Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
26
அம்மா, அப்பா என் கல்யாணம் பத்தி எவ்வளவு கனவு கண்டு இருப்பீங்க... இப்போ நீங்க இல்லாம நான் அநாதையா நிக்கிறேன்... எனக்கு வாழ்க்கை பிச்சை போடுறேன்னு கல்யாணம் ஒன்னு நடத்துறாங்க... என் மனசுக்குள்ள ஏனோ இது சரியா வராதுனு தான் தோனுது...
எனக்கு ஏனோ இது பிடிக்கல" என மானசீகமாக பெற்றோரிடம் முறையிட்டாள் வெயினி..

சாதரணமாக கோயிலில் ஒரு பத்து பேர் மட்டுமே சாட்சியாக திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...சுமி வெயினியை அழைத்து வந்து மணமேடையில் உட்கார வைத்தாள்.. நிமிர்ந்து மாப்பிள்ளையைப் பார்த்த வெயினி அரண்டு விட்டாள்..

ரவியும் அவனது பெற்றோரும் மற்றும் ஏனையோரும் கறுப்பு உடை அணிந்து ஆயுதம் தாங்கிய நபர்களால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்க ;கறுப்பு நிற கோர்ட் மற்றும் பேண்ட் அணிந்து கம்பீரமாக மாப்பிள்ளையின் இடத்தில் அமர்ந்து இருந்தான் ருத்ரன்...

வெயினி வாய் பிளந்து அவனைப் பார்க்க ஒற்றை கண் சிமிட்டி ,உதடு குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை பரிசாய் கொடுத்தான்..

"இவன் தானே என் வாழ்வில் சித்து விளையாட்டு நிகழ்த்தியவன் "என வெயினி அதிர்ச்சி மாறாமல் இருக்கும் வேளையில் அவளது கழுத்தில் அவளவன் ருத்ரேஷ்வரனால் மங்கள நாண் சூட்டப்பட்டது..இமை மூடி திறப்பதற்குள் அனைத்தும் நடந்தேறியது...

யாரோ அழைக்கும் ஓசை கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள் வெயினி... யார் கதவைத் தட்டுவது என எண்ணிக் கொண்டே கண்களில் வழிந்த நீரை துடைத்தாள்...கதவைத் திறக்க வயதான பாட்டி ஒருவர் இன்முகத்துடன் நின்றிருந்தார் ...அவரைக் கண்டதும் வெயினி "யார்மா நீங்க "என கேட்க அவளது முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார் அவர்..

"இங்க ருத்ரன் தம்பிக்கு பத்து வருஷமா நான் தான் சமைக்கிறேன்மா... அரண்மனைக்கு பின்னாடி தான் எனக்கு தம்பி வீடு கொடுத்து இருக்கு... இங்க இருக்ற தோட்டக்காரன் தான் தம்பிக்கு கல்யாணம் ஆச்சுனு சொன்னான்..." என்க வெயினி பேசாது நின்றாள்....

" என்னாச்சுமா? உன் பேர் என்ன? ரொம்ப அழகா இருக்கடா" என அவர் கூற வெயினி மெலிதாக சிரித்தாள்... "என் பேர் இளவெயினிமா ...எனக்கு யாரும் இல்லை" என அவள் கூற ;"ஏன்மா அப்டி சொல்ற, ராஜாவாட்டம் உன் புருஷன் இருக்கும் போது 'உலகமே உனக்கு வசப்படும்மா.. நீ! தனியாள்னு சொல்லாத" என அவர் சிறு கண்டிப்புடன் கூற மனதினுள்" என்னை தனியாளா மாத்தினதே அவன் தான் மா" எனக் கூறிக் கொண்டாள் வெயினி...

மாடிப் படிகளில் காலடி ஓசை கேட்க வெயினி திரும்பி பார்த்தாள்... அந்த மேனா மினுக்கி தான் இறங்கி வந்தாள்... அவள் வெயினியின் திசை கூடப் பாராமல் வேகமாக சென்று விட்டாள்... அவள் போன பின்னாடியே ருத்ரனும் வந்தான்... உடலை இறுக்கி பிடித்த டிசேர்ட், லுங்கி என வந்தான் ருத்ரன். வெயினிக்கு அவனின் இந்த அவதாரம் புதிது ...அவனையே இமைக்காது பார்த்தாள் அவள்..

ருத்ரன் நேராக வந்து சாப்பாட்டு மேசையில் அமர, பாட்டி உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைத்தார்... ருத்ரனுக்கு உணவுத் தட்டை பாட்டி எடுத்து வைக்கப் போக "நீங்க போங்க "என்ற ஒற்றை வார்த்தையில் பாட்டி இருந்த இடமே இல்லாமல் சென்று விட்டார்...

"என்ன பாத்துட்டு நிக்கிற! வந்து எடுத்து வை "என ருத்ரன் அதிகாரமாய் பேச அவள் அமைதியாகவே நின்றாள்... "என்ன பயம் விட்டு போச்சு போல "என அவன் கேட்க அவசரமாக வந்து உணவுத் தட்டை எடுத்து வைத்தாள்.." ஒருத்தனுக்கு இவ்வளவு டிஷ் தேவையா ?என்பது போல் அத்தனை வகை சாப்பாடு இருந்தது.. எதைப் பரிமாறுவது என்றே அவளுக்கு தெரியவில்லை ..சாதம் இரண்டு கரண்டியும் ,கீரைப் பொறியலும் ,கரட் வறுவலும் ,தயிரும் கொஞ்சம் எடுத்து வைத்தாள்.. அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக சாப்பிட்டான் ருத்ரன்...

உண்டு முடித்த பிறகு" ஹேய்! யூ சாப்டாம செத்து என் வீட்டை நாறடிச்சுடாத, ஓகே!" என்று விட்டு சென்றான்..அழுகை வரவில்லை, ஆனால் ஆறுதலுக்கு மடி தேவைப்பட்டது.. அறையினுள் சென்று குளித்து விட்டு டவலோடு வந்தவளுக்கு அப்போது தான் மாற்றிக் கொள்ள ஆடை இல்லை என்று நியாபகம் வந்தது.. தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தியவளின் கண்ணில் கட்டிலில் புதிதாக சில ஆடைகள் தென்பட்டது... "பரவாயில்லை இவன் கொஞ்சம் நல்லவன் தான் "என எண்ணி அந்த ஆடைகளை உடுத்தி கொண்டு வெளியே வந்து உணவுண்டாள் ...

இவள் உண்டு விட்டு நிமிர ,ருத்ரன் எதிரில் நின்றான்..." பரவாயில்லை என் ஏழாவது காதலிக்கு கிப்ட்டா கொடுக்க எடுத்த ட்ரெஸ் மறந்து உன் ரூம்ல வெச்சிட்டேன்.. பட் உனக்கு அது கரெக்டா ஃபிட் ஆகி இருக்கு" என அவன் சிலாகித்து கூற;" இவன் மொகறைக்கு ஏழாவது காதலி வேற" என எண்ணியவள் வெளியில் எதுவுமே பதில் பேசவில்லை...

பாத்திரங்களை தூக்கி கொண்டு சமையலறைக்குள் நுழைந்து அனைத்தையும் சுத்தம் செய்தாள்... இவை எல்லாவற்றையும் ருத்ரன் பார்த்து கொண்டு நின்றான்..

இரண்டு வாரங்களாக எவ்வித முன்னேற்றமும் இன்றி நாட்கள் இவ்வாறே நகர்ந்தன.. அடுத்த நாள் காலை பாட்டி சமைக்கும் போது சரியாக வெயினியும் சமயலறையில் நுழைந்தாள்... "பாட்டி" என அவள் அழைக்க ,"சொல்லு பாப்பா "என்றார்... "இல்லை எதுக்கு ஒருத்தர் சாப்பிட இத்தனை டிஷ் ?"என்று கேட்டாள் வெயினி...

"ஒருத்தரா ?ரெண்டு பேர் ஆச்சே! என பாட்டி கூற," யாரு பாட்டி இன்னொருத்தர்? என்றாளே வெயினி ,,"என்னமா! உன்னை மறந்துட்டியா? எனக் கேட்க; "எனக்காகவெல்லாமா சமைக்கிறீங்க?" என்றாள் அவள்... பாட்டி சிரித்து கொண்டே "தம்பி காலைல வீட்ல சாப்பிட்டதே நான் இங்க வந்து பத்து வருஷத்துல பாத்ததே இல்லைமா... இந்த ரெண்டு வாரமா தான் சாப்பிடுது... அது மட்டும் இல்லை தம்பி கீரை, காய்கறி எதுவும் சாப்பிடாது... எப்போவும் அசைவம் தான்... உனக்காக தான்மா ரெண்டு நாளா காய்கறி சமைக்கிறேன்..." என அவர் கூற வெயினி அமைதியாக நின்றாள்...

"சரி அதுக்கு எதுக்கு இத்தனை வகை காய்கறி? ஏதாவது ஒன்னு செஞ்சா போதும்ல .."என அவள் கூற; "உனக்கு எது பிடிக்கும்னு தெரியாதுலமா "என்றார் பாட்டி..." எனக்கு ஏதாவது ஒரு கீரை ,ஒரு காய் போதும் ..அது எதுவா இருந்தாலும் நான் சாப்பிடுவேன்" என்றாள் வெயினி

பாட்டி புன்னகைத்து கொண்டே அவள் அணிந்திருந்த ஆடையைக் கவனித்தார்... அளவு எல்லாம் சரியா இருக்காமா?" என அவர் ஆடையைப் பார்த்து கேட்க;" ஏன் பாட்டி கேக்கறீங்க? வேற யாருக்கும் எடுத்த ட்ரெஸ்ஸா?" என வெயினி கேட்டாள்..." இல்லைமா நீ! குளிக்க போன பிறகு தம்பி திரும்பி என்னை கூப்டு இந்த ட்ரெஸ் எல்லாம் கொடுத்து, உன் ரூம்ல வெச்சிட சொன்னிச்சு... இப்ப தான் பாக்குறேன் அழகாவும், அளவாவும் இருக்கு ...சரி இந்தா டீ குடிச்சிட்டு குளிச்சிட்டு வா.. சாப்டனும்" என்று விட்டு பாட்டி தன் வேலையைப் பார்த்தார்..

வெயினிக்கு மிகவும் குழப்பமாக இருந்தது... அவன் செயலுக்கும் ,பாட்டி பேச்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வடிவேல் பாணியில்" இவன் நல்லவனா? கெட்டவனா?" என சிந்தித்தாள்..

குளித்து விட்டு வெளியே வர சுடச் சுட காலை உணவு தயாராக இருப்பதையும், ருத்ரன் லாப்டாபில் எதையோ தட்டிக் கொண்டிருப்பதையும் வெயினி பார்த்தாள்... எதுவும் பேசாமல் அவள் சாப்பிட அமர ,ருத்ரன் அவளை முறைத்துப் பார்த்தான் ... அத்தோடு வெயினியின் கால்கள் தானாக அவன் அருகில் சென்று, கைகள் தானாக உணவைப் பரிமாறியது...

வாயத் திறந்து "சாப்பாடு பரிமாறுனு சொன்னா முத்து கொட்டிடுமா?" என மனதில் அர்ச்சித்தாள் வெயினி ...வெளியில் ராட்சசனின் முன்னால் சொல்ல முடியுமா..
அவள் கீரை, காய்கறி என்று பரிமாற அவன் அத்தனையையும் உண்டான்...

திருமணத்தன்று தன்னுடன் நடந்து கொண்ட முறைக்கு மிகவும் வித்தியாசமாகவே இவன் நடத்தை இருந்தது ... அவள் இதற்கு முதல் எதிர் கொண்ட எந்த பிரச்சனையும் இப்போது இல்லை... வெளி உலகில் என்ன நிகழ்கிறது என்று கூட தெரியவில்லை.... அவனிடம் பேசும் அளவுக்கு தைரியமும் இல்லை.. விருப்பமும் இல்லை.. அவள் சிந்தனை குதிரை கன்னாபின்னாவென்று ஓட அதன் கடிவாளத்தை பிடித்து தட்டி அடக்கினான் ருத்ரன்...

" வெளியே போற வேலை எனக்கு இருக்கு... உனக்கு எப்படி ?"என்று அதை கூட நறுக்கென்று தான் கேட்டான்... "மீனாவை பாக்கனும் ,வீட்ட போகனும், கோயிலுக்கு போகனும்.." என அவள் அடுக்க...." போறயானு தான் கேட்டேன்" என்க அவள் வாய் மூடி விட்டாள்...

அவளுமே உணவுண்டு விட்டு தயாராகி நிற்க, ருத்ரன் எழுந்து காரை நோக்கி சென்றான் ...பின்னால் திரும்பி பார்க்க, வெயினி அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.... கார் சாவியை விரலில் சுழற்றி கொண்டு வந்தவன், "மேடம் என்ன "என்று கேட்க வெயினி திருதிருவென முழித்தாள் ...அவளை சால்வை போல் அலேக்காக தூக்கி தோளில் போட்டவன் ,கார் கதவை திறந்து உள்ளே உட்கார வைத்து ,சீட் பெல்டை போட்டு விட்டு மறுபக்கம் சென்று காரை ஸ்டார்ட் செய்தான்...

அவன் முதலில் கொண்டு நிறுத்திய இடம் கோயில் ...அவள் இறங்கி அவனைப் பார்க்க, அவன் போனை நோண்டிக் கொண்டு இருந்தான்...." இவனுக்கு சாமி நம்பிக்கை இல்லை "என்பதை உணர்ந்தவள் அமைதியாக சென்று கடவுள் சன்னதியில் உட்கார்ந்தாள்...

மனதில் எத்தனையோ சுமைகள் அழுத்த கடவுளை மனதார வேண்டி விட்டு திரும்பும் வழியில் அன்று தன் வீட்டுக்கு வந்த அந்த பழுத்த ஆணைக் கண்டாள்...அவனுமே அவளை கண்டதும் கையெடுத்து கூப்பி நின்றான்...

அம்மா! வணக்கம் மா! உங்க புருஷன் நல்லா இருக்காராமா? எனக் கேட்க; "ரவியை தான் கேட்கிறார் போல" என எண்ணியவள்.... "எனக்கு அவரு கூட கல்யாணம் ஆகல ...வெற ஒருத்தர் கூட தான் திருமணம் நடந்தது " என அவள் விவரிக்க" என்னமா சொல்றீங்க! இப்ப தானே வரும் வழில கார்ல சாஞ்சிட்டு, போன் பேசிட்டு நிக்கிறத பாத்தேன் " என்றார் அந்த ஆடவன் ...

"காரா? என்ன கலர் கார்? என கேட்டாள் வெயினி...."வெள்ளை கலர் கார்...ஸ்கை ப்ளூ கோட்சூட்" என பதில் சொல்ல அவள் அதிர்ந்து போனாள்...

தொடரும்...
 
Back
Top