Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் ஆறு

போலீஸ் நிலையம்


''உன் மனுசுல என்ன தாண்டா நினைச்சுக்கிட்டு இருக்க கர்ணா! ஹியூமன் ரைட்ஸ் (human rights) விசாரணைக்கு போன இடத்துல என்ன பண்ணிட்டு வந்திருக்கே நீ!''

தலைமை காட்டு கத்து கத்திட, காதில் விழுந்தும் விழாதவன் போல அவனின் பொருட்களை பெட்டி ஒன்றில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் கர்ணா.

''என் இடத்துல நீங்க இருந்திருந்தா அவனை சுட்டுருப்பீங்க!''

என்னவோ மிக சாந்தமாய் சொன்னான் கர்ணா. டமன் அப்போதுதான் அறை கதவைத் தட்டி உள்ளே நுழைந்தான்.

''சும்மா சப்ப கட்டு கட்டாத கர்ணா! உன்னால எனக்கு தினந்தினம் நெஞ்சு வலி வருதுடா!''

இருப்புற இடுப்பை இறுக்கி பற்றி சொன்னவருக்கு தொப்பை இல்லாமல் இல்லை. நன்றாகவே இருந்தது.

''என்னால இல்ல.. ஆட்டிறைச்சியால.. மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்டா பரவால.. நாளுக்கு மூணு வேலையும் சாப்பிட்டா.. அதை இன்ஸ்ட்டால வேற போட்டு பெருமை பீத்திக்கறது..''

தலைமை அதிகாரிக்கு கர்ணன் விபூதி அடி கொடுக்க, பொறுக்க முடியாத டமன் வாய் விட்டு சிரிக்க சீறினார் தலைமை தணிகாசலம்.

''டமன்!!!''

''சோரி சார்.. என்னால முடியல.. சத்தியமா!''

பாவிப்பயல் சொல்லிப்புட்டு மீண்டும் சிரிக்க, இதன் காரணகர்த்தாவோ சிகரெட்டை ஊதி தள்ளிக் கொண்டிருந்தான், ஏசி அறையில்.

அவன் வாயிலிருந்த சிகரெட்டை பிடிங்கி ஏஷ்ட்ரெயில் (ashtray) வைத்து நசுக்கினார் தணிகாசலம். அந்த சில நொடிகளில் அவள் முகம் வந்துப் போனது கர்ணாவின் பார்வைகளில். ஏன் என்று அவனால் கண்டறிய முடியவில்லை.

ஆனால், அன்றைக்கு கர்ணாவின் சிகரெட்டை பிடிங்கி அவள் அதட்டி அடக்கிய பார்வைகள் மீண்டும் மீண்டும் அவன் கண் முன் வர விழிகளை உருட்டியன் பின்னந்தலையை சொந்தமாய் தட்டிக் கொண்டான்.

''என்னடா.. அதிசயமா இருக்கு.. சிகரெட்டை புடிங்கி தூங்கி போட்டுட்டேன்.. ஒன்னும் சொல்லாமே போறான்.. என்னாச்சு இவனுக்கு..''

தணிகாசலம் புரியாமல் குழப்பமாய் டமனை நோக்கிட, அவனோ தோள்களை உயர்த்தி தெரியாது என்றான் சைகையில்.

புடனியை கையால் அழுத்திக் கொண்டே அவனின் இருக்கையில் சென்றமர்ந்தான் கர்ணா.

''அப்பறம் மச்சான்.. எங்க வெகேஷன் போறதா பிளான்..''

''ஏன் நீ வரியா..''

''சோரி மச்சான்.. நான் பெண்களோட மட்டும்தான் போவேன்!''

டமன் நக்கலடிக்க கையில் சிக்கிய கோப்பு ஒன்றினை தூக்கி விசிறினான் கர்ணா அவனை.

டக்கென்று போனோடு காணாமல் போன தணிகாசலம், பத்து நிமிடங்கள் கழித்து வந்தார் மறுபடியும் முருங்கை மரம் ஏறி.

''என்னடா இது..''

சலித்துக் கொண்டவர் அவரின் அலைப்பேசியை கர்ணாவின் மேஜையில் பறக்க விட்டார். மார்க்கமான பார்வையோடு தலைமையை ஏறெடுத்தான் கர்ணா.

பார்வைகள் மாறிடாது இறுகிய முகத்தோடு போனின் தொடுதிரையைப் பார்த்திட அதில் அவனின் படம் தான் ஓடிக்கொண்டிருந்தது. டமனும் சேர்ந்து அதைப் பார்த்திட சொன்னான் கர்ணா உதடு பிதுக்கி.

''வீடியோ அடிவாங்கிருக்கு மச்சான்.. நல்லாவே இல்லடா.. கெத்து குறைஞ்ச மாதிரி இல்ல..''

''அதான்.. அதான்..''

''டமன்!!!''

தலைமையின் குரல் ஓங்கி நிற்க, கர்ணாவின் நாற்காலி விளிம்பில் சாய்ந்து கிடந்தவன் ரோபோவைப் போல் நேராகி நின்றான்.

''Out!!!''
(வெளிய போ!)

அவர் சொல்லிட டமன் குனிந்த தலையோடு வெளியேறினான் அறையிலிருந்து. அவன் வெளியேறிட கெளதம் கையில் கோப்போடு நுழையவும் சரியாக இருந்தது.

உள்ளிருக்கும் அறைக்குச் செல்ல முதல் இரண்டு கதவுகளைத் கடந்திடத்தான் வேண்டும். கௌதம் காலால் சாய்வு கதவை தடுத்திருக்க அங்கேயே ஆரம்பித்தது அவர்களின் பேச்சு வார்த்தை.

''எங்கடா போறே..''

''நான் எங்கடா போனேன்.. அந்தாளு தான் புடிச்சு துரத்தி விட்டுருச்சு..''

''கண்டிப்பா ஏதாவது பண்ணிருப்பே.. அவன் எங்க..''

சந்தேக தொனியோடே சொல்லி கேட்டான் கௌதம்.

''அவன் உள்ளதான் இருக்கான். பார்த்து மச்சான் திமிங்கலம் ரொம்ப பசியா இருக்கு.. முழுங்கிட போகுது..''

''என் சுறாவ தாண்டி.. தாண்டா இந்த பிராணா (piranha) கிட்ட வர முடியும்..''

''அங்க உன் சுறாவே திமிங்கலம் சூப் வெச்சிக்கிட்டு இருக்கு.. போய் காப்பாத்து போ..''

''Shit!!!''

(ஐயோ!!!)

என்றவன் காலை டக்கென்று இழுத்துக் கொண்டு ஓடிட, அலறினான் டமன்.

''மாடு! மாடு! ஷிட்டு இல்லடா.. ஹிட்டு!''

கதவு படரென்று முகத்தில் அடிக்க சிவந்து வீங்கிய மூக்கை தேய்த்தப்படி அங்கிருந்து நகர்ந்தான் டமன்.

அறைக்குள் நுழைய, கோப்பினை தலைமையிடத்தில் கொடுத்தான் கௌதம்.

அதை வாங்கி பிரித்தவர்,

''என்ன பண்ண போறே கௌதம்..''

''சார்..''

கௌதம் அவரின் முற்று பெறாதா கேள்வி புரியாமல் விழித்தான்.

''உன் ஆருயிர் நண்பன் திருடன் இல்ல திருடின்னு ஸ்டேட்மெண்ட் (statement) கொடுத்துருக்கான்! பத்தாததுக்கு.. டீவிக்காரன்.. பேங்க்காரன்னு எல்லாரையும் போட்டு சகட்டு மேனிக்கு காய்ச்சி எடுத்திருக்கான்.. எவனாவது ஒருத்தன் செத்துட்டான்னு வையேன்..''

''சார்!!!''

பதறியது என்னவோ கௌதம் தான். தணிகாசலம் திரும்பி பார்த்தார் கர்ணாவை. அவனோ போனில் அவனின் முத்துப்பாண்டியை குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அது வேறு யாருமல்ல டாக்கிங் டோம் (talking tom) தான்.

ஆத்திரம் பொங்க அதை அடக்கியவராய் பேசினார் தணிகாசலம்.

''நாமே அவனை பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா, அவன பாறேன்..''

கர்ணா ஆர்வமாக சிகரெட்டை ரெண்டு இழு இழுத்து, முத்துப்பாண்டிக்கு புதிய ஆடைகளை வாங்கி குமித்தான்.

''இப்போ என்னாச்சுன்னு இப்படி குதிக்கறீங்க.. எவனும் சாகலாம் மாட்டான்! அடிச்ச எனக்கு தெரியாதா!''

இடுப்பின் இருபுறமும் கரங்களை இறுக்கி கர்ணாவின் மேஜையின் முன் சென்று நின்று கொஞ்சம் கோபமாக சத்தம் போட்டான் கௌதம்.

''அடிச்ச உனக்கு எல்லாமே தெரியும் கர்ணா.. ஆனா, உடம்பு தாங்குமா இல்லையான்னு வாங்குன அவுங்களுக்குத்தான் தெரியும்!''

''அதெல்லாம் தாங்கும்! தாங்கும்! இல்ல முத்துப்பாண்டி..''

கர்ணா போனில் விளையாடிக் கொண்டே நக்கலடித்தான். ஆனால், அதை ரசித்து சிரிக்கும் நிலையில் கௌதமும் இல்லை தணிகாசலமும் தயாராய் இல்லை.

''கர்ணா.. இந்த மேட்டர் ரொம்ப சீரியஸா போய்க்கிட்டு இருக்கு. உன் சஸ்பென்ஷன் வெறும் மூணு மாசத்தோடு நிக்காது.. நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா உனக்கு இந்த போலீஸ் வேலையே இல்லாமல் போய்டும்!!!''

தலைமை தணிகாசலம் சொல்லி முடிக்கவும் நாற்காலி ஒன்று பறந்து ஜன்னலை நொறுக்கியிருந்தது. அதுவே சொல்லாமல் சொல்லியது ஆணவனின் ஆவேசமான கோபத்தின் உச்சத்தை.

அறையிலிருந்து விருட்டென்று வெளியேறினான் கர்ணா. நேராய் சென்றமர்ந்தான் ஃபையர் டோர் (fire door) கதவைத் திறந்து அதன் பின்னால் இருக்கின்ற மாடிப்படிக்கட்டுகளில்.

கடுப்போடு எடுத்து பற்ற வைத்தான் சிகரெட் ஒன்றை கர்ணா. ஒருக்கால் முன்னேயும் மறுக்கால் பின்னோக்கியும் இருக்க, இடது கர முட்டியை படிக்கட்டில் குன்றியிருந்தவன் அலைப்பேசி அலறியது.

போனை ஸ்பீக்கரில் போட்டு பேசிட ஆரம்பித்தான் கர்ணா. அழைத்தது அவனின் கண்மணி.

''கர்ணா..''

அவள் பவ்வியமாய் அழைத்தாள். அவனோ எரிந்து விழுந்தான்.

''கர்ணாக்கு என்னா..''

''வீட்டுக்கு வா..''

பாசமாய் அழைத்தாள் அவள். கடுப்பை காட்டினான் அவன்.

''எதுக்கு..''

''டேய்.. ஊருக்கே தெரியும்.. உனக்கு சஸ்பென்ஷன்னு..''

''சரி.. அதுக்கென்ன இப்போ..''

எரிச்சலோடு கேட்டான் கர்ணா.

''வம்பு பண்ணாமே ஒழுங்கா வீட்டுக்கு வா கர்ணா..''

''சரி.. நான் வறேன்.. ஆனா, யாரும் என்கிட்ட இந்த கல்யாணம் கில்லியாணம் பத்தி பேசக் கூடாது.. சரியா..''

இரண்டாவது சிகரெட்டை பற்ற வைத்திருந்தான் கர்ணா.

''யாரும் பேச மாட்டாங்கடா கர்ணா.. நீதான் பேசணும் ஒரு முக்கியமான ஆள் கிட்ட..''

பொடி வைத்து பேசினாள் கண்மணி.

''யார்கிட்ட..''

வசதியாய் அமர்ந்திருந்தவன் முதுகை முன்னோக்கி குனித்து அமர்ந்து புரியாமல் கேட்டான்.

''ஹ்ம்ம்.. உன் மருமகன்கிட்ட..''

சிரித்துக் கொண்டே அவள் சொல்ல, இவ்வளவு நேரம் இறுகியிருந்தவன் முகம் சிங்க பல் தெரிய அழகாய் மலர்ந்தது.

''ஹேய் கண்மணி.. ப்ரெக்னன்ட்டா (pregnant) இருக்கியா..''

''ஹ்ம்ம்.. ஆமா.. நாலு மாசம்..''

''ஏய்! ஏன் என்கிட்ட மூன் கூட்டியே சொல்லலே..''

பாசமான கடிதல் கொண்டான் முறை மாமனான அண்ணன்.

''அம்மாதான் முதல் மூணு மாசம் யார்கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க கர்ணா.. அப்பாக்கு கூட தெரியாது.. அதான் சொல்லல.. கோச்சிக்காத..''

''லூசு.. இதுக்கெல்லாம் யாராவது போய் கோச்சிப்பாங்களா..''

''நீங்கதான் ஸ்ட்ரெஸ் மன்னனாச்சே..''

சிகரெட்டை இழுத்து வாயை குமித்து ஆகாயம் நோக்கி புகையை ஊதி பறக்க விட்டான் கர்ணா.

''நீயுமா.. யார் சொன்னா.. கெளதமா..''

தலையில் அடித்துக் கொண்டான் சிரித்தவன்.

''அண்ணா இல்ல.. வைரல் விடியோஸ்.. (viral videos)''

சிரித்து விட்டான் கர்ணா சத்தமாய்.

''வறேன்.. கண்மணி.. நாளைக்கே வறேன்.. உடம்பு பார்த்துக்கோ..''

''சரி கர்ணா.. நாளைக்கு கிளம்பும் போது கோல் பண்ணு சரியா.. வெச்சிடறேன்..''

என்றவள் சொல்லிட போனை வைத்தான் கர்ணா. கையிலிருந்த சிகரெட்டை படிக்கட்டினில் வைத்து அழுத்தினான்.

'உனக்கு லீவு கொடுக்கணும் போலிருக்கே..'

என்றவன் சிரித்தப்படி கண்கள் மூடி அப்படியே மல்லாக்கா முதுகைச் சாய்த்தான் படிக்கட்டில்.

*

இடுகாடு

இளஞ்சிவப்பு மற்றும் ப்ளாஷ் (blush) எனப்படும் பிங்க் வர்ணமும் ஒன்றன் பின் ஒன்றாக இருக்க, விக்டோரியா சீக்ரட் (Victoria Secret) என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது அப்பேப்பர் பேக்கில்.

அதன் இருப்பக்க கருப்பு வர்ண துணியிலான பிடியை இறுக்கிப் பிடித்திருந்தவன் வைத்தான் அதை அவளின் கல்லறையின் மீது.

''எது எனக்கு பிடிக்காதோ அதையே என்ன செய்ய வை!''

விரக்தியில் சொன்னவன் அமர்ந்தான் எதிரே இருந்த கல் இடுக்கில். கையிலிருந்த ரோஜா பூங்கொத்தை பக்கம் வைத்தவன் வழக்கம் போல் எடுத்து பற்ற வைத்தான் சிகரெட்டை.

ரெண்டு இழு இழுத்தவன் தலையைத் திருப்பி பார்த்தான் கல்லறையை. அவள் முகம். சிரித்த அதே முகம். அவளை கர்ணா கடைசியாக பார்த்த போது இருந்த அதே சிரிப்பு.

எழுதியிருந்தது அவளின் படத்தின் வலதும் இடதும், தோற்றம் மறைவு என்று. இது தமிழர் சுடுகாடு அல்ல. சீனர்களின் இடுகாடு. கர்ணாதான் அவளை இங்கு புதைத்திட சொன்னான்.

எவ்வித நில சண்டையோ பிண சண்டையோ நடந்திடாமல் எல்லாவற்றையும் நிர்வாணா (NIRVANA) ஈமக்கிரியை சங்கத்திடம் ஒப்படைத்திருந்தான். எழுதியிருந்தது கல்லறையில் அவளின் பெயர். அழகான தமிழ் பெயர். ஆனால், அவளுக்கு கொஞ்சமும் செட்டாகாத பெயர். தீப்சந்தினி.

கர்ணன் மூன்றாவது சிகரெட்டை இழுத்தப்படி அவளின் சிரித்த முகத்தையே வைத்த கண் வாங்கிடாமல் பார்த்தான்.

அவனின் எண்ண அலைகள் அழைத்துச் சென்றது கர்ணனை பின்னோக்கி. அவனும் பாரமான இதயத்தோடு பயணிக்க ஆரம்பித்தான் பிடிக்காவிட்டாலும்.

*

கடந்த காலம்

கர்ணன் ராதேயன். இதுதான் கர்ணாவின் இயற்பெயர். கூட்டு குடும்பத்தின் இரண்டாவது ஆண் வாரிசு. அப்பா அகத்தியன். அம்மா அம்பிகா. பெற்றோரின் ஓரே ஒரு ஆண்பிள்ளை கர்ணன் என்ற கர்ணா.

அகத்தியனின் தம்பி செழியன். அவரின் மனைவி சந்தியா. அவர்களுக்கும் ஆண்மகன் ஒருவன் தான். பெயர் திகழ் இலயன். இவன் தான் வீட்டின் முதல் வாரிசு. இவனுக்கு அடுத்தே கர்ணா.

அகத்தியன் மற்றும் செழியன் இருவருக்கும் கடைக்குட்டி தங்கை கஸ்தூரி. மகள் கண்மணி. மகன் துராதரன் மற்றும் கணவர் கபிலன்.

இதுதான் அவர்களின் குடும்பம். கர்ணாவின் அப்பாவும் கபிலன் மாமாவும் சேர்ந்தே பல வியாபார சாம்ராஜ்யங்களை உருவாக்கி இருந்தனர். பெண்கள் மூவரும் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டனர்.

பிள்ளைகள் நால்வரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாய் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். திகழ் கலகலப்பான ஆள். அனைவரிடத்திலும் ஒட்டிக் கொள்வான் சட்டென.

கண்மணி பெண் பிள்ளைக்கான அத்தனையும் ஒரு சேர கொண்டவள். அழகும் படிப்பும். துராதரன் ரொம்ப அமைதி. இருக்கும் இடம் தெரியாது.

கர்ணா சிறுவயதிலிருந்தே கொஞ்சம் முரடன் தான். அவன் அடங்குவது அத்தை கஸ்தூரிக்கு மட்டுமே. அது என்னவே அத்தை அவர் மட்டுமே அவனை கட்டுக்குள் வைத்திடும் மந்திரம் அறிந்தவர்.

கர்ணாவிற்கு வயது எட்டு இருக்கும். ஒருநாள் பெற்றோரோடு திகழ் இருக்க ஷாப்பிங் மால் சென்றனர் அனைவரும் வரப்போகின்ற தீபாவளி திருநாளுக்கான பர்சஸ்சிங் (purchasing) செய்திட.

கண்மணியையும் தரனையும் பிரத்தியேக வகுப்பிலிருந்து கூட்டிக் கொண்டு நேராய் ஷாப்பிங் மாலுக்கு வந்து விடுவதாய் செல்லியிருந்தனர் செழியன் சந்தியா தம்பதிகள்.

வியாபார நிமித்தமாய் வெளியூர் சென்றிருந்த கணவரை ஏர்போட்டிலிருந்து பிக் ஆப் (pick up) செய்துக் கொண்டு துணிமணிகள் வாங்குமிடம் வந்திடுவதாய் சொல்லியிருந்தார் கஸ்தூரி.

இப்படி ஒட்டு மொத்தமாய் அனைவரும் சேர்ந்து வருகின்ற தீபாவளியை ஒரு வழி செய்திடலாம் என்று நினைக்க காலத்தின் கோலம் எமன் அணைத்து விட்டான் தீபவிளக்குகள் ரெண்டை மனசாட்சியின்றி.

சந்தோஷமாய் வாங்க வேண்டிய அத்தனையையும் வாங்கிய பின்பு, கர்ணாவோடு முதலில் ஷாப்பிங் மாலிலிருந்து வெளியேறியது அம்பிகாதான்.

காரில் பைகளை வைத்தப் பின்னர் அகத்தியனுக்கு தெரியாமல் ரகசியமாக கர்ணா கேட்ட விளையாட்டு பிஸ்ட்டலை வாங்கி தரலாம் என்று யோசித்திருந்தார் அவர்.

மகன் கர்ணாவின் கேசத்தை ஆசையாய் அம்மா அவர் கோத, அம்பிகாவின் கழுத்திலிருந்த தங்க தாலி கொடியை, எங்கிருந்தோ வந்த கரமென்று அழுத்தமாய் பற்றி இழுத்துப் போனது.

கர்ணாவின் விழிகள் அகல விரிய,

''ஆர்ர்ர்..''

என்றலறிய அம்பிகாவின் கையிலிருந்த பையெல்லாம் பறந்து போனது நாலாபக்கமும்.

அகத்தியன் தொடங்கி அனைவரும் ஷாப்பிங் மால் வாசலில் நடந்த காட்சியைக் கண்டலறி மொத்தமாய் அம்பிகா நோக்கி ஓடிட, பெண்மணி அவர் உடல் தரையில் பொத்தென விழுந்தது.

அம்மாவின் ரத்த களரியான கோலத்தை பார்த்த கர்ணன் அலறினான் கதறி.

''மா!!! அம்மா!!!''

''தேய..ன்..''

தாயை உலுக்கிய மகனின் முகம் வருடிய அம்பிகாவின் விரல்கள் மெல்லமாய் மகனின் நெஞ்சை தொட்டு தரையில் விழுந்தது.

அம்மாவின் செயின் பறிப்பை கண்கூடாக பார்த்த கர்ணா, அந்த எட்டு வயதிலேயே கோபம் கொண்டு துரத்தி ஓடினான் அம்மோட்டார் கயவர்களை.

''டேய்!!! நில்லுங்கடா!!! டேய்!!''

ரத்த வெள்ளத்தில் கழுத்தறுப்பட்ட அண்ணி அம்பிகாவை செழியன் உட்பட கஸ்தூரி காப்பாற்றிடும் எண்ணத்தில் காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.

சந்தியா பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தாள் மற்றொரு காரில்.

நடந்த அகோரத்தை வேடிக்கை பார்த்திட மட்டுமே கூட்டம் கூடியது அங்கு.

திருடர்களை விரட்டி ஓடிய மகனை வாகனங்கள், லாரிகள், பைக்குகள் என்று புற்றீசலாய் பறந்து வரும் பிரதான சாலையினிலிருந்து காப்பாற்றிட ஓடிய அகத்தியனை துரத்தி ஓடினார் கபிலன்.

மோட்டார் கயவர்களை கைப்பற்றிட இயலாமல் அவர்கள் உதைக்க, கர்ணா சாலையில் விழப் போக, அவன் பின்னோ விரைந்த அகத்தியனோ மகன் கரம் பற்றியிழுத்து பின்னோக்கி தள்ளி தம் உயிரை தாரை வார்த்தார் முன்னே அசுர வேகத்தில் வந்த லாரியிடம்.

நடந்ததை சற்றும் எதிர்பார்த்திராத கர்ணா, அப்பாவின் உடல் பறந்த திசை நோக்கி ஓடிட எத்தனிக்க; மச்சான் இழுத்து தள்ளிய மருமகனை பின்னோக்கி இறுக்கிப் பிடித்து சாலையோரம் ஒதுங்கினார் கபிலன்.

அகத்தியனின் உடல் சாலையில் அகோரமாய் கிடக்க, மாமா கபிலனின் பிடியில் இருந்த கர்ணாவோ தொண்டை தண்ணி வற்றி போகும் அளவுக்கு கதறி திமிறினான்.

''விடுங்க மாமா!!! அப்பா மாமா!!! அப்பா!!!

அழுதவன் அச்சின்ன வயதில் ஒரே நேரத்தில் இரு பெரிய கொடிய சம்பவங்களின் சாட்சியாய் இருக்க மயங்கினான் மாமா கபிலனின் பிடியிலேயே.

கர்ணாவின் முகம் வருடிய பொழுதே அம்பிகாவின் உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவ இறப்பு சான்றிதழில் பொறிக்கப்பட்டிருந்த நேரம் உணர்த்தியது. அகத்தியன் உடலும் அவர் மனைவியோடு சேர்த்து எரியூட்டப்பட்டது.

துரத்திடுவான் கர்ணா பாம்ஷெல்லை..
 
Back
Top