண மாட்டான்!''

என்றவன் குறிப்பார்த்து வீசினான் மிகச் சரியாய் அவ்வெள்ளை போர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த தலைப்புச் செய்தியில்.

ஏதும் பேசாத கௌதமோ எழுந்த வேகத்திற்கு நேராய் சென்று கைப்பற்றினான் கர்ணனின் சிகரெட் பாக்கெட்டை. பாக்கெட் உட்பட கர்ணனின் வாயிலிருந்து பறித்த சிகரெட் முதற்கொண்டு மொத்தத்தையும் தூக்கி வீசினான் தூரமாய் ஜன்னல் திறந்து கௌதம்.

''உன்கிட்ட ஒரு விஷயத்த சொல்றது எப்படி தெரியுமா கர்ணா.. செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி.. பிரோஜனமே இருக்காது! நீ பிடிச்ச முயலுக்கு ரெண்டு கால்தான்னு அந்த முயலே வந்து சொன்னாலும்.. நீ மூணு கால்லுன்னு தான் சொல்லுவே!''

என்றவன் கர்ணனின் மேஜையை நெருங்கி அங்கிருந்த புகைப்படத்தைக் கையில் எடுத்தான்.

இடது கரம் மடக்கி தாடையில் முஷ்டி பதித்திருந்த கர்ணனோ இன்னும் அதிக நம்பிக்கையோடு சொன்னான் அழுத்தமாக.

''என் கட்ஸ் (guts) பொய் சொல்லாது கௌதம்! நீங்களாம் உங்க வழியிலேயே போங்க.. நான் என் ஸ்டைல்ல (style) இந்த கேஸை டீல் (case deal) பண்ணிக்கறேன்..''

''இந்த கேஸ் என்னது கர்ணா.. நான் சொல்றததான் நீ கேட்கணும்..''

கறாராக சொல்லி அணைப்போட்டான் அடாவடி நண்பனின் அதிரடி செயலுக்கு முற்று புள்ளி வைத்திடும் வகையில் கௌதம்.

கௌதம் சொன்னதைக் கேட்டவனுக்கு பொறுக்கவில்லை. சினத்தைப் பதுக்கிக் கொண்டு காத்திருந்தான் பாயும் புலியாக. கனல் கர்ணனின் மணிக்கட்டு நாடித் தொடங்கி கழுத்து நரம்புகள் வரை பச்சை புழுவாட்டம் வெளிப்படையாகவே புடைத்து தனித்து தெரிந்தன.

நல்லவேளை இதே இந்நேரத்திற்கு இவ்வார்த்தைகளை கௌதமை தவிர்த்து வேறு யாரேனும் சொல்லியிருந்தால் அவ்வளவு தான், பற்களைக் கழட்டி கையில் தந்திருப்பான் கர்ணன். சொன்னவனை பொக்க வாயாகவே ஆக்கிருப்பான்.

கோபம் கொண்டு ஒருத்தனை சமீபத்தில் அடி புரட்டி எடுத்ததால் வந்த வினைதான் கர்ணன் நண்பன் கௌதமிற்கு கீழ் வேலை செய்யும் நிர்பந்தம். அவனின் அதீத சினத்தின் பலனாய் கர்ணனை எவ்வழக்கையும் நேரடியாக கையிலெடுக்க விடவில்லை அவனின் தலைமை அதிகாரி.

கொஞ்ச நாளைக்கு கண்டிப்பாய் சஸ்பென்ஷன் (suspension) கொடுத்தே ஆக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பிடிவாதமாய் இருக்க, கர்ணனோ எதையும் சட்டை செய்யாமல் கையிலிருந்தத் துப்பாக்கிக் கொண்டு கயவர்களை வேட்டையாடி குமித்தான் கணக்கு வழக்கில்லாமல்.

கர்ணனின் கொடை வள்ளலான செயலுக்கு கௌதம் தலைமைகளின் கைகால்களில் விழாமல் விழுந்து, கெஞ்சிக் கூத்தாடினான் அவனால் ஐயன் வரை நண்பனை காப்பாற்றிட.

அனுமதி வாங்கினான் சட்டத்தின் வாய் அடைத்து, சஸ்பென்க்ஷனை தள்ளுபடி செய்ய கௌதம். கோவக்கார கர்ணனை தனக்கு கீழ் வேலை செய்திட நியமிக்குமாறு அவன் கேட்டதற்கு இணங்க பல பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு கெளதமின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

அதேவேளையில் கர்ணன் முழுக்க முழுக்க தம் பொறுப்பு என்று கையெழுத்து வேறு இட்டு கர்ணனை மொத்தமாய், கௌதம் அவனின் கண் பார்வையில் நிறுத்திக் கொண்டான்.

தன் கையிலிருந்த படத்தை திருப்பி வைத்தான் மேஜையில் கௌதம். முடிவுக்கு இனி தொடக்கம் வேண்டாம் என்றெண்ணி.

''விட்டு தொலைடா கர்ணா! பாழாப்போன கோவம்! இந்த சிகரெட்டு! முடிஞ்சு போன பழசு! பிடிவாதம்.. இந்த குப்பையெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு மறுபடியும் புது கர்ணாவா வாடா..''

கோபத்தில் இறுக்கமான இருப்பக்க புஜங்களும் புடைத்துக் கொண்டு நிற்க, மேஜையை ஓங்கி ஒரு குத்து குத்தினான் கர்ணா.

''கேஸ் பத்தி மட்டும் பேசுவோமா..''

ஸ்ட்ரெஸ் முகம் கொடூர முகமாக, கடுப்பில் சலித்துக் கொண்டான் கௌதம்.

'சொன்னா மட்டும் முறுக்கிக்கோ.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!'

முனகிய கௌதமோ நெற்றியை லேசாய் தேய்த்து கடகடவென அவனின் வாதத்தினை முன் வைத்தான்.

''இப்போ என்ன.. பெண்டிட் ஒரு ஆம்பளை இல்ல பொண்ணு! உன் கட்ஸ் அப்படித்தான் சொல்லுது! அவ்ளோதானே! சரி, இப்போ சொல்லு கர்ணா.. எப்படி நீ சொல்றதை நான் நம்பறது.. என்ன ஆதாரம்.. பிளீஸ்! மறுபடியும் அதே பாம்ஷெல் பர்பிஃயூம்ல வந்து நிக்காதே! உருப்படியா சென்ஸ் (sense) ஆகற மாதிரி ஏதாவது இருந்தா சொல்லு..''

முறைப்போடு இறுகிய முகம் கொண்டிருந்த கர்ணனோ நீட்டினான் கௌதமிடத்தில் கோப்பு ஒன்றினை.

''சம்பவ இடத்துல மொத்தம் இருபத்தி ரெண்டு பேரு இருந்திருக்காங்க. பதிமூணு பேர் லேடிஸ் (ladies). அதுல ஒருத்தர் கூட பாம்ஷெல் யூசர் (bombshell user) இல்ல! அதுல அத்தனை பேரோட பர்பிஃயூம் லிஸ்ட்டும் (perfume list) இருக்கு.''

கோப்பினை வாங்கி பக்கங்களைத் திருப்பிப் பார்த்த கௌதம் ஏறெடுத்தான் கர்ணாவை கூர்மையான பார்வைகளோடு.

''பொய் சொல்லிருந்தா.. இல்ல ஃபேக் ரெக்கோர்ட் (fake record) கொடுத்திருந்தா..''

''லிஸ்ட்டுல (list) இருக்கற அத்தனை பேரோட லாஸ்ட் ஷாப்பிங் ஹிஸ்டரி (last shopping history) முதற்கொண்டு சம்பவம் அன்னைக்கு அவுங்க ஹேண்ட் பேக்.. (hand bag) பர்ஸ்.. (purse) ஏன் ஒவ்வொருத்தர் கார் வரைக்கும் செக் (check) பண்ணியாச்சு.. கூச்சி.. (Gucci) வெர்சாச்சே (Versace) கூட கிடைச்சது.. ஈவென் (even) லோக்கல் ப்ரண்ட்ஸ் (local brands) கூட இருந்தது.. ஆனா பாம்ஷெல்..''

தலையை இல்லை என்று கர்ணன் ஆட்டிட, ஆடிப்போய் நின்றான் கௌதம்.

''ரிப்போர்ட்ஸ்லாம் (reports) அதுல தான் இருக்கு கௌதம். நல்லா பார்த்துக்கோ..''

அழுத்தமாக சொன்னான் இடையை இறுக்கிப் பிடித்து இடது கரத்தால் அமர்ந்தவாக்கில் கர்ணன் மிடுக்காக.

''எப்போடா இதெல்லாம் பண்ண.. நான் உனக்கு பர்மிஷனே (permission) கொடுக்கலையே..''

மேஜையின் இழுப்பறையை இழுத்து புது சிகரெட் பாக்கெட்டைத் திறந்த கர்ணன் கூலாக சொன்னான்.

''ஆமா.. எஸ். கௌதம் ரொம்ப பெரிய கையெழுத்து பாரு. அந்த கோழி கிறுக்கல் சைன்னே நானே போட்டுக்கிட்டேன்..''

''Karna.. this is too much!''
(கர்ணா.. இது ரொம்ப ஓவர்!)

''நான் ஒன்னும் கௌதம் இல்ல.. நிறுத்தி நிதானமா வேலை செய்ய.. கர்ணா.. வேகம் மட்டும் தான் இருக்கும் என்கிட்ட!''

சொன்னவன் சிகரெட் துண்டைப் புகைத்தப்படி அறையிலிருந்து வெளியேறினான்.

துரத்திடுவான் கர்ணா பாம்ஷெல்லை..
 
Back
Top