Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
26
போலீசைக் கண்டதும் வெயினியின் பெற்றோர் மிரண்டு விட்டனர்.. எனினும் வெயினி சாதாரணமாகவே வந்தவர்களிடம் உரையாடினாள்.. அவர்கள் பல கேள்விகள் கேட்டு அவளைக் குடைந்து விட்டனர் ....கடைசியாக காவல் நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என உத்தரவிட்டுச் சென்றனர்...

தன் பெற்றோரின் துயரத்திற்கு தானே காரணமானதை எண்ணி வெயினி வருந்தினாள்... அதே சமயம் அவளுடைய வேலை நிறுத்த கடிதமும் அவளது கைகளில் கிடைத்தது.... நேர்மையாக நடந்தால் இவ்வளவு இன்னல்கள் வரும் என்பதை இத்துறையில் இருந்த "ஒரிசா பாலுவின்" வாழ்க்கை மூலம் அவள் அறிந்திருந்தாள்... ஆனால் தனக்கே நிகழும் என அவள் எதிர்பார்க்கவில்லை...

இதற்கிடையே ருத்ரன் மிகவும் ஆவேசமாக இருந்தான்... அவனது கோவத்தின் உச்சம் இது தான் என தெரியவில்லை ‌..நால்வரை குருவி சுடுவதைப் போல் சுட்டு வீழ்த்தியிருந்தான்... அவனது ஆட்கள் அவனைப் பார்த்து அஞ்சிக் கொண்டு இருந்தனர்....

தன் சோகம் ஒரு புறம் இருக்க வெயினி, மீனுவைப் பார்க்க வேண்டும் என தன் பெற்றோருடன் வைத்தியசாலைக்கு பயணமானாள்.. வைத்தியசாலைக்குள் வெயினி நுழைந்ததும் பலர் அவளைப் பார்த்து இரகசியமாக ஏதோ பேசினர்... இதெல்லாம் அவளை மேலும் வேதனையடையச் செய்தது...

அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்து மீனுவைப் பார்த்தவளது கண்கள் பனித்தது.. உறங்கும் அவளது கையைப் பிடித்து" மீனா என்னால தானே உங்க எல்லோருக்கும் இவ்வளவு கஷ்டம்" என கூறி வெயினி அழுதாள்....
மீனாவை பார்த்து விட்டு வெயினி வெளியே வர எசக்கி நின்றிருந்தான்.... அவனை கண்டதும் அவள் அமைதியாய் நிற்க" எல்லாமே சரியாகிடும்மா யோசிக்காத" என அவன் ஆறுதல் கூறினான்... அவனை நிமிர்ந்து பார்த்து "எது நடக்கனுமோ அது தான் நடக்கும்.. உன் பின்னாடி உன்னை மட்டுமே நினைச்சிட்டு அலைஞ்சவ ,இப்போ எந்த நினைவுமே இல்லாம தூங்குறா .."என வெயினி கூற "அவ எனக்கு இப்டி ஒரு வேதனைய கொடுத்திருக்க கூடாது வெயினி "என எசக்கி கூறினான்..." நீ என்ன சொல்ற எசக்கி" என வெயினி கேட்க; " அவளுக்கு இப்டி ஒன்னு நடந்த பிறகு தான் அவ மேல இருந்த காதலை உணர்ரேன்" என எசக்கி ஊமையாய் அழுதான்... "ஒரு பொருள் நம்ம கிட்டயே இருக்கும் போது அதோட அருமை புரியாதுல்ல எசக்கி... அவ சீக்கிரமே சரியாகி வந்துடுவா... நான் போறேன்" என்று வெயினி கூறி விட்டு தன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.....

வீடு திரும்பியதும் வெயினிக்கு அவளது ஆபிஸில் இருந்து உடனடியாக வருமாறு அழைப்பு வந்தது...." இன்னும் என்ன இருக்கிறது "என மனதில் எண்ணியவாறு தன் பெற்றோரிடம் கூறி விட்டு அவள் ஆபிஸிற்கு சென்றாள்...ரிஷப்சனில் இருந்த பெண் "முகேஷ் சாரை வந்து சந்திக்க சொன்னாங்க" என தகவல் கூறினாள்... வெயினியும் அவள் சொன்ன தகவலுக்கேற்ப முகேஷை காண சென்றாள்... அங்கு அவளிற்கு முன்னதாகவே ருத்ரன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்...

அவனைக் கண்டதும் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தாலும் பின்னர் சுதாகரித்து கொண்டாள்... "வாங்க மிஸ் வெயினி உக்காருங்க "என்று முகேஷ் கூற ருத்ரன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை... அவள் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருக்க முகேஷ் பேச தொடங்கினார்..." வெயினி! மிஸ்டர் ருத்ரன் தான் நீங்க செஞ்ச ப்ராஜெக்ட்கு ஸ்பான்சர்... உங்க ப்ராஜெக்ட் சக்சஸா கம்ப்ளீட் ஆகி இருந்தா அவருக்குரியதை நாங்க செஞ்சிருப்போம் ...ஆனா நீங்க கடைசில கோட்டை விட்டுட்டீங்க... சோ மொத்த நஷ்ட ஈடும் நீங்க தான் கொடுத்தாகனும்.." என்று ஒரு பெரிய தொகையைக் கூறி அவளது தலையில் இடியை போட வெயினி விக்கித்து விட்டாள்....

"சார் நான் சரியா தானே செஞ்சேன்... கடைசி நொடில யாரோ தேச துரோக திருட்டு பேர்வழிகள் செஞ்ச கொள்ளைக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்..." என வெயினி எவ்வளவு வாதித்தும் எந்த பயனும் இன்றி போனது.. ருத்ரன் எனக்கென்ன வந்துச்சு என்பது போல் இருந்தான்... இமை கொட்டினால் கீழே சிந்திவிடும் என வெயினியின் கண்கள் பனித்திருந்தன....

"வந்த வேலை முடிஞ்சது... நீங்க கிளம்பலாம் "என்பது போல் முகேஷ் அமர்ந்திருக்க ,"சரி சார் நான் கிளம்புறேன் ...உங்க கோரிக்கைய ஏத்துக்கிறேன்" எனக் கூறி வெயினி வெளியேற; ருத்ரனும் வெளியேறினான்....

ஆபிஸை விட்டு வெளியே இருவரும் வந்தனர் ...வெயினி அமைதியாக வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள் ...போகும் அவளையே இமைக்காமல் பார்த்து நின்றான் ருத்ரன்... வெயினியின் வீட்டில் அசோக், சுமி இருவரும் அமர்ந்திருந்தனர்..... அசோகை கண்டதும் வெயினி "வாங்க அசோக்" என அழைக்க ;"மேடம் நானும் எவ்வளோ சொல்லி பாத்தேன் ...அந்த முகேஷ் எதையும் காது கொடுத்து கேக்கல "என அவன் ஆதங்கமாக கூற ஆபிசில் நடந்த அனைத்தையும் வெயினி கூறினாள் ...."அப்டி நான் நஷ்ட தொகைய கொடுக்கலனா எனக்கு சிறை தண்டனை கூட கிடைக்க வாய்ப்பு இருக்கு" என அவள் கூற அவளது பெற்றோர் உடைந்து விட்டனர்...

வெயினியின் அப்பா எதையும் வெளிக்காட்டாமல் "வெயினி நீ கலங்காத பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்" என்று கூற;" இவ்வளவு பணத்துக்கு எங்க அப்பா போவீங்க ?"என கேட்டாள் வெயினி..." நீ கவலை படாதமா ...அப்பா பாத்துப்பாரு "என வெயினியின் அம்மா கூறினார்... அக்கா எதையும் யோசிக்காத கடவுள் இருக்காரு என சுமி கூற வெயினி புன்னகைத்தாள்....

அன்றைய நாள் வெயினியும் அவன் பெற்றோரும் போதும் போதும் என்ற அளவு இன்னல்களை அனுபவித்து விட்டு கண்ணயர்ந்தனர்....
அடுத்த நாள் காலை பொழுது இன்னும் பல சம்பவங்கள் நிகழ்த்த புலர்ந்தது....
வெயினியின் அம்மா அவளுக்கு டீ கொடுத்தார்..." அம்மா! அப்பா எங்க காணோம் "என வெயினி கேட்க; "வெயினி" என அழைத்துக் கொண்டே அப்பா வந்தார் ‌‌.."என்னமா தேடுற "என்று அப்பா கேட்க;" ஒன்னும் இல்லை பா காணோம்னு பாத்தேன்... எங்க போக போறீங்க? ரெடி ஆகி இருக்கீங்க ?"என வெயினி கேட்கவும் ;"போலாம்ங்க" என அம்மா ரெடி ஆகி வந்து அவர்கள் முன் நிற்கவும் சரியாக இருந்தது...

"நாங்க கோயிலுக்கு தான் போக போறோம்... சீக்கிரமா வந்துடுவோம்... கவலை படாதேமா... எது வந்தாலும் தைரியமா துணிஞ்சு போராடு.‌" என தன் மகளின் தலையை தடவி விட்டு வண்டியில் ஏறினார்கள் அவளின் பெற்றோர்....

அவர்கள் செல்வதையே வெயினி பார்த்துக் கொண்டிருந்தாள் கவி அழைத்ததில் தான் நிதர்சனத்திற்கு வந்தாள்...."வா கவி" என அவள் அழைக்க "வெயினி எல்லாம் சரி பண்ண முடியாதா" என அவன் கேட்க ஒரு சிறு புன்னகையுடன் " சரி பண்ணிடலாம்.. உள்ளே வா" என்று அழைத்து சென்றாள்....

நேரம் மதியத்தை கடந்தும் தன் பெற்றோர் வராததால் வெயினி சற்று பதற்றமடைந்தாள்.... அவளுக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு கால் வந்தது... "ஹலோ வெயினி இருக்காங்களா?" எனக் கேட்க ஆமா வெயினி தான் பேசுறேன்... நீங்க யாரு?"என அவள் கேட்க.."மேடம் நாங்க போலீஸ் நிலையத்தில இருந்து பேசுறோம்.... நீங்க கொஞ்சம் ஜி.எச் வர முடியுமா?" என அந்த காவல் அதிகாரி கேட்டார்.....வெயினி அதிர்ந்து விட்டாள்.. என்னாச்சு சார் என்று அவள் பதட்டமாக பேச கவி அருகில் வந்து போனை வாங்கி பேசினான்....

அவர்கள் சொன்ன தகவலில் அவனே அதிர்ந்து விட்டான்...காலை கட் பண்ணி விட்டு அவன் திரும்ப" என்ன கவி என்னாச்சு" என்று வெயினி கேட்க கேட்க அவளது கையை இழுத்துக் கொண்டு வண்டியில் ஏறினான் கவி....வழி நெடுகிலும் வெயினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை அவன்...

வண்டி ஜி‌.எச் முன்பாக நின்றது.. அவன் அமைதியாக வெயினியின் புறம் திரும்பி "அம்மா அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு... அம்மா நம்ள விட்டு போய்டாங்க... அப்பா சீரியஸா இருக்காங்க... வா போகலாம் "என்று கூற அவள் கல்லாய் சமைந்து விட்டாள் ... அவள் நிலை கண்டு அவனுக்கு ரணம் கூடியது....."வெயினி! வெயினி! வா போலாம் "என்று அவன் அழைக்க அழைக்க அவள் அசையவே இல்லை....

" வெயினி !"என்று அவளை உலுக்கிய பின்னரே அவளுக்கு நினைவு வந்தது... இயலாத பார்வை ஒன்று அவனைப் பார்த்தாள் வெயினி ....வண்டியில் இருந்து அமைதியாக இறங்கினாள்... தனது தந்தையைப் பார்க்க செல்ல அவரது நிலை கண்டு வெயினி வாய் மூடி கதறி விட்டாள்... அவர் அருகில் சென்று "அப்பா" என்று அழைக்க அந்த குரலில் விழி திறந்தவர் ஆக்சிசன் மாஸ்கை கழட்டி விட்டு ஏதோ கூற முயற்சி செய்தார்.... எதுவும் சரியாக அவளுக்கு கேட்கவில்லை" ரவி" என்று ஏதோ கூற வந்தவர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.... கண்ணெதிரே நடந்த காட்சியில் வெயினி கதறிவிட்டாள் கவியால் அவளை தேற்ற முடியவில்லை... அசோக்,சுமி ,சுமியின் பெற்றோர் மற்றும் அவனது பெற்றோர் என அனைவரும் வந்து சேர்ந்தார்கள்....

வெயினியின் நிலை இன்னதென்று கூற முடியவில்லை... அவள் ஊமையாய் வடித்த கண்ணீர் கடலாய் பெருகியது.. ரவியும் அவன் பெற்றோரும் கூட இறுதி கிரிகைகளுக்கு வந்து இருந்தார்கள்...

பெற்றோர் இறந்து மூன்றாம் நாள் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது..."நாளை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் "..என்ற மனுவை பார்த்து விட்டு தாய் ,தந்தையரின் புகைப்படத்தை நோக்கினாள்... எழுந்து சென்று அவர்களின் நிழற்படம் முன் அமைதியாக நின்றாள் ...காலிங் பெல் அழைப்பு சத்தத்தில் சுற்றம் உணர்ந்தவள்; யாரென்று பார்க்க வெள்ளை சட்டை ,வேஷ்டி அணிந்த பழுத்த ஒரு ஆணும் இரண்டு குண்டர்களும் உள்ளே நுழைந்தார்கள்... யாருமின்றி தனி மரமாக நின்றவளிடம் சில ஒப்பந்த காகிதங்களை நீட்டி "நீ தான் இளவெயினியா ?செத்து போன உன் அப்பாவும், அம்மாவும் இந்த வீட்டை என் பேர்ல எழுதி வெச்சுட்டு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் வாங்கினாங்க... ரெண்டு மாசத்துல பணத்தை வட்டியோடு திரும்ப கொடுக்கலனா இந்த வீடு எனக்கு சொந்தம் இதுல இருக்கு "என அந்த கிழட்டு நரி கூற ,வெயினி அவர் நீட்டிய காகிதங்களை வாங்கி ஆராய்ந்தாள்....

தன்னுடைய அப்பாவின் கையெழுத்து அழகாக பதியப்பட்டிருந்தது.." இதுக்கு தான் கோயிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு போனீங்களா ? என்னை தைரியமா பேசி ஆறுதல் சொல்லிட்டு, இப்போ அநாதையா விட்டுட்டு போய்டீங்க" எ
ன மனதுள் மருகினாள் வெயினி....

தொடரும்....
 
Back
Top