- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் மூன்று
''அறிவில்லே! இது என்ன டாய்லெட்டா.. (toilet) சீ.சீ.டி.வி (CCTV) இல்லாமே இருக்கறதுக்கு! எண்ட்ரன்ஸ்யா! எண்ட்ரன்ஸ்! (entrance)''
வாசலின் உள்பக்கம் அண்ணாந்து பார்த்த எரிச்சலில் அலறினான் கர்ணன். வேறென்ன செய்வான் அவன். இப்போது நடந்திருப்பது இரண்டாவது திருட்டு. அதுவும் நகரத்தின் மற்றுமொரு பிரதான வங்கியில்.
கௌதம் ஒருப்பக்கம் ஆட்களை விசாரித்துக் கொண்டிருக்க, வாசலில் கேமரா இல்லாதது போய்; மிச்ச மீதி கேமராக்களின் பதிவுகளை பரிசோதனை செய்ய நினைத்து சுற்றிரும் அலசினான் கர்ணன்.
''எங்கையா செக்கியூரட்டி.. டெக்னீஷன்லாம் (technician)? கூப்புடியா! ஃபுட்டேஜ் (footage) பார்க்கணும்!''
கடுகாய் அவன் வெடிக்க, மேனஜரோ கலக்கத்தோடு சொன்னார்.
''டெக்னீஷன் ரிசைன் (resign) பண்ணி ஒரு மாசம் ஆகுது சார். புதுசா இன்னும் யாரையும் எடுக்கல சார்.. செக்கியூரட்டிங்க வழக்கமா இந்நேரத்துக்கு பசியார போவணுங்க.. வர நேரம் தான் சார்..''
கழுத்து நரம்புகள் புடைத்துக் கொள்ள, பெருமூச்சு இழுத்து தன்னையே சாந்திப் படுத்திக் கொண்ட கர்ணா கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டான்.
''யோவ்! இது பேங்க்கா இல்ல கோவிலா! சீ.சீ.டி.வி இல்லங்கற! டெக்னீஷன் ரிசைன்ங்கிற! செக்கியூரட்டி கொட்டிக்க போயிருக்காணுங்கற! ''
''சார்.. சத்தம் போடாதீங்க சார்.. பிளீஸ் சார்!''
''என்னயா சத்தம் போடாதீங்க! ஹான்.. என்ன சத்தம் போடாதீங்க! இங்க எதுவுமே உருப்படியா இல்லாமே என்னய்யா பேங்க் நடத்தறீங்க நீங்க! கோட்டு சூட்டு போட்டு ஆட்டிக்கிட்டு வந்துட்டா மட்டும் போதுமா! எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க மாட்டிங்களா!''
புலியாட்டம் கர்ணா உறும்பிட கலங்கிப் போன மேனஜர் திருதிருவென முழித்தார்.
''யோவ்! பொய் சொல்லாமே சொல்லு! நிஜமாவே பேங்க்ல காசு இருந்துச்சா.. இல்லையா! இல்ல இல்லாத காசை.. இருந்துச்சு.. காணாம போச்சுன்னு.. கதை விடறிங்களா!''
கர்ணா இறுகிய முகத்தோடு விறைப்பாக வலது கர கடா காப்பினை அழுத்தி மேலேத்திக் கொண்டே சத்தமாய் கேட்க மேனஜரோ நிற்கும் இடத்திலேயே யூரின் போகும் அளவுக்கு கிடுகிடுத்தார்.
''சார்.. சார்.. அப்படிலாம் இல்ல சார்..''
''என்னய்யா இல்ல நொல்லன்னுக்கிட்டு! ஒருவேளை நீயே ஆட்டைய போட்டுட்டு பழிய தூக்கி திருட்டி களவாணிங்க மேல போடறியா!''
கர்ணன் கர்ஜனையாக கேட்டு மேனஜர் முன் நோக்கிட, பயந்த மேனஜர் நடுநடுங்கிய கைகளை பிசைந்துக் கொண்டு பின்னோக்கினார்.
இருக்கும் கடுப்பிற்கு கடித்து துப்பியே விட்டான் கர்ணன் வார்த்தைகளால் வயது மூத்த மேனஜரான அப்பெரியவர் அப்பாதுரையை.
''சார்..''
''என்னய்யா சாரு! மோருன்னு! அப்படியே ஒன்னு கொடுத்தனா தெரியும்! கொஞ்சங் கூட யோசிக்க மாட்டிங்களா! ஒரு நாளைக்கு எத்தனை பேர் புலங்கற இடம் இது..''
காச் மூச் என்று கர்ணன் கத்திட, அதனைக் கண்ட கௌதம் அவனோடு இருந்த சக போலீஸ் நண்பன் டமனை அனுப்பி நடக்கின்ற சண்டையை சமரசமாக்கிட சொன்னான்.
''சார்.. நான் என்ன சொல்ல..
''நீ ஒரு எழவும் சொல்ல வேணாம்! ஒழுங்கு மரியாதையா ஓடிடு! மூஞ்சி முகறையெல்லாம் ஒடச்சி விட்ருவேன்! ஒரு க்ளு (clue) கூட கிடைக்க முடியாதப்படி பண்ணிட்டு மழையில நனைஞ்ச எருமை மாறி நின்னுக்கிட்டு! போயா!''
சீறிடும் நாகமாய் கர்ணா மேனஜர் அப்பாதுரையை துரத்தி விட்டான். ஸ்ட்ரெஸ் தலைக்கேறியது போல் சிகரெட்டின் எண்ணிக்கையும் இன்றைக்கு ஒரே நேரத்தில் கபகபவென்று கூடிக் கொண்டே போனது கர்ணனுக்கு.
சிகரெட்டை பூட்ஸ் (boots) காலணியால் கொலைக் காண்டில் நசுக்கியவனின் கோபமான பார்வையே சொல்லியது, அவன் துண்டு சிகரெட்டை மட்டும் மிதிக்கவில்லை மேனஜரையும் சேர்த்துத்தான் மிதிக்காமல் மிதிக்கிறான் என்று.
''சார்..''
''ஏய்! மண்டைக்கு ஏத்தாதே! இன்னும் பத்து நிமிஷத்துல உன் ரீஜன் ஹெட் (region head) இங்க வரணும்! இல்ல.. இந்த சிகரெட்ட மிதிக்கறே மாதிரி உன்னையும் மிதிச்சே கொன்னுடுவேன்!''
பின்னங்கழுத்து புடனியை இடது கரத்தால் நீவி அவ்விடத்திலிருந்து நகர்ந்துக் கொண்டான் கர்ணா. எங்கே தாமதித்தால் இனி வாய் பேசிடாமல் கை பேசிடுமோ என்று கருதி.
சம்பவ இடத்திற்கு ரீஜன் ஹெட் வருவதற்குள் சிக்கினான் இக்கொள்ளைச் சம்பவத்தின் ஆஸ்த்தான சாட்சியான பார்த்திபன் கர்ணனிடத்தில்.
கௌதம் விசாரித்து முடித்து நகர, முக்கிய சாட்சி பார்த்திபனின் தோளில் கைப் போட்டு அவனோடு நடக்க ஆரம்பித்தான் பேச்சுக் கொடுத்துக் கொண்டே கர்ணன்.
''பார்த்திபா.. இப்போ நான் தான் நீ.. நீ தான் திருட வந்த பெண்டிட்..''
நுணுக்கமாக சம்பவத்தை ஒரு முறை நடத்திப் பார்த்திட நினைத்தான் கர்ணா.
''பெண்டிட்னா சார்..''
புரியாதவன் கேள்வி எழுப்ப, புரியும் படி விளக்கினான் கர்ணன்.
''திருட வரவங்க.. சாதாரண மக்கள் நீங்க திருடன்னு சொல்லுவிங்க.. ஆனா, போலீஸ் நாங்க பெண்டிட்னு இப்படித்தான் சொல்வோம்.. கூடவே கொஞ்சம் காமெடியா ஏதாவது சேர்த்துப்போம்.. மக்கள் பார்வையில திருடறவங்க ராபின் ஹூட் ஆனாலும்.. எங்களுக்கு எப்போதுமே திருடறவங்க ஒரு காமெடி பீஸ் தான்..''
''புரியுது சார்..''
கைகளைக் கட்டிக் கொண்டான் நெஞ்சுக்கு குறுக்கே நெற்றியில் பட்டை போட்டவன்.
''ஓகே பார்த்திபா.. இப்போ நீ என்ன நடந்துச்சோ.. அதை அப்படியே நடிச்சு காட்டறே.. சரியா.. நீ இப்போ திருட வந்த பெண்டிட்.. நான் பார்த்திபன்..''
என்றவன் பார்த்திபன் சம்பவம் நடக்கையில் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தானோ அதே இருக்கையின் ஓரம் நின்றுக் கொண்டான் கூலிங் கிளாஸை இடது முழங்கை மடக்கிய சுருளில் சொருகி.
''சரி சார்..''
என்ற இளைஞன் பார்த்திபனும் சம்பவத்தை அழகாய் நடித்துக் காட்டினான் கர்ணா திருப்திக் கொள்ளும் படி.
''அப்போ.. நீ எதர்ச்சையா திரும்பும் போதுதான் அந்த பெண்டிட் கழுத்துல இருந்த ஷோல் (shawl) உன் முகத்துல பட்டிருக்கு..''
நீல வர்ண நாற்காலியின் மேல் விளிம்பில் வலது கரம் இறுக்கிப் பிடித்து கேட்டான் கர்ணா.
''ஆமா சார்.. நான் இப்படி வலது பக்கமாத்தான் சார் எழுந்திருச்சேன். போன் பேசக்கூடாதில்ல பேங்க் உள்ள.. அதான் சார் வெளியில போய் பேசலாம்னு.. அம்மா கூப்டாங்க சார்.. அதான் அந்த கோலை (call) மட்டும் அட்டெண்ட் (attend) பண்ணிடலாம்னு வெளிய போக பார்த்தேன் சார்.''
ம்ம்ம்.. கொட்டி தீவிரமாக குறுக்கிட்டுக் கிடந்த கால்களை ஆட்டிக் கொண்டே கேட்டான் பார்த்திபன் சொல்வதை மனக்கண்ணில் ஓட விட்டு பார்த்த கர்ணா.
''அப்பத்தான் சார்.. அந்த திருடன் அவனோட கழுத்து ஷால்ல அட்ஜஸ்ட் (adjust) பண்ணான். அது என் மூஞ்சில பட்டு.. நான் சோரி கூட கேட்டேன் சார்.. ஆனா, அவன் நிக்காமே அவசர அவசரமா போய்ட்டான் சார்..''
கருப்பு கலர் கூலிங் கிளாஸின் ஓரத்து டெம்பள் டிப் (temple tip) முனையை வாயில் வைத்து கடித்தும் கடிக்காமலும் சுவாரசியமாக கதைக் கேட்டுக் கொண்டிருந்த கர்ணனின் சிந்தையெல்லாம் வேறெங்கோ இருந்தது.
பாம்ஷெல்காரியின் இச்சால்வை தந்திரம் வழக்கமானதா அல்லது போலீஸ் புத்தியைக் குழப்புவதற்காகவே இம்முறை அவள் இப்படியான யுக்தியைக் கையாண்டு இருக்கிறாளே என்று யோசித்தான்.
நொடிகளில் அவன் நினைவலைகளில் வந்துப் போனது, அன்றைக்கு இதேப் போன்றதொரு அழகுச் சால்வையைக் கத்தி குத்துப்பட்டவன் புஜத்தில் இறுக்கியவளின் குறுகுறுத்த முகம்.
திருடிப் போனவனின் சால்வை எப்படி இருந்தது என்று கர்ணா விழையும் முன் பார்த்திபனிடத்தில்,
''கர்ணா..''
என்றழைத்தான் கௌதம் அவனை தூரத்திலிருந்து. கையசைத்தான் வர சொல்லி. சிந்தனைக் கலைய எச்சரித்தான் பார்த்திபனை பேண்ட் பாக்கெட்டில் கரங்கள் நுழைத்த கர்ணன்.
''சரி பார்த்திபா.. எப்போ கூப்டாலும் பாலாய்க்கு (police station) வரணும். கேஸ்க்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும். முக்கியமா.. நீ இப்போ சொன்ன எதையுமே மாத்தி சொல்லக் கூடாது! ஒரு வார்த்தை மிஸ் ஆனாலும்.. நீ மிஸ்ஸஸ் ஆகிடுவே! மேல இருக்கற பட்டை கீழ இல்லாமே போயிடும்! ஜாக்கிரதை!''
வாழ்க்கை பொட்டல் காடாகிடும் என்று வார்த்தை ஜாலங்களால் டபுள் மீனிங் வார்த்தையை டீசண்டாக சொன்னான் கர்ணா. புரிந்த பார்த்திபனோ தலையை தலையை ஆட்டிக் கொண்டான்.
லாவாக கூலிங் கிளாஸை கண்ணில் அணிந்தப்படி கௌதம் நோக்கி நடந்தான் கர்ணா. அவனோடு பயணித்த டமனிடம் சொன்னான் சந்தேகமாய்.
''அவன் மேல ஒரு கண்ணு வை! இப்போலாம் சாமியாருங்கலத்தான் நம்பவே முடியல! கண்ட வேலை பண்றாணுங்க!''
''சரிடா.. சரிடா..''
என்ற டமன் சிரித்து நகர, கௌதமோடு நின்றிருந்த புதிய ஆள் கரம் குலுக்கி அறிமுகம் ஆகிட நினைத்து கரம் நீட்டினான் கர்ணாவை நோக்கி.
''இவரு ரீஜன் ஹெட்.. கர்ணா.. மிஸ்ட்டர் ரோஹித்..''
கௌதம் சொல்லிட கைகுலுக்க நினைத்த வங்கியின் ரீஜன் ஹெட் ரோஹித் அசிங்கப்பட்டு போனார் கர்ணனிடத்தில். அவன் பாக்கெட்டிலிருந்து கரத்தை வெளியேற்றிடாமல் வேறெங்கோ வேடிக்கைப் பார்த்தப்படி நின்றான்.
''Ok.. you both carry on.. I'll join in a while.. ''
(சரி.. நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து கலந்துக்கறேன்..)
என்ற கௌதம் நகரும் முன் கர்ணாவின் காதில் ஓதினான் ரகசியமாய்.
''மச்சான்.. பார்த்து ஸ்மூத்தா ஹேண்டல் பண்ணு..''
''அதுக்கென்னா நல்லாவே கவனிச்சிடறேன்..''
என்றவன் கைவிரல்களில் நட்டு உடைத்திட ரோஹித்தை கழட்டிடாத கருப்பு கண்ணாடி வழி அளந்தான் கர்ணா.
''எனக்கு தலைவலி கொடுக்காத வரைக்கும் சரி!''
என்ற கௌதம் கிளம்பினான் அங்கிருந்து.
கர்ணாவோ மனதில் கங்கணம் கட்டிக் கொண்டான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை எனில் இன்றைக்கு ரோஹித் ரோஸ்ட்டுத்தான் என்று.
கையை கொடுத்திருந்தால் நிச்சயம் கழட்டி தனியாக தந்திருப்பான் கர்ணா. அவ்வளவு கோவத்தில் இருந்தான் அவன். கைக்கு எட்டி வாய்க்கு எட்டிடாது போன கள்ளியை பிடிக்க முடியாது போன சோக வெறுப்பு வேறு அவனுக்கு.
''வாங்க..''
என்ற கர்ணன் முன்னே நடக்க அவனோடு சேர்ந்து நடந்தார் ரோஹித். நெட்டி முறித்து கேட்டான் கர்ணன் ஏதும் அறியாதவன் போல.
''இங்க என்ன நடந்திருக்கின்னு தெரியுமா..''
பம்பும் குரலில் சொன்னார் ரோஹித்.
''தெரியும் சார். மேனஜர் அப்பாதுரை எல்லாமே சொன்னாரு. சார்.. குடிக்க.. காஃபி.. டீ.. ஏதும்..''
அனுசரணையாக ரோஹித் கேட்க, வேண்டாமென்று தலையாட்டிய கர்ணனோ அங்கிருந்த கவுண்டர் விளிம்பின் ஓரம் முதுகை வசதியாக சாய்த்து நின்றான்.
கொள்ளை நடந்த வங்கி என்பதால் வெளியாட்கள் யாரும் தற்போதைக்கு உள்ளே வரமுடியாமலும் உள்ளிருப்பவர்கள் யாரும் வெளியில் சொல்ல முடியாதப்படியும் தான் இருந்தது.
''நீங்க கொஞ்ச பெரிய மனசு பண்ணிங்கண்ணா வசதியா இருக்கும் சார். எங்க பேங்க் மக்கள் மத்தியில நல்ல பேரோட இருக்கற பிரபலமான பேங்க். நான் சொல்ல வேண்டியது இல்ல.. உங்களுக்கே தெரியும்..''
ரோஹித் சொல்ல சொல்ல, இடது கர முட்டியை மேஜையில் குன்றி; அதிலிருந்த கடா காப்பினை சுற்றி பார்க்க விட்டிருந்தான் அவனின் வலது உள்ளங்கையை கர்ணா.
''சீ.சீ.டி.வி கேமரா வேலை செஞ்சு ரெண்டு மாசமாச்சு சார். நாங்க பெருசா எதுவும் கண்டுக்கல. காரணம்.. இந்த சீ.சீ.டி.வி கேமரா அடிக்கடி இப்படித்தான் சார் பண்ணும். அதனால தான்.. அப்படியே விட்டுட்டோம். வெளியாளு யாருக்கும் தெரியாமே.. ஏன்.. பேங்க் ஸ்டாப்ஸ்க்கு கூட தெரியாமே மெயிண்டன் பண்ணிட்டோம் நானும் மேனேஜரும்..''
கூலிங் கிளாஸை சுழற்றியவாறே ரோஹித் ஓட்டிக் கொண்டிருக்கும் ரீலினை காதில் வாங்கிக் கொண்டிருந்தான் கர்ணா.
''இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல சார். விசாரணையில இது மட்டும் வெளிவரமா கொஞ்சம் பார்த்துக்கோங்க சார்.. வெளியில தெரிஞ்சா பேங்க் பேரு கேட்டு போய்டும் சார்..''
சந்தேகிக்கும் வண்ணம் யாராவது வேவு பார்க்கிறார்களா என்றுத் தேடி அலைப்பாய விட்டான் அவனின் கண்களை கர்ணா ஒப்புக்கு தலையைக் கூட ஆட்டிடாமல் ரோஹித் பேசிட.
''சார்.. உங்களுக்கும் உங்க பிரெண்டு (friend) கௌதம் சாருக்கும் எவ்வளவு வேணும்னு சொன்னிங்கன்னா..''
ரோஹித் சொல்லிட ஒரே அடி கவுண்டர் மேஜையை உள்ளங்கையால் கர்ணா. ஆடிப்போனார்கள் பக்கமாய் இருந்தவர்கள். ரோஹித்துக்கு தூக்கி வாரி போட்டு விட்டது நெஞ்சு.
''கொச.. கொசு.. ரொம்ப நேரமா காதுக்கிட்ட கொய்யின்னு கத்திக்கிட்டே இருந்துச்சா.. அதான்.. பட்டுன்னு ஒன்னு வெச்சேன்.. பொட்டுன்னு போச்சு.. நீங்க ஏன்.. நிறுத்திட்டுங்க.. நீங்க சொல்லுங்க..''
என்றவன் கெத்தாக பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஸ்விங் கம்மை (chewing gum) எடுத்து வாயில் போட்டு மெல்ல, வேர்த்து விறுவிறுத்து போன ரோஹித் ஈரமான முகத்தை கைக்கூட்டையால் துடைத்துக் கொண்டார்.
''சார்.. உங்களுக்கு என்ன வேணுமோ.. சொல்லுங்க சார்.. பார்த்து பண்ணிக்கலாம்..''
''பார்த்து பண்ணிக்கலாம்.. ஹ்ம்ம்..''
என்று சீரியஸாக கேட்டு தலையாட்டியவன் பார்வைகளை பொதுவாக ஓட விட்டான் வங்கிக்குள்.
முடிஞ்சது சோலி. ஏற்கனவே, கொதித்து கொண்டிருந்தவன் ரோஹித் சொன்ன வார்த்தைகளில் எரிமலையாகவே ஆகியிருந்தான். அதுவும் லஞ்சம் தருவதை அவர் நாசுக்காக கேட்க மவராசன் ரோஹித்துக்கு கைமா கன்போர்ம் (conform) என்று உறுதி செய்து விட்டான் கர்ணன்.
இரு உள்ளங்கைகளையும் நன்றாக அழுந்த தேய்த்த கர்ணா விட்டான் ஒரு அறை ரோஹித் பின்னோக்கி போக. சுற்றத்தார்கள் ஸ்தம்பித்து பார்க்க, கன்னம் சிவக்க அறை வாங்கியவனோ கையால் பழுத்த கன்னத்தை இறுக்கி பிடித்து கலங்கி நின்றான் கர்ணாவின் எதிரில்.
''சார்!!! இதெல்லாம் தப்பு சார்! நீங்க ரொம்ப தப்பா நடந்துக்கறிங்க! நான் உங்க சுப்பீரியார்க்கிட்ட (superior) கம்பளைண்ட் (complaint) பண்ணிடுவேன் சார்!''
''எதெய்.. நான் தப்பு பண்றேனா! இந்த கர்ணா தப்பு பண்றானா.. அதை முள்ளமாரி நீ சொல்றியாடா! நீ சொல்றியாடா!!''
என்றவனுக்கு கிறுக்கு முத்தி போனது. ரோஹித்தின் கரத்தை வளைத்துப் பிடித்து கொஞ்சங் கொஞ்சமாய் சுழற்றி அவனை அலறிட விட்டான் கர்ணா.
''மா!!! சார் வேணாம்.. விட்டுடுங்க.. சார்.. வலிக்குது சார்! நான் ஏதும் பண்ண மாட்டேன் சார்.. விட்டுடுங்க சார்..''
வழியில் துடித்தவன் கெஞ்சினான்.
முட்டிக்கால்களால் ரோஹித்தின் தொப்பையிலேயே ஒரு குத்து வைத்தான் கர்ணா.
''கரணம் தப்பினால் மரணம் தெரியும்ல!''
ரோஹித் வலியில் பளிங்குத் தரையில் மண்டியிட, தொடையை தானாகவே முஷ்டி மடக்கி குத்திக் கொண்டவன் அலறினான்.
''ஆர்ர்ர்.. நல்லா மாடு மாதிரி கொழுத்து போயிருக்கிங்க.. ஆனா, வேலை மட்டும் மாட்டு சாணி மாதிரி பார்க்கறிங்க! ஏன்! ஏன்! ஏன்!''
என்று மூச்சிரைக்க ஆவேசமாக கத்தியவன் உடம்பில் சாத்தான் புகுந்து விட்டான் என்றே சொல்ல வேண்டும். அவன் வாய் பேசும் முன்னே பூட்ஸ் பேசியது.
''எனக்கு என்ன வேணுமோ அதை.. நீ தறியா..''
என்றவன் அழுந்த பின்னந்தலையைக் கோதி தொடர்ந்தான்.
''சரி.. தா! இப்போ தா! ஓடிப்போன அந்தத் திருடிய தா எனக்கு! தாடா! கொடுடா! கொடு! அந்த திருட்டு களவாணிய புடுச்சு கொடு!''
என்றவன் ரோஹித்தின் அங்கியைப் பிடித்து இறுக்கி, பைத்தியம் பிடித்தவனாட்டம் அவனை செவுனி சிவக்க சிவக்க அறைந்தே அவனின் விரக்தியைத் தீர்த்துக் கொண்டான்.
''சார் முடியல சார்..''
வார்த்தைகள் உதிர்ந்த லட்டாய் உதிரியது ரோஹித்தின் வாயிலிருந்து.
''லஞ்சம் கொடுக்கறியா லஞ்சம்! வெண்ண மவனே! அந்த காச வெச்சு இந்த பேங்க்ல இருக்கற ஓடாத சீ.சீ.டி.வி கேமராவை தூக்கிட்டு உருப்படியானத மாட்டியிருக்கலாம்லே! இன்னிக்கு அவளே பிடிச்சிருக்கலாம்லே! முட்டாள்! முட்டாள்!''
சகட்டு மேனிக்கு பேசினான் கர்ணன். வாயோடு கையும் சேர்ந்து பேசியது. அவனை நெருங்கி தடுக்க யாரும் முன் வரவில்லை. அனைவரும் பயந்துப் போய் நின்றனர்.
காரணம் அவன் கோபம் அப்படியாகவும் அடி இடியாகவும் இருந்தது. ஏற்கனவே, விசாரணையில் வெலவெலத்து போய் கிடந்த மக்கள் கண்ட காட்சியில் பீதியாகிப் போய் கிடந்தனர்.
கௌதம் மற்றும் இன்னும் சில போலீஸ்க்காரர்கள் எல்லாம் ஆங்காங்கே ஆளுக்கு ஒரு பக்கமாய் அப்பெரிய வங்கிக்குள் உலாவிட, முன்பக்கம் கர்ணா அவனின் கச்சேரியை நிகழ்த்திக் கொண்டிருந்தான் தனியாளாய்.
சாதாரண அறையாக தொடங்கி பின் கட்டுக் கடங்காமல் போனது கர்ணாவின் சினம். முஷ்டி மடக்கி குத்து குத்தென்று ரோஹித்தின் முகத்திலேயே குத்தி அவன் வாயை கிழித்து வைத்திருந்தான் கர்ணா.
''என்ன கொழுப்பிருந்தா லஞ்சம் வேணுமான்னு என்னையே கேட்பே! ஏன் அவ்ளோ சொத்து வெச்சிருக்கியா! வெச்சிருந்தா தானம் தர்மம் பண்ண வேண்டியது தானே!''
கர்ணாவின் பூட்ஸ் காலணி ரோஹித்தின் மேனியினில் நன்றாகவே பேச்சு வார்த்தை நடத்தியது. ரீஜன் ஹெட் வாங்கிடும் அடியைப் பார்த்து மூச்சே விடாமல் மேனஜர் அப்பாதுரை மற்ற ஊழியர்களின் பின்னால் போய் ஒளிந்துக் கொண்டார்.
பிஞ்சி போன ரோஹித் கைக்கூப்பி கெஞ்சினான். கர்ணாவோ வெறிக்கொண்டு ஃபுல் ஃபோர்மில் இருக்க, பாவம் புண்ணியம் பார்த்திடாமல் விலாசி எடுத்தான் மொத்த காண்டையும் அவனிடத்தில் இறக்கி.
வங்கியில் நூதன முறையில் கொள்ளை. இம்முறை களவு போனது இரண்டரை லட்சம். எல்லாம் நூறு வெள்ளி கட்டுகள். அழைப்பு வந்ததும் விரைந்தான் கெளதம் அவனின் படையோடு.
ஹீரோ சார் கொஞ்சம் லேட் ஜோயின் (join) தான். சம்பவ இடமான வங்கிக்குள் நுழைந்ததுமே கர்ணாவின் நாசி பட்டென நுகர்ந்துக் கொண்டது அவன் வெறுக்கின்ற வாசனையை.
இம்முறையும் வங்கியில் கைவரிசையைக் காட்டியிருப்பது பாம்ஷெல் அழகிதான் என்று நெற்றி பொட்டில் அடித்தாற் போன்றதொரு வாசம் நெடியேத்தியது அவனை. வழக்கமாய் வாசனைத் திரவியங்கள் கிறக்கம் தரும். ஆனால். கர்ணாவிற்கு மட்டும் ஏழரையை இழுத்து விடும்.
அங்கிருக்கும் பெண்களிடம் பொதுவாக கேட்டு பின், நாகரீகமாக அனைவரின் கைப்பைகளையும் வாங்கிக்; கொட்டிக் கிளறி நிம்மதியற்ற திருப்திக் கொண்டான் கர்ணா.
சரி, மனம் சொல்வது போல திருடன் அல்ல திருடி என்பதையாவது நிரூபிக்கலாம் என்று நினைத்தவன் எண்ணத்தில் மண் விழுந்தது, கேமரா பதிவுகள் சதி செய்ய. அதிலும் தோற்று போனான் கர்ணா.
''எனக்கு கொடுக்கற அளவுக்கு உன்கிட்ட பணம் இருக்கிதுன்னா.. நீ எத்தனை பேர்க்கிட்ட வாங்கிருப்பே! ஹான்.. எத்தனை பேர்க்கிட்ட வாங்கிருப்பே! அப்போ, நீயும் அந்த திருடியும் ஒரே கோஷ்டியா! சொல்லு! ஒரே கோஷ்டியா! அவதான் உன் லீடரா! இல்ல அவளுக்கும் மேல ஆள் இருக்கா!''
நேரம் ஆகா ஆகா அடிக்கின்ற கர்ணா வேகங் கூட்டிட, அடிவாங்கிக் கொண்டிருக்கும் ரோஹித்தோ செத்தே போய்விடுவான் என்ற நிலைக்கு ஆளாகி கிடந்தான். செத்த பாம்பாட்டம் அவன் கிடக்க மூச்சிரைக்க அனல் பார்வையால் தூண்டில் போட்டான் கர்ணா மேனேஜருக்கு.
அலறினான் கடுங் கோபத்தோடு.
''டேய்.. அப்பாதுரை! டேய்! எங்கடா இருக்கே..''
தேடியவன் கண்ணில் மேனஜர் சிக்கிட அவனையும் இழுத்து வந்து ஹீரோ நாலு சாத்து சாத்திட தரையில் நடப்பதெல்லாம் திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதை கர்ணா அவன் அறியவில்லை.
''சார்.. இல்ல சார்.. சார்.. சார்.. விட்டுடுங்க சார்.. முடியல சார்!''
மேனஜர் சுருண்டு பிரண்டு அடிவாங்கிட அவன் மீதேறி அமர்ந்த கர்ணன் இரக்கமின்றி கன்னத்திலே சப்பு சப்பென்று அறைகள் விட்டு கத்தினான்.
''வாசல் எண்ட்ரன்ஸ்ல ஒரு கேமரா வைக்கணும்னு தெரியலே! நீயெல்லாம் என்னடா மேனஜர்! புடுங்கறதுக்கு உனக்கு இந்த பதவியா!''
''சார்.. வேணா சார்! வலிக்குது சார்.. விட்டுடுங்க சார்! சார்! விட்ருங்க சார்!''
கேமரா பதிவு மோசம் செய்திட, லஞ்சம் கொடுப்பதாய் இவர்கள் சொல்லிட; அவைகளின் தாக்கமே கர்ணாவை இப்படி முரடனாக மாற்றி வேடிக்கை காட்டியது.
எப்படியும் அவளை இம்முறை பிடித்திடலாம் என்று நினைத்தவனுக்கு கிடைத்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை கர்ணாவால். அதுவும் இப்படி பொறுப்பற்ற அதிகாரிகளின் அலட்சியத்தால் எனும் போது வந்திடாத கோபம் கூட அவனுக்கு வந்தது.
பொருத்திட முடியாதவர்கள் பயந்து கூச்சல் போட, ஓடி வந்தனர் சத்தம் காதில் விழ; பக்கமாய் இருந்த போலீஸ்க்காரர்கள்.
மேனஜரின் கழுத்தில் வலது கரங் கொண்டு இறுக்கி அவரைக் கொன்றே விடுவான் என்ற அளவில் நெறிக்க, பாவப்பட்ட மேனஜரோ தட்டு தடுமாறி கால்களை உதைத்து கர்ணாவின் கரத்தை அழுத்திப் பிடித்து கீழிறக்கி தப்பித்துக் கொள்ள பார்த்தான்.
விரக்தி வெறுப்பாகி வாய் வார்த்தைகளை உமிழ கையோ பாரபட்சமின்றி அடியைக் கிளப்பிக் கொண்டு இருந்தது வயது வரைமுறை இன்றி இரு ஆண்களையும்.
ஓடோடி வந்த கௌதமும் டமனும் ஒருவழியாய் கர்ணாவை தடுத்து நிறுத்தி ரோஹித்தையும் மேனஜரையும் காப்பற்றி விட ஹீரோவோ அடங்காமல் திமிறிக் கொண்டிருந்தான்.
''விடுங்கடா! விடுங்க என்ன! இந்த பாஸ்டர்ட்ஸ்சை.. (bastard)''
''Karna!!! It's enough!! I say it's enough!''
(கர்ணா!!! போதும் கர்ணா!! விடு! விடு கர்ணா!! நான் சொல்றேன் போதும் கர்ணா!!!)
அடங்காமல் வீறுக் கொண்டு சாமியாடியவனை அதட்டி இழுத்துச் சென்றான் கௌதம் அங்கிருந்து.
அதற்குள் டமன் பக்கமாய் இருந்த கிளினிக் மருத்துவர்கள் தாதியர்கள் என்று சிலரை வரவழைத்து, முரட்டு அடி வாங்கியிருந்த மேனஜருக்கும் ரோஹித்துக்கும் தற்சமயத்திற்கு முதலுதவி ஏற்பாடு செய்திருந்தான்.
இடைப்பட்ட நேரத்தில் பொது மருத்துவமனைக்கு அழைத்து தகவல் சொல்லிட அவர்கள் வருமுன், மீடியாவும் பத்திரிக்கையும் குமிந்திருந்தது வங்கியின் வாசலில்.
''பைத்தியமா கர்ணா உனக்கு! ஏண்டா அவுங்களை போட்டு இந்தடி அடிச்சிருக்கே! செத்து கித்து போயிருந்தா என்னடா பண்ணிருப்பே! இடியட்!''
கர்ணாவை வங்கியின் தனியறை ஒன்றில் அமர்த்தி ஆத்திரத்தைக் கொட்டினான் கௌதம்.
''பிடிச்சிருக்கலாம்டா.. இந்த கிறுக்கணுங்க மட்டும் சொதப்பாம இருந்திருந்தா..''
உதட்டின் மேல் துளிர்த்த வியர்வைகளை இடது கர பெருவிரலால் துடைத்தப்படி கோபமான தொனியில் சொன்னான் கர்ணா.
''ஐயோ கர்ணா! தயவு செஞ்சு முட்டாள் மாதிரி பேசறத முதல்ல நிப்பாட்டு! அப்படி என்னடா வெறி உனக்கு! நானும் தானே உன்ன மாதிரி அந்த திருடனை தேடி அலையறேன் அதுக்காக பாக்கறவனையெல்லாமா போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கேன்!''
அந்நேரம் பார்த்து பரபரப்பாக அவர்கள் இருந்த அறைக்கதவைத் திறந்து வேகமாய் உள்ளே நுழைந்தான் டமன். பதற்றமாய் காட்டினான் அவன் கையிலிருந்த அலைப்பேசியை மற்ற இருவர் பார்க்கும்படி.
''Live..''(லைவ்..)
விழிகள் அதிர்ச்சியில் அகல விரிய கௌதம் தலையில் அடித்துக் கொண்டு நின்றான். ஆனால், கர்ணனோ மூச்சுவாங்க டமன் காட்டிக் கொண்டு நிற்கும் காணொளியைப் ஏறெடுத்தான் அமைதியாக அவன் காலணியில் கழண்டியிருந்த ஷு லேஸை (shoe lace) கட்டிக் கொண்டே.
''போச்சு! போச்சு! எல்லாம் போச்சு!''
அலறினான் கௌதம்.
என்னதான் கௌதம் கத்தினாலும் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவனை ரத்தம் படிந்த விரல்களால் ஓரந்தள்ளினான் கர்ணன். நண்பனை ஒதுக்கி கர்ணன் பார்த்தது என்னவோ டமனின் கையிலிருந்த அலைப்பேசி நேரலையைத்தான்.
''இந்தடிலாம் பத்தாதுடா அவனுங்களுக்கு! இன்னும் செமத்தியா சாத்திருக்கணும்!''
புரட்டி எடுத்த கர்ணனுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை. முதுகை இருக்கையில் வசதியாக சாய்த்துக் கொண்டு வலது காலை நீட்டியும் இடது காலை மடக்கியும் அமர்ந்துக் கொண்டான்.
நடந்திருக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல கர்ணன் நடந்துக் கொள்ள கடுப்பாகிப் போன கௌதம் பிடிங்கினான் டமனின் கையிலிருந்த அலைப்பேசியை.
திணித்தான் கர்ணனின் கையில்.
''ஏன் இவ்வளவு தூரத்துலர்ந்து பார்க்கறே! இப்போ பாரு! நல்லா பாரு! நீ பண்ணிருக்கறே கூத்தை பார்த்து.. நீயே ரசிச்சு பெருமைப்பட்டுக்கோ கர்ணா!''
என்றப்படி அவனின் தலையை போனோடு கௌதம் அழுத்திட, உச்சுக்கொட்டி அவனின் கையை விலக்கினான் கர்ணா.
''உன்னலாம் ஏண்டா கோவிட் தூக்கலா!''
கறுவிய கௌதம் இருக்கரங்கள் கொண்டு இடையை பற்றியப்படி தவித்து போயிருந்தான். மேலிடத்திலிருந்து அழைப்பு வர போனை உள்ளங்கையில் இறுக்கிப் பிடித்தவன் ஜன்னலோரம் சென்று நின்றுக் கொண்டான்.
என்ன பேசுவது எப்படி தலைமைகளை சமாளிப்பது என்று மண்டையைப் போட்டு பீய்த்துக் கொண்டிருப்பவனின் தர்மசங்கடமான நிலையைப் பற்றி கவலையின்றிய இரு ஜீவன்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
டமனும் கர்ணாவும் நேரலையில் கர்ணாவிடம் அடிவாங்கி ரோஹித் கெஞ்சுவதைப் பார்த்து கமெண்ட் செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
''செத்துருங்கடா.. ரெண்டு பேரும்!''
''போனை எடுடா.. அப்பறம் அந்தாளு இங்க வந்து நிக்கும்! ஆனா, மச்சான் இப்பவே சொல்லிட்டேன்.. ஏடாகூடமா ஏதாவது கேட்டா மூஞ்சிலையே குத்திடுவேன்! அவனுக்கு அவ்வளவுதான் மரியாதை!''
வசையெல்லாம் அவர்களின் தலைமகளில் ஒருவனுக்கு. ஆர்வமாக குறும்படத்தை டமனோடு சேர்ந்த பார்த்துக் கொண்டிருந்த ஹீரோவைப் பார்த்த கௌதமிற்கு எரிச்சல் வந்தது.
''எவ்ளோ கஷ்ட்டப்பட்டு உன்ன எனக்கு கீழ கொண்டு வந்தேன் தெரியுமா கர்ணா! இப்படி பண்ணிட்டியேடா! எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டுடா இப்போ நான் போய் துவான் முன்னுக்கு நிப்பேன்! சொல்லு கர்ணா!''
''இதே மூஞ்சிதான்.. இதுக்காக பிளாஸ்டிக் சர்ஜரியா பண்ணிக்க முடியும்!''
''உன்னே!''
கடுங்கோபமாக முஷ்டிகள் மடக்கினாலும் அவனை அடிக்க முடியாத நிலையில் கௌதம் நேராய் சென்ற வாக்கில் குத்தினான் டமனின் புஜங்களில்.
''ஏண்டா உங்க சண்டையில என்ன ஆடாக்கறிங்க!!!''
வலிக்கொண்ட புஜத்தினை டமன் அழுத்திப் பிடித்துக் கொள்ள கௌதமும் கர்ணாவும் ஒன்றாக சேர்ந்து கையடித்து சிரித்துக் கொண்டனர்.
துரத்திடுவான் கர்ணா பாம்ஷெல்லை..