Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி - அத்தியாயம் 2

Joined
May 18, 2024
Messages
29
இளவெயினி கூடாரத்தினுள் சென்று எல்லாம் சரியாக உள்ளதா? என பார்த்துக் கொண்டிருந்த வேளையில்; அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது... தொலைபேசி தொடுதிரையில் "முகேஷ்" என மிளிர்ந்தது....”இந்தாள் எதுக்கு இப்போ கால் பண்றான்" என முணுமுணுத்துக் கொண்டே அலைபேசியை காதில் வைத்து "ஹலோ சார்" என அவள் சொல்ல "வெயினி உங்க ப்ரொஜெக்ட்கு ஹெல்ப் பண்ண நாங்க ஆபிஸ் மூலமா ஒரு டீம் அரேன்ஜ் பண்ணி இருக்கோம்... நாளைக்கு ஸ்பாட்கு வந்து சேருவாங்க... டீம் வேர்க்கா எல்லாரும் பண்ணுங்க.." என்று கட்டளை போல் கூறி விட்டு இவளது பதிலைக் கூட எதிர்பாராமல் போன் துண்டிக்கப்பட்டது.... இவளுக்கு ஏதோ இடிமுழங்கி நின்றது போல் ஓர் அமைதி தோன்றியது.... கடைசியாக இங்கு வரும் வரைக்கும்" போக வேண்டாம்" என கூறிய தன் மேல் அதிகாரி முகேஷ் இப்போது தனக்கு துணைக்கு ஆட்கள் தருவது அவளுக்கு மகிழ்ச்சியாக இருப்பினும்; ஆயசமாகவும் இருந்தது...

"அக்கா" என கூவிக் கொண்டே உள்ளே வந்தாள் சுமி... "என்ன" என்பதைப் போல புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க "நாங்க வந்தது உனக்கு கோவமா" என தலையைக் குனிந்து கொண்டே சுமி கேட்டாள்... "கோவமெல்லாம் இல்லை.. என் கூட வந்து உங்களுக்கும் எதுக்கு கஷ்டம்.. அது தான் சங்கடமா இருக்கு" என அவள் கூறிய வேளையில் உள்ளே வந்தான், எசக்கி...

"ஹாய் டா மாப்ள" என கூறினான் அவன்... வெயினியை மாப்ள என்று தான் அழைப்பான்... அவளது துணிச்சல் அவனுக்கு மிகவும் பிடிக்கும்...அவளுமே எசக்கியிடம் மனம் விட்டுப் பேசுவாள் ...."ஏன்டா நீயும் இவங்க பேச்சை கேட்டு தலையாட்டிட்டே வந்தியா? அறிவு கெட்டவனே" என அவள் கூற; "அறிவு இருந்தா உன் கூட நாங்க ஏன் பேச போறோம்" என்றான் அங்கு வந்த கவி...."கவி" என பல்லைக் கடித்துக் கொண்டே அவள் கூற; "பாத்து வயசான காலத்துல இருக்ற பல்லெல்லாம் கொட்டிட போகுது" என அவளை வம்பிழுத்தான் அவன்... கவி வெயினியை விட மூன்று வயது சிறியவன்... அவளது பக்கத்து வீட்டு பையன், மற்றும் இவனின் தந்தையும் வெயினியின் தந்தையும் பள்ளிப்பருவ சிநேகிதர்கள்... அதனால் மிகவும் நெருக்கமாக உறவு போல் இரு வீட்டாரும் இருப்பர் ..வெயினியை தன்னுடைய "க்ரெஸ்" என கவி அடிக்கடி சொல்லி அவளை வெறுப்பூட்டுவான்.... இவன் பேச்சைக் கேட்ட வெயினிக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது....

அவனை முறைத்துக் கொண்டே "எனக்கு ரொம்ப தலை வலிக்குது ...ரத்னா அக்கா எங்க? எனக்கு ஒரு டீ வேணும்" எனக் கேட்டுக் கொண்டே வெளியே சென்றாள் அவள் ..."மேடம் அவங்களுக்கு தனியா கூடாரம் போட்டுட்டேன் அங்க இருக்காங்க" என ரத்னா அக்காவின் இருப்பிடம் நோக்கி கை காட்டினான் அசோக்...

"அக்கா இதெல்லாம் எங்க வைக்கட்டும்" என மீனா சமையல் பொருட்களை காட்டி ரத்னா அக்காவிடம் வினவிய நேரம்; கூடாரத்தினுள் நுழைந்தாள் வெயினி... "வாம்மா என்னடா மூஞ்சி வாடிப் போய் இருக்கு டீ தரட்டுமா?" என வெயினியைப் பார்த்து அவர் கேட்க அவளும் சரியென தலையசைத்தாள்... ரத்னா அக்கா மீனாவின் உடன் பிறந்த சகோதரி... மீனா வெயினி சுருதி மூவரும் அகழ்வாராய்ச்சி துறை கற்கும் போது நண்பர்ளாகினர்... சுருதி மற்றும் மீனா குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல; வெயினி தொடர்ந்து படித்தாள்... படிப்பு தான் பாதியில் நின்றது... இவர்களது நட்போ தழைத்தோங்கியது.... "இந்தாமா டீ "என ரத்னா அக்கா வெயினியிடம் கொடுக்க; "இவ்வளவு நேரமா நான் இருக்கேன் ஒரு டீ குடுத்தியா? இல்லை இப்போ இவளுக்கு கொடுக்கும் போது ஒரு வார்த்தை தான் கேட்டியா? நீயெல்லாம் அக்காவா? என மீனா ரத்னா அக்காவைப் பார்த்து கறுவினாள்....

" சுருதியும் ஸ்டீவும் எங்க அக்கா காணோம்?" என ஒரு மிடறு டீ அருந்திக் கொண்டே வெயினி அவர்களை தேடிட; "இன்னொரு கூடாத்திரல எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்காங்கமா ....உனக்கு எதுவும் வேணுமா?" என ரத்னா அக்கா கேட்டார்.." இல்லகா வேணாம்... காணோம் அது தான் கேட்டேன்.." என கூறி விட்டு டீ கிளாஸை மீனா கையில் திணித்து விட்டு அங்கிருந்து சுருதி இருக்கும் இடம் நோக்கி சென்றாள் வெயினி...

இவள் வருவதை அங்கிருந்து பார்த்து விட்ட சுருதி அவளிடம் வந்தாள்.... "நாங்க வந்தது உனக்கு தொல்லைனு நினைக்கிறியா?" என மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டே வெயினியிடம் கேட்டாள்...." அதெல்லாம் ஒன்னும் இல்லை.... குவாட்டரும், கோழி பிரியாணியும் உனக்கு டெய்லி வாங்கி தரேன்...மூஞ்ச மட்டும் இப்டி வெச்சிட்டு கிட்ட வந்து பயமுறுத்தாத" என வெயினி கூற சுருதி அவளை மூக்கு புடைக்க முறைத்து விட்டு பின்னர் சிரித்து விட்டாள்..... இவர்கள் இருவரும் எப்போதும் இப்படி தான் மிகவும் சீரியஸாக பேசுவது போல் பேசி கடைசியில் மொக்கை செய்து சிரித்து விடுவர் ...."சரி ஏன் ஸ்டீவ கூட்டி வந்த" என வெயினி கேட்க; "எங்க சித்தி பண்ற உப்புமாவ விட நீ போர்ர பழைய சோறு பரவாலனு கூட வந்துட்டான்.... அது மட்டும் இல்ல அவன் நீச்சல்ல டிஸ்ட்ரிக் சாம்பியன் உனக்கு கடல்ல போகும் போது உதவியா இருக்கும் ல" என காரணம் கூறினாள் சுருதி.... ஆமாம் சுருதியின் சித்தி மகன் தான் ஸ்டீவ் தான் வெயினியுடன் செல்வது பற்றி வீட்டில் கூறிய வேளையில் இதை காதில் வாங்கிக் கொண்ட ஸ்டீவ் தானும் வருவதாக கூறி பெட்டி கட்டி கொண்டு கிளம்பி விட்டான்...

அதுவும் சரிதான் என அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில்; அசோக் ஏற்பாடு செய்த கூலியாட்கள் வந்து சேர்ந்தார்கள்..

அவர்களிடம் வந்த வெயினி பேசத் தொடங்கினாள் "நீங்க இங்க எதுக்கு வந்து இருக்கீங்க.... என்ன வேலை மற்றைய எல்லாம் அசோக் சொல்லி இருப்பாங்க... எல்லோரும் ஒற்றுமையாகவும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்யனும்.. "என இன்முகத்துடன் முடித்தாள்... அவர்களும் அதற்கு தலையசைத்தும், வாயால் சரியென கூறியும் சம்மதம் தெரிவித்தனர்...

இவர்களிடம் பேசிவிட்டு வெயினி தன் கூடாரம் திரும்பினாள் ...அங்கு எசக்கி மட்டுமே இருந்தான் ..."வாடா மாப்ள! என்ன சோர்வா இருக்கா? எனக் கேட்டான் அவன் ..."அதெல்லாம் ஒன்னும் இல்லை... நாளைல இருந்து வேலை ஆரம்பிக்கிறோம்... எவ்வளவு கஷ்டம் ,தடை வந்தாலும் இதை சரிவர செய்து முடிச்சு ரிப்போர்ட் ஒப்படைக்கனும் ...அது வரைக்கும் எனக்கு நிம்மதி இல்லை.." என்றாள் வெயினி ஒரு பெருமூச்சு விட்டபடியே.... "அதெல்லாம் ஒன்னும் இல்லை விடு பாக்கலாம் ...ஆமா நாளைக்கு என்ன பண்ண போற? எங்க இருந்து வேலை ஆரம்பம்.." எனக் கேட்டான் எசக்கி...

"நாளைக்கு கடலுக்கு அடியில இருந்து தான் வேலை ஆரம்பிக்க போறேன்... நான் இங்க இருந்தபடியே லாப்டாப் மூலமா அவதானிப்பேன்... அசோக் ஆளுங்க கூட தண்ணிக்குள்ள போவான்..." என்றாள் வெயினி....

" எல்லாரும் சேர்ந்து பக்காவா பண்ணிடலாம்டா... நீ கவலைப்படாதே.." என்றான் எசக்கி.. "எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு " சோ கண்டிப்பா பண்ணனும்.... ஏன் தெரியுமா எந்த மொழியும் துணையின்றி இயங்க கூடிய மொழி தான் "தமிழ் மொழி"னு எல்லாரும் சொல்றாங்க.... சிந்து சமவெளி நாகரிகம் தான் பழமையான நாகரிகம்... அது நான்காயிரம் வருடங்கள் தான் பழமை வாய்ந்தது... அதே கால கட்டத்தில் எகிப்தில் தோன்றியது தான் சுமேரிய நாகரிகம் உலகின் முதல் மனிதன் அங்கு தான் தோன்றியதாக கூறப்படுகிறது..." என வெயினி கூற..

."ஓஓ முதல் மனிதன் அங்கு தான் தோன்றினானா? "என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மீனா....எசக்கி ஐயோ என கண்களை உருட்ட; வெயினி கைகளை கட்டிக் கொண்டே தலை குனிந்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கினாள்... "நீ எதுக்கு இப்போ இங்க வந்த?" என மீனாவை பார்த்து எசக்கி வினவினான்... "டின்னர் சாப்ட அக்கா கூப்டு வரச் சொன்னாங்க.." என கூறி விட்டு எசக்கியை முறைத்து கொண்டே மீனா சென்றாள்...

"எசக்கி அவளும் உன்னை நாலு வருஷமா லவ் பண்றா.. நீயும் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்ற... வேற யாரையும் நீ லவ் பண்ணவும் இல்லை... அவளை வேணாம்னும் சொல்ல மாட்ற ...எதாவது ஒரு முடிவு கிடையாதா? இந்த காதல் கதைக்கு" என வெயினி அவனிடம் கேட்க; எப்போதும் போல் உதிர்த்திடும் அதே பதில் "அப்றமா அது பத்தி பேசிக்கலாம்.. நீ விட்டத மேல சொல்லு "என்றான்...

" எதுலடா விட்டேன்?" என வெயினி சிரித்துக் கொண்டே கேட்க; சுமேரிய நாகரிகத்ல என்று எடுத்துக் கொடுத்தான் எசக்கி...

"ஆமால! உலகின் முதல் மனிதன் பிறந்ததாக அந்த நாகரீகத்தை தான் சொல்வாங்க... ஆனா 1991 இல் பூம்புகார் ஆழ்கடல் தொன்மத்தை ஆராய்ச்சி செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளர் "கிரகம் ஹொங்ஹொங்" பூம்புகார் தொன்மம் 16000 வருடங்கள் பழமை வாய்ந்ததுனு ஆதாரங்கள் மூலம் நிரூபிச்சி இருகாகாரு... " என வெயினி கூற"அப்போ அங்கே மக்கள் வாழ்ந்து இருக்கனும்ல? அந்த மக்கள் எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி தானே அங்கு தோன்றி இருக்கனும் அதெல்லாம் சேர்த்து பார்த்தா 20000 வருடங்கள் பழமை வாய்ந்த வரலாறு ஒன்று காணப்படுகிறது.... அது தமிழ் பற்றி கூறும் "நம் தமிழன் வரலாறு" தான் என உறுதியுடன் கூறினாள் இளவெயினி

" இவ்வளவு பழைமை வாய்ந்த ஒன்னை ஏன் டா சர்வதேச ரீதியில ஆராய்ச்சி பண்ணல? என தன் சந்தேகத்தை கேட்டான் எசக்கி.... வெயினி சிரித்துக் கொண்டே "நாம் தமிழர்கள் ஆகி விட்டோம் நண்பா" என நாடக பாணியில் சோகமாக கூறி சிரித்தாள்...

"மாப்ள இருந்தாலும் இந்த நேரத்துல கூட காமெடி பண்ற பாத்தியா உனக்கு நெஞ்சுரம் அதிகம் டோய் "என்றான் எசக்கி சிரித்துக் கொண்டே....

" வா வா சாப்ட போவோம்... அப்பறம் இத பத்தி முழுசா பேசலாம்" என ரத்னா அக்கா இருக்கும் இடத்திற்கு சென்றார்கள் அவர்கள்... அங்கோ அவர்களுக்கு முன்னதாகவே ஆளுக்கொரு சாப்பாட்டு தட்டில் சுமி, கவி, ஸ்டீவ் மூவரும் கேலியும் கிண்டலுமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்... இவர்களைக் கண்டதும் வாங்க என கூறி உணவை எடுத்து வைத்தாள் சுருதி....

உண்டு கொண்டிருக்கும் போதே ஆளுக்கொரு கேள்வியாக குமரிக் கண்டம் பற்றி வெயினிடம் கேட்கத் தொடங்கினர் ..."ஏன் டி இத "லெமூரியா கண்டம்" னு சொல்றாங்களே அப்போ இது குமரி கண்டமா? லெமூரியாவா? எனக் கேட்டாள் மீனு...

தொடரும்...
 

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி - அத்தியாயம் 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top