Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி - அத்தியாயம் 1

Joined
May 18, 2024
Messages
29
வாசகர்களுக்கு வணக்கம்.. நான் இந்த தளத்தில் முதல் முறையாக எழுதுகிறேன்..இங்க எழுதுறத நினச்சு ரொம்ப சந்தோஷம்... எல்லாருக்கும் தமிழ்னா ரொம்ப பிடிக்கும்...
அந்த தமிழ் ரொம்ப தொன்மையானது ...அது பற்றிய அறிவும் தெளிவும் கண்டிப்பா எல்லோருக்கும் வேணும்.... சரி கதைக்கு போகலாம்...

"எல்லாரும் என்ன பண்றீங்க! ஒரு வேலைய சொன்னா சரியா செய்ய மாட்டீங்களா?" என கத்திக் கொண்டு இருப்பது வேறு யாரும் இல்லை எம் கதாநாயகி இளவெயினி தான். "என்னடா பேரே வித்தியாசமா இருக்குனு" யோசிப்பீங்க; சங்ககாலத்து பெண் புலவர் பெயர் தான் இந்த "இளவெயினி".... தொல்பொருளியல் அதிகாரியா சென்னை ல கடமையாற்றுகிறாள்..தமிழ் பற்றை பெயர்லினிலேயே கொண்டவள்....

"எல்லா பொருட்களையும் கவனமா வண்டில ஏத்துங்க ...அசோக்! அங்க போய் தங்க, தேவைப்பட்ட பொருட்களை உடனே வாங்க, வேலைக்கு தேவையான லேபர்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா! என முன் நெற்றியைக் கீறிக் கொண்டு தனக்கு கீழ் உள்ள அதிகாரியிடம் வினவிக் கொண்டே கோப்புகளை புரட்ட தொடங்கினாள் இளவெயினி....

"மேடம் எல்லாம் ரெடி ஆச்சு வாங்க போகலாம்" என வந்து நின்றான் வண்டி ட்ரைவர் சரவணன்.. இவனைபற்றி கூறப் போனால் வெயினிக்கு மிகவும் நம்பகமான விசுவாசி....அவனைக் கண்களால் இடுங்க நோக்கி விட்டு கோப்புகளை எடுத்துக் கொண்டு காரில் ஏறினாள் இளவெயினி....

அவளுடன் அசோக்கும் இணைந்தே ஏறினான்....வண்டி புறப்பட்டது....
சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் முனை நோக்கியே இவர்கள் செல்கிறார்கள் இவர்கள்.....

இளவெயினி அவளது தலைமையில் தமிழர் மரபு,பண்பாடு, கலாச்சாரம், கலை, இலக்கியம் என அழிந்து போன நம் அரிய தமிழின் அரிச்சுவடி தேடி செல்லும் இளம் பெண்...

" சார் நீங்க சொன்ன மாதிரி எல்லாம் பண்"...... அவன் "பண்ணிட்டேன்" என சொல்லி முடிப்பதற்குள் அவனை சம்பவம் பண்ணி விட்டான் நம் கதாநாயகன் "ருத்ரேஷ்வரன்".... பாவம் பழிக்கு அஞ்சாதவன்... உறவென்று கூற யாரும் இல்லை.... பணத்திற்காக எந்த எல்லைக்கும் போகத் துணிந்தவன் .... இவன் யாரையோ சுட்டான்ல ஆமா !இவன் கூட பத்து வருஷமா நம்பிக்கையா வேலை பாத்த ஒருவரை தான் சுட்டான்... தன்னைக் காட்டிக் கொடுக்க நினைத்தவனை ஆசனவாய் வழியாக அட்டைகளை விட்டு கொல்ல உத்தரவு பிறப்பித்திருந்தான்..... இவன் சொன்னதை செய்யாமல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது தான்; இவனுக்கு கோபம் வந்து எதிரில் நின்றவனை கொல்ல காரணமாகும்.....

" Bloody **** "என சொல்லிக் கொண்டே காலால் அவனின் இறந்த சடலத்திற்கு எட்டி ஒரு உதை விட்டு, அங்கிருந்து தன் அடுத்த வேலைகளை பார்க்க சென்றான் ருத்ரன்...

காரில் இளவெயினி கோப்புகளை கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்....அவளது எண்ணங்கள் எல்லாம் இரண்டு நாட்கள் முன்னாடி நகர்ந்தது..."வெயினி நீங்க இந்த ப்ராஜெக்ட் ல எதுக்கு இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க! எவ்வளவு பேர் இந்த ப்ராஜெக்ட் பண்ணி தோல்வி அடைஞ்சாங்கனு தெரியுமா... இத விட்டு வேற எதாவது பண்ணுங்க... வடநாட்டில ஒரு ப்ரொஜெக்ட் போகுது சீக்கியர்களோட குருத்வாரா ஒன்னு பத்தி... நீங்க ஏன் அங்க போய் உங்க திறமையை நிரூபிக்க கூடாது??? தமிழ் தமிழ் னு ஏன் அலப்பறை பண்றீங்க; இங்கு ஆங்கில வழிக் கல்வி தான் அதிகம்... இப்போ இருக்ற தலைமுறை கிட்ட சிவாஜி கால சினிமாவ போட்டுக் காட்டினாலே தமிழ் புரியலனு சொலாறாங்க.... இதுல வரலாற்றுக்கு முந்திய கால தமிழ் எல்லாம் எதுக்கு? என சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டே ஆணவத்தில் வினவினார் மேல் அதிகாரி முகேஷ்....

வெயினிக்கு தாள முடியாத கோவம், துக்கம், ஆற்றாமை எல்லாம் ஒன்று சேர தொண்டை அடைத்தது.... இருப்பினும் இந்த அகழ்வாராய்ச்சி தமிழுக்கும், தமிழருக்கும் முக்கியமென உணர்ந்த அவள் "சார் எனக்கு என்னமோ அங்க போய் இத வெற்றிகரமா முடிச்சா உங்களுக்கு பெருமைனு தோணுது... உங்க மூலமா எனக்கு அனுமதி கிடைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும்" என சுருக்காமாக முடித்தாள் அவள்.....

" மேடம் டீ" என அசோக் கூற நினைவுகளில் இருந்து மீண்டவள்" "இன்னும் டைம் ஆகுமா! அசோக் அங்க போக?" என கேட்டாள்..." இல்லை மேடம் இன்னும் கொஞ்சம் நேரம் தான் போய்டலாம்... உங்களுக்கு வேற எதுவும் சாப்ட வேணுமா?" என அசோக் கேட்க எதுவும் வேணாம் என தலையசைத்தாள்.... அவளின் எண்ணமெல்லாம் ஒன்று தான் நிறைய அவமானம், கேலிப் பேச்சு,கிண்டல் இந்த ப்ராஜெக்ட் உப்பு சப்பில்லாத ஒன்னு என்ற ஏளனம் இதெல்லாம் தாண்டி தான் அனைத்தையும் திறம் பட செய்ய வேண்டும் அவ்வளவே....

அங்கு ருத்ரேஷ்வரனோ புதிதாக ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டு முடித்தான்...." மிஸ்டர் ருத்ரன் எங்களுக்கு எல்லாமே தேவை தான்.... ஆனால் அத விட ரொம்ப முக்கியம் "மருத்துவ குறிப்புகள் தான் "ரொம்ப பவர் ஃபுல் மெடிசின் பத்தி அதுல ஆழமா சொல்லி இருக்காங்க.." என்று எதிரில் இருந்தவன் பேசிக் கொண்டே போக ருத்ரனோ மேசையில் ஓங்கி ஒரு குத்து விட்டு ஒற்றை விரலை நீட்டி "இதுக்கு மேல பேசினா நீ! அவ்வளவு தான் "எனும் பாணியில் மிரட்டி விட்டு தனது கஞ்சா சுருட்டை பற்ற வைத்துக் கொண்டு அங்கிருந்த ஒப்பந்த கோப்புகளை புரட்டினான்....

அழகிய இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்று அதன் பின்னால் அவள் பெயர் இளவெயினி ,வயது 27,தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரி.. என விவரம் சொல்லப்பட்டு இருந்தது....
" அட இந்த பூவை கசக்க நான் போகனுமே... ம்ஹூம் அவ கைல கிடச்ச பொருளை சேதாரம் இல்லாம தூக்கனும்னா.... நான் போய் தானே ஆகனும்" என மனதில் எண்ணிக்கொண்டான் அவன்...

ருத்ரன் கட்டுக்களையாத கட்டுடலுடன் காணப்படும் ஆண்மகன்... பிரவுன் நிறத்தில் இருக்கும் அவன் தேகத்திற்கும்; அடர்ந்து சுருண்ட சிகைக்கும்; ஆளுமைக்கும் எத்தனையோ பெண்கள் கட்டிலில் அடிமையாகி உள்ளார்கள்....
தனது தொழில் எனும் ராஜ்ஜியத்தில் பகைவரை சூரையாடுபவன்.. கட்டிலில் மன்மத லீலைகள் செய்வதிலும் வல்லவன்.. எத்தனையோ பெண்கள் இதற்காகவே காதல் வயப்பட்டு உள்ளனர்.. தூசு போல் தட்டி விட்டு செல்வான் காதலா !என கை தட்டி சிரிப்பான்.. அவனைப் பொறுத்தவரை எல்லாம் காசுக்காக மட்டும் தான் என்ற எண்ணம்...

இளவெயினி அவளது குழுவினருடன் கன்னியாகுமரி வந்து அடைந்தாள்...
" மேடம் மேடம் வந்துட்டோம் "என நல்ல தூக்கத்தில் இருந்த அவளை எழுப்பிக் கொண்டிருந்தான் சரவணன்...இந்த வேலை காரணமாக இருவாரங்களாக சரியான தூக்கம் உணவின்றி அலைந்தவளுக்கு இன்றைய குமரி நோக்கிய கார்பயணத்தில் தூக்கம் விழிகளை இலகுவாக தழுவிக் கொண்டது...

சரவணின் சத்தம் கேட்டு எழுந்து கொண்டாள் வெயினி.... "சொல்லுங்க சரவணன்" என கண்களை கசக்கிக் கொண்டு கூற; சரவணனோ "மேடம் கன்னியாகுமரி வந்துட்டோம் "என்றாம் "ஓ குட் "என கூறிக் கொண்டே காரை விட்டு கீழிறங்கி நடந்தாள்.....நடந்து கொண்டே "என்ன எல்லாம் லாரில வந்தாச்சா !தங்க இடம் ரெடியா ?என தன் உதவியாளன் அசோகை பார்த்துக் கேட்டாள்.. அவனும் "ஆமா மேடம் எல்லாம் வந்தாச்சு தங்க கூடாரம் போடுறாங்க பொருட்கள் எல்லாம் இறக்கிட்டு இருக்காங்க அரைமணி நேரத்தில ரெடியாகிடும்" என பதில் சொன்னான்....

அவன் கூறியதைக் காதில் வாங்கிக் கொண்டே அவ்விடத்தை நோட்டம் இட்டாள் வெயினி... அவளுக்கு அருகில் வந்த சரவணன் மேடம் "அப்டி என்ன பாக்குறீங்க என கேட்டான்".... "சரவணன் இந்த
கன்னியாகுமரி எனும் ஊர் இருக்கே இந்தியாவோட தென்கோடினு அழைக்கப்படுகின்ற இடம் ...இதன் நிலப்பரப்பு கடலினுள் சென்று நீண்டு கூர் போல காணப்படுவதால் முனைனு சொல்றோம்" என்றாள்.... "ஓஓ இது தான் பேர்க் காரணமா?" என்றான் அவன்.. "ம்ம் ஆமா சரவணன் ஆனா இந்த ஊர் பத்தி பல காவியங்கள் இதிகாசங்கள்ல சொல்லி இருக்காங்க... ரொம்ப தொன்மை வாய்ந்த இடம் "என்றாள் அவள்.. "அப்டி என்ன காவியத்துல இருக்கு மேடம் "எனக் கேட்டான் சரவணன்...
சிலப்பதிகாரம், கந்தபுராணம், ராமாயணம் இப்டி ஒரு பட்டியலே சொல்லலாம் சரவணன் என்றாள் வெயினி....

இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அசோக் அழைத்தான்.... "மேடம் எல்லாம் ரெடி" என அவன் கூறவும்; இளவெயினி திரும்பி அந்த பட்டாளத்தை பார்த்து தன் முட்டை கண்களை விரிக்கவும்! சரியாக இருந்தது....

சரவணனும் அவளது பார்வை போன திசை நோக்கி அதிர்ச்சி ஆனவன் ,பின்னர் சிரிக்க ஆரம்பித்து விட்டான்..." நீங்க எல்லாரும் இங்க என்ன பண்றீங்க" என பல்லைக் கடித்துக் கொண்டே கேட்டாள் வெயினி ..."இதோ பாருங்க மேடம் நாங்க வேலைக்கு தான் வந்தோம் சரியா! நீ....சாரி நீங்க ரொம்ப பேசாதீங்க.. திண்ண மட்டன் பிரியாணி, படுக்க ஸ்பிரிங் பெட், குடிக்க ரெட் வைன் கேட்ட மாதிரி எகிறுறீங்க ..பழைய கஞ்சினாலும் ஓகே தான் ..படுக்க பாய், போத்திக்க கம்பளி, நாளுக்கு ஸ்நாக்ஸ் சாப்ட இருநூறு ரூவா போதும்" என்று பேசிக் கொண்டே போனது இவளின் சித்தியின் மகள் சுமி தான்...

சுமி இருபது வயது நிரம்பிய சிறு பெண்... இளவெயினி எவ்வளவு பொறுப்பான பெண்ணோ அதுக்கு நேர் மாறானவள் இவள்... ஒரு வார்த்தையை மூச்சு விடாமல் ஒரு நாள் பூராக பேசும் திறமை கொண்டவள் அவ்வளவு வாயாடி ..."நிப்பாட்டு விட்டா பிரசங்கம் போல பேசிட்டே போவியா?" அசோக் இவங்க எதுக்கு இங்க என்று கைகளை கட்டிக் கொண்டு புருவங்கள் நெரிக்க கோபத்தோடு அவள் வினவ; அசோக் அருகில் வந்தான் .."மேடம் இவங்க தான் ரொம்ப சீப்பான ரேட்கு வேலைக்கு வந்தாங்க அது தான் என்று தலை சொரிந்து கொண்டே இழுத்தான் ...யாரு இந்த வாயாடி சுமி, தீனி மூட்டை மீனாள் ,மேடைப் பேச்சாளர் சுருதி ,இவன் கவி, ஸ்டீவ் இவங்களா" என ஒவ்வொருவரையும் காட்டிக் கொண்டே கேட்டாள்..அவர்களோ உன் வான்டட் லிஸ்ட்ல நாங்க இல்லை என்று பொலிஸ் ஸ்டேஷனில் நிப்பது போல யாரோ எவரோ என நின்றனர்."இருக்றதுலேயே அறிவான ரெண்டே பேரு அந்த எசக்கி அப்பறம் ரத்னா அக்கா தான்" என காரில் இருந்து பொருட்களை தூக்கி வரும் அவர்களைக் காட்டி கூறினாள்..." என்னடி என்ன எங்கள பாத்தா வேலை செய்யாத மாதிரி இருக்கா?" என கையில் முறுக்கை வைத்துக் கொண்டே மீனா கேட்க அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துக் கொண்டே" நீ வேலை செய்ய மாட்டா ஆனா உன் வாய் நல்லா வேலை செய்யும்.. இதுங்கள வெச்சிட்டு நான் என்ன பாடு பட போறேனோ!" என புலம்பிக் கொண்டே கூடாரம் நுழைந்தாள் வெயினி..."அவ கிடக்குறா பைத்தியம், சிடுமூஞ்சி" என சுருதி கூறுவது காதில் கேட்கவும் வெயினி சிரித்து விட்டாள்....

ஆம் இவர்களின் நட்பின் ஆழம் அவ்வாறு.... இவள் இந்த ப்ராஜெக்ட்காக எவ்வளவு உழைக்கிறாள் என்பது இவர்கள் அனைவருக்கும் சரவணன் மூலம் தெரிய வரவும்; அசோக்கை மடக்கிப் பிடித்து கூலியாட்கள் பட்டியலில் தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி திண்டுக்கல் பிரியாணி, மட்டன் சுக்கா,மாட்டு ஈரல் வறுவல் இரத்தப் பொறியல் மற்றும் இதர உணவுப் பதார்த்தங்களை இலஞ்சமாக கொடுத்து இன்று இவளுடன் அவர்களும் இங்கு வந்து விட்டனர்.....

தொடரும்....
 
Last edited by a moderator:

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி - அத்தியாயம் 1
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top