Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
28
DISCLAIMER

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும் படுபயங்கரமான சித்தரிப்புகளும் அடங்கிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட வாசர்களுக்கு மட்டுமே உரித்தான படைப்பாகும். கதைப்போக்கு நாவல் வாசிப்போரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

ஆகவே, இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல் சுகமற்றவர்கள் இக்கதையைத் தவிர்ப்பது நல்லது.

ஆதலால், கதையோடு ஒன்றி அதன் சாராம்சத்தை புரிந்துக்கொள்ளும் பக்குவம் கொண்டோர் மட்டும் இக்கதையை படிப்பது நல்லது.

நன்றி. வணக்கம்.

______________________________________________________________


தர்ஷன் சாஹிபாவின் தோழிகளை பார்த்து "உங்கள சாஹி கூப்பிடுரா.. வரட்டாம்..." என அவள் அழைத்ததாக கூறவும் அவர்கள் அந்த அடர்ந்து வளர்ந்திருந்த தெருவோர வாகை மரத்தின் பின்னால் சென்றனர்... சாஹிபாவின் கோலம் கண்டு "அல்லாஹ்வே!!!" என வாயில் கை வைத்து "என்னடி இது இப்பிடி நிக்ற" என சைத்தூன் பதறவும் "சத்தம் போடாதீங்க.. இந்த கோலம் ஒன்டும் நான் மனசார ஏத்துக்கல... வேற வழி இல்ல... உசிருக்கும், மானத்துக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில நிக்கிறோம்... இறைவனுக்கு தெரியும் நம்முட நிலமை" என்றவள் தோழிகளையும் ஹிஜாபை களைந்து தலை முடியை பின்னி இந்து பெண்கள் போல மாற்றினாள்...

மூவரும் மரத்தின் பின்னால் இருந்து வெளியே வரவும் தர்ஷனும் ,அவன் நண்பர்களும் "மச்சான் ஒன்டு கேம்பஸிகுள்ள போகனும்... இல்லன்டா ஊருக்கு போகனும்.. எப்டியாவது பாதுகாப்பா போய் சேரனும் டா " என பேசிக் கொண்டே திரும்பவும் சரியாக இருந்தது... சாஹியையும் அவள் தோழிகளையும் கண்டு ஒரு நிமிடம் மூவரும் மூச்சு பேச்சின்றி சிலையென நின்றனர் ... மூடி முக்காடிட்டு வரும் பெண்கள் இவ்வளவு அழகா என்ற அதிர்ச்சி தான்...

தர்ஷன் தொண்டையைக் கனைத்து சரி செய்த பிறகே தோழர்கள் இருவரும் பூலோகம் திரும்பினர்... "வாங்க எப்டியாவது யுனிவெர்சிட்டிக்குள்ள போய்டலாம்... ஊருக்கு திரும்பி போறன்டா நேரம் போகும்.. அத விட யுனிவெர்சிட்டி பக்கத்துல இருக்கு "என தர்ஷன் கூறவும் அனைவரும் அதையே ஆமோதித்தனர்... அறுவருமாக சிறிய குறுக்கு வீதியின் வழியாக யாருக்கும் சந்தேகம் வராதவாறு நடக்கையில் தூரத்தில் எங்கோ இரண்டு துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டது ... அதனைத் தொடர்ந்து அங்கும் இங்குமாக நின்ற மக்கள் சிதறு தேங்காய் போல ஓடி கலைந்தனர்... சாஹிபா, கதீஜா மற்றும் சைத்தூன் மூவரும் பயத்தில் விதிர்விதிர்த்து நிற்க ஆண்கள் மூவரும் எவ்வாறு தப்பித்து செல்வது என்றே சிந்தித்தனர்...

"இறைவா எங்கள எப்படியாவது உயிரோட ஊருக்கு கொண்டு சேத்துடு" என கதீஜா இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தித்தாள்... இதைப் பார்த்த அசோக், யசோ மற்றும் தர்ஷனுக்கு கஷ்டமாக இருந்தது... "வாங்க மெயினுக்கு போவோம்.." என்றழைக்க துப்பாக்கி சத்தம் மீண்டும் கேட்டது... அதுவும் அவர்களுக்கு மிக அருகிலேயே அதோடு இலவச இணைப்பாக ஒரு ஆணின் அலறல் சத்தமும் கூடவே கேட்க பயத்திலும், ஆற்றாமையாலும் பெண்கள் மூவரும் முகத்தை மூடி அழுதனர்... "தர்ஷன் நீங்க மூனு பேரும் போங்க.. எது வந்தாலும் நாங்க பாத்துக்குறோம்... எங்க கூட நின்டு உங்க உயிர விட்டுடாதீங்க... நாங்க முஸ்லீம்னு தெரிஞ்சா எங்களுக்கு உதவின உங்களையும் விட்டு வைக்க மாட்டானுங்க..." என கண்களை துடைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவளாக சாஹிபா கூறினாள்....

"பைத்தியம் மாதிரி பேசாத சாஹிபா... என்ன வந்தாலும் பாத்துக்கலாம்... பேசாம வா.." என்ற தர்ஷன் சாஹிபாவின் கையைப் பிடித்துக் கொண்டு மற்றவர்களை பார்த்து "வாங்க நாம எப்டியாவது மெயின் ரோட்டுக்கு போவோம்" என்றான்... ஏன் என்றால் அவர்கள் பிரதான வீதியில் இருந்து சற்று உள்நோக்கி வந்திருந்தனர்.. "மச்சான் அங்க இருந்து தானே டா இங்க வந்தோம் திரும்பி ஏன் அங்கயே போகனும்...." என யசோ கேட்க " எப்டியும் இந்த வெடில் சத்தம் கேட்டு ஆர்மி இல்லன்டா போலீஸ் வந்து இருக்கும் ... அவங்க கிட்ட சொல்லி தப்பிக்கலாம் " என்றான் தர்ஷன்....

மூன்று எட்டு கூட வைத்திருக்க மாட்டார்கள்... " தடக் தடக்" என காலணிகள் ஓசை கேட்டது... யாரோ அவர்களை நோக்கி வரும் சத்தம் தான் அது.. பதைபதைக்கும் இதயக்கூட்டினை இறுக்கிப் பிடித்தவளாக சாஹிபாவும் ஏனையோரும் நிற்க அவர்களின் முன்னாள் வந்து நின்றனர் சிலர்... அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் சாஹிபாவிற்கு, பயம் கலந்த நிம்மதி தர்ஷனிற்கு..
ஆம் அன்றைய காலகட்டத்தில் அரச படையினர் இந்துக்களை சந்தேகக் கண் கொண்டு நோக்குவது சாதாரண ஒன்றாக இருந்தது... எல்லோரையும் சந்தேகப்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந்தனர் காவல் துறையினர்... இவர்களைக் கண்டதும் துப்பாக்கியை நீட்ட தர்ஷன் தான் முதலில் கைகளை மேலே உயர்த்தி முட்டி போட்டான்... அவனது செய்கையைக் கண்டு மற்றைய ஐவரும் அவ்வாறே செய்ய அருகில் நெருங்கிய ஒரு இராணுவ அதிகாரி அவர்கள் அனைவரையும் பரிசோதித்தார்...

பரிசோதனை முடிந்ததும் பின்னால் திரும்பி ஏனையோரை பார்த்து"ஆல் கிளியர்"என்றார் அந்த அதிகாரி... தர்ஷன் , சாஹிபா மற்றும் நண்பர்கள் அனைவரும் அவர்களும் நடந்த அனைத்தையும் கூறினர்.... நல்ல வேளையாக சாஹிபாவின் ஊர் போலீஸ் வண்டி ஒன்று அங்கு வந்து நின்றது...

அந்த இராணுவ அதிகாரி அவர்கள் அறுவரையும் ஏறாவூர் போலிசாரிடம் பேசி ஜீப் வண்டியில் ஏற்றி விட்டார்.. அவர்களும் நன்றி சொல்லி விடை பெற்று ஊருக்கு பயணமானார்கள்... இடையில் செல்லும் வழியில் ஒரு காவல் அதிகாரி இவர்களிடம் திரும்பி" தோட்டா சத்தம் கேட்டுச்சா?".. என கேள்வி எழுப்ப அவர்கள் அனைவரும் ஒரு சேர "ஆமா" என தலையசைத்தனர்‌... பெரிய போலீஸ் அதிகாரி போல் இருந்த ஒருவர் அவர்களைப் பார்த்து "கரக் முதலாளி கனிபா அல்லுவா (மாட்டுக்கார கனிபா முதலாளியை கடத்திட்டாங்க) "என்றார் ... அவர்கள் சிங்களம் புரியாமல் முழிப்பதைப் பார்த்தவர் "சிங்களம் தன்னத்த?(சிங்களம் தெரியாதா)" என்றவர் அருகில் வண்டி ஓட்டிய போலீசை பார்த்து தமிழில் கூறுமாறு பணித்தார்...

"உங்க ஊர்ல இருக் இருக்கிற மாட்டுக்கார கனீபா முதலாளிய கடத்திட்டாங்க.. அவருட மாட்டுப் பட்டில வேலை செய்றவங்களுக்கு சாப்பாடு கொண்டு போன டைம்ல கண்ண கட்டி இழுத்துட்டு போய் 10 லட்சம் காசு கப்பமா கேட்டு இருக்கானுங்க... அவருட குடும்பம் காச கொண்டுட்டு வாரதுக்கு இடையில கண்ணை கட்டி, வாய்குள்ள துணி வெச்சு, பின்னால ரெண்டு கையையும் கட்டி சுட்டுட்டானுங்க.... அதுதான் அந்த சத்தம்... ஆர்மியும் அந்த டைம்ல வந்துட்டு... இயக்கத்துக்கும் ஆர்மிக்கும் இடைல கொஞ்சம் பயரிங் நடந்துச்சு ... " என்று அந்த போலீஸ் அதிகாரி கூறவும் அனைவரும் தலையை தொங்க போட்டு எப்போது இதுக்கு விடிவு காலம் என்பது போல் இருந்தனர்...

கதீஜாவின் வீட்டுப் பக்கம்தான் அந்த மாட்டுக்கார கனிபாவின் வீடு இதை கேட்டதும் கதீஜா குலுங்கி அழத் தொடங்கினாள்.... அந்தக் கனிபாவின் மனைவியின் குடும்பத்தில் சில மாதங்களின் முன்னே தான் ஒரு அசம்பாவிதம் நடந்தேறி இருந்தது... அவரின் மனைவியின் அண்ணன் கூலித்தொழில் செய்பவர்... அவர் பொலன்னறுவை என்ற ஊருக்கு கூலித்தொழில் நிமித்தமாக சென்று மாலையில் தான் வீடு திரும்புவார்... அவ்வாறு தான் ஒரு நாள் இரவு 11 மணி அளவில் அவர் வேலைக்கு போய் விட்டு வந்து கடும் களைப்பினால் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது வெடிச்சத்தங்கள் அபரிமிதமாக கேட்டது ... அவர் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்க்கின்றார் வீட்டில் இருந்தவர்களை காணவில்லை... எங்கே என்று அனைவரையும் தேடுகின்றார்.... அப்பொழுது வீட்டில் இருந்தவர்கள் அருகில் இருந்து அவர்களது பழைய வீட்டுக்குள் ஓடிப்போய் ஒளிந்திருந்தார்கள்... அந்த நேரத்தில் அந்த வீட்டுக்குள் இருந்த அத்தனை பேரையும் கழுத்துக்களை அறுத்தும், வயிற்றை வெட்டியும் , சுட்டும் இயக்கம் கொண்டிருந்தனர் ...

அந்த கூலித்தொழிலாளியின் ஒரே ஒரு கைப்பிள்ளை தான் உயிர் தப்பியது... அதுவும் அந்த குழந்தை அவர் வளர்த்த குழந்தையாகும்... அவரின் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்திருந்தார்.... இப்ப படுகொலை நடத்தப்பட்ட அன்றைய தினம் மாலைதான் கதீஜாவின் உறவுக்கார பெண் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாள்... அவரும் அருகிலிருந்து உயிரிழந்த அந்த உறவினப் பெண் வீட்டில் தங்கி இருந்ததால் அகோர பலிக்கு ஆளாகி இறந்தார்... வெளிநாட்டிலிருந்து தான் கொண்டு வந்த பெட்டிகளையும் ,பொருட்களையும் பிரித்து உறவினர்களுக்கு பங்கு வைப்பதற்குள் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட்டிருந்தார்.... இத்தனையும் அந்த மாட்டுக்கார கனிபா முதலாளி மனைவியின் அண்ணனுக்கும், அவர் திருமணம் செய்து சென்றிருந்த குடும்பத்திற்கும் இயக்கத்தினால் நடந்த அக்கிரமமாகும்... இவற்றை நினைத்த கதீஜா அங்கு உள்ளவர்களிடமும் அனைத்தையும் கூறினாள்... இந்த சம்பவம் தர்ஷன் ,யசோதரன் ,அசோக் மூவருக்கும் மேலோட்டமாகத்தான் தெரியும்... இன்று முழுமையாக தெரிந்ததும்" தங்களது இனத்தவர் ஏன் இவ்வாறு கொடூரமாக நடக்கின்றனர்" என்ற கோபமே அவர்களுக்கு மேலோங்கியது....

தொடரும்.....
 
Back
Top